PDA

View Full Version : பெயருக்கு பின்னால் பட்டம்



rajasi13
15-03-2006, 11:47 AM
பெயருக்கு பின்னால் பட்டம் அருமையாக இருக்கிறது. புதுமையான பாராட்டத்தக்க முயற்சி.

சுபன்
15-03-2006, 03:30 PM
ஆம் நண்பரே அதுவும் தமிழில் பாராட்டத்தக்க முயற்சி

பாரதி
15-03-2006, 04:17 PM
மன்றத்திற்கு வரும் புதிய நண்பர்களை ஊக்கப்படுத்த இது தேவைதான். என்னைப் போன்றவர்களுக்கு பின்னால் வரும் பட்டம் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. எனக்கு மட்டும் நீக்கி விட இயலுமா..? நன்றி.

சுபன்
15-03-2006, 04:37 PM
ஏன் அண்ணா மன்றத்தின் தூண் நல்ல பட்டம் தானே

இராசகுமாரன்
16-03-2006, 04:41 AM
நண்பர்களே...!

பயனாளர் பெயருக்கு கீழ் வரும் User Title-லில் அவரவர் பதிப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கீழ் கண்டவாறு தோன்றுமாறு மாற்றியுள்ளேன். இதில் ஏதும் மாற்றம் தேவைப் பட்டால் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன.

1-49 ... புதியவர்
50-99 ... இளையவர்
100-499 ... இளம் புயல்
500-999 ... இனியவர்
1000-1999 ... அனைவரின் நண்பர்
2000-க்கு மேல் ... மன்றத்தின் தூண்

பாரதி எப்போதும் வித்தியாசமாகவே சிந்திப்பவர், அதனால் அவருக்கு மட்டும் இதில் ஏதோ வித்தியாசமாக தோன்றியிருக்கிறது. (அதிகம் சிந்திக்காதீர்கள் பாரதி.. தலையில் கொஞ்சம் முடி மிஞ்சட்டும்..)

பெயரின் கீழ் இரண்டாவது வரியில் ஏதாவது ஒன்று வரவேண்டும் அல்லது மூன்றாவது வரி தனியாக வரும் போது நன்றாக இருக்காது. ஆங்கிலத்தில் "Member" என்று மட்டும் வந்தால் நன்றாக இல்லை.

gragavan
16-03-2006, 05:14 AM
தமிழில் வருவது நன்றாகவே இருக்கிறது. புதிய முயற்சிக்குப் பாராடுகள்.

பாரதி அண்ணாவை மன்றத்தின் தூண் என்று சொல்ல வேண்டாமா....சரி..மன்றத்தின் விதானம், கோபுரம், கொடிமரம்....இதுல எது பிடிக்குதுன்னு சொல்லுங்க...அதையே வெச்சுருவோம்... :-)

sarcharan
16-03-2006, 05:17 AM
அவர் பாரதி ஆயிற்றே.. சிந்திக்காமலா இருப்பார்;) ;)

நண்பர்களே...!
பாரதி எப்போதும் வித்தியாசமாகவே சிந்திப்பவர், அதனால் அவருக்கு மட்டும் இதில் ஏதோ வித்தியாசமாக தோன்றியிருக்கிறது. (அதிகம் சிந்திக்காதீர்கள் பாரதி.. தலையில் கொஞ்சம் முடி மிஞ்சட்டும்..)

தாமரை
16-03-2006, 05:51 AM
[/COLOR]
மன்றத்திற்கு வரும் புதிய நண்பர்களை ஊக்கப்படுத்த இது தேவைதான். என்னைப் போன்றவர்களுக்கு பின்னால் வரும் பட்டம் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. எனக்கு மட்டும் நீக்கி விட இயலுமா..? நன்றி.
ராகவன் கவலைப் பட்டால் காரணம் இருக்கு..உருளையாய் தூண் மாதிரி இருப்பதால்

காரணம் தெரியணுமா? ஹை லைட் பண்ணி பாருங்க..

gragavan
16-03-2006, 08:45 AM
[/color]
ராகவன் கவலைப் பட்டால் காரணம் இருக்கு..உருளையாய் தூண் மாதிரி இருப்பதால்

காரணம் தெரியணுமா? ஹை லைட் பண்ணி பாருங்க..ஐயா....இது வஞ்சகமில்லாம வளந்த ஒடம்பு.....அதுனால்தான் திங்குறது உடம்புல சேருது...ஒங்களுக்குப் பொறாமையா இருந்தா என்ன செய்றது!

