PDA

View Full Version : பெண்மையே உன்னை போற்றுதும்

ப்ரியன்
08-03-2006, 11:49 AM
அன்புக்கு அம்மா!
ஆசைக்கு மகள்!
பாசத்திற்கு தங்கை!
நேசத்திற்கு மனை!
எப்பெயர் நீ கொளினும்
அதுவாகவே ஆகிப்போகிறாய் நீ!
உன்னாலேயே
அர்த்தம் பெறுகின்றன
அவ்வுறவுகள்!

பொறுமைக்கு நீயென
பூமிக்கு உன்னை குறித்தோம்!
நடக்கும் வழியெல்லாம் தாயுள்ளமாய்
தழுவிச் செல்லும் நதிக்கும்
உன்னை வைத்தோம்!

* மகனாக்கி
தமயனாக்கி
தகப்பனாக்கி
நண்பனாக்கி * (நன்றி பரநீதரா)
இன்னும் பலவாக்கி
உலகுக்கெல்லாம்
எம்மை
அடையாளம் காட்டியவளே!

உன்னில் என்னில்
என்று பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியிலும்
நீ நிறைந்து நிற்கும்
பண்பாலே
இவ்வுலகம் நிலைத்திருக்க செய்தவளே!

பெருமைமிகு
பெண்மையே
உன்னைப் போற்றுதும்!

sarcharan
08-03-2006, 11:54 AM
நல்ல கவிதை ப்ரியன்....

பென்ஸ்
08-03-2006, 05:26 PM
அருமையான கவிதை...

:D :D :D

mukilan
09-03-2006, 02:56 AM
மகளிர் தினத்தன்று பெண்டிருக்குப் பெருமை சேர்க்கும் படைப்பு!

pradeepkt
09-03-2006, 04:11 AM
சரியான சமயத்தில் சரியான படைப்பு.

மயூ
09-03-2006, 04:36 AM
அருமை. உண்மையில் உணர்வை தொடும் கவிதை

Mano.G.
09-03-2006, 04:59 AM
மகளிர் தினத்தன்று பெண்டிருக்குப் பெருமை சேர்க்கும் படைப்பு!

மகளிர் தினத்தில் மகளிருக்காக , மகளீரின் பெருமைபகர எழுதபட்ட
கவிதை வாழ்த்துக்கள்

மகளீர் தினத்திற்கும் கவிதை புனைந்த உங்களுக்கும்

மனோ.ஜி

ப்ரியன்
10-03-2006, 08:34 AM
நன்றி சரவணன் , பெஞ்ஜமின் , முகிலன் , பிரதீப் , மயூரேசன் & மனோ.ஜி

பென்ஸ்
10-03-2006, 09:03 AM
ப்ரியன்.. அருமையான கவிதைதான்...
முதலில் ஒரு பெரிய குதற்க்க விமர்சணம் எழுதினேன்...
ஒரு நாணயத்துக்கு எப்போதும் இரு பக்கம் இருக்கும் அல்லவா??? அந்த மறு பக்கத்தை எழுதினேன்...

ஆனால் மகளிர் தினத்தில் பதிக்கபட்ட கவிதையை மிரட்ட மனம் வரலை :-)...
மேலும் எப்பவும் குறை சொல்லுவதே எனக்கு வேலையா போச்சு... நம்ம தாமரை செல்வன் மற்றும் பிரதிப்பை போல....
அதனால இளசு, ராகவன் மாதிரி நல்ல பிள்ளையா இருந்திட்டேன் :-)

gragavan
10-03-2006, 09:17 AM
எனக்கும் அப்படித்தான் பென்சு. நமது ப்ரியன் மகளிர் தினத்திற்காக போட்ட கவிதையை, அந்த தினத்திற்கான அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்டு பாராட்டுகிறேன்.

(ஆண்மையைப் போற்றுதும் என்று ஒரு கவிதை எழுதலாமுன்னு எனக்குத் தோணுது. எழுதுவோம்.)

kavitha
10-03-2006, 10:10 AM
(ஆண்மையைப் போற்றுதும் என்று ஒரு கவிதை எழுதலாமுன்னு எனக்குத் தோணுது. எழுதுவோம்.)

