PDA

View Full Version : சாண்டில்யன் படைப்புகள்



ராசராசன்
07-03-2006, 07:48 AM
சாண்டில்யன் படைப்புகளில் கடல்புறா, யவனராணி மிகபிரசித்தமானது.

சாண்டில்யன் படைப்புகளின் களபதிப்புகள்/இணையதளம் இருந்தால், அதுபற்றி யாராவது கூற முடியுமா?

rajasi13
07-03-2006, 08:42 AM
ஐயா யாராவது தெரிஞ்சா சீக்கிரமா சொல்லுங்க.

ராசராசன்
07-03-2006, 08:54 AM
சரி..! "யவனராணி" எத்தனை பேர் வாசித்திருக்கிறீகள்? துபாய்காரருக்கு பரிச்சயம் உண்டா?

pradeepkt
07-03-2006, 09:57 AM
யவன ராணி பலமுறை வாசித்திருக்கிறேன்.
எங்க வீட்டில் கந்தல் கந்தலாக அந்தப் புத்தகத்தை பைண்ட் செய்து வைத்திருக்கிறேன். இணையத்தில் இருக்குமா எனத் தெரியவில்லையே

மதி
07-03-2006, 10:26 AM
யவன ராணி, மூங்கில் கோட்டை...இதர சாண்டில்யன் நாவல்கள் வாசித்திருக்கிறேன்..
இப்ப...ஹ்ம்ம்ம்..

பென்ஸ்
07-03-2006, 11:16 AM
இந்த நாவல்கள் எல்லாம் நான் வாசித்ததில்லை... ஆனால்
என் தந்தைக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது... அவர் வாசித்து எனக்கு கதையாக விளக்குவார்,
விளக்கும் போது நான் புரிந்து கொள்ளும் படி எளிதாக சொல்லுவார்,
இடையில் வரும் வசனக்களை வாசித்தும் காட்டுவார்...
அப்பா இறந்த பிறகு எனது அக்காவும்.. பிறகு கல்லூரி தோழிகளும் கதை சொல்லி ஆனார்கள்...
இவரக்ள் சொல்லும் விதம் எனக்கு வாசிப்பதை விட வாசித்து அதை விவாதித்து சொல்லுவது
பிடித்திருந்ததால் இன்று வறை ஒரு முழு நாவல் கூட நானாக வாசித்ததில்லை...

கடல் புறாவும் பாதியில் நிக்கிறது... அடுத்த கதை சொல்லிகாக...

gragavan
07-03-2006, 11:38 AM
சாண்டியல் எழுதிய புதினங்களை நான் விரும்பிப் படித்ததில்லை. ஏனோ அவருடைய நடை அந்த அளவிற்குக் கவரவில்லை. ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். பெயர்கள் கூட நினைவில்லை. சிவப்புக் கல் படம் போட்டிருக்கும். இன்னொன்று ராஜபேரிகை என்று நினைக்கிறேன். பிரதீப் கொடுத்ததுதான். ஆகையால் பெயர் அவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். பிரதீப்பு, என்னய்யா புதினத்தோட பேரு.

ஏன் அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று தெரியாது. ஆனால் அம்மாவும் நிறையப் படிப்பார்கள். ஆனால் சாண்டியல் புதினம் வீட்டில் ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறேன். மற்ற புதினங்கள் நிறைய வீட்டில் உள்ளன. கல்கி, கோவி, லட்சுமி, ஜெகசிற்பியன், அகிலன், மீ.ப.சோமு இன்னும் பலரின் புத்தகங்களை நாங்கள் விரும்பிப் படிப்போம்.