தாமரை
16-03-2006, 11:15 AM
2000-க்கு மேல் ... மன்றத்தின் தூண்

.
மன்றம் ஆயிரம் கால் மண்டபமாய் செழிக்கட்டும்

அல்லிராணி
16-03-2006, 02:34 PM
நண்பர்களே...!

பயனாளர் பெயருக்கு கீழ் வரும் User Title-லில் அவரவர் பதிப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கீழ் கண்டவாறு தோன்றுமாறு மாற்றியுள்ளேன். இதில் ஏதும் மாற்றம் தேவைப் பட்டால் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன.

1-49 ... புதியவர்
50-99 ... இளையவர்
100-499 ... இளம் புயல்
500-999 ... இனியவர்
1000-1999 ... அனைவரின் நண்பர்
2000-க்கு மேல் ... மன்றத்தின் தூண்

பாரதி எப்போதும் வித்தியாசமாகவே சிந்திப்பவர், அதனால் அவருக்கு மட்டும் இதில் ஏதோ வித்தியாசமாக தோன்றியிருக்கிறது. (அதிகம் சிந்திக்காதீர்கள் பாரதி.. தலையில் கொஞ்சம் முடி மிஞ்சட்டும்..)

பெயரின் கீழ் இரண்டாவது வரியில் ஏதாவது ஒன்று வரவேண்டும் அல்லது மூன்றாவது வரி தனியாக வரும் போது நன்றாக இருக்காது. ஆங்கிலத்தில் "Member" என்று மட்டும் வந்தால் நன்றாக இல்லை.
பேதையாய், பெதும்பையாய், மங்கையாய், மடந்தையாய், அரிவையாய், தெரிவையாய், பேரிளம்பெண்ணாய் வளரும் மகளிர் பருவமுண்டு..
அதைப் போல் பருவம் செப்புவதாய் அமைந்துள்ளது பட்டங்கள்...
ஆனால்
புறப்படும் போதே புயலாய் கிளம்பும் சில காற்றுகள்
தென்றலாய் கொண்டலாய் குலவும் சில காற்றுகள்
சில்லென்று வெடவெடக்க வைக்கும் சிலக் காற்றுகள்
அம்மிகளையே அசைத்து வைக்கும் ஆடிக் காற்றுகள்
தான் வந்த இடமெல்லாம் அழிவுக் கோலமிடும் சூறைக்காற்றுகள்
சாரலின் ஈரத்துடன் மெல்லென அடிக்கும் மேலைக் காற்றுகள்
எத்தனையோ காற்றுகள் உண்டு இனம் பிரித்தரிய...

அதே போல் பதிவாளர்களின் பண்பை பறைசாற்றும் வண்ணம் இணைபெயர் உண்டென்றால் நன்றல்லவோ...

pradeepkt
16-03-2006, 02:43 PM
நன்று நன்று,
ஆனால் அவற்றைப் பதிவுகளின் எண்ணிக்கை போல் கணினி கணிக்க முடியாதே ... :)

அல்லிராணி
16-03-2006, 02:50 PM
நன்று நன்று,
ஆனால் அவற்றைப் பதிவுகளின் எண்ணிக்கை போல் கணினி கணிக்க முடியாதே ... :)
பண்பட்டவரை மட்டும் என்ன
கணிணியா கணக்கு பண்ணுகிறது..

மாதம் ஒருமுறை
சிலருக்கு பட்டம் தரலாம்
அவரின் படைப்பின்
நலம் கொண்டு...
நடை கண்டு

எல்லோருக்கும் பட்டம்
என்பதல்ல கோரிக்கை
இவரின் பதிவுகள்
இப்படி இருக்கலாம்
என்ற ஒரு வரையறை...