ஆண்மைக்குள்ளும் பெண்மை உண்டு; பெண்மைக்குள்ளும் ஆண்மை உண்டு!நேர் ஆண்மையும் கண்டிப்பாக போற்றப்படவேண்டியது தான்.
வளர்ந்தவர்கள் வளர்பவர்கள் உற்சாகப்படுத்துவது நமது வழக்கம். அதைத்தான் செய்திருக்கிறார் பிரியன்.

கவிதை நன்றாக இருந்தது பிரியன்.

பென்ஸ்
10-03-2006, 10:13 AM

முற்றிலும் உண்மை கவி...
ஆனால் பெண்மையின் மெண்மை மட்டுமே எழுத பட்டது குறித்துதாம் எனது கேள்வி???

ப்ரியன்
21-03-2006, 12:22 PM
ப்ரியன்.. அருமையான கவிதைதான்...
முதலில் ஒரு பெரிய குதற்க்க விமர்சணம் எழுதினேன்...
ஒரு நாணயத்துக்கு எப்போதும் இரு பக்கம் இருக்கும் அல்லவா??? அந்த மறு பக்கத்தை எழுதினேன்...

ஆனால் மகளிர் தினத்தில் பதிக்கபட்ட கவிதையை மிரட்ட மனம் வரலை :-)...
மேலும் எப்பவும் குறை சொல்லுவதே எனக்கு வேலையா போச்சு... நம்ம தாமரை செல்வன் மற்றும் பிரதிப்பை போல....
அதனால இளசு, ராகவன் மாதிரி நல்ல பிள்ளையா இருந்திட்டேன் :-)
இன்றைக்குதான் படிக்கிறேன் எல்லா பின்னூட்டத்தையும் அதற்கு மன்னிக்கோனும்

பெஞ்சமின் பாராட்டுக்கள் ஒருப்பக்கம் உற்சாகமூட்டினாலும் நல்ல விமர்சனக்கள் இருந்தால்தான் நம்மை பட்டை தீட்டிக்கொள்ளலாம் அதனால் நீங்கள் நான் செய்யும் தவறுகளை கண்டிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும் அது மகளிர் தின கவிதையாக இருந்தாலும்

ப்ரியன்
21-03-2006, 12:29 PM
நன்றி ராகவன்

(ஆண்மையைப் போற்றுதும் என்று ஒரு கவிதை எழுதலாமுன்னு எனக்குத் தோணுது. எழுதுவோம்.)

சீக்கிரம்

ப்ரியன்
21-03-2006, 12:31 PM
ஆண்மைக்குள்ளும் பெண்மை உண்டு; பெண்மைக்குள்ளும் ஆண்மை உண்டு!.

நூற்றுக்கு நூறு உண்மை கவிதா

கவிதை நன்றாக இருந்தது பிரியன்.

நன்றி கவிதா

ப்ரியன்
21-03-2006, 12:33 PM
முற்றிலும் உண்மை கவி...
ஆனால் பெண்மையின் மெண்மை மட்டுமே எழுத பட்டது குறித்துதாம் எனது கேள்வி???

ஆமாம் பெஞ்சமின் பெண்மை மென்மைதான் பல விடயங்களில் அதே மென்மை வன்மையாகிப் போவதும் சில நேரங்களில் நடக்கிறது...அதைப் பற்றி எழுதவும் நேரம் வரும் ;)

பென்ஸ்
21-03-2006, 12:41 PM
எங்கோ எப்பவோ வாசித்தது...
"ஒவ்வொரு பெண்ணும் தண்ணுள் ஒரு பிசாசை வாடகைக்கு வைத்திருக்கிறாள்...
தனக்கு தேவை வரும் போது மட்டும் கூலியாய் அதை வேளியே கொண்டுவந்து உபயோகிப்பாள்"

அல்லி, கவிதா சன்டைக்கு வரகூடாது... உன்மையை சொன்னால் கோபம் வரும்....

தாமரை .. நீர் எதாவது சொல்லனுமுன்ன, நாம போனிலையே பேசலாம்...
இங்க இதுக்கு பதில் எழுத வேண்டாம் :-)

sarcharan
21-03-2006, 12:44 PM
எங்கோ எப்பவோ வாசித்தது...
"ஒவ்வொரு பெண்ணும் தண்ணுள் ஒரு பிசாசை வாடகைக்கு வைத்திருக்கிறாள்...
தனக்கு தேவை வரும் போது மட்டும் கூலியாய் அதை வேளியே கொண்டுவந்து உபயோகிப்பாள்"

அது என்ன வாடகைக்கு.... சொந்தமாகவே தான்
பெண் என்றால் பேயும் இரங்குமே....

