PDA

View Full Version : காரணம் நீ!



நிலா
23-04-2003, 02:04 AM
உனக்கென்ன விளையாட்டாய் ஒரு பார்வை வீசிவிட்டாய்
இங்கு வீழ்ந்து கிடப்பது நானல்லவா?

------------------------------------------

ஊரினையேச் சுட்டெரிக்கும் சூரியன்
என்னை மட்டும் வருடிச்செல்கிறதே
----அது உன்னைக் கடந்து வந்திருக்கிறதோ?

-------------------------------------------
யார் முந்துவது வார்த்தைகளுக்குள் சண்டை
என்னவனோடு பேசத்தயாராய் நான்!
-------------------------------------------------------

இளசு
23-04-2003, 06:24 AM
அப்படிப் போடுங்க!
மூன்றும் அருமை....
தொடருங்கள்.... உங்கள் சிறு சிறு அணுகுண்டு வீச்சுகளை!

Narathar
23-04-2003, 07:55 AM
இப்போ நிலாவும் அணுகுண்டு போட ஆரம்பிச்சாச்சா????

நிலா
23-04-2003, 08:11 PM
நிலாவுக்கு அணுகுண்டு போடாமயிருந்தா சரி!

poo
23-04-2003, 08:21 PM
காதலியின் பிதற்றல் அருமை!!...

நிலா பாராட்டுக்கள்!!

gans5001
24-04-2003, 02:44 AM
மூன்றுமே அருமையான ஹைக்கூ.. தொடருங்கள்

Nanban
02-06-2003, 01:14 PM
எல்லோர் கண்நோக்கி
நேர்மையுடன் பேசும் நீ
என்னோடு பேசும் பொழுது
மட்டும்
மண்நோக்குவது ஏன்?
வீழ்ந்து கிடக்கிறேன் என்பதாலா?

puppy
08-01-2004, 10:05 PM
நிலா சிதறல்களா இவை.......

விகடன்
06-06-2008, 07:05 PM
நிலாவின் காதலின் உச்சநிலையா?
இல்லை
உணமையான அனுபவத்தின் வெளிப்பாடா?
எப்படி இருந்தாலும், கவிதை அருமை.

நண்பனின் கடிக்கவிக்கும் குறைவில்லை

இருவருக்கும் பாராட்டுக்கள்