PDA

View Full Version : குறுநகை

ப்ரியன்
15-03-2006, 12:42 PM
என் யுக யுகத்திற்கான
சந்தோசம்;
நீ சிந்தும் ஒற்றை
குறுநகையில்
ஒளிந்திருக்கிறது!

- ப்ரியன்.

pradeepkt
16-03-2006, 03:27 AM
இப்படித்தானய்யா கொள்ளப் பயக திரியுறாய்ங்க...
பொம்பளப் புள்ளைக இந்த மாதிரி ஏதாச்சும் சொல்லுதா என்ன???
:D நல்லாத்தேன் கற்பனை செய்றீக

gragavan
16-03-2006, 04:29 AM
இப்படித்தானய்யா கொள்ளப் பயக திரியுறாய்ங்க...
பொம்பளப் புள்ளைக இந்த மாதிரி ஏதாச்சும் சொல்லுதா என்ன???
:D நல்லாத்தேன் கற்பனை செய்றீகஅது உண்மைதான் பிரதீப். அதுவுமில்லாம பொம்பளப் புள்ளைக இப்பிடி எழுதுனா...அதப் பொம்பளப் புள்ளையாவே மதிக்கவோ நடத்தவோ மாட்டேங்களே.....சரி விடுங்க...

சரி பிரியன்....விஷயத்துக்கு வருவோம்...யாரது? ;)

அல்லிராணி
16-03-2006, 07:51 AM
என் யுக யுகத்திற்கான
சந்தோசம்;
நீ சிந்தும் ஒற்றை
குறுநகையில்
ஒளிந்திருக்கிறது!

- ப்ரியன்.
உன்
"குறு" "குறு"த்த
பார்வையின் பின்
நீண்ட திட்டம்
இருக்குமென்பதை
நானறிவேன்..

"குறு நகை" அல்ல அது..
விஷம் தோய்ந்த
குறுவாள்.!!!

பென்ஸ்
16-03-2006, 03:37 PM
என்னடா தமிழ்மன்றத்தில் கவிதை குறைந்து போச்சே என்று ஒரு எண்ணம் வர...

இங்க வந்து பாத்தா யாப்பா யாப்பா....

நன்றி ப்ரியன்...
நன்றி அல்லிராணி...

ப்ரியன்...
உங்கள் ரசிகனாக:
வாவ்... சான்ஸ்சே இல்லபா... அவன் அவன் அதுக்குதானே சாவுறான்...

பென்ஸாக:
ஏண்டா... உன்னை சுத்தி இருக்கிறவன் படுறத பாத்து கூட நீ திருந்த
மாட்டியா... அலையாத... பெண் மட்டுமே உலகம் இல்லை... காதல்
மட்டுமே வாழ்க்கை இல்லை...

அல்லிராணி...
சரிதான்... ஆனால் கத்தியை எடுத்தவன் கத்தியால் மடிவான்...
உங்களிடம் இருப்பது குறுநகையா... இல்லை குறுவாளா???

அல்லிராணி
17-03-2006, 12:48 PM
அல்லிராணி...
சரிதான்... ஆனால் கத்தியை எடுத்தவன் கத்தியால் மடிவான்...
உங்களிடம் இருப்பது குறுநகையா... இல்லை குறுவாளா???

கத்தியை எடுக்காதே
என்பது தானே அறிவுரை
கத்தி வைத்திருக்காதே
என்றா..

புன்னகையை
ஆயுதமாக்கினால்
புன்னகையுடன் மடியலாமே

அதை விட
பெரிய பேறு
உண்டா?

ப்ரியன்
21-03-2006, 12:49 PM
இப்படித்தானய்யா கொள்ளப் பயக திரியுறாய்ங்க...
பொம்பளப் புள்ளைக இந்த மாதிரி ஏதாச்சும் சொல்லுதா என்ன???
:D நல்லாத்தேன் கற்பனை செய்றீக

பெண்கள் பொது இடத்தில் கூவ மாட்டார்கள் பிரதீப்...காதலிப்பவர்களை கேட்டுப்பாருங்கள் எப்படி காதலனின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து கவிதையாக சொல்லுவார்கள் என்று

ப்ரியன்
21-03-2006, 12:51 PM
அது உண்மைதான் பிரதீப். அதுவுமில்லாம பொம்பளப் புள்ளைக இப்பிடி எழுதுனா...அதப் பொம்பளப் புள்ளையாவே மதிக்கவோ நடத்தவோ மாட்டேங்களே.....சரி விடுங்க...

