PDA

View Full Version : பழைய கள்



ப்ரியன்
14-03-2006, 08:07 AM
என் பழைய கள்ளூறி...ச்சே தப்பு தப்பா வருது...என் கல்லூரி காலத்து கவிதை சில தேடி இடுகிறேன் இங்கு

உன்னிடம்
தோற்றுப் போகவே விழைகிறேன்;
நீ பரிசாக கிடைப்பதால்!

- ப்ரியன்.

(ஏடாகூடமா யோசிக்க கூடாது.இந்த விளையாட்டில் தோற்றால் தான் பரிசு)

ப்ரியன்
14-03-2006, 08:07 AM
பட்டாசாக
படர்ந்து கிடக்கிறேன்;
உன் ஒற்றைப் பார்வை
தீப்பொறிக்காக!

- ப்ரியன்.

ப்ரியன்
14-03-2006, 08:07 AM
காதலர் தினம்
*************

திரையரங்கம்
கல்லூரி வாசல்
கடற்கரையோரம்
ம்கூம் எங்கும்
தேடியும் கிட்டவில்லை
உண்மை காதல்!

- ப்ரியன்.

ப்ரியன்
14-03-2006, 08:10 AM
என் மனைவியுடன் என் வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்ற கனவு மொழி - கல்லூரி வயதில் எழுதியது
*****************************************************************************************************

* உன்னிடம் என் எதிர்ப்பார்ப்புகள் *


கொடியிடை தொடும்
கற்றை
கூந்தல் வேண்டும்!

அழகான பெண்கள்
கடந்தால்,
கவனம் திருப்ப வேண்டும்!

வெளியில் மழை
சன்னலோர நாற்காலியில்
என்னுடன் பின்னிக்கொண்டு
நீ வேண்டும்!

உன் மடியில் தலைவைத்து
நிலா இருசிக்க
வேண்டும்!

விடாது பெய்யும் மழை
என்னுடன் நீ
நனைய வேண்டும்!

வேப்பமர நிழலில்
கயிற்றுக் கட்டிலில்
உன்னுடன்
இளைப்பார வேண்டும்!

மோக கணங்களில்
என் காதுமடல்
கடிக்க வேண்டும்!

பூவிதழ்
முத்தங்கள்
சிலபல வேண்டும்
நிதமும்!

எதிர்பாரா நேரங்களில்
பின்னாலிருந்து
கட்டிப்பிடிக்க வேண்டும்!

நீ தலைஉலர்த்தும் போது
சிலதுளிகள்
என்மேல் வேண்டும்!

நீ குளித்தப் பின்
எனை குளிப்பாட்டி
நீயும் குளிக்கவேண்டும்!

உன் முகத்தோடு
என் முகம்பதித்து
வானம்
சுகிக்க வேண்டும்!

அலையோடு
நீயும் நானும்
ஓடிப்பிடித்து விளையாட வேண்டும்!

பேருந்து
சன்னலோர இருக்கைக்கு
என்னிடம் சண்டைவேண்டும்!

நேரம்காலம் பார்க்காமல்
எல்லை மீறும் போது
காதுமடல் திருகுதல்
வேண்டும்!

உடைமாற்றும் போது
உள்ளே நுழைந்தால்
முதுகில் கைவைத்து
வெளியே தள்ளிவிட வேண்டும்!

வாரம் ஒருநாள்
உன் கையால்
முகச்சவரம் வேண்டும்!

சின்னச்சின்னப் பொய்கள்
வேண்டும்!

செல்ல கோபங்கள்
வேண்டும்!

காதலிப்பதில்
என்னிடம் என்னிடம்
போட்டி வேண்டும்!

நீ இரசித்தவை
பகிர்தல் வேண்டும்!

சிலநேரம்
நீ
அழவேண்டும்!
நீ அழுது
என்னை அழவைக்க
வேண்டும்!

சில நேரம்
சண்டைவேண்டும்!

சண்டை இட்டதும்
சேலையென என்னை
கட்டிக்கொள்ள வேண்டும்!

தொட்டால் விலக
வேண்டும்!
நான் விலகினால்
நீ
கிட்டகிட்ட வேண்டும்!

சில நேரம்
காதலியாக வேண்டும்!

தாயாக வேண்டும்!
சிலநேரம்!

பலநேரம் என் சேயாக
வேண்டும்!

- ப்ரியன்.