தாமரை
07-03-2006, 12:17 PM
http://www.udumalai.com/books/sandiliyan.htm
http://www.indiavarta.com/Shopping/Books/Tamil/tBooks.asp?Page=29&Cat=Novels
http://www.anytamil.com/boosear.php?lan=tamil&vs=k&t=&s1=&page=5

ராசராசன்
07-03-2006, 01:30 PM
சாண்டில்யனின் புதினங்கள் சிறுவயதில் பல படித்திருந்தாலும், மீண்டும் ஒரு வலம் வரலாமென இருக்கிறேன். இணய இணைப்பிற்கு மிக்க நன்றி, தாமரை செல்வன்!

pradeepkt
08-03-2006, 07:55 AM
சாண்டியல் எழுதிய புதினங்களை நான் விரும்பிப் படித்ததில்லை. ஏனோ அவருடைய நடை அந்த அளவிற்குக் கவரவில்லை. ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். பெயர்கள் கூட நினைவில்லை. சிவப்புக் கல் படம் போட்டிருக்கும். இன்னொன்று ராஜபேரிகை என்று நினைக்கிறேன். பிரதீப் கொடுத்ததுதான். ஆகையால் பெயர் அவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். பிரதீப்பு, என்னய்யா புதினத்தோட பேரு.

சரிதான்யா... அது ராஜபேரிகைதான். இன்னொன்று ராஜமுத்திரை.
சாண்டில்யன் கதைகள் எனக்குப் பிடிக்கும், அதுவும் அவரது வர்ணனைகள், கொஞ்சம் "இது"வாக இருக்குமல்லவா?
மற்றபடிக்கு இந்திய வரலாற்று நிகழ்வுகளைத் தன்னால் இயன்ற அளவு கதைகளுக்குள் அடக்கி இருக்கிறார் சாண்டில்யன். இதெல்லாம் இருந்த போதும் கல்கி, தி.ஜா, சுஜாதா அளவு என்னையும் சாண்டில்யன் கவர்ந்ததில்லை.

அவரது "மலைவாசல்" ஒரு சிறந்த புதினம்.

sarcharan
08-03-2006, 09:54 AM
சாண்டில்யனின் "இராஜபேரிகை" படித்துத்தான் ஆங்கிலேயரின் முதல் போர் (தேவன்கோட்டை )பற்றியும், ராபர்ட் கிளைவ் ,விஜயகுமார், மராட்டியரின் குதிரைப்படை பற்றியும் கூறியுள்ளார்

சரிதான்யா... அது ராஜபேரிகைதான். இன்னொன்று ராஜமுத்திரை.
சாண்டில்யன் கதைகள் எனக்குப் பிடிக்கும், அதுவும் அவரது வர்ணனைகள், கொஞ்சம் "இது"வாக இருக்குமல்லவா?
மற்றபடிக்கு இந்திய வரலாற்று நிகழ்வுகளைத் தன்னால் இயன்ற அளவு கதைகளுக்குள் அடக்கி இருக்கிறார் சாண்டில்யன். இதெல்லாம் இருந்த போதும் கல்கி, தி.ஜா, சுஜாதா அளவு என்னையும் சாண்டில்யன் கவர்ந்ததில்லை.

அவரது "மலைவாசல்" ஒரு சிறந்த புதினம்.

sarcharan
08-03-2006, 09:55 AM
மேலும் சாண்டில்யனின் புத்தகங்களில் சற்று **நெடி அதிகமாக இருக்கும் என்று பலர் சொல்லக்கேட்டுள்ளேன்...

தாமரை
08-03-2006, 10:31 AM
மேலும் சாண்டில்யனின் புத்தகங்களில் சற்று **நெடி அதிகமாக இருக்கும் என்று பலர் சொல்லக்கேட்டுள்ளேன்...
கண்ணதாசனின் சேரமான் காதலி படித்து பாருங்கள்..:D :D :D

மதி
08-03-2006, 11:01 AM
போற போக்க பாத்தா பண்பட்டவர் பகுதிக்கு மாத்திடுவாங்க போலருக்கு..

ராசராசன்
08-03-2006, 11:03 AM
கன்னி மாடம், யவனராணி, கடல் புறா போன்ற புதினங்களை மிகச்சிறப்பாக படைத்துள்ளார்.

கதைகளில் போர் நுணுக்கங்களை அவர் விவரிக்கும் விதமே அலாதி. படிப்பவர்களை நேரடியாக போர்முனைக்கே கொண்டு செல்லும் வல்லமை திரு.சாண்டில்யனுக்கே உரித்தான கலை.