கூடவே
நிர்வாகிகள்
பதிவுகளைப் படிக்கிறார்கள்
என்ற ஒரு எச்சரிக்கை
மனதினில் இருக்கும்..
சிலருக்கு...

(நிர்வாகிகள் அனைத்து பதிவுகளையும் படிக்க வைக்கும் சதி அல்ல இது)

இராசகுமாரன்
16-03-2006, 07:17 PM
அதே போல் பதிவாளர்களின் பண்பை பறைசாற்றும் வண்ணம் இணைபெயர் உண்டென்றால் நன்றல்லவோ...

அப்படி ஒன்று உண்டென்றால், தாங்கள் தெரிவிப்பது நன்றல்லோ...

அது சரி, நண்பரே, இங்கே ஏன் இரண்டு பெயரில் உலாவுகிறீர்கள்?? ஒன்று போதாதா?

சுவேதா
17-03-2006, 12:41 AM
மிகவும் அருமையான திட்டம் அண்ணா நன்றிகள்!

mkmaran
17-03-2006, 01:44 AM
நல்ல திட்டம், அண்ணா!

இதுவரை ஆங்கிலத்தில் இருந்த துணை தலைப்புகள் இப்போது
இனிய தமிழில்..!

மன்றத்தார் அனைவருக்கும் ஆர்வத்தை தூண்டும் விதத்தில்
அழகாக தலைப்புகளை பிரித்திருக்கிறீர்கள்.

சீக்கிரமா நானும் ஒரு தூண் ஆகனும்...:cool:

pradeepkt
17-03-2006, 04:20 AM
மிகவும் அருமையான திட்டம் அண்ணா நன்றிகள்!
ஒரு வழியா வந்திட்டயாம்மா?
எங்கே இத்தனை நாளாக் காணோம்...
இன்னும் புதுப் புதுப் பட்டங்கள் கொடுத்தாதான் மன்றத்தின் தூண் சுவேதா அடிக்கடி வருவாராக்கும்...

gragavan
17-03-2006, 06:58 AM
அப்படி ஒன்று உண்டென்றால், தாங்கள் தெரிவிப்பது நன்றல்லோ...

அது சரி, நண்பரே, இங்கே ஏன் இரண்டு பெயரில் உலாவுகிறீர்கள்?? ஒன்று போதாதா?அது பாட்டுக்க அது..இது பாட்டுக்க இது...இருக்கட்டுமே................

gragavan
17-03-2006, 07:00 AM
மிகவும் அருமையான திட்டம் அண்ணா நன்றிகள்!ஆஆஆஆஆஆஆஆஆஆ சுவேதாஆஆஆஆஆஆஆஆஆ....வா வா வா எப்படி இருக்க? படிப்பு நல்லா போகுதா?

தாமரை
17-03-2006, 07:08 AM
ஆஆஆஆஆஆஆஆஆஆ சுவேதாஆஆஆஆஆஆஆஆஆ....வா வா வா எப்படி இருக்க? படிப்பு நல்லா போகுதா?
அப சகுனமா பேசாதீர்.. படிப்பு நல்லா வருதான்னு கேளுங்க...

mkmaran
17-03-2006, 07:51 AM
அப சகுனமா பேசாதீர்.. படிப்பு நல்லா வருதான்னு கேளுங்க...

தாமரைக்கு வாய்ப்பு கிடைச்சால் போதும்..
ஒரு தாக்கு தாக்கி வைச்சிடுறீங்க:D

sarcharan
17-03-2006, 09:59 AM
வாய்ப்பு கிடைச்சான்னு இல்லை, கிடைக்கலன்னாலும் தான்
ஆனா எவனாவது மாட்டுறான் உ-ம்: பென்ஸூ, நான், ராகவன்...:confused: :confused: :confused:

தாமரைக்கு வாய்ப்பு கிடைச்சால் போதும்..
ஒரு தாக்கு தாக்கி வைச்சிடுறீங்க:D

sarcharan
17-03-2006, 10:01 AM
அட அது தான் பாப்பாவுக்கு மந்திரிச்சு தாயத்து கட்டியாச்சு இல்ல ...
ஆஆஆஆ எல்லாம் குறைஞ்சிடிச்சி பாருங்க...;) ;) ;)

