PDA

View Full Version : வாழ்க்கை பயங்கள்



balakmu
11-03-2006, 01:05 AM
வாழ்க்கையைக்கண்டு
பயந்தேன்!! அதன்
வசந்தத்தைஅனுபவிக்காத
வரை!!

அன்பைக்கண்டு
பயந்தேன்!! அதுஎன்
இதயத்தில்இருள்
போன்றகருமையை
நீக்கி, நிகரில்லா
வெளிச்சத்தைவீசும்வரை!!

வெறுப்பைக்கண்டு
பயந்தேன்!! அது
அறியாமைஎன்று
அறியும்வரை!!

ஏளனங்களைக்கண்டு
பயந்தேன்!! எனக்குள்
சிரிக்கத்தெரியாதவரை!!

தனிமையைக்கண்டு
பயந்தேன்! நான்தனியாக
இருக்கக்கற்றுக்கொள்ளும்வரை!!

தோல்விகளைகண்டு
பயந்தேன்!! தோல்வியே
வெற்றிக்குஅறிகுறிஎன்று
உணரும்வரை!!

வெற்றிகளைகண்டு
பயந்தேன்!! வெற்றியே
வாழ்க்கையின்சந்தோஷம்
என்றுஅறியும்வரை!!

மற்றவர்களின்விமர்சனங்களுக்கு
பயந்தேன்!! அவர்களுக்கும்
என்னைப்பற்றியகருத்துக்கள்
இருக்கும்என்றுஉணரும்வரை!!

ஒதுக்கப்படுவதைக்கண்டு
பயந்தேன்!! எனக்குள்
தன்நம்பிக்கைவரும்வரை!!

வலிகளைகண்டு
பயந்தேன்!! அது
வளர்ச்சிக்குதேவை
என்றுஅறியும்வரை!!





உண்மையைக்கண்டு
பயந்தேன்!! பொய்மையின்
உண்மைகளைப்பார்க்கும்வரை!!

வயதானதைஅறிந்து
பயந்தேன்!! வாழ்க்கையில்
பண்பட்டுவிட்டேன்என்று
உணரும்வரை!!

நடந்ததைநினைத்து
பயந்தேன்!! அதுஇனி
நடக்காதுஎன்று
நம்பும்வரை!!


நடக்கப்போவதை
நினைத்துபயந்தேன்!!
நடந்ததுஎல்லாம்
நன்றாகவேநடந்தது,
நடக்கப்போவதெல்லாம்
நன்றாகவேநடக்கும்
என்றுஉணரும்வரை!!!

மரணத்தைக்கண்டு
பயந்தேன்!! அதுமுடிவல்ல
முடிவின்தொடக்கமே
என்றுஉணரும்வரை!!!

பென்ஸ்
11-03-2006, 11:49 AM
பாலா...

உங்கள் இந்த கவிதையை தமிழ்மன்றத்தில் இதற்க்கு முன்பாகவே
வாசித்து இருக்கிறேன்... அப்போது விமர்சனம் இட முடியவில்லை...

முதலில் ஒரு நல்ல கவிதை கொடுத்ததுக்கு பாராட்டுகள்...
மனம், சிந்தனை, அறிவு, சமுதாயம், எழுத்து ஒத்து போகும் போது
மட்டுமே வார்த்தைகள் இவ்வளவு அழகாக, அவசியமாக, ஆக்கமாக
வர சாத்தியங்கள்...

பயம்....
தமிழ் சினிமாவுல ஒரு டயலாக் வரும்...
வாழ்க்கையில் பயம் இருக்கனும்,
ஆனா வாழ்க்கையே பயமா இருக்க கூடாது...

அவசியம் இல்லாத அல்லது அளவுக்கு அதிகமான பயம் ஒரு
மனிதனது வளர்ச்சியை பாதிக்கும்....

அல்லது...

மிககுறைவான பயமும் ...
மிக் அதிகமான பயமும்....
ஆபத்துதான்...

மரணத்தின் மீதான பயம், வாழ்க்கையை காதலிக்க வைக்கிறது
பிரிவின் மீதான பயம், சுயநலம் இல்லாமல் வாழ வைக்கிறது
தோல்வியின் மீதான பயம், வெற்றி வர திட்டமிட செய்கிறது

இந்த பயத்தை அன்னபறவை போல பிரித்து பார்த்து...
அதுதான் இந்த கவிதை...:) :)

மறுபடியும் பாராட்டுகள்....:D :D

இளந்தமிழ்ச்செல்வன்
19-03-2006, 11:26 AM
பாலா அழகான, அருமையான கருத்துக்கள் (கவிதை). (பயம்) எதுவரை என்று தலைப்பிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம். வாழ்த்துக்கள்.

thirukanaga
23-03-2006, 03:54 PM
இந்தக்கவிதையைக்கண்டு பயப்பட்டுக்கொண்டு இருக்கிறேன்
அடுத்த உங்கள் கவிதை வரும் வரை

kavitha
29-03-2006, 06:16 AM
கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள் பாலா.

mythili
29-03-2006, 07:52 AM
கவிதை ரொம்ப நல்லா இருக்கு...இந்த வரி ரொம்பவும் நல்லா இருக்கு :)

"ஏளனங்களைக்கண்டு
பயந்தேன்!! எனக்குள்
சிரிக்கத்தெரியாதவரை!!"

அன்புடன்,
மைத்து

mythili
29-03-2006, 07:54 AM
கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள் பாலா.

எப்படி இருக்க கவி?
ரொம்ப நாள் ஆச்சு.

அன்புடன்,
மைத்து

Mathu
29-03-2006, 08:13 AM
கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள் பாலா.





எப்படி இருக்க கவி?
ரொம்ப நாள் ஆச்சு.

அன்புடன்,
மைத்து


ரெண்டு பேரும் எப்படி இருகிங்க இங்க வந்தும் ரொம்ப நாள் ஆச்சு.

Mathu
29-03-2006, 08:18 AM
யதார்த்தத்தை உணரவைக்கும் அருமையான வரிகள் பாலா.

அழகான கோர்வை தொடரட்டும் உங்கள் கவிதைமழை.

gragavan
29-03-2006, 08:20 AM
நல்ல கவிதை. எதிர்கொள்ளும் வரைக்கும் தான் அச்சம். எதிர் கொண்ட பின்....அது ஓடி விடும். பேயே ஆனாலும் அதைப் பார்க்கும் வரைக்கும்தான் பயம். அதற்குப் பிறகு பயம் குறைந்து விடும். வாழ்க்கக இனிதாக இருக்க அச்சம் மறைய வேண்டும்.

mythili
29-03-2006, 10:08 AM
ரெண்டு பேரும் எப்படி இருகிங்க இங்க வந்தும் ரொம்ப நாள் ஆச்சு.

வாங்க மது. நன்றாக இருக்கேன்.
நானும் இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு :angry:

கவியை தேடிக் கொண்டு இருக்கிறேன் :rolleyes:

அன்புடன்,
மைத்து

ப்ரியன்
30-03-2006, 01:51 PM
கவிதை அருமை பாலா

கவிதையின் நீளம் கவிதையின் தாக்கத்தைக் குறைக்கிறதோ என எனக்கு தோன்றுகிறது...

/*
ஏளனங்களைக்கண்டு
பயந்தேன்!! எனக்குள்
சிரிக்கத்தெரியாதவரை!!
*/

/*
ஒதுக்கப்படுவதைக்கண்டு
பயந்தேன்!! எனக்குள்
தன்நம்பிக்கைவரும்வரை!!

வலிகளைகண்டு
பயந்தேன்!! அது
வளர்ச்சிக்குதேவை
என்றுஅறியும்வரை!!
*/

இந்த வரிகள் அருமை & யாதார்த்தம்