** நெடியை ஒதுக்கித் தள்ளுங்களய்யா! அது பத்திரிக்கை வியாபார நோக்கத்துக்காக அந்த காலகட்டங்களில் சேர்க்கபட்டது.

sarcharan
08-03-2006, 12:29 PM
இவைகள் மின்-புத்தகங்களாக (.pdf)கிடைக்குமா..? அப்படி என்றால் கிடைக்கும் தளங்களின் பெயர்களை தாருங்கள்...


சாண்டில்யனின் புதினங்கள் சிறுவயதில் பல படித்திருந்தாலும், மீண்டும் ஒரு வலம் வரலாமென இருக்கிறேன்.

பரஞ்சோதி
08-03-2006, 05:38 PM
யவனராணி கதையை இன்று தான் படித்து முடித்தேன், ஆறு மாதங்களாக படிக்கமுடியாமல் இன்று முடித்து விட்டேன். மிகவும் அருமையான கதை.

ஆனாலும் கடற்புறா என்னை மிகவும் கவர்ந்த கதை.

pradeepkt
09-03-2006, 04:08 AM
மேலும் சாண்டில்யனின் புத்தகங்களில் சற்று **நெடி அதிகமாக இருக்கும் என்று பலர் சொல்லக்கேட்டுள்ளேன்...
அது யாரப்பா பலர்???
நீயே அந்தப் புத்தகங்களை அதற்காகவே ரெண்டு மூணு நாள் வச்சுப் படித்தது எனக்குத் தெரியாதா?

sarcharan
09-03-2006, 04:52 AM
ஹி ஹி அலுவலக டென்ஷனால நாலு நாள் ஆச்சு... வேற ஒண்ணுமில்ல;) ;)

அது யாரப்பா பலர்???
நீயே அந்தப் புத்தகங்களை அதற்காகவே ரெண்டு மூணு நாள் வச்சுப் படித்தது எனக்குத் தெரியாதா?

pradeepkt
09-03-2006, 05:13 AM
கண்ணதாசனின் சேரமான் காதலி படித்து பாருங்கள்..:D :D :D
கண்ணதாசனின் இன்னொரு கதை உண்டு. அதையும் படித்துப் பார்க்கலாம் :D :D :D
பழந்தமிழ் நாட்டுப் (லெமூரியாக் கண்டம் இத்யாதி) பழக்க வழக்கங்களைக் கொண்ட கதைக்களன். ராகவன் அந்தப் புத்தகத்தை எனக்குக் கொடுத்தார்.

ஏய்யா, அந்தப் புத்தகத்துக்குப் பேர் என்ன?

தீபன்
16-03-2006, 03:43 PM
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன் சிறு வயதில் தனக்கு சிறந்த போர் அறிவு வரக் காரண்மாக 3 சரித்திர நவீனங்களை ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது, சாண்டில்யனின் கடற்புறா அடுத்தது அகிலனின் வேங்கையின் மைந்தன். மற்றையது கல்கியின் பொன்னியின் செல்வன்.

சாண்டில்யன் ஏற்க்குறைய 65 சரித்திர நவீனங்கள் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. நான் அதில் 63 நவீனங்களை என் பள்ளிப் பருவத்திலேயே படித்து முடித்துவிட்டேன்.... அந்தளவுக்கு நான் அவரின் பரம விசிறி....

கல்கி, அகிலன் கூட என் அபிமான எளுத்தாளர்கள்தான்.
ம்ம்ம்ம்... இப்ப எதையும் படிக்க முடியாமல் இணையமும் வேலையுமா போச்சு...

