PDA

View Full Version : இந்த சின்னவனின் முதல் வணக்கம்



cchandru007
10-03-2006, 05:41 AM
இந்த மன்றத்தின் துனைக்கொண்டு,

இவ்வுலகத்தின்!
எட்டு திக்கும் உள்ள - என்
நண்பர்கள் உங்களின் நட்புடன் - நான்
--- என் ---
முதல் பயணத்தை தொடர்கிறேன்
என் கனவு எனும் - அந்த
சிகரத்தை எட்டி பிடிக்க!

இப்படிக்கு
உங்கள் நட்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
- இச்சின்னவன் நான்.

பென்ஸ்
10-03-2006, 05:46 AM
சந்துரு.. சின்னவரே.. (எப்படி அழைப்பது பிரியமோ??)
தமிழ் தாயின் மடியில் தவழும் நமக்கு "நட்பு கிடைக்குமா??" என்ற ஐயம் ஏனோ??? .. வந்துவிட்டீர்கள் அல்லவா...
பொறுத்திருந்து பாருங்கள்...

தாமரை
10-03-2006, 05:55 AM
வாங்க வாங்க .. தம்பி மதி உன்னையும் அண்ணான்னு அழைக்க ஆள் வந்தாச்சு...

இளசு
10-03-2006, 06:14 AM
மிக மகிழ்ச்சி தரும் அறிமுகம்..

வாருங்கள் சந்துரு அவர்களே..

இணையக்கரங்களால் ஆரத்தழுவி வரவேற்கிறோம்.

இங்கு ஊடாடும் இனிய நட்பை அறிய இனிய பென்ஸ் குழுவைப் பார்த்தாலே விளங்கும்...

நட்புத் தடாகத்தில் நீந்தித் துளைத்து நீராட வருக...

pradeepkt
10-03-2006, 06:26 AM
வணக்கம் சந்துரு.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அப்படியே ஜோதியில ஐக்கியமாகிருங்க

மயூ
27-03-2006, 08:08 AM
சின்னவரே வருக வருக.......

pradeepkt
27-03-2006, 08:14 AM
வாங்க வாங்க .. தம்பி மதி உன்னையும் அண்ணான்னு அழைக்க ஆள் வந்தாச்சு...
எதை வச்சு அப்படிச் சொல்றீங்க?

sarcharan
27-03-2006, 09:02 AM
வணக்கம் சந்துரு,
வாங்க வாங்க ..:) :) :)
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
இணையக்கரங்களால் ஆரத்தழுவி வரவேற்கிறோம்.:D :D
அப்படியே நம்ம ஜோதி(கா)வோட(!!!!) ஐக்கியமாகிருங்க...;) ;)
;)

மதி
28-03-2006, 01:38 AM
எதை வச்சு அப்படிச் சொல்றீங்க?
அதானே..எத வச்சு அப்படி சொல்றீங்க..
???:angry: :angry: :angry:

அறிஞர்
29-03-2006, 10:07 PM
வாருங்கள் சந்துரு... படைப்புக்கள் அனைத்தும் அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும்.

அழகன்
01-04-2006, 10:51 AM
சந்துரு அவர்களே வருக வருக என உங்களை அன்புடன் வரவேட்கிறேன்.