PDA

View Full Version : திருக்குறளில்...poo
07-03-2006, 08:50 AM
அன்பு நண்பர்களே..

திருக்குறளில் இருமுறை இடம்பெற்றுள்ள அதிகாரம் எது??!
(ஒரே தலைப்புள்ள அதிகாரம்..)

sarcharan
08-03-2006, 02:08 PM
குறிப்பறிதல்
காமத்துப்பாலிலும், பொருட்பாலிலும் இடம் பெற்றுள்ளன... சரியா..?

அன்பு நண்பர்களே..
திருக்குறளில் இருமுறை இடம்பெற்றுள்ள அதிகாரம் எது??!
(ஒரே தலைப்புள்ள அதிகாரம்..)

sarcharan
08-03-2006, 02:09 PM
காமத்துப்பால்
குறிப்பறிதல்
1091. இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
1092. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
1093. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
1094. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
1096. உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
1097. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
1098. அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
1100. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
=====================

sarcharan
08-03-2006, 02:10 PM
பொருட்பால்
குறிப்பறிதல்

701. கூறாமை நோக்க஧க் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
702. ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
703. குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
704. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
705. குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.
706. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
707. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
708. முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.
709. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
710. நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
================

sarcharan
08-03-2006, 02:12 PM
மு.வரதராசனாரையும், திருக்குறள். வி.முனுசாமியையும் கேக்குறத விட்டுட்டு நம்மள போய் கேக்குறீங்க....
பள்ளியில் திருக்குறள் சொல்ல என் திருக்குரல் சரியில்லைன்னு சொல்லி வாங்கி கட்டிக்கிட்டவன் நான்... ஹி ஹி
அதுக்காக திருக்குறள விட இம்போசிசன் எழுதி..... அது ஒரு சிறிய கதை...

இளந்தமிழ்ச்செல்வன்
08-03-2006, 04:06 PM
நன்றி சரண்

ராசராசன்
09-03-2006, 02:45 AM
கலக்குறீங்க சரவணன்!

நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லீட்டீங்க!!!!:D

sarcharan
09-03-2006, 02:55 AM
இதத்தான் இதத்தான் நான் எதிர்பார்த்தேன்னு யாராவது சொல்லப்போறாங்க...

கலக்குரீங்க சரவணன்!

நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லீட்டீங்க!!!!:D

poo
09-03-2006, 03:47 AM
நன்றி நண்பரே..

மிக்க சரி..
தமிழாசிரியர் ஒருவரிடம் இங்கே பதிந்தவுடனே தொலைபேசியில் பேசி தெரிந்து கொண்டேன்.. ஆனால் இங்கே சொல்ல முடியவில்லை! சொல்லியிருந்தால் அந்த குறள்களை படிக்கும் வாய்ப்பு இருந்திருக்காதே!?

pradeepkt
09-03-2006, 04:10 AM
மு.வரதராசனாரையும், திருக்குறள். வி.முனுசாமியையும் கேக்குறத விட்டுட்டு நம்மள போய் கேக்குறீங்க....
பள்ளியில் திருக்குறள் சொல்ல என் திருக்குரல் சரியில்லைன்னு சொல்லி வாங்கி கட்டிக்கிட்டவன் நான்... ஹி ஹி
அதுக்காக திருக்குறள விட இம்போசிசன் எழுதி..... அது ஒரு சிறிய கதை...
அது ஒரு சிறிய கதை இல்லை மக்களே...
ஒரு மாபெரும் காவியம். என்னைக்காவது நான் சுயசரிதை எழுதும்போது இதெல்லாம் வெளியே வரும். :D

mukilan
09-03-2006, 04:12 AM
அது ஒரு சிறிய கதை இல்லை மக்களே...
ஒரு மாபெரும் காவியம். என்னைக்காவது நான் சுயசரிதை எழுதும்போது இதெல்லாம் வெளியே வரும். :D
நீங்க ஏன் சுயசரிதையிலே சரவணன் காதையை மட்டும் முதலில் அதுவும் இப்பொழுதே எழுதக்கூடாது!

ஆர்வக் கோளாறில்,

sarcharan
09-03-2006, 04:53 AM
ஹ்ம்ம் பத்தவெச்சுட்டிய...
ஆரம்பிச்சுட்டியளா உங்க சேட்டையை... :confused: :confused:

நீங்க ஏன் சுயசரிதையிலே சரவணன் காதையை மட்டும் முதலில் அதுவும் இப்பொழுதே எழுதக்கூடாது!

ஆர்வக் கோளாறில்,

mukilan
09-03-2006, 05:00 AM
ஹ்ம்ம் பத்தவெச்சுட்டிய...
ஆரம்பிச்சுட்டியளா உங்க சேட்டையை... :confused: :confused:

பின்னே! உங்க வலைப்பூ பக்கம் போய்ப் பார்த்தேன். சரவணன் நல்லவர் அப்படின்னு மட்டும் போட்டிருக்கீங்க. அதில் பலர் புகைப்படம் இருக்கின்றன. அதிலே நீர் யாருன்னு சொல்லவும் இல்லை. 2 பேருக்கும் சரவணன்னு பேர் அதிலே இருக்கு. இப்படியெல்லாம் குழம்பாம இருக்கிறதுக்காகத்தான் பிரதீப்பை உங்களைப் பத்தி "உள்ளது உள்ளபடி" சொல்ல சொல்றேன்.

தாமரை
09-03-2006, 06:26 AM
நீங்க ஏன் சுயசரிதையிலே சரவணன் காதையை மட்டும் முதலில் அதுவும் இப்பொழுதே எழுதக்கூடாது!

ஆர்வக் கோளாறில்,
நல்ல விஷயங்களை தள்ளிப்போடக் கூடாது பிரதீப்..

சாவி கொடுக்கும்

sarcharan
09-03-2006, 07:06 AM
பல திரிகள்ல பறந்து பறந்து தாக்கறீங்க...:eek: :eek:

நல்ல விஷயங்களை தள்ளிப்போடக் கூடாது பிரதீப்..
சாவி கொடுக்கும்

தாமரை
09-03-2006, 07:31 AM
பல திரிகள்ல பறந்து பறந்து தாக்கறீங்க...:eek: :eek:
என்ன பண்ணறது.. நீங்க 666 ன்னீங்க இப்போ பாருங்க...

sarcharan
09-03-2006, 08:53 AM
ஆஹா அத பத்தி நான் அப்பவே தெளிவா சொல்லீட்டேனே

என்ன பண்ணறது.. நீங்க 666 ன்னீங்க இப்போ பாருங்க...

தாமரை
09-03-2006, 08:58 AM
ஆஹா அத பத்தி நான் அப்பவே தெளிவா சொல்லீட்டேனே
இப்போ 708 ஆகிடுச்சே அதைச் சொன்னேன்