சுபன்
16-03-2006, 05:04 PM
நண்பர்களே உங்களிடம் நல்ல மின்புத்தகங்கள் இருந்தால் eBooks share பகுதியில் ஏற்றலாமே

தீபன்
30-03-2006, 12:26 PM
சாண்டில்யனின் பரம ரசிகன் என்ற வகையில் சில விளக்கங்கள்
அ) கடல்புறாவிற்கும் யவனராணிக்கும் இணையாக இன்னமும் ஒரு சரித்திர நாவலை நான் படித்ததில்லை
ஆ) சாண்டில்யனின் கதைகளில் வரும் வில்லனுக்கு கதாநாயகனுக்கு இணையான வீரம் மற்றும் மதியூகம் இருக்கும்
இ) சில நண்பர்கள் சொல்லும் அந்த **நெடி அழகிய கவித்துவமான வர்ணனையில் இருக்கும்
ஈ) போர் வியூகங்களைப் பற்றிய சாண்டில்யனின் வர்ணனைகளைப் படித்தால் நாமும் யுத்த களத்திலேயே இருப்பது போலத்தோன்றும்
உ) ஒற்றர்களுக்கு வேண்டுமென்றே தவறான தகவலை வில்லன் பரப்ப கதாநாயகன் மாறு ஏற்பாடாய் தகவலை நம்பாமல் வேறிடம் போக, வில்லன் முதலில் பரப்பிய தவறான தகவல்படி உள்ள இடத்தையே தாக்க ஆரம்பிக்க, கதாநாயகனின் மற்றுமொரு படைப்பிரிவு அங்கும் தயாராய் இருக்க, திரும்ப நினைக்கும் வில்லன் படைகள் பின்புறம் இருந்தும் மற்றொரு படைப்பிரிவு சூழ்ந்து கொள்ள (சாண்டில்யன் சொல்லும் வியூக உதாரணம் பாக்கு வெட்டிக்குள் மாட்டிக்கொண்ட பாக்கு வெட்டுப்படுவது போல) அந்த யுத்த வர்ணனையும் தீட்டப்படும் திட்டங்களும் இன்னமும் கண்முன் விரிகிறது
ஊ) சரளமான் மணிப்ப்ரவாக நடை. ஒரு பாராவில் ஒரே ஒரு முற்றுப்புள்ளிதான் இருக்கும். ஆனால் வர்ணனைகள் அத்தனையும் தெள்ளத்தெளிவாகப்புரியும்
எ) அருமையான இலக்கிய வர்ணனைகள், எளிமையாய் எடுத்தாளப்பட்ட சமஸ்கிருத வரிகள்
ஏ) கதை நெடுக்க சரித்திர சான்றுகளை கொடுத்துக் கொண்டே செல்லும் மிகுந்த புலமை
சொல்லிக்கொண்டே போகலாம், முற்றுப்புள்ளி வைக்காமல் சாண்டில்யனின் கதைப்பத்தி போலவே.

gesh
01-05-2006, 01:36 PM
சாண்டில்யன் ஒரு சகாப்தம். கல்கி, அகிலன் மற்றும் சாண்டில்யன் அவர்களுக்கென்று தனி நடை; ஒருவர் மற்றவருக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களல்லர். இளசுவிடம் கேளுங்கள், தி.ஜ.ரவின் 'மோக முள்'ளை ஒரு கவிதையாக்கி கூறியதுபோல் இதற்குமொரு கவிதை தரக்கூடும்.

jose007
30-05-2006, 05:09 PM
நான்.. ஆறாம் வகுப்பில் இருக்கும் பொழுது.... எனது அம்மா படிக்க கொண்டு வந்திருந்த யவன ராணி படித்திருக்கிறேன்... அதில், பூம்புகாரின் சிறப்பை, மீனவர்களின் வாழ்க்கையை, தமிழரின் கடல் வணிகத்திறமையை, போர் தந்திரத்தை... சாண்டில்யன்.. மிக சிறப்பாக வர்ணித்திருப்பார்... நான் அப்பொழுது.. பூம்புகாரில் வசித்து வந்ததால்... மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன்... சிறுவயசென்பதால்... அந்த் ***** நெடிப்பற்றி நினைவு இல்லை... அதில்.. சோழனின் போர் வியுகத்தை.. ஓரு பூவிற்கு ஒப்பிடுவார்... நாகலிங்கப்பூ என நினைக்கிறேன்... எத்தனை பேருக்கு... ஒரு சரித்திர புதினத்தை அதன் கதையமைப்பு நிகழ்ந்த ஊரிலே இருந்து அனுபவித்து படிக்கும் வாய்ப்பு இருந்திருக்கும் என தெரியவில்லை.... யாராவது பூம்புகார் வந்து சென்றிருக்கிரீர்களா ?