ஆஆஆஆஆஆஆஆஆஆ சுவேதாஆஆஆஆஆஆஆஆஆ....வா வா வா எப்படி இருக்க? படிப்பு நல்லா போகுதா?

sarcharan
17-03-2006, 10:02 AM
வாம்மா மின்னல் :p :p
பிரதீப்பு, ஒருவழியா சுவேதா மன்றத்துக்கு வந்திருச்சு...:D :D :D :D

மிகவும் அருமையான திட்டம் அண்ணா நன்றிகள்!

தாமரை
17-03-2006, 10:14 AM
வாம்மா மின்னல் :p :p
பிரதீப்பு, ஒருவழியா சுவேதா மன்றத்துக்கு வந்திருச்சு...:D :D :D :D
கொஞ்சம் ஓய்வா இருக்கும்பொழுது சுவேதாவின் பாட்டுக்கு பாட்டுல யாருக்கு எத்தனை மார்க்குன்னு சொல்லம்மா!

sarcharan
17-03-2006, 10:27 AM
அத இப்படியா கேப்பாங்க...
சுவேதாஆஆஆஆஆ கொஞ்சம் ஓய்வாஆஆஆஆ இருக்கும்பொழுது சுவேதாவின் பாட்டுக்கு பாட்டுல யாருக்குஉஉஉ எத்தனை மார்க்குன்னு சொல்லம்மாஆஆஆஆஆஆ
இப்படி கேக்கணும்

கொஞ்சம் ஓய்வா இருக்கும்பொழுது சுவேதாவின் பாட்டுக்கு பாட்டுல யாருக்கு எத்தனை மார்க்குன்னு சொல்லம்மா!

sarcharan
17-03-2006, 10:28 AM
அப்படியே அந்த புதிருக்குண்டான விடையையும் சொல்லும்மா...:confused: :confused:

கொஞ்சம் ஓய்வா இருக்கும்பொழுது சுவேதாவின் பாட்டுக்கு பாட்டுல யாருக்கு எத்தனை மார்க்குன்னு சொல்லம்மா!

தாமரை
17-03-2006, 10:52 AM
அப்படியே அந்த புதிருக்குண்டான விடையையும் சொல்லும்மா...:confused: :confused:
அதைக் கேட்டதனாலதானே தங்கச்சி கோவிச்சுகிட்டு போனாங்க... அதையெல்லாம் மறந்திட்டோம் வாம்மா..!!

பாரதி
17-03-2006, 04:43 PM
அன்பு இராசகுமாரன்,
நீங்கள் தரும் பட்டங்களை பயனாளர் சொந்த விருப்பத்தின் அடிப்படையில், ஃப்ரொபைலில் வைத்துக்கொள்ள அல்லது நீக்க வசதிகள் உள்ளதா..? அல்லது அவ்விதம் ஏற்படுத்தித் தருவது சாத்தியமா...?

இராசகுமாரன்
19-03-2006, 03:50 AM
நீங்கள் தரும் பட்டங்களை பயனாளர் சொந்த விருப்பத்தின் அடிப்படையில், ஃப்ரொபைலில் வைத்துக்கொள்ள அல்லது நீக்க வசதிகள் உள்ளதா..? அல்லது அவ்விதம் ஏற்படுத்தித் தருவது சாத்தியமா...?
நண்பர் பாரதி அவர்களே,

முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமே இல்லை. நிச்சயம் ஏற்படுத்தி தர முடியும்.

ஆனால், பயனாளர்களே அவ்வாறு பயனாளர் தலைப்பு (User Title) தேர்வு செய்யும் போது, அவர்களின் விருப்பு வெறுப்புகள் அதில் தெரிய வாய்ப்புள்ளது, துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்புள்ளது. அதை சிலர் இங்கே கண்காணிக்க வேண்டும், என் வேலைச் சுமை தற்போது அதற்கு அனுமதிக்காது. நீங்கள் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், நான் முயற்சி செய்ய தயார்.

