PDA

View Full Version : ஐரோப்பாவிலேயே சக்தி வாய்ந்த கணனி



சுபன்
14-03-2006, 03:55 PM
: ஜெர்மனி சாதனை
ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. (46 டெராஃபிளாப்பே புரிகிறது அல்லவா!). அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது.

பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும்.

அறிவியல் ஆய்வுகளைச் செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது அற்புதமான கருவி. அவர்கள் போட நினைக்கும் கணக்குகளை நொடியில் போட்டு விடையைத் தரும்.

இந்த கணினியைத் தயாரிக்கும் செலவில் 90%-ஐ ஜெர்மனியின் மத்திய அரசும் 10%-ஐ ஜூலிக் நகரம் அமைந்துள்ள ரைன்-மேற்குபாலியா மாநிலமும் ஏற்றுக்கொண்டுள்ளன.

ஆனால் இதற்கும் தாத்தா அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், லாரென்ஸ் லிவர்மோர் தேசிய ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கிறது. அதன் செயல்திறன் விநாடிக்கு 367 டெராஃபிளாப்.

நன்றி:- லங்காசிறி.கொம்

sarcharan
15-03-2006, 08:17 AM
நல்ல தகவல்:)

இளந்தமிழ்ச்செல்வன்
15-03-2006, 08:51 AM
தகவலுக்கு நன்றி நண்பரே

gragavan
15-03-2006, 09:23 AM
தகவலுக்கு நன்றி சுபன்.

சரி. இந்தக் கணினியைக் கொண்டு என்ன செய்வாங்க?

sarcharan
15-03-2006, 09:36 AM
செல்வ(ன்) ராகவன் தனது வேலையை ஆரம்பிச்சுட்டாருய்யா..

தகவலுக்கு நன்றி சுபன்.
சரி. இந்தக் கணினியைக் கொண்டு என்ன செய்வாங்க?

gragavan
15-03-2006, 10:27 AM
செல்வ(ன்) ராகவன் தனது வேலையை ஆரம்பிச்சுட்டாருய்யா..நான் வேலைய ஆரம்பிக்கிறது இருக்கட்டும். கணிணி தன்னோட வேலைய ஆரம்பிச்சிருச்சா?

pradeepkt
15-03-2006, 10:59 AM
இந்தக் கணினியை வைத்து என்ன செய்வாங்க... உங்களைப் போன்றவர்களுக்கு அல்வா குடுப்பாங்க.
அவர்தான் ஏற்கனவே சொல்லிருக்காருல்ல...
ஏன் டென்ஷன் ஆவுறீங்க

மதி
15-03-2006, 11:42 AM
இந்தக் கணினியை வைத்து என்ன செய்வாங்க... உங்களைப் போன்றவர்களுக்கு அல்வா குடுப்பாங்க.
அவர்தான் ஏற்கனவே சொல்லிருக்காருல்ல...
ஏன் டென்ஷன் ஆவுறீங்க
அட....
இத வச்சு பாட்ட கேக்க முடியுமா..கேம்ஸ் விளையாட முடியுமான்னு சொல்லிடுங்க..
ரொம்பவும் தவிக்கறாரில்ல..:eek: :eek: :eek:

சுபன்
15-03-2006, 04:13 PM
கேம்ஸ் விளையாடமுடியும் என்றுதான் நினைக்கிறன்