அதற்கப்புரம் கடல் புறா படிதேன்... ஆனால்.. யவனராணி போல் நினைவு இல்லை.. சமீபத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தேன்... கல்கியின் புதினங்களில்... வரலாற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.. சாண்டில்யனின் புதினங்களின்.. வர்ணணைக்கு முதலிடம்....

முன்பெல்லாம் சென்னை வானொலி நிலையத்தில்.. இரவு 8.30 - 8.45 மணிக்கு புதினப்பக்கங்கள் என ஓரு பகுதியில்.. நல்ல பல புதினங்களை.. வாசிப்பார்கள்... வாசிப்பவர்களின்..குரல்நடையிலே... அப்புதினங்களை.. கண் முன் நிறுத்துவார்கள்.... இப்பொழுது அந்த நிகழ்ச்சி உள்ளதா என தெரியவில்லை... தமிழ் நாட்டில் உள்ளவர்கள் சொன்னால் நல்லது...

bioalgae
30-06-2006, 02:36 AM
சாண்டில்யண் எழுதிய கடல்புறா, மன்னன் மகள் படிக்கும்போழுது உங்கள் கண்முன் நடப்பதுபோல் இருக்கும் நிங்கள் ஒரு பாத்திரமாக மாறி அந்த காலத்தில் உலவி வருவிர்கள். ஆதில் அவர் போர் வியூகம் பற்றி எழுதியிருப்பது நம்மை அந்த போர் முனைக்கு அழைத்து செல்லும்

சாண்டில்யண் படைப்புகள் மின்-புத்தகங்களாக (Free.pdf)கிடைக்குமா..?

mgandhi
09-08-2006, 07:35 PM
யாம் அறியென் பரா பரமே

Isaiprabhu
23-08-2006, 01:26 PM
நானும் சாண்டில்யனின் பரம ரசிகன். அவரது மன்னன் மகள், ஜலதீபம் நாவல் எனக்கு மிகவும் பிடித்தமானவை.:D

உதயா
24-08-2006, 04:48 AM
யாராவது பூம்புகார் வந்து சென்றிருக்கிரீர்களா?
என்ன இப்படி கேட்டுப்புட்டிய, நாங்க வந்திருக்கோம்ல.

rajasi13
27-09-2006, 08:33 AM
சரி..! "யவனராணி" எத்தனை பேர் வாசித்திருக்கிறீகள்? துபாய்காரருக்கு பரிச்சயம் உண்டா?
பரிச்சயம் உண்டாவா? ம் சாண்டில்யன் கதைகள்னா ராப்பகலா படிச்சு முடிச்சுட்டுதான் அடுத்த வேலை. இந்தியாவுல இருக்கும்போது நூலகத்துல போய் உக்காந்து இதெல்லாம் படிக்கிறதுதான் வேலை. இங்கே வந்த பிறகு கடல்புறா மற்றும் கன்னி மாடம் (வாங்கியது) படிச்சுதான் பொழுதே போகிறது. என்ன எத்தன தடவ படிச்சாலும் போரடிக்கிறதில்ல.
துபாய் வந்தப்பறம் மகன் ராகுல தூக்காம ராஜபேரிகை படிச்சுகிட்டிருந்ததுக்கு மனைவிகிட்டே வாங்கிகட்டிக்கிட்டது தனி கதை.

mohathum
30-11-2006, 01:24 PM
sir pls conecet this page

sriram
02-12-2006, 03:37 AM
சாண்டில்யன் வர்ணனை எனக்கு பிடிக்கும்.

tamil81
20-01-2007, 05:02 PM
சரி..! "யவனராணி" எத்தனை பேர் வாசித்திருக்கிறீகள்? துபாய்காரருக்கு பரிச்சயம் உண்டா?