அமாம் ராகவன் இப்படித்தான் பெண்ணைக் கட்டிப்போட்டுள்ளது சமூகம் இது நாள் வரை

சரி பிரியன்....விஷயத்துக்கு வருவோம்...யாரது?

அவள் என் காதலி :)

ப்ரியன்
21-03-2006, 12:53 PM
உன்
"குறு" "குறு"த்த
பார்வையின் பின்
நீண்ட திட்டம்
இருக்குமென்பதை
நானறிவேன்..

"குறு நகை" அல்ல அது..
விஷம் தோய்ந்த
குறுவாள்.!!!

குறுநகை அவளின் இதழில் இருந்து வடியும் தேன்
குறுவாள் அது அவள் கண் வழி பாயும் மது...

தாமரை
21-03-2006, 12:55 PM
பெண்கள் பொது இடத்தில் கூவ மாட்டார்கள் பிரதீப்...காதலிப்பவர்களை கேட்டுப்பாருங்கள் எப்படி காதலனின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து கவிதையாக சொல்லுவார்கள் என்று
1. நீ எதை விரும்புகிறாயோ அதுவாகவே மாறத் தொடங்கி விடுகிறாய்.
2. பெண்கள் பொது இடத்தில் கூவ மாட்டார்கள்
3. நீங்கள் காதலிக்கிறீர்கள்

இப்போ சொல்லுங்க இதில் எது தவறு?

ப்ரியன்
21-03-2006, 12:55 PM
புன்னகையை
ஆயுதமாக்கினால்
புன்னகையுடன் மடியலாமே

நல்ல கவிதை வரிகள் இவை அல்லிராணி

அல்லிராணி உங்களின் ஒவ்வொரு பதில் கவிதைகளும் ரசிக்கும்படி இருக்கின்றன தொடருங்கள் இந்த பாணியை

தாமரை
21-03-2006, 12:56 PM
குறுநகை அவளின் இதழில் இருந்து வடியும் தேன்
குறுவாள் அது அவள் கண் வழி பாயும் மது...
அதாவது

ரோஜாவில்
தேன் நிறைந்த
மல்ர் மேலே
முள் கீழே
என்னவளிடம்
அது தலைகீழே

என்கிறீர்கள்

ப்ரியன்
21-03-2006, 01:05 PM
உங்கள் ரசிகனாக:
வாவ்... சான்ஸ்சே இல்லபா... அவன் அவன் அதுக்குதானே சாவுறான்...

பென்ஸாக:
ஏண்டா... உன்னை சுத்தி இருக்கிறவன் படுறத பாத்து கூட நீ திருந்த
மாட்டியா... அலையாத... பெண் மட்டுமே உலகம் இல்லை... காதல்
மட்டுமே வாழ்க்கை இல்லை...

நன்றி பென்சமின் இருவகையான விமர்சனங்களுக்கு உங்களை என்னின் நல்ல நலம்விரும்பியாக பார்க்கிறேன் இரண்டாவது விமர்சனத்தில்...காதல் கவிதகள் எழுதுவது கொஞ்சம் ஈசி பெஞ்சமின் :) சீக்கிரம் எழுதிவிடலாம்

பொதுவான கவிதைகளுக்கு கொஞ்சம் நேரமெடுக்கும் கருத்தை விதையாக மனதில் போட்டுவைத்து செதுக்கி செதுக்கி எழுத வேண்டும் அட்லீட் என் விடயத்திலாவது...இப்போது கொஞ்சம் வேலை பளு அதனால் அதற்கு கொஞ்சமும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது...

இன்னுமொரு காரணம் என் நண்பர்களுக்கு காதல் கவிதை புரியுமளவுக்கு மற்ற கவிதைகள் புரிவது இல்லை

ப்ரியன்
21-03-2006, 01:07 PM
1. நீ எதை விரும்புகிறாயோ அதுவாகவே மாறத் தொடங்கி விடுகிறாய்.
2. பெண்கள் பொது இடத்தில் கூவ மாட்டார்கள்
3. நீங்கள் காதலிக்கிறீர்கள்

இப்போ சொல்லுங்க இதில் எது தவறு?

எல்லாமே தவறில்லை செல்வன் :)

தாமரை
21-03-2006, 01:09 PM
எல்லாமே தவறில்லை செல்வன் :)
அப்போ நீங்கள் ஏன் கூவுகிறீர்கள்?

ப்ரியன்
21-03-2006, 01:48 PM
அப்போ நீங்கள் ஏன் கூவுகிறீர்கள்?