இன்னொரு ஆலோசனை, மேலே நான் பதிப்புகளுக்கு ஏற்ப பயனாளர் தலைப்பு அட்டவணை கொடுத்திருப்பது போல், நீங்கள் உங்களுக்கு பிடித்த பெயர்களில் ஒரு அட்டவணை தயாரித்து கொடுங்கள், அதை நடைமுறைப் படுத்துகிறேன்.

நன்றி

இளந்தமிழ்ச்செல்வன்
19-03-2006, 09:26 AM
நல்ல முயற்சி, தமிழில் பட்டங்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

நண்பர் பாரதி தன்னடக்கத்துடன் கூறுகிறார். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது அவர் எண்ணமாக இருக்கக்கூடும். ஆனால் புதிதாய் வருபவர்கள் தங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் உதவி கேட்கவும் இது உதவும் அல்லவா?

சுவேதா
19-03-2006, 11:59 PM
அத இப்படியா கேப்பாங்க...
சுவேதாஆஆஆஆஆ கொஞ்சம் ஓய்வாஆஆஆஆ இருக்கும்பொழுது சுவேதாவின் பாட்டுக்கு பாட்டுல யாருக்குஉஉஉ எத்தனை மார்க்குன்னு சொல்லம்மாஆஆஆஆஆஆ
இப்படி கேக்கணும்

ஹி..ஹி.. என்ன அண்ணாஆஆஆஆஅ:D

மயூ
23-03-2006, 02:13 AM
பட்டங்கள் கொடுப்பது புதுப்பயனர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை. வாழ்க வழர்க உங்கள் முயற்சி.

மஸாகி
17-04-2006, 04:03 AM
மன்றத்திற்கு வரும் புதிய நண்பர்களை ஊக்கப்படுத்த இது தேவைதான். என்னைப் போன்றவர்களுக்கு பின்னால் வரும் பட்டம் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. எனக்கு மட்டும் நீக்கி விட இயலுமா..? நன்றி.

ஐயா பாரதி.. ஏன் அந்த தூணை இடிக்கப் போறீங்க..
அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே..

யாராவது - சாய்ந்திருவாங்கண்ணு உங்க ஃவைப் சொன்னாரோ..?

குசும்புடன் - மஸாகி
17.04.2006

arul5318
18-06-2006, 06:42 AM
நல்ல ஊக்கம் தரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது.

மயூ
18-06-2006, 08:37 AM
ஐயா பாரதி.. ஏன் அந்த தூணை இடிக்கப் போறீங்க..
அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே..

யாராவது - சாய்ந்திருவாங்கண்ணு உங்க ஃவைப் சொன்னாரோ..?
குசும்புடன் - மஸாகி
17.04.2006
சாய்ந்தால் பரவாயில்லை கழட்டிக்கொண்டு போய்விட்டால்????? :D :D

prabhafriend
18-06-2006, 10:00 PM
எனனைப் பொறுத்தவரை . நம்முடைய பெயர் வலது ஒரத்திலும் . நம்முடைய பதிப்பு இடது ஒரத்திலும்(ஒன்றன் கீழ் ஒன்று இல்லாமல்) வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் .

vckannan
31-07-2006, 08:47 AM
ஆஹா இதுதான் பட்டத்தோட இரகசியமா ?
நல்லாத்தான் இருக்கு ...

மஸாகி
02-08-2006, 10:36 AM
சீக்கிரமா நானும் ஒரு தூண் ஆகனும்...:cool:

நன்று நண்பரே - சீக்கிரம் ஆகிடுங்க..
எங்க ஊரு பாலத்துக்கு
ஒரு தூண் தேவைப் படுது - விலாசம் தந்தீங்கன்னா
வந்து உருட்டிக்கிட்டு போயிட வசதியா இருக்கும்..

நட்புக்கு - மஸாகி
02.08.2006

ஜிங்குசாங்கு
01-11-2006, 04:35 AM
நண்பர்களே,
பண்பட்டவர் எனப்படுபவர் யார்?