யவன ராணி மறக்க கூடிய புத்தகமா அய்யா ?
சாண்டில்யன் கிரேட்

ராசராசன்
20-01-2007, 05:22 PM
சாண்டில்யனின் புதினங்கள் கிடைக்கும் தள முகவரிகள் யாருக்காவது தெரியுமா?

பரஞ்சோதி
21-01-2007, 05:00 AM
என்னை சின்னவயதில் மிகவும் கவர்ந்த நாவல் மன்னன் மகள் அதன் வழியாக நிறைய வாழ்க்கை தத்துவங்களை தெரிந்து கொண்டேன். என்னை மிகவும் கவர்ந்தது, எந்த சூழ்நிலையிலும் அகத்தில் இருப்பதை முகத்தில் காட்டாமல் இருப்பது, அது தான் கதாநாயகனுக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும்.

பரஞ்சோதி
21-01-2007, 05:08 AM
சாண்டில்யனின் புதினங்கள் கிடைக்கும் தள முகவரிகள் யாருக்காவது தெரியுமா?

நண்பரே!

சாண்டியன் அவர்களின் புத்தகங்கள் இலவசமாக கிடைக்கவே கிடைக்காது. யாராவது அதை மெனக்கெட்டு தட்டச்சு செய்து வைத்தாலோ, அல்லது ஓசிஆர் வழியாக ஸ்கேன் செய்து கொடுத்தாலோ உண்டு.

ஆக, சாண்டில்யனின் புத்தகங்களை விலைக்கு வாங்கி படிப்பதே நல்லது, அதற்கு நான்கு அல்லது 5 நண்பர்கள் சேர்ந்து பணம் கட்டி வாங்கலாம்.

leomohan
21-01-2007, 05:14 AM
சாண்டில்யனின் புதினங்கள் கிடைக்கும் தள முகவரிகள் யாருக்காவது தெரியுமா?


www.esnips.com (http://www.esnips.com)

www.4shared.com (http://www.4shared.com)

www.orkut.com (http://www.orkut.com)

ல் தேடிப் பாருங்களேன்.

omnlog03
21-01-2007, 02:08 PM
I like sandlyan's novels..
Especially, Kadalpura, Jala deepam, yavana Rani, jala mohini - are very good novels.
Though a bit sexy - the way he writes - you can't keep the book down.

omnlog03
22-01-2007, 04:57 AM
சாண்டில்யணின் படைப்புகளில் யவனராணி எனக்கு ரொம்ப பிடிக்கும்

ஷீ-நிசி
22-01-2007, 05:51 AM
கல்கியின் பொன்னியின் செல்வன்.. unicode வடிவில்

http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp169idx.htm

சாண்டில்யன் படைப்புகளின் link தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஷீ-நிசி
22-01-2007, 05:55 AM
சிவகாமியின் சபதம்
முதல் பாகம் http://rapidshare.de/files/14668323/civakaami1.pdf.html
இரண்டாம் பாகம் http://rapidshare.de/files/14668458/civakami2.pdf.html
மூன்றாம் பாகம் http://rapidshare.de/files/14668572/civakami3.pdf.html
நாலாம் பாகம் http://rapidshare.de/files/14668649/civakami4.pdf.html

ஷீ-நிசி
22-01-2007, 05:57 AM
பார்த்திபன் கனவு

முதலாம் இரண்டாம் பாகம்
http://rapidshare.de/files/15568869/paarththipan_kanavu_1_2.pdf.html

மூன்றாம் பாகம்
http://rapidshare.de/files/15568930/paartheeban_kanavu_3.pdf.html

ஷீ-நிசி
22-01-2007, 05:59 AM
பொன்னியின் செல்வன் pdf வடிவில்

முதல் பாகம்
பகுதி 1: http://rapidshare.de/files/16120704/ponni1a.pdf.html
பகுதி 2: http://rapidshare.de/files/16120834/ponni1b.pdf.html

