PDA

View Full Version : வரும் போகும் மானம்



thirukanaga
10-03-2006, 10:17 AM
கவிதையின் வர்ணங்களால் வரும் மானம்
கருத்து அதில் இல்லையென்றால் போகும் மானம்
போர்க்களத்தில் போராட வரும் மானம்
போத்தலை உடைத்தடித்தால் போகும் மானம்
காதலி கண்சிமிட்ட வரும் மானம்
கையில் செருப்பெடுத்தால் போகும் மானம்
கல்யாணத்தில் பெண் தலைகுனிய வரும் மானம்
வந்தவளுடன் வாயாட போகும் மானம்
வயதினில் பிள்ளை பெற்றால் வரும் மானம்
வயதாகியும் இல்லையென்றால் போகும் மானம்
பெற்ற பிள்ளை ஒழுங்கென்றால் வரும் மானம்
ஊரையே சுற்றிவர ஊர்வலமாய் போகும் மானம்
பெண் கல்யாணம் பெரிசாய் இருந்தால் ஊருக்குள் மானம்
பட்ட கடன் தலைமேல் போக ஊராலே போகும் மானம்
வங்கியிலே பணமிருந்தால் வரும் மானம்
வாரிக்கொடுத்துவிட வாசலாலே போகும் மானம்
வாழ்க்கையிலே வெற்றி பெற்றால் வரும் மானம்
வாய்ப்புகளை நழுவவிட்டால் போகும் மானம்
இதுவும் கவிதையென்றால் வரும் மானம்
இல்லையென்றால் அப்படியே போகும் மானம்

பென்ஸ்
10-03-2006, 10:30 AM
என்ன திருகனகா.. நலமா... சில காலம் மன்றத்தில் காணமுடியவில்லையே...

மீண்டும் திருகனகா ஸ்டைலில் ஒரு அருமையான கவிதை... மானம்...

நகைச்சுவை கலந்த சிந்திக்க வைக்கும் ஒரு நல்ல கவிதை...

ஆனால் புகழ், பெருமை என்பது இங்கு மானத்தோடு குழப்பபட்டுள்ளதோ என்ற ஒரு ஐயம்...

வாழ்த்துகள் திருகனகா...

pradeepkt
10-03-2006, 10:42 AM
உங்களுக்கு மானம் வந்துருச்சுன்னு வச்சிக்கிருங்க திருகனகா...
வாழ்த்துகள்

தாமரை
10-03-2006, 12:25 PM
வயதினில் பிள்ளை பெற்றால் வரும் மானம்
வயதாகியும் இல்லையென்றால் போகும் மானம்

இந்த வரிகளை மட்டும் எடுத்து விடுங்கள் ஏனென்றால்

மற்றவை எல்லாம் செயல்களைச் சார்ந்தவை.. இதில் மட்டும் இயற்கையும் சில நேரம் சதி செய்து விடுகிறது..

அப்புறம்

பெற்றால்தான் பிள்ளையா?

thirukanaga
10-03-2006, 04:14 PM
சில காலம் விலகியிருந்தேன்
வேறு வேலை நிமித்தம்

எதிர்பார்த்து இருப்பதற்கு நன்றி

அல்லிராணி
16-03-2006, 07:53 AM
கவிதையின் வர்ணங்களால் வரும் மானம்
கருத்து அதில் இல்லையென்றால் போகும் மானம்
போர்க்களத்தில் போராட வரும் மானம்
போத்தலை உடைத்தடித்தால் போகும் மானம்
காதலி கண்சிமிட்ட வரும் மானம்
கையில் செருப்பெடுத்தால் போகும் மானம்
கல்யாணத்தில் பெண் தலைகுனிய வரும் மானம்
வந்தவளுடன் வாயாட போகும் மானம்
வயதினில் பிள்ளை பெற்றால் வரும் மானம்
வயதாகியும் இல்லையென்றால் போகும் மானம்
பெற்ற பிள்ளை ஒழுங்கென்றால் வரும் மானம்
ஊரையே சுற்றிவர ஊர்வலமாய் போகும் மானம்
பெண் கல்யாணம் பெரிசாய் இருந்தால் ஊருக்குள் மானம்
பட்ட கடன் தலைமேல் போக ஊராலே போகும் மானம்
வங்கியிலே பணமிருந்தால் வரும் மானம்
வாரிக்கொடுத்துவிட வாசலாலே போகும் மானம்
வாழ்க்கையிலே வெற்றி பெற்றால் வரும் மானம்
வாய்ப்புகளை நழுவவிட்டால் போகும் மானம்
இதுவும் கவிதையென்றால் வரும் மானம்
இல்லையென்றால் அப்படியே போகும் மானம்

மானம் வருமென்றால்
மானம் போகுமென்றால்
இன்று பிறந்த
அந்தக் குழந்தைக்கு
உண்டா மானம்???