PDA

View Full Version : உலக சாதனை - தெ.ஆ. - ஆஸி.



pradeepkt
13-03-2006, 03:43 AM
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சாதனை நாள். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 434 ரன் குவித்து புதிய உலக சாதனை நிகழ்த்தியது. இதையும் போராடி சேஸ் செய்த தென் ஆப்ரிக்க அணி அதிசயம் நிகழ்த்தியது. 438 ரன் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் உலக சாதனை வெறும் 4 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டு விட்டது. உலக சாதனையுடன் தொடரையும் 3 2 என்ற கணக்கில் வென்று அமர்க்களப்படுத்தியது தென் ஆப்ரிக்கா.

pradeepkt
13-03-2006, 03:44 AM
என்னடா என்கிட்ட இருந்து இப்படி ஒரு பதிவான்னு பாக்காதீங்க, கிரிக்கெட்டுன்னா எந்தக் கடையில் கெடைக்கும்னு கேக்குற நானே அசந்து போன முடிவு இது.

வேற யாராச்சும் சொல்லுவீங்கன்னு பாத்தா சொல்லலை... அதுனால நம்ம மன்றத்து சார்புல இரண்டு அணிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நம்ம இந்தியா என்னைக்கு இப்படி எல்லாம் அடிச்சு வெளையாடப் போவுதோ...

aren
13-03-2006, 04:01 AM
நான் இந்த மாட்சை கணிணியில் கவனித்துவந்தேன். கிப்ஸ் ஆடிய ஆட்டம் மிகவும் பிரமாதம். நம் மக்கள் பேரளவில் பெரிய ஆட்களாக இருக்கிறார்கள், ஆனால் இவர்கள் அதை நிரூபித்துக்காட்டியுள்ளார்கள்.

mania
13-03-2006, 04:25 AM
இந்த வரலாறு ப்ரசித்தம் பெற்ற மேட்சை முழுவதுமா பார்த்து ரசித்தேன். நம் வாழ்நாளில் இதைவிட சிறந்த மேட்சை பார்க்கமுடியுமா என்பது சந்தேகமே....:rolleyes: :rolleyes: ப்ரதீப் இதை பற்றி கூறியிருப்பது இன்னொரு பெருமை சேர்க்கவேண்டிய விஷயம்...:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D :D

aren
13-03-2006, 04:47 AM
இந்த வரலாறு ப்ரசித்தம் பெற்ற மேட்சை முழுவதுமா பார்த்து ரசித்தேன். நம் வாழ்நாளில் இதைவிட சிறந்த மேட்சை பார்க்கமுடியுமா என்பது சந்தேகமே....:rolleyes: :rolleyes: ப்ரதீப் இதை பற்றி கூறியிருப்பது இன்னொரு பெருமை சேர்க்கவேண்டிய விஷயம்...:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D :D

இப்படி பேசி யாரையும் கடுப்படிக்ககூடாது, அவ்வளவுதான் சொல்லிட்டேன். அவனவன் மாட்ச் நடப்பது தெரிந்தும் பார்க்கமுடியாமல் போய்விட்டது என்று கடுப்பில் இருக்கிறோம், இப்பொழுது நீங்கள்வேறு பார்த்து ரசித்தேன் என்று பெருமைபடுகிறீர்களே, இது நியாயமா?

தாமரை
13-03-2006, 04:50 AM
இந்த வரலாறு ப்ரசித்தம் பெற்ற மேட்சை முழுவதுமா பார்த்து ரசித்தேன். நம் வாழ்நாளில் இதைவிட சிறந்த மேட்சை பார்க்கமுடியுமா என்பது சந்தேகமே....:rolleyes: :rolleyes: ப்ரதீப் இதை பற்றி கூறியிருப்பது இன்னொரு பெருமை சேர்க்கவேண்டிய விஷயம்...:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D :D

ஆஸ்திரேலிய அணியின் 40 ஆம் ஓவரிலிருந்து 48 ஆவது ஓவர் வரை பார்க்க நேர்ந்தது.. ஆப்பிரிக்க பந்து வீச்சு ருசிக்கவில்லை. ஆட்டத்தை தொடர்ந்து பார்க்க விருப்பமின்றி சென்று விட்டேன்.. ஆனால்.. ஆஸ்திரேலியாவும் அடிபட்டு பேண்டேஜுடன் ஆஸ்பிடலில் இருக்கும் செய்தியை காலையில் தான் அறிந்து கொண்டேன்...

ஆமாம்.. ஆசிய நாடுகளை பிட்ச் தயாரிப்பில் குறை சொல்லும் ஆப்பிரிக்காவின் பிட்சா இது...?

மதி
13-03-2006, 05:13 AM
நேற்றைய ஆட்டத்தின் இறுதி 2 ஓவரைத் தான் பார்க்க முடிந்தது..
ஆயினும்..பதறாமல் ஆடிய பௌச்சரையும், கிப்ஸையும் பாராட்டியே தீர வேண்டும்..அபாரமான ஆட்டம்..

Mathu
14-03-2006, 10:55 PM
இது யாரும் மறக்க முடியாத ஆட்டம், வரலாற்று சாதனை,
ரசிகர்களுக்கு பம்பர்.....

அவுஸ்ராலியர்களின் கர்வத்துக்கு மீண்டும் கிடைத்த பலமான அடி

இப்படி ஒரு ஆட்டத்தை தான் 2003 உலக கோப்பை இறு ஆட்டத்தில்
எதிர்பாத்து சலித்துபோன எனக்கு அதே மைதானத்தில் 3 வருடங்களின்
பின் இப்படி.
நன்றி தென்னாபிரிக்க அணி (கிப்ஸ்)

:D :D :D :rolleyes:

mania
15-03-2006, 03:28 AM
ஆஸ்திரேலிய அணியின் 40 ஆம் ஓவரிலிருந்து 48 ஆவது ஓவர் வரை பார்க்க நேர்ந்தது.. ஆப்பிரிக்க பந்து வீச்சு ருசிக்கவில்லை. ஆட்டத்தை தொடர்ந்து பார்க்க விருப்பமின்றி சென்று விட்டேன்.. ஆனால்.. ஆஸ்திரேலியாவும் அடிபட்டு பேண்டேஜுடன் ஆஸ்பிடலில் இருக்கும் செய்தியை காலையில் தான் அறிந்து கொண்டேன்...

ஆமாம்.. ஆசிய நாடுகளை பிட்ச் தயாரிப்பில் குறை சொல்லும் ஆப்பிரிக்காவின் பிட்சா இது...?

இதில் பிட்சை குறை சொல்வதற்கு என்ன இருக்கிறது செல்வன்....???:rolleyes: இந்த மாதிரி ஒரு நாள் ஆட்டங்களே ரசிகர்களை மகிழ்விக்கவே உருவாக்கப்பட்டவை....:) ஐந்துநாள் டெஸ்ட்களில் வேணுமானால் சொல்லலாம் பிட்ச் 3 நாள் கூட நிற்கவில்லை.....பந்து உருளுகிறது....என்றெல்லாம்.....ஆனால் ஒரு நாள் ஆட்டங்களில் இந்த மாதிரி ஈவன் பவுன்ஸ் உள்ள பிட்ச்களே இந்த மாதிரி விறுவிருப்பான
போட்டிக்கு ஏதுவானது. 100 ஓவர்களில் 872 ரன்கள்.....இதைவிட என்ன வேண்டும் ரசிகர்களுக்கு....???
அன்புடன்
மணியா....:D

இராசகுமாரன்
15-03-2006, 07:16 AM
இதிலிருந்து தெரிந்து கொண்டது இரண்டு முக்கிய கருத்துக்கள்:

1) எவ்வளவு பெரிய ஸ்கோர் எடுத்தாலும், அதையும் சேஸ் பண்ணலாம், சவுத் ஆப்ரிக்காவின் போல் மனதில் தைரியம் தேவை.

2) பெரிய ஸ்கோர் எடுத்து விட்டோம் என்று, ரிக்கி போண்டிங் போல் மமதையுடன் மந்தமாக இருக்க கூடாது. கடைசி பந்து வரை கவனமாக இருக்க வேண்டும்.

Mathu
15-03-2006, 08:50 AM
எவராவது இந்த ஆட்டங்களை காண விரும்பினால் இங்கே சென்று பதிவிறக்கி பார்க்கலாம்.

இபோதைக்கு தற்காலிகமாக கொடுக்கபடுகிறது.

நிர்வாகிகளின் விருப்பத்துக்கேற்ப்ப தொடர்ந்து இருக்கும் இல்லை அகற்றப்படும்.

Part1
http://rapidshare.de/files/15415696/5th_ODI_-_Johannesburg_-_South_Africa_Innings-_Part_1.wmv.html (http://rapidshare.de/files/15415696/5th_ODI_-_Johannesburg_-_South_Africa_Innings-_Part_1.wmv.html)

Part2
http://www.megaupload.com/?d=H9FJ9W8A (http://www.megaupload.com/?d=H9FJ9W8A)

Part3
http://www.megaupload.com/?d=ZVT73XWJ (http://www.megaupload.com/?d=ZVT73XWJ)

Part4
http://www.megaupload.com/?d=4IQ48AR4 (http://www.megaupload.com/?d=4IQ48AR4)

Part5
http://www.megaupload.com/?d=6S6AKP5X (http://www.megaupload.com/?d=6S6AKP5X)

Part6
http://files.filefront.com/5th_ODI___Johannesburg___South_Africa_Innings____Part_6wmv/;4876020;;/fileinfo.html (http://files.filefront.com/5th_ODI___Johannesburg___South_Africa_Innings____Part_6wmv/;4876020;;/fileinfo.html)

Part7
http://www.megaupload.com/?d=44OWWXZZ (http://www.megaupload.com/?d=44OWWXZZ)

Part8
http://www.megaupload.com/?d=MZNYSSOY (http://www.megaupload.com/?d=MZNYSSOY)

Part9
http://files.filefront.com/5th_ODI___Johannesburg___South_Africa_Innings___World_Record_ODI_Total___ (http://files.filefront.com/5th_ODI___Johannesburg___South_Africa_Innings___World_Record_ODI_Total___Wo/;4875935;;/fileinfo.html)

தீபன்
26-03-2006, 04:58 PM
வணக்கம் நண்பர்களே... அன்றைய தினம் இந்த ஆட்டத்தை பார்க்கத்தவறியவர்களுக்காக அதன் முளு விவரத்துடனான வர்னணயை இதே பகுதியில் பயனுள்ள தகவல்கள் கட்டுரைகள் எனும்பிரிவில் சாதனைப்போட்டி- ஒரு ரசிகனின் பார்வையில் எனும் திரியாக இட்டிருக்கிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

மயூ
30-03-2006, 05:49 AM
என் பக்கத்துவீட்டுப்பையன் ச்கோர் சொன்னப்போ டெஸ்ட் மாச் என்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சுது ஒரு நாள் சர்வதேசப்போட்டி என்று