இரண்டாம் பாகம்
பகுதி 1: http://rapidshare.de/files/16139990/ponni2a.pdf.html
பகுதி 2: http://rapidshare.de/files/16140292/ponni2b.pdf.html

ஷீ-நிசி
22-01-2007, 06:14 AM
அலை ஓசை pdf வடிவில்

பாகம் 1: http://www.tamil.net/projectmadurai/pub/pm0205/alaiocai1.pdf
பாகம் 2: http://www.tamil.net/projectmadurai/pub/pm0206/alaiocai2.pdf
பாகம் 3: http://www.tamil.net/projectmadurai/pub/pm0208/alaiocai3.pdf
பாகம் 4: http://www.tamil.net/projectmadurai/pub/pm0210/alaiocai4.pdf

அறிஞர்
02-02-2007, 04:11 PM
ஷீ-நிசி.. இன்னும் தங்களுக்கு கிடைக்கும் புத்தகங்களை கொடுங்கள்..
---
இவற்றில் சில மன்றத்தில் இருக்கிறது என எண்ணுகிறேன்.

பரஞ்சோதி
03-02-2007, 07:24 AM
அன்பு ஷீ-நிசி சில லிங்குகள் வேலை செய்யவில்லை, என்ன என்று பாருங்க.

ஷீ-நிசி
03-02-2007, 03:56 PM
பரம்ஸ் அவர்களே சரி பார்க்கிறேன்... இணையத்தில் இருந்து அப்படியே எடுத்தது...

ஷீ-நிசி
03-02-2007, 03:57 PM
ஷீ-நிசி.. இன்னும் தங்களுக்கு கிடைக்கும் புத்தகங்களை கொடுங்கள்..
---
இவற்றில் சில மன்றத்தில் இருக்கிறது என எண்ணுகிறேன்.

தொடர்ந்து கொடுக்கிறேன். அறிஞரே... கடல் புறா தொகுப்பு தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் இங்கே பதியுங்கள் நணபர்களே!

ஓவியன்
04-02-2007, 06:02 AM
நானும் சாண்டில்யனின் ஒரு தீவீர இரசிகன், அவரது எழுத்து எனக்கு கன்னி மாடமெனும் அவரது படைப்பிலே அறிமுகமாகியது. அன்று தொட்டு நான் அவரது பெரும்பாலான படைப்புக்களைப் (கடல் புறா, யவன ராணி, ஜல தீபம், மன்னன் மகள், ராஜ பேரிகை, ராஜ திலகம், பல்லவ திலகம், அவனி சுந்தரி, ராஜ முத்திரை, ராஜ யோகம், நீல ரதி...........) படித்துச் சுவைத்துள்ளேன். இவற்றிலே கடல் புறா என்னை முகவும் கவர்ந்த ஒரு படைப்பு. அதனை எத்தனை தடவை படித்துள்ளேன் என்று எனக்கே தெரியாது.

thoorigai
04-02-2007, 09:10 AM
கல்கியின் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு, என்னை மிகவும் ஈர்த்தது சாண்டில்யனின் யவன ராணியும், கடல் புறாவும்...

சிறு வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் விசேஷமே நாவல் படிப்பது.
எப்பொழுது விடுமுறை என்று ஏங்க வைத்த விஷயங்கள் அவை.

சாண்டில்யனின் நெருங்கிய உறவினருடன் (அண்ணன் மகன்) கூட பணி புரியும் வாய்ப்பும் உத்யோக ஆரம்ப காலத்தில் கிடைத்தது. அது அப்பொழுது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.

சாண்டில்யனின் புத்தகங்கள் மின் வடிவில் தேடுகிறேன்.

leomohan
04-02-2007, 10:28 AM
தொகுப்புகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே.