(ஜோரா கைதட்டுங்க இது தமிழ்மன்றத்தில் என்னுடைய 100-வது பதிவு)

pradeepkt
14-03-2006, 08:16 AM
சபாஷ்.
நூறாவது பதிப்பல்ல, இனி வரும் எல்லாப் பதிவுகளுமே உங்கள் கவிதைகளாய் மன்றத்தில் மணக்கட்டும்.

பென்ஸ்
14-03-2006, 08:41 AM
உன்னிடம்
தோற்றுப் போகவே விழைகிறேன்;
நீ பரிசாக கிடைப்பதால்!

தோற்றாதால் கிடைத்த பரிசு...
தோல்விக்காக இல்லை, தோற்று ஜெயித்ததால்....
நல்லா இருக்கு கேக்குறதுக்கு...

விளையாட்டு போட்டி முடிந்து வேளியேறும் போது,
எதிராளியை "நீ சரியான போட்டி கொடுத்தாய்" என்று
உன்மை மொழியால் தட்டி கொடுக்க நம்மில்
எத்தனை பேரால் முடிகிறது...

நீங்கள் சொல்லுவது போல் நடந்தாள் நல்லாதாண்
இருக்கும் :-)


பட்டாசாக
படர்ந்து கிடக்கிறேன்;
உன் ஒற்றைப் பார்வை
தீப்பொறிக்காக!

பாத்து அதுக்கு முன்னால் அவா அண்ணன் மழையா பொழிந்திர போறான்...

திரையரங்கம்
கல்லூரி வாசல்
கடற்கரையோரம்
ம்கூம் எங்கும்
தேடியும் கிட்டவில்லை
உண்மை காதல்!


ப்ரியன்.. உன்மையான காதல் எது என்று சொல்லுகிறீர்கள்...
தொடாமல்..
படாமல்...
நோக்காமல்...
இருப்பதா???

இல்லை

அவளுக்காக ஊயிரை கொடுப்பதா??
காத்து கிடப்பதா???

அவளையும் உன்னை போல் பாவிப்பதுதானே???
அனேகர் அதைதான் சேய்கிறார்கள்... ஆனால் நாம்
அவர்களை பார்க்கும் சமயத்தில் அவர்கள் நமக்கு
பிடித்தது போல் நடக்கவில்லை என்று சாடுவோம்....

சரி ... உன்மையான காதல் எது என்று சொல்லுங்கள்..
அப்புறன் இதை பற்றி பேசலாம்...
அதையும் கவிதையா கொடுத்தா நல்லா இருக்கும் :D :D :D

என் மனைவியுடன் என் வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்ற கனவு மொழி - கல்லூரி வயதில் எழுதியது
அருமை நல்லா இருக்கு ப்ரியன்...
அதிலையும் உங்க எழுத்தில் சொல்ல்வா வேண்டும்...

ஆனால், திரும்ப திரும்ப...
அவள் என்னிடம் எப்படி இருக்க வேண்டும் ..
இப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாம் எப்போதாவது
"நான் இப்படி இருப்பேன்" என்று சொல்லுகிறொமா???

சொல்லுகிறொம்... காதல் யாசிக்கும் போது...
அதுவும் சரியா சொல்லுவது கிடையாது...

ஒருவகை பேச்சுவார்த்தை மாதிரி...
"நான் உன்னை தேவதை மாதிரி வைத்திருப்பேன்...
நான் உன் கால் மண்ணில் படாமல் தாங்குவேன்" என்று ...
தப்பான ஆசை காட்டுவது....

நமது மன்ற கவி "மீராவி" கூறியது போல்
நான் நானாக இருக்கிறென்
நீ நீயாக இரு...
என்று சொல்லுவது மிக குறைவு.. அப்படி தானே???

வாழ்த்துகள் ப்ரியன்....

கலக்குறடா மக்கா...

ப்ரியன்
14-03-2006, 09:14 AM
அவளின் எதிர்ப்பார்ப்புகள்
**************************

முத்தமிடும் போது
உன் மீசை
குத்த வேண்டும்!

உன் பழைய
காதல் கவிதைகள்
வேண்டும்!

மழை நாட்களில்
என் போர்வையில்
நீ வேண்டும்!

சில நேரம் நான்
ஆணாகவும் - நீ
பெண்ணாகவும்
வேண்டும்!

நீ எனக்கு
தமிழ்
கற்று தரவேண்டும்!