எதைச் சொல்லுகிறீர்கள் தாமரை..புரியவில்லை

அல்லிராணி
21-03-2006, 02:28 PM
அப்போ நீங்கள் ஏன் கூவுகிறீர்கள்?
மடக்கி விட்டதாக நினைப்போ?

அல்லிராணி
21-03-2006, 02:38 PM
குறுநகை அவளின் இதழில் இருந்து வடியும் தேன்
குறுவாள் அது அவள் கண் வழி பாயும் மது...
இப்போது தெரிந்தது
என் கண்களைப் பார்க்க
ஏன் தயங்குகிறாய் என்று
குத்துகிறதோ
மனம்!

அல்லிராணி
21-03-2006, 02:45 PM
காதல் கவிதகள் எழுதுவது கொஞ்சம் ஈசி பெஞ்சமின் :) சீக்கிரம் எழுதிவிடலாம்

பொதுவான கவிதைகளுக்கு கொஞ்சம் நேரமெடுக்கும் கருத்தை விதையாக மனதில் போட்டுவைத்து செதுக்கி செதுக்கி எழுத வேண்டும் அட்லீட் என் விடயத்திலாவது...இப்போது கொஞ்சம் வேலை பளு அதனால் அதற்கு கொஞ்சமும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது...

இன்னுமொரு காரணம் என் நண்பர்களுக்கு காதல் கவிதை புரியுமளவுக்கு மற்ற கவிதைகள் புரிவது இல்லை
காதலிப்பது தான் கடினம். காதல் கவிதைகள் எழுதுவது மிக எளிது. ஏனென்றால் காதல் பார்வையில் அழகுகள் தான் தெரியும். தாமரை அண்ணாவின் குறிப்புப் படி அழகுகளை கோர்த்து விட்டால் கவிதை தயார்.

பொதுவான கவிதைக்கு விதை கிடைப்பது அபூர்வம். அதையும் அழகாய் விளங்கும்படி சொல்வது கடினம்.

கவிதைகளை படிப்பவர் அதை உணர வேண்டும். அனைவரும் காதலின் சாரலில் ஓருமுறையாவது நனைந்திருப்பர். எனவே எளிதில் கவிதையுடன் ஒன்றி விடுகின்றனர். ஆனால் சமூகக் கருத்து என்பது பலப்பல கோணங்களைக் கொண்டது. ஒரே கருத்து ஒவ்வொரு வார்த்தையிலும் புது வடிவம் பெறுகிறது. எனவே எழுதுவது எளிதானாலும் அங்கீகாரம் பெறுவது அவ்வளவு எளிதல்ல

எதாவது ஒரு சமூகக் கவிதை எழுதுங்கள்

அதன் பல் முகங்களை, பல வண்ணங்களை உரித்துக் காட்டுகிறேன்

தாமரை
21-03-2006, 03:06 PM
எதைச் சொல்லுகிறீர்கள் தாமரை..புரியவில்லை
பெண்கள் தம் காதலனை பற்றிய கவிதைகளை கடை விரிப்பதில்லை என்றீர்கள்.

நீங்கள் ஒரு பெண்ணை விரும்புகிறீர்கள். எனவே நீங்கள் எதை விரும்புகிறீர்களே அதுவாக ஆகிவிடுவீர்கள் என்ற விதிப்படி நீங்கள் பெண்மனம் கொண்டவராய் மாறி இருக்க வேண்டும். அப்படியானால் உங்கள் காதலியைப் பற்றிய எண்ணங்களை உங்கள் காதலியல்லாத பலர் பார்வைக்கு வைக்க மாட்டீர்கள்.

இப்படி போகுது என் விவாதம்

thirukanaga
23-03-2006, 04:02 PM
எனக்கு அந்த பிரச்சனை இல்லை
அவவுக்கு பல் பெரிசு

அல்லிராணி
24-03-2006, 03:43 AM
எனக்கு அந்த பிரச்சனை இல்லை
அவவுக்கு பல் பெரிசு

உமக்கு
பல்லே இல்லை
போல இருக்கிறதே

"அவவுக்கு"

அவருக்கா? அளவுக்கா?

குறுநகையுடன் இளையவராகும்
அல்லிராணி.

தாமரை
24-03-2006, 04:24 AM
உமக்கு
பல்லே இல்லை
போல இருக்கிறதே

"அவவுக்கு"

அவருக்கா? அளவுக்கா?

குறுநகையுடன் இளையவராகும்
அல்லிராணி.
இளையவர்
இனியவராக
வாழ்த்துக்கள்