மதுரகன்
04-02-2007, 04:07 PM
சாண்டில்யன் புத்தகங்களை மின் புத்தகங்களாக பெறமுடியாதா
நண்பர்களே யாராவது உதவுங்களேன்...

pradeepkt
05-02-2007, 11:16 AM
இப்ப ரொம்ப நாளைக்கப்புறம் யவன ராணி மூன்றாவது முறையாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வாங்கிய புதுப் புத்தகங்கள் மூட்டையாகப் பக்கத்தில் கிடந்தாலும் இன்றும் யவன ராணி என்னை ஈர்க்கிறாள்.

மின் புத்தகங்கள் கிடைத்தால் நானும் மகிழ்வேன்.

விகடன்
08-02-2007, 06:42 PM
புத்தகங்களுக்கான சொடுக்கியை வழங்கி உதவிய தாமரைச் செல்வனுக்கு மிக்க நன்றிகள்

ஓவியன்
15-02-2007, 09:29 AM
மூட்டையாகப் பக்கத்தில் கிடந்தாலும் இன்றும் யவன ராணி என்னை ஈர்க்கிறாள்.

மின் புத்தகங்கள் கிடைத்தால் நானும் மகிழ்வேன்.


நூ|ற்றுக்கு நூறு உண்மை பிரதீப், சாண்டில்யன் ஒரு மாதிரியாகத் தான் கதை எழுதுவார் என்பவர்களுக்கு யவன ராணியைக் கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும். காமத்தினைக் கலக்காது காதலை அவர் சொல்லி இருக்கும் அந்தப் பாங்கு அலாதியானது.

அதுவும் அந்த யவனப் பெண்ணினது இளஞ்செழியன் மீதான காதல்........

அது வாசித்துப் பார்ப்பவர்களுக்கே புரியும்.

ஓவியன்
15-02-2007, 09:36 AM
யாராவது சாண்டில்யனின் "கன்னிமாடம்" என்ற நாவலைப் படித்துள்ளீர்களா?

ஆமென்றால் எங்கேயாவது தேடி "சோழ நிலா" என்று ஒரு சரித்திர நவீனம் உள்ளது அதனையும் ஒருதடவை படித்துப் பாருங்கள். அப்போது நீங்களே சாண்டில்யனின் எழுத்தினது செழுமையை உணர்வீர்கள்.

ஏனென்றால் இரண்டு நாவல்களும் ஒரே சரித்திர சம்பவத்தை மையமாகக் கொண்டு வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டவை.

ஓவியன்
15-02-2007, 09:40 AM
மேலும் சாண்டில்யனின் புத்தகங்களில் சற்று **நெடி அதிகமாக இருக்கும் என்று பலர் சொல்லக்கேட்டுள்ளேன்...

நீங்களே ஒரு தடவை படித்துவிட்டு முடிவெடுங்களேன்!

omnlog03
19-02-2007, 09:14 AM
எனக்கும் அந்த சொடுக்கியை கொடுங்களேன்.



புத்தகங்களுக்கான சொடுக்கியை வழங்கி உதவிய தாமரைச் செல்வனுக்கு மிக்க நன்றிகள்

omnlog03
19-02-2007, 09:17 AM
சாண்டில்யனின் புதிநங்களை இங்கே pdf ஆக தர முடியுமா?

ஓவியன்
17-03-2007, 12:59 PM
சாண்டில்யனின் புதிநங்களை இங்கே pdf ஆக தர முடியுமா?

எண்ணம் உள்ளது நண்பரே - ஆனால் பிரச்சினை என்னவென்றால் சாண்டில்யனின் பெரும்பாலான படைப்புக்கள் ராட்சத புத்தகங்கள் அவற்றினை PDF ஆக்க நீண்ட கால அவகாசம் தேவை அத்துடன் அவற்றினை பதிப்பகத்தாரின் அனுமதியின்றி மின் புத்தகமாக மாற்றுவது எவ்வளவிற்கு உகந்த யோசனையாக இருக்குமோ தெரியவில்லை?.

ஓவியன்
02-04-2007, 10:36 AM
நண்பர்களே சாண்டில்யனின் படைப்புக்களில் உங்களின் மனதினைக் கவரத் