PDA

View Full Version : காலம் மாறிப்போச்சி



cchandru007
14-03-2006, 03:24 AM
காலம் மாறிப்போச்சி

அன்னலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
இல்லை இல்லை
அன்னலும் நோக்கினான் - என்
மனைவியும் நோக்கினாள் - அதை
நானும் நோக்கினேன் - என்னை
அவளும் நோக்கினாள் - நான்
குனிந்துக் கொண்டேன்!!!
------ஏன்? என்று என்னி மாய்ந்த பொழுது
கிடைத்தது பதில் - காலம் மாறிப்போச்சி
நானும் சம்பாதிக்கிறேன் என!!!!!!!


உலகம் உருண்டை, சுற்றி வரும் அதே இடத்திற்க்கு என்ற நம்பிக்கையில்
---சந்ரு.

தாமரை
14-03-2006, 04:11 AM
காலம் மாறிப்போச்சி

அன்னலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
இல்லை இல்லை
அன்னலும் நோக்கினான் - என்
மனைவியும் நோக்கினாள் - அதை
நானும் நோக்கினேன் - என்னை
அவளும் நோக்கினாள் - நான்
குனிந்துக் கொண்டேன்!!!
------ஏன்? என்று என்னி மாய்ந்த பொழுது
கிடைத்தது பதில் - காலம் மாறிப்போச்சி
நானும் சம்பாதிக்கிறேன் என!!!!!!!


உலகம் உருண்டை, சுற்றி வரும் அதே இடத்திற்க்கு என்ற நம்பிக்கையில்
---சந்ரு.
சூரியன்
கிழக்கே உதித்து
மேற்கே மறைந்தது..
வடக்கும் தெற்குமாய்
அலைபாய்ந்தது.


பெண் தலை நிமிர்த்தினாள்..
சூரியனைப் பார்த்து..
கையில் குழந்தை..
அதைக் காவியம் என்றார்கள்

அது ஆண்களால்
எழுதப்பட்டது..

அவள் தலைநிமிர்த்தினாள்
பார்த்தாள்
அவன் தலைகுனிந்தான்

அவள்
காவியம் படைத்து விடுவாளோ
என்று

உலகம் உருண்டைதான்
அது தன் பாதையை மாற்றிக் கொண்டதில்லை


ஆண்கள்???

பென்ஸ்
14-03-2006, 05:41 AM
வாசித்தேன்....
விமர்சனம் பின்னர் அளிக்கிறேன்...

செல்வன்: நன்றி உங்கள் கவிதையின் அர்த்தம் தொலைபேசியில் தந்தமைக்கு...

மதி
14-03-2006, 06:05 AM
செல்வன்..
கவிதை அருமை...
உங்கள் முடிவில் தொக்கி நிற்கும் கேள்வி..???
ஆண்கள் நிலை பற்றியா..

தாமரை
14-03-2006, 06:13 AM
செல்வன்..
கவிதை அருமை...
உங்கள் முடிவில் தொக்கி நிற்கும் கேள்வி..???
ஆண்கள் நிலை பற்றியா..

இல்லை.. இல்லவே இல்லை

அன்றும்
சபிக்க்கப்பட்ட ஆண்
காலத்தின் கட்டாயம்
கர்ப்பதானம்
காவியம்

இன்றும்
சபிக்க்கப்பட்ட ஆண்
காலத்தின் கட்டாயம்
(முதல் கவிதையிலிருந்து)
அதேதான்

அப்புறம்
காலம் மாறிப் போச்சு
என்ற சொல்லில்
அர்த்தமில்லை

காலமும் மாறவில்லை
காட்சியும் மாறவில்லை
ஆண்களும் மாறவில்லை

தாமரை
16-03-2006, 01:39 PM
வாசித்தேன்....
விமர்சனம் பின்னர் அளிக்கிறேன்...

செல்வன்: நன்றி உங்கள் கவிதையின் அர்த்தம் தொலைபேசியில் தந்தமைக்கு...
எங்கப்பா விமர்சனம்?

பென்ஸ்
16-03-2006, 02:04 PM
வாழ்த்துகள் சந்த்ரு...

நம் கண்முன்னால் நடக்கும் சம்பவங்களை கவிதைகளாக படைத்து,
வாசிக்கும் போது கிடைக்கும் சுகம் தனிதான்... அதிலும், அதை
அடுத்தவர் படித்து என்ன?? ஏது??? என்று கேக்கும் போது
கிடைக்கும் பெருமிதம் அலாதி அல்லவா???

ஆனால் சந்த்ரு இதில் என்னவேன்றால், ஒரு கூடை முட்டையில் ஒரு
முட்டை அழுகிய முட்டை என்றால் முழு கூடையையும் நாம் தூர
எறிவது இல்லை அல்லவா... அது போல் சில சமயங்களில் நாம்
கானும் சம்பவங்களை வைத்து எல்லோரைரும் மதிப்பிடுவதாக
இருக்கிறாதோ என்று தோன்றியதால், இதை என்னால் புரிந்து கொள்ள
முடிந்தாலும்...ஏற்று கொள்ளமுடியவில்லை.

கடைசி மூன்று வரிகள் இல்லாமல் இருந்திருந்தால் நான் இந்த
கவிதையை பார்த்திருந்திருக்கும் விதம் வித்தியாசமாக இருந்திருக்கும்...

அன்னலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
இல்லை இல்லை
அன்னலும் நோக்கினான் - என்
மனைவியும் நோக்கினாள் - அதை
நானும் நோக்கினேன் - என்னை
அவளும் நோக்கினாள் - நான்
குனிந்துக் கொண்டேன்!!!


எண்ணம் 1:
தன்னாம்பிக்கையான மனைவி, மாற்றான் பார்வையை முறைக்க, நான்
அவளை ஆச்சரியதில் பார்க்க, அவள் என்னை "உன் வேலையை நான்
பார்க்கிறேன்" என்று கேவலமா பாக்க, நான் அவமானத்தில் தலை
குனிந்தேன்.....

எண்ணம் 2:
அழகா பெண் வேனுமுன்னு கேட்டு அடி வாங்கியவனை போல...
அவன் பாக்க (என் மனைவியை), அவள் அவனை பார்க்க, நான்
அவளை பார்க்க... அவள் இது உனக்கு தெவையா என்று பாக்க...
நான் கேவலத்த்ல் தலை குனிந்தேன்...

இப்படி இப்படி.. இந்த மொட்டையான கவிதைக்கு...
இன்னும் எத்தனையோ பொருள் எடுக்கலாம்...

ஆனால்.. இந்த கடைசி மூண்ரு வரிகள் ....

]------ஏன்? என்று என்னி மாய்ந்த பொழுது
கிடைத்தது பதில் - காலம் மாறிப்போச்சி
நானும் சம்பாதிக்கிறேன் என!!!!!!!
[/SIZE]
இந்த கவிதையை... வேறும் ஒரு சாதாரண மனிதனின் தற்காப்பு
எண்ணமாக மாற்றி விட்டதாக உணர்கிறேன்....

பெண்கள், ஆண்களைவிட உடல், மனசக்தியில் பலகீனமானவர்கள் தாம்.
பலமான இனம், மெல்லிய இனத்தை அடக்கும் இதுவும் இயர்க்கை...
இப்படி பட்ட சூழலில், ஆண் பெண் தான் அவளை
கடிவாளமிடுவதாக நினைக்கிறான்... இங்கு காதல் இருப்பதில்லை,
நிம்மதியான குடும்பம் இருப்பதில்லை.... அனேக இடங்களில்
பெண்கள் அடக்கியாள படுவதும் அதனால் தான்... இது நேற்று இன்று
அல்ல... நாளையும் என்றும் இருக்கும்...

ஆனால், ஆண் இனத்தில் உள்ள ஒரு பலகீனமானவன் (தப்பா
நினைக்க கூடாது).. அதாவது.. ஒரு உலகில் உள்ள எல்லா
ஆண்களையும் ஒரு normal distributionல போட்டு, அதுல -3sigma
சைடு இருக்கிற ஒருவன்... அதேபோல் +3sigma சைடுல இருக்கிற
பெண்ணை கல்யான செய்ய நேரிட்டால்.... அவன் அடக்கி
ஆளபடுவான்.... இங்கேயும் stonger survies... இதுதான் இப்போவும்
எப்போவும் நடப்பதாக என் கருத்து...

செல்வன்... வழக்கம் போல் உங்கள் பதில் கவிதைகள், மறுமொழி
கொடுக்கமுடியாதவை....


அன்றும்
சபிக்க்கப்பட்ட ஆண்
காலத்தின் கட்டாயம்
கர்ப்பதானம்
காவியம்

இன்றும்
சபிக்க்கப்பட்ட ஆண்
காலத்தின் கட்டாயம்
(முதல் கவிதையிலிருந்து)
அதேதான்

அன்று கர்ணன்...
இன்று முதல் கவிதையின் கண்ணன்...

செல்வன்... தீர்க்கமான வார்த்தைகள்... ஆனால்... பெண்கள் தலை
நிமிர்ந்தால் காவியமா என்ன....???

இருக்கலாம்.. எனக்கு கண்ணகியும் , எரிந்த மதுரையும் இன்னும்
நியாபகம் இருக்கிறது...


காலமும் மாறவில்லை
காட்சியும் மாறவில்லை
ஆண்களும் மாறவில்லை

எல்லா கதையும் சொல்லிவிட்டு, நானும் இதைதான் சொல்லவாறேன்...
நமது வாழ்கையின் உடை நடை பாவனை மாறி இருக்கலாம்...
நாம் பயணிக்கும் பாதைகளும், வாழ்வின் அடிப்படைகளும் மாறவில்லை... மாறுமா???? பார்க்கலாம் :D :D :D