PDA

View Full Version : சோறும்...சொதியும்...

தீபன்
15-03-2006, 02:02 PM
நம்ம ஊருக்கு ஒரு லண்டன் துரை வந்திருந்தார்.
றோட்டால நம்ம ஊர்காரர் ஒருத்தரோட நடந்து போயிகிட்டிருந்தார்.
அப்ப நம்ம றோட்ட பாத்திட்டு
"நம்ம நாட்டு றோட்டிலயெண்டா சோறு போட்டு சாப்பிடலாம்"
எண்டு பெருமையா சொன்னாரு வெள்ளக்காரத் துரை....
நம்மாளுக்கு அவற்ற் பேச்சு பிடிக்கேல்ல...
இவன் யார் நம்ம நாட்டுக்கு வந்து நம்ம நாட்டையே குறைவா பேசுறதுக்கு.. எண்ட கோபம்...
சரியான பதிலடி குடுக்கோணுமெண்டு நினைச்ச நம்மாள் சொன்னாரு,
"உங்க நாட்டு றோட்டில சோத்ததான் போட்டு தின்ன முடியும்... ஆனா நம்ம நாட்டு றோட்டில சொதியே விட்டு குடிக்க முடியும்,,," எண்டு...!!!!!!!!!!!!!!

pradeepkt
16-03-2006, 03:28 AM
ஹா ஹா ஹா...
கண்டிப்பா... நம்ம நாட்டு ரோட்டில அண்டா அண்டாவா சொதி வச்சிக் குடிக்கலாமே..
ஆனாப் பாருங்க அதையெல்லாம் மூடி சோறு மட்டும் போட்டுத் தின்னுற அளவுக்குப் பல ரோடுகளை மாத்திப் புட்டாய்ங்க பாவிப் பயக...

gragavan
16-03-2006, 03:36 AM
ஆனாலும் பிரதீப்பு...நாங்க பெங்களூருல நெறைய வெச்சிருக்கோம். சொதி இருக்குறவக...கொண்டாரலாம்....சொதி மட்டுமுல்ல...வெஞ்சனம் வெக்க நடுத்தரத்துலயும்....ஊறுகா உப்பு வெச்சிக்கிற சின்னத் தரத்துலயும்...எக்கச்சக்கமா இருக்கு.

16-03-2006, 03:44 AM
அதை ஏய்யா ரெண்டு தடவை சொல்றீரு...
இப்பத்தான் எல்லாத்தையும் அவுகளும் அடைச்சிக்கிட்டே வராகளாமே...

பென்ஸ்
16-03-2006, 02:11 PM
கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு இடத்தில் மரம் நடுவிழா" என்று
பெரிய விழா நடந்தது... சரி எங்கப்பா என்று பாத்தா, KR Puram
ரோட்டில் (நடு ரோட்டிலையா) மரத்தை வைக்கிறாங்க... ஆனா, அந்த
மரம் சரியா நிக்க ஒரு லாறி மண் இட வேண்டி இருந்தது.. அவ்வளவு
பெரிய குழி.....

தாமரை
16-03-2006, 02:15 PM
கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு இடத்தில் மரம் நடுவிழா" என்று
பெரிய விழா நடந்தது... சரி எங்கப்பா என்று பாத்தா, KR Puram
ரோட்டில் (நடு ரோட்டிலையா) மரத்தை வைக்கிறாங்க... ஆனா, அந்த
மரம் சரியா நிக்க ஒரு லாறி மண் இட வேண்டி இருந்தது.. அவ்வளவு
பெரிய குழி.....
ஒரு லாரி மண் இட்டா மேடு அல்லவா ஆகவேண்டும்.. ஓ சுத்தி இருந்து பறிச்சு எடுத்து போட்டுட்டாங்களா?

பென்ஸ்
16-03-2006, 02:28 PM
அவ்வளவு
பெரிய குழி..... என்று சொன்னேன் அல்லவா???

pradeepkt
16-03-2006, 02:42 PM
அடுத்து எவ்வளவுன்னு சொல்லலைன்னு சொல்லுவாரு பாருங்க :)

பென்ஸ்
16-03-2006, 02:52 PM
ம்ம்ம்ம்... வாயா வா...
அடுத்த மாசம் இங்க வருகிறீரு இல்லையா.. வரும்...
உம்ம நல்ல நேரத்துக்கு இவரு மட்டும்தான் இருக்கார்... இவர் ஜூனியர் இல்லை...
ஆனாலும் நீரு என்ன பாடு பட போகிறிருன்னு பாரும்....

தீபன்
16-03-2006, 03:19 PM
அதை ஏய்யா ரெண்டு தடவை சொல்றீரு...
இப்பத்தான் எல்லாத்தையும் அவுகளும் அடைச்சிக்கிட்டே வராகளாமே...
என்னத்த அடைச்சு என்னத்த பண்ண...
அதான் ஒரு பக்கத்தால அடைக்க அடைக்க மற்ற்ப் பக்கத்தால சொதி விடக்கூடிய மாதிரி வருகுதில்ல...