இவன்
JSJUNKS

pradeepkt
01-11-2006, 09:42 AM
நண்பர்களே,
பண்பட்டவர் எனப்படுபவர் யார்?

இவன்
JSJUNKS
பண்பட்டவருதான்... வேற யாரு??? :rolleyes: :rolleyes:

அறிஞர்
01-11-2006, 03:17 PM
நண்பர்களே,
பண்பட்டவர் எனப்படுபவர் யார்?

இவன்
JSJUNKSதொடர்ந்து தமிழ் பதிப்புக்களை, கருத்துக்களை தருபவர். பண்பட்டவர் அனுமதியை சிறிது நாட்கள் கழித்து கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்...

thoorigai
25-01-2007, 09:27 AM
அப சகுனமா பேசாதீர்.. படிப்பு நல்லா வருதான்னு கேளுங்க...

படிச்ச உடனே டக்குனு ஒரு சிரிப்பு
அருமையான நகைச்சுவை - மிகச் சரியான நேரத்தில் பதில் கொடுத்தீர்கள்:D :D

இளசு
25-01-2007, 08:24 PM
நல்ல முயற்சி, தமிழில் பட்டங்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

நண்பர் பாரதி தன்னடக்கத்துடன் கூறுகிறார். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது அவர் எண்ணமாக இருக்கக்கூடும். ஆனால் புதிதாய் வருபவர்கள் தங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் உதவி கேட்கவும் இது உதவும் அல்லவா?

அக்டோபருக்குப் பின் ஆளைக்காணோமே இ.த.செ..

பணிச்சுமையா?

நலந்தானே?

மதுரகன்
04-02-2007, 05:40 PM
நண்பர்களே,
பண்பட்டவர் எனப்படுபவர் யார்?

"பண்பட்டவர் என்போர் யாரேனில் யாதொன்றும்
புண்படாதன சொல்வார்"
சரிதானே நிர்வாகிகளே..?

Mano.G.
05-02-2007, 12:49 AM
எதிர்பார்த்து கிடக்கும் அங்கீகாரத்தைவிட
எதிர்பாராமல் , முகமறியா உறவுகளால்
கிடைக்கும் அங்கீகாரம் இருக்கிரதே

அதை இங்கு நம் மன்ரத்தில் மட்டும் தான்
கிடைக்கும் வேறு எங்கும் இல்லை.

மனோ.ஜி

பிரசாத்
26-03-2007, 07:26 AM
1-49 ... புதியவர்
50-99 ... இளையவர்
100-499 ... இளம் புயல்
500-999 ... இனியவர்
1000-1999 ... அனைவரின் நண்பர்
2000-க்கு மேல் ... மன்றத்தின் தூண்



விளக்கங்களுக்கு நன்றி இராசகுமாரன் அவர்களே,

பிரசாத்

விகடன்
04-04-2007, 05:18 PM
அருமையான செவ்வனே திட்டமிடப்பட்ட முடிவு.

ஒவ்வொருவரது அநுபவத்தை ஊகித்துக் கொள்ளக்கூடிய சிறந்த வழி.

அன்புரசிகன்
05-04-2007, 02:27 PM
அருமையான செவ்வனே திட்டமிடப்பட்ட முடிவு.

ஆமாம்



ஒவ்வொருவரது அநுபவத்தை ஊகித்துக் கொள்ளக்கூடிய சிறந்த வழி.

பெயருக்கு பின்னால் வரும் பட்டத்தைவைத்துக்கொண்டு ஊகிக்கமுடியாதுள்ளதே. பதிவில் காணப்படும் அனுபவ முதிர்ச்சியை வைத்துத்தான் ஊகிக்கவேண்டியுள்ளது. இதற்கு உங்கள் பதில் யாதோ?

இளசு
05-04-2007, 08:26 PM
பெயருக்கு பின்னால் வரும் பட்டத்தைவைத்துக்கொண்டு ஊகிக்கமுடியாதுள்ளதே. பதிவில் காணப்படும் அனுபவ முதிர்ச்சியை வைத்துத்தான் ஊகிக்கவேண்டியுள்ளது. இதற்கு உங்கள் பதில் யாதோ?