அல்லி, கவிதா சன்டைக்கு வரகூடாது... உன்மையை சொன்னால் கோபம் வரும்....

ஆமாம் உண்மை கசந்தாலும் சண்டேக்கு வரகூடாது. மண்டேக்கு தான் வரணும்

தாமரை .. நீர் எதாவது சொல்லனுமுன்ன, நாம போனிலையே பேசலாம்...
இங்க இதுக்கு பதில் எழுத வேண்டாம் :-)

வருமுன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்றுவதாக சபதமெடுத்துள்ளீரோ... சபாஷ்...

sarcharan
21-03-2006, 12:46 PM
எங்கோ எப்பவோ வாசித்தது...
"ஒவ்வொரு பெண்ணும் தண்ணுள் ஒரு பிசாசை வாடகைக்கு வைத்திருக்கிறாள்...
தனக்கு தேவை வரும் போது மட்டும் கூலியாய் அதை வேளியே கொண்டுவந்து உபயோகிப்பாள்"

தாமரை .. நீர் எதாவது சொல்லனுமுன்ன, நாம போனிலையே பேசலாம்...
இங்க இதுக்கு பதில் எழுத வேண்டாம் :-)

பென்ஸூ உங்க அவதார் சூப்பர்.... அட போட்ட படத்த சொன்னேங்க...

தாமரை
21-03-2006, 12:49 PM
அது என்ன வாடகைக்கு.... சொந்தமாகவே தான்
பெண் என்றால் பேயும் இரங்குமே....

இவ்விடம் பிசாசுகள் வாடகைக்கு விடப்படும்.. நல்ல பிஸினஸ்ஸா தோணுதே

ஆமாம் உண்மை கசந்தாலும் சண்டேக்கு வரகூடாது. மண்டேக்கு தான் வரணும்

மண்டைக்கு வந்தா காப்பத்திக்க உன்னிடம் ஹெல்மெட் கூட இல்லை. கவனம்

தாமரை
21-03-2006, 12:52 PM
எங்கோ எப்பவோ வாசித்தது...
"ஒவ்வொரு பெண்ணும் தண்ணுள் ஒரு பிசாசை வாடகைக்கு வைத்திருக்கிறாள்...
தனக்கு தேவை வரும் போது மட்டும் கூலியாய் அதை வேளியே கொண்டுவந்து உபயோகிப்பாள்"

அல்லி, கவிதா சன்டைக்கு வரகூடாது... உன்மையை சொன்னால் கோபம் வரும்....

தாமரை .. நீர் எதாவது சொல்லனுமுன்ன, நாம போனிலையே பேசலாம்...
இங்க இதுக்கு பதில் எழுத வேண்டாம் :-)
பெண்ணே பிசாசு என்று ஒரு காலத்தில் சொன்னதா ஞாபகம்..:D :rolleyes: :rolleyes:

sarcharan
21-03-2006, 12:55 PM
பெண்ணே பிசாசு என்று ஒரு காலத்தில் சொன்னதா ஞாபகம்..:D :rolleyes: :rolleyes:

கிளப்பி விடுங்க...
நேற்று ஐவரணி....:confused: :confused: :confused:
இன்று மகளிரணி....:confused: :confused: :confused:
நாளை....:eek: :eek: :eek:

அல்லிராணி
21-03-2006, 02:18 PM
எங்கோ எப்பவோ வாசித்தது...
"ஒவ்வொரு பெண்ணும் தண்ணுள் ஒரு பிசாசை வாடகைக்கு வைத்திருக்கிறாள்...
தனக்கு தேவை வரும் போது மட்டும் கூலியாய் அதை வேளியே கொண்டுவந்து உபயோகிப்பாள்"

அல்லி, கவிதா சன்டைக்கு வரகூடாது... உன்மையை சொன்னால் கோபம் வரும்....

தாமரை .. நீர் எதாவது சொல்லனுமுன்ன, நாம போனிலையே பேசலாம்...
இங்க இதுக்கு பதில் எழுத வேண்டாம் :-)

எதையோ கண்டு பயந்திருக்கிறீர்கள்.. உமக்கு பேயோட்ட வேண்டியதுதான்.