இரவுநேரங்களில்
என் உடைகளில்
நீ வேண்டும்!

உன் நெஞ்சில்
தலைசாய்த்து
நான் உறங்கவேண்டும்!

உன் தேவை
சொல்லும்முன் - என் தேவை
கேட்டறிதல் வேண்டும்!

உன் கவிதைகளின்
முதல் ரசிகை
நானாக வேண்டும்!

என் சேலை
நுனியெடுத்து
நீ
தலை துவட்ட வேண்டும்!

என் விரலெடுத்து
நீ நகம்
கடிக்க வேண்டும்!

அருமையான
அடுத்தவர் கவிதைகள்
என்னிடம்
பகிர்தல் வேண்டும்!

நான் அடித்தால்
பிள்ளையென நீ
அழவேண்டும்!
முத்தமிட்டால்
சட்டென
அழுகை நிறுத்தவேண்டும்!

என் காதல்கடிதங்கள்
நீ
படிக்க வேண்டும்!

உன் கவிதைகளெல்லாம்
நானாக வேண்டும்!

திரையில்
அபத்தகாட்சிகள்,
என் கண்கள்
நீ மறைக்க வேண்டும்!

மாதத்தில் ஓர்நாள்
தாய்வீடு வேண்டும்!
நான்,
செல்லாமல் போனால்
நீ கோபிக்க வேண்டும்!

என்னை விட
என்னை அறிந்தவனாய்
நீ வேண்டும்!

வெங்காயம் அரியும்
பொழுது
உன் கண்ணில்
கண்ணீர் வேண்டும்!

சின்னச் சின்ன
சீண்டல்கள் வேண்டும்!

தவறுகள்
செய்யும்போது
செல்ல அடிகள்
வேண்டும்!

செல்லச் செல்லமாய்
சில
கோபங்கள் வேண்டும்!

உன் தலைமீது
என் தலைவைத்து
கடல்
இரசிக்க வேண்டும்!

சோகமானால்
என் மார்பில்
முகம் புதைத்து
நீ அழ வேண்டும்!

மாதத்தில்
மூன்று நாட்கள் நீ
எந்தன் தாயாக
வேண்டும்!

வாரம் ஓர்நாள்
உன் சமையல்
வேண்டும்!

வெள்ளிக்கு வெள்ளி
ஆலயத்திற்கு
என்னுடன் நீ வேண்டும்!

என் வாசம்
உன்னில்!
உன் வாசம்
என்னில்
வேண்டும்!

என் பெற்றோரிடம்
அன்பாய் பண்பாய்
நீ வேண்டும்!

என்னைவிட என்னைவிட
என்னை நீ
காதலிக்க வேண்டும்!

உடல்முடியா
நேரங்களில்
என் சேவகனாய் வேண்டும்!

தினம் ஒருமுறை
குங்குமம்
நீ இட்டு!
நீயே
அழிக்க வேண்டும்!

என் சேலை நெறி
சொருக
நீ
அடம்பிடிக்க வேண்டும்!

கட்டிலில்
"உன் பெயர்"ச் சொல்லி
நான் அழைக்க வேண்டும்!

நான்
பின்பற்றும்
தலவனாய்
என்றென்றும்
நீயே வேண்டும்!

- ப்ரியன்.

(பெஞ்சமின் இதை நாளைக்கு இடலாம் என்றிருந்தேன் உங்களின் விமர்சனம் கண்டதும் இட்டுவிட்டேன்)

அல்லிராணி
14-03-2006, 09:46 AM
என் பழைய கள்ளூறி...ச்சே தப்பு தப்பா வருது...என் கல்லூரி காலத்து கவிதை சில தேடி இடுகிறேன் இங்கு

உன்னிடம்
தோற்றுப் போகவே விழைகிறேன்;
நீ பரிசாக கிடைப்பதால்!

- ப்ரியன்.

(ஏடாகூடமா யோசிக்க கூடாது.இந்த விளையாட்டில் தோற்றால் தான் பரிசு)

தோற்பவனுக்கு
பரிசாய் வர
"தோல்"வி தலைவிகள்
வீரனுக்கு
தோல்விகள் கிடையாது
பயணித்த
பாதை மட்டுமே உண்டு....

அல்லிராணி
14-03-2006, 09:47 AM
பட்டாசாக
படர்ந்து கிடக்கிறேன்;
உன் ஒற்றைப் பார்வை
தீப்பொறிக்காக!

- ப்ரியன்.

அந்த
தீப்பெட்டிகள்
காத்திருப்பது
யாருடைய
உரசலுக்காக?

அல்லிராணி
14-03-2006, 09:49 AM
காதலர் தினம்
*************

திரையரங்கம்
கல்லூரி வாசல்
கடற்கரையோரம்
ம்கூம் எங்கும்
தேடியும் கிட்டவில்லை
உண்மை காதல்!

- ப்ரியன்.

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார்
ஞானத்தங்கமே!

காதல்
காத்தல்
காத்திருத்தல்

பென்ஸ்
14-03-2006, 10:32 AM
அல்லிராணி...
*/தோற்பவனுக்கு
பரிசாய் வர
"தோல்"வி தலைவிகள்/*
இதில் கள் என்று பன்மையில் சொன்னீரா.. இல்லை தலைவியின் துனை "கள்" என்று சொன்னீரா???

பென்ஸ்
14-03-2006, 10:39 AM
அந்த
தீப்பெட்டிகள்
காத்திருப்பது
யாருடைய
உரசலுக்காக?

உரசாதே..
பத்திகொள்ள போவாது
ஏனோ நீதான்....

மீண்டும் மீண்டும் உரசினாலும்
நான் நானாக
பஸ்பமானது நீதான்..

என்னுள் இருக்கும் வரை
நீயும் நீயாய்
உரசும் போது
நீ மட்டும் தீயாய்...

அல்லிராணி
14-03-2006, 10:54 AM
அல்லிராணி...
*/தோற்பவனுக்கு
பரிசாய் வர
"தோல்"வி தலைவிகள்/*
இதில் கள் என்று பன்மையில் சொன்னீரா.. இல்லை தலைவியின் துனை "கள்" என்று சொன்னீரா???

பலருக்கு தோல்வியின் துணை கள்.
தோற்று வெல்ல நினத்தால்
கிடைப்பவை வெற்றிகள் அல்ல
வெற்றுக் கல்..
நான் குறிப்பிட்டது
எப்போதும்
கூட்டம் கூட்டமாய்
பன்மையில் வரும் தலைவிகள்..
தலைவலிகள்..
தோல் மினுமினுப்பை
மூலதனமாக்கி கொண்டு...

அல்லிராணி
14-03-2006, 10:55 AM
உரசாதே..
பத்திகொள்ள போவாது
ஏனோ நீதான்....

மீண்டும் மீண்டும் உரசினாலும்
நான் நானாக
பஸ்பமானது நீதான்..

என்னுள் இருக்கும் வரை
நீயும் நீயாய்
உரசும் போது
நீ மட்டும் தீயாய்...



உன்னுள் நான் இருக்கும் வரைதான்
நீ தீப்பெட்டி
இல்லாவிட்டால்
வெறும் அட்டைப்பெட்டி

நான் எரிந்தால்
விளக்கெரியலாம்..
அடுப்பெரியலாம்
மீறி மீறிப் போனால்
சில பெண்கள் எரியலாம்

நீ எரிந்தால்
எரிவது
பிஞ்சுக் குழந்தைகள்
அல்லவா???

அல்லிராணி
14-03-2006, 11:45 AM
கொடியிடை தொடும்
கற்றை
கூந்தல் வேண்டும்!

யாரை மொட்டையடிக்க பார்க்கிறீர்கள்

அழகான பெண்கள்
கடந்தால்,
கவனம் திருப்ப வேண்டும்!

உன்னுடன் நானிருந்தாலும்
உன் கவனம் திரும்புமா?
என்னை விட அழகொன்று
உன்னை இழுக்குமா?


வெளியில் மழை
சன்னலோர நாற்காலியில்
என்னுடன் பின்னிக்கொண்டு
நீ வேண்டும்!

உன் மடியில் தலைவைத்து
நிலா இருசிக்க
வேண்டும்!

விடாது பெய்யும் மழை
என்னுடன் நீ
நனைய வேண்டும்!
வேப்பமர நிழலில்
கயிற்றுக் கட்டிலில்
உன்னுடன்
இளைப்பார வேண்டும்!
!

மழைபெய்ய,
நிலவுவர
மொட்டை வெய்யிலில்
வேப்பமர நிழல்...

சேர்ந்து வரும் நாளையில்

அது வரை
நீ ஒரு மூலையில்


எதிர்பாரா நேரங்களில்
பின்னாலிருந்து
கட்டிப்பிடிக்க வேண்டும்!

ஆமாம் ஆமாம்!
இல்லையென்றால் உம்மை
பிடிக்க முடியாதே!


நீ தலைஉலர்த்தும் போது
சிலதுளிகள்
என்மேல் வேண்டும்!
நீ குளித்தப் பின்
எனை குளிப்பாட்டி
நீயும் குளிக்கவேண்டும்!

இது
யாரை
குளிக்க விடாமலிருக்க
சதி?


உன் முகத்தோடு
என் முகம்பதித்து
வானம்
சுகிக்க வேண்டும்!

நான் பார்க்கும் படியாகத்தான்
இருப்பேன்

அலையோடு
நீயும் நானும்
ஓடிப்பிடித்து விளையாட வேண்டும்!

சுனாமி வரும் வரையா?

பேருந்து
சன்னலோர இருக்கைக்கு
என்னிடம் சண்டைவேண்டும்!

சன்னலோரம் இருந்தால்
புகை.. நாற்றம்..
மாசுபட்ட காற்று
உள்புறமாய் இருந்தால்
மாசுபட்டு
உரசும் மனிதர்கள்..
மாறி மாறி சண்டை போட வேண்டியதுதான்


வாரம் ஒருநாள்
உன் கையால்
முகச்சவரம் வேண்டும்!

கை கத்தியல்ல
கத்தினால்
நான்
பொறுப்பல்ல


சின்னச்சின்னப் பொய்கள்
வேண்டும்!

பெரிய பொய்கள்
நீர் சொல்வீரோ

செல்ல கோபங்கள்
வேண்டும்!

சாமியாராய்
வீட்டை விட்டு
செல்லத்தானே!!!



காதலிப்பதில்
என்னிடம் என்னிடம்
போட்டி வேண்டும்!

அதற்கு நிறைய பேர்
இருக்கிறார்கள்
கவலை வேண்டாம்.

நீ இரசித்தவை
பகிர்தல் வேண்டும்!

ம்ம்ம்ம்...
அதைத்தான் அன்று சொன்னேன்
"வகுந்துருவேன்"

சிலநேரம்
நீ
அழவேண்டும்!
நீ அழுது
என்னை அழவைக்க
வேண்டும்!

அழ வைப்பது
எனக்கு
கைவந்த கலை
இதைப்
படித்தவுடன்
புரிந்து கொண்டிருப்பீரே

சில நேரம்
சண்டைவேண்டும்!

சண்டை இட்டதும்
சேலையென என்னை
கட்டிக்கொள்ள வேண்டும்!

தோலை
உரித்து
சேலையாகத்தானே
கட்டிகிட்டா
போச்சு



தொட்டால் விலக
வேண்டும்!
நான் விலகினால்
நீ
கிட்டகிட்ட வேண்டும்!

அடித்தால் விலகி
விரட்டி அடிப்பத்தானே
சரி சரி


சில நேரம்
காதலியாக வேண்டும்!

தாயாக வேண்டும்!
சிலநேரம்!

பலநேரம் என் சேயாக
வேண்டும்!

இதை
நீங்கள் படித்தபின்
டாக்டராகவும்
நர்ஸாகவும் கூடத்தான்
இருக்க வேண்டி வரும்.



(ஜோரா கைதட்டுங்க இது தமிழ்மன்றத்தில் என்னுடைய 100-வது பதிவு)


கொஞ்சம் ஓவரா தட்டிட்டேனோ???:D :D

பென்ஸ்
14-03-2006, 11:46 AM
பலருக்கு தோல்வியின் துணை கள்.
தோற்று வெல்ல நினத்தால்
கிடைப்பவை வெற்றிகள் அல்ல
வெற்றுக் கல்..
நான் குறிப்பிட்டது
எப்போதும்
கூட்டம் கூட்டமாய்
பன்மையில் வரும் தலைவிகள்..
தலைவலிகள்..
தோல் மினுமினுப்பை
மூலதனமாக்கி கொண்டு...

தோல்விகள்
வேறுங்கல்லா???
படிகல்லா??

16 முறை தோற்ற ராபர்ட் புருஸ் தோல்வி
வெறுங்கள் என்று நினைத்திருந்தால் இன்று
அவருக்கு ஏது மைல்கல்... இருந்திருக்காது ஒரு
நினைவுகல்..

தோற்றுவனுக்கு தலைவிகள் என்றால் மரன கலக்கம்
தோல்வியிலும் தலைவி அன்பு"கள்" என்றால்..வெற்றி பதக்கம்

அல்லிராணி
14-03-2006, 12:11 PM
தோல்விகள்
வேறுங்கல்லா???
படிகல்லா??

16 முறை தோற்ற ராபர்ட் புருஸ் தோல்வி
வெறுங்கள் என்று நினைத்திருந்தாள் இன்று
அவருக்கு ஏது மைல்கள்... இருந்திருக்காது ஒரு
நினைவுகல்..

தோற்றுவனுக்கு தலைவிகள் என்றால் மரன கலக்கம்
தோல்வியிலும் தலைவி அன்பு"கள்" என்றால்..வெற்றி பதக்கம்

படிக்கல்லும்
வெறுங்கல் தான்
நின்று கொண்டிருப்பவனுக்கு

வெற்றி என்பது
ஒரு மைல்கல்..
பயணங்கள் முடிவதில்லை

தோல்விகள் - வெற்றிகள்
புவியின் நீண்ட ஆயுளிலே
வெறும் நிகழ்வுகள்

புரூஸ் என்ன
வெற்றி அடைந்தவுடன்
ஓய்ந்து விட்டானா?
இருந்திருக்கலாம்..
அதனால்தான்
அதற்கு மேல்
உமக்குத் தெரியவில்லை..

தோல்வியில் இருந்தால்
தலைவியின் அன்பு
தெம்பூட்ட வேண்டும்
போதையூட்டக் கூடாது..
ஏன்
வெற்றியிலும் கூடத்தான்
போதை-கோதை-அனாதை..

உன்னிடம்
அன்புள்ளவள்
நீ தோற்ற பின்
தேற்றலாம்..

ஆனால்
தோற்றதற்கு பரிசானால்..
அப்புறம்..

அசாருதீன்..
அஜய்ஜெடஜா
வரிசையில்
அடுத்தது
நீர்தான்...

தாமரை
14-03-2006, 12:33 PM
என்ன பென்ஸூ

வடிவேலு தோத்தார் போங்க...
கேட்டு அடிவாங்குறதுக்கு இனி யாராவது வடிவேலை உதாரணம் சொன்னீங்கன்னா அது தப்பு..
பென்ஸூதான் அதுல நம்பர் - 1, அசைக்க முடியாது.

பென்ஸ்
14-03-2006, 12:44 PM
வலிக்கலையே.....:rolleyes: :rolleyes:

தாமரை
14-03-2006, 01:18 PM
வலிக்கலையே.....:rolleyes: :rolleyes:
வாழ்க்கையில்
திருப்பு முனைக்காக
காத்திருக்கிறீர்களா?

உடனடியாய்
திரும்புங்கள்

....
அதுதான்
உங்கள்
திருப்பு முனை...

(தலை சுத்துதா?)

ப்ரியன்
15-03-2006, 08:58 AM
தேர்வு என்றதும்
குதுகளிக்கிறது மனம்!
பின்,
சில கவிதைகள் கிடைக்கலாம் இல்லையா?
ஒரு கவிதையை இரசித்து!

************************************


இடம் : தேர்வுக்கூடம்
மணி : காலை 9.55


பத்து நிமிட பிரிவுக்கே
பரிதவித்துப் போவேன்!
பத்துமணி வரை
எப்படியடி?


************************************


ஒற்றைக் கேள்வித்தாளில்
ஓராயிரம் முறை
உன்பெயர் எழுதுத்தந்ததை
தொலைத்துவிடாதே!
அதுதான்
தேர்வுக்கூடத்திற்குள்
நான் வந்துச் சென்றதற்கான சான்று!


************************************


கேள்வித்தாள்களை
பத்திரப்படுத்தி வைக்கிறேன்!
உன் நினைவுகள்
அதில் நிரம்பிக்
கிடப்பதால்!


************************************


இந்த கவிதைகளுக்கு (??) எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது...எல்லாமே நான்
தேர்வுக்கூடத்தில் தேர்வெழுதாமல் எழுதியவை :)

gragavan
15-03-2006, 09:09 AM
நூறாவது பதிவா அது! அடேங்கப்பா! கிண்டலோ கிண்டல். நடக்கட்டும் அல்லிராணி.

அல்லிராணி
16-03-2006, 05:15 AM
தேர்வு என்றதும்
குதுகளிக்கிறது மனம்!
பின்,
சில கவிதைகள் கிடைக்கலாம் இல்லையா?
ஒரு கவிதையை இரசித்து!


தேராததின் காரணம்
தேர்வின்றி
சோர்வின்றி
சோறின்றி
பசித்து
ரசித்ததா?

தேர்வுகளில்
நீர் வெளியேற்றப்பட்டு
இருப்பீரே..

பின்னே
கவிதையைப் பார்த்து
கவிதை எழுதினால்
அது
காப்பிதானே!!!



இடம் : தேர்வுக்கூடம்
மணி : காலை 9.55


பத்து நிமிட பிரிவுக்கே
பரிதவித்துப் போவேன்!
பத்துமணி வரை
எப்படியடி?

ஓ!
நீ வெளியே நின்ற
காரணம் இதுதானா

அன்று பத்து மணி வரை
பரிதவித்து காத்திருந்தீர்

இன்றும் அப்படித்தான்

மனைவி
செல்வி தொடர்
பார்த்துவிட்டு வரும்வரை..





************************************


ஒற்றைக் கேள்வித்தாளில்
ஓராயிரம் முறை
உன்பெயர் எழுதுத்தந்ததை
தொலைத்துவிடாதே!
அதுதான்
தேர்வுக்கூடத்திற்குள்
நான் வந்துச் சென்றதற்கான சான்று!


ஆஹா!
அதை பிட்டென்றல்லவா
உன்னைப்
பிடித்துக் கொண்டு
போனார்கள்!!!
************************************


கேள்வித்தாள்களை
பத்திரப்படுத்தி வைக்கிறேன்!
உன் நினைவுகள்
அதில் நிரம்பிக்
கிடப்பதால்!


மறக்க முடியுமா?

************************************


இந்த கவிதைகளுக்கு (??) எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது...எல்லாமே நான்
தேர்வுக்கூடத்தில் தேர்வெழுதாமல் எழுதியவை

தேர்வுக்கூடத்தில்
தேர்வெழுதாமல்
தேராமல்

பென்ஸ்
16-03-2006, 02:25 PM
வாருங்க அல்லிராணி... தங்கள் வரவு நல்வரவாகட்டும்... அப்படியே
உங்களை பற்றி ஒரு அறிமுகம் தரலாமே...

நல்ல பதில் கவிதைகள்... நகைச்சுவை கலந்த (நக்கல்) நல்ல
கவிதைகள்... அப்படியே உங்க மற்ற படைப்புகளையும்
அளிக்கலாமே...

ப்ரியன்...
தேர்வு காலம்... அருமையான நாட்கள்... நானும் இதே மாதிரி இடக்கு
முடக்க எழுதி இருக்கிறேன்... +2 படிக்கும் போது ஆங்கில பரிச்சை
பேப்பரில்... (புரியுதா மக்களே... தூத்துகுடியும் நானும்... :rolleyes: :rolleyes: )

கல்லூரியில் படிக்கும் போது, எனக்கு பிடித்த ஒரு மேடத்தை
என்னிடம் பிட் இருப்பது போல் "படம்" போட்டு என்னை ரொம்ப
சுத்தி வர வைத்து, அப்புறம் என்னை "சேக்" பண்ண வர வைத்தது
நியாபகம் வருது...


அல்லிராணி... நீங்க "டீச்சரா...".. இந்த மாதிரி இடக்கு மூடக்க கேள்வி
கேக்குறியா... ஆனால் அருமை...
என்ன ப்ரியன்.. ஒரு போட்டி கொடுத்து பாருங்களேன்
அல்லிராணிக்கு... நாங்களும் உங்கள் கவிதை போட்டியை
ரசிக்கிறோமே....

என்ன ரெண்டு பேரும் போட்டிக்கு ரெடியா....:D :D :D

யப்பா மூட்டிவிட்டு நான் எஸ்கேப் ஆறேன்...:rolleyes: :rolleyes: :rolleyes:

தாமரை
22-03-2006, 11:08 AM
யப்பா மூட்டிவிட்டு நான் எஸ்கேப் ஆறேன்...:rolleyes: :rolleyes: :rolleyes:
ஆமாம் எங்க எஸ்கேப் ஆனீங்க.. நீங்க இல்லாட்டியும் உங்க பேரும் புகழும் கொடி கட்டி பறக்குதே.. (கூடவே மானமும்)

ஆதவா
14-05-2007, 09:12 PM
ப்ரியன் கவிதையும் அல்லிராணி பதில்களும் அருமை அருமை... முழு பின்னூட்டங்களையும் படித்து படித்து சிரித்தேன்,

அல்லி அக்கா உங்கள் திறமை மெய்சிலிர்க்கிறது.

தாமரை
20-06-2007, 04:04 AM
உரசாதே..
பத்திகொள்ள போவாது
ஏனோ நீதான்....

மீண்டும் மீண்டும் உரசினாலும்
நான் நானாக
பஸ்பமானது நீதான்..

என்னுள் இருக்கும் வரை
நீயும் நீயாய்
உரசும் போது
நீ மட்டும் தீயாய்...

பென்ஸூ பொறிபறக்க எழுதிய கவிதைகளைப் படியுங்களேன்

பென்ஸ்
20-06-2007, 04:18 AM
பென்ஸூ பொறிபறக்க எழுதிய கவிதைகளைப் படியுங்களேன்

குட்டையை குழப்ப நினைக்கும் காரணம் என்னவோ நவீன நாரதரே..???

தாமரை
20-06-2007, 04:22 AM
மக்கள் பழைய கவிப் போட்டிகளையும் பதில் கவிதைகளையும் எடுத்துத் தர விண்ணப்பித்து இருக்கிறார்கள்.. அதனாலதான்..

அமரன்
24-06-2007, 07:55 PM
நன்றி தாமரை அண்ணா. இதுபோன்ர திரிகளை மேலே எழுப்பி எங்களுக்கு தொடர்ந்து விருந்து அளியுங்கள். மன்றத்துக்கு வராத திகதியில் மேலுழுப்பி தேட வைத்துவிட்டீர்களே...ஆழமாகப் படிக்கவேண்டி இருக்கிறது. படித்து மகிழ்கின்றேன்

அமரன்
06-07-2007, 09:04 AM
பென்ஸூ பொறிபறக்க எழுதிய கவிதைகளைப் படியுங்களேன்

அண்ணா இதன் அர்த்தம் முதலில் புரியவில்லை. இப்போ ஆழமாகப் படித்தபின்னர் புரிந்தது. எங்கெங்கெல்லாம் அல்லி அக்காவிடம் மாட்டி அடிவாங்கி, வலிகலைன்னு வேறு சொல்ல்லி வலியைக் காட்டிவிட்டார்.

gayathri.jagannathan
06-07-2007, 09:54 AM
பென்ஸ் எப்பவுமே இப்படித்தான்... மன்றத்தின் சமாளிப்புத் திலகம்...

ஆனா கவிதையை கவனிச்சீங்களா? அதுவும் இவன்பிரியனின் கவிதைகள்(கணவனாக/மனைவியாக வருபவரிடம் எதிர்பார்ப்பது...)...
அடடா.. அட்டகாசம்... கிட்டத்தட்ட எல்லாருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும் தானே.... ஆனால் இவன்பிரியன் அதைக் கவிதையாக்கித் தந்து அசத்திட்டார்....

இதைப் படித்த பிறகு எனக்குத் தோன்றியது...... காயத்ரி ... உனக்கு மட்டும் ஏம்மா சுட்டுப் போட்டாலும் கவிதை எழுதவே வரமாட்டேங்குது?

ஓவியன்
06-07-2007, 03:17 PM
.காயத்ரி ... உனக்கு மட்டும் ஏம்மா சுட்டுப் போட்டாலும் கவிதை எழுதவே வரமாட்டேங்குது?

சுட்டுப் போட்டால் கவிதை வாராதுங்க!!!

வரிகளைத் தாளத்துடன் கட்டிப் போட்டால் தான் கவிதை வரும்!. :sport-smiley-018:

இனியவள்
06-07-2007, 06:23 PM
கவிகள் அனைத்தும் அருமை...ஒரு புதையலை தேடி எடுத்து தந்தமைக்கு நன்றி அமர்......படிக்க படிக்க தித்திக்கின்றது...

அமரன்
06-07-2007, 06:59 PM
கவிகள் அனைத்தும் அருமை...ஒரு புதையலை தேடி எடுத்து தந்தமைக்கு நன்றி அமர்......படிக்க படிக்க தித்திக்கின்றது...

இருங்க இன்னும் வரும்.....

இனியவள்
06-07-2007, 07:02 PM
இருங்க இன்னும் வரும்.....

ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் அமர்
நன்றி