அன்புள்ள அன்புரசிகன்,

தங்கள் கருத்தை ஒப்புக்கொள்கிறேன்..

பல பணிக்களங்களில் உழலும் நம் நண்பர்களைத்
தமிழில் தட்டச்ச ஊக்கவே இத்தகுதிப் பட்டங்கள்..

முதிர்ச்சியான பதிவுகளுக்கு நம் மன்ற நண்பர்கள்
அளிக்கும் அங்கீகாரமே அவர்கள் அடையும் வெகுமதி..

அந்த வெகுமதியை நாம் அனைவரும் அடையத் தூண்டுவதுதாம்
நம் ஒவ்வொருவரின் பின்னூட்டங்களின் நோக்கம்!

அன்புரசிகன்
06-04-2007, 08:59 AM
முதிர்ச்சியான பதிவுகளுக்கு நம் மன்ற நண்பர்கள்
அளிக்கும் அங்கீகாரமே அவர்கள் அடையும் வெகுமதி..

அதிலன்றி வேறிலேது..


அந்த வெகுமதியை நாம் அனைவரும் அடையத் தூண்டுவதுதாம்
நம் ஒவ்வொருவரின் பின்னூட்டங்களின் நோக்கம்!

எமது பதிவுகளிற்கு இன்னொருவர் பின்னூட்டமிடும்பொழுது அப்பொழுது எமக்கு ஏதோ ஒரு அங்கீகாரம் கிடைத்தது போன்று இனம் புரியாத ஒரு உணர்வு. நன்றி.

விகடன்
07-04-2007, 03:26 AM
பெயருக்கு பின்னால் வரும் பட்டத்தைவைத்துக்கொண்டு ஊகிக்கமுடியாதுள்ளதே. பதிவில் காணப்படும் அனுபவ முதிர்ச்சியை வைத்துத்தான் ஊகிக்கவேண்டியுள்ளது. இதற்கு உங்கள் பதில் யாதோ?

பதிவின் எண்ணிக்கையை வைத்துத்தானே அந்தப்பட்டங்களும் நிர்ணயிக்கப்படுகின்றன. இல்லையா அன்புரசிகா?

எப்படிப்பார்த்தாலும் இரண்டுமே சரிதான் என்று நினைக்கிறேன். இருந்தாலும் பதிவுகளின் எண்ணிக்கையை கணக்கிலிடுவெதுதான் சிறந்தது. ஏனென்றால் குறிப்பிடப்பட்ட பதிப்புவரையுந்தான் பட்டங்களும் படிஉப்படியாக உயர்ந்து செல்லும். உச்ச நிலை அடைந்ததும், அதன் பின்னர் பதிப்புக்களின் எண்ணிக்கையைத்தான் கணக்கிலிடவேண்டும். அந்தவகையில் பட்டத்தை விட பதிப்புக்களின் எண்ணிக்கையின் ஆளுமை ஒருவரின் பங்களிப்பை அல்லது அநுபவத்தை ஊகிக்க முடிகிறது

சூரியன்
18-05-2007, 06:20 AM
தொடரட்டும் உங்கள் நல்ல முயற்சிகள்

namsec
11-06-2007, 04:18 PM
பட்டம் அவசியமான ஒன்று இன்று முதல் நான் இளம்புயல்

அக்னி
11-06-2007, 04:21 PM
பட்டம் அவசியமான ஒன்று இன்று முதல் நான் இளம்புயல்
வாழ்க இளம்புயல் நாம்செக்...
இனியவராகி..,
அனைவரின் நண்பராகி..,
மன்றத்தின் தூணாகி..,
மேலும் வளர்க...

namsec
12-06-2007, 05:33 AM
வாழ்க இளம்புயல் நாம்செக்...
இனியவராகி..,
அனைவரின் நண்பராகி..,
மன்றத்தின் தூணாகி..,
மேலும் வளர்க...

வாழ்த்தியமைக்கு நன்றி என் இலக்கு அதுத்தான்

இலக்கு இல்லாதவன் வெற்றி கொள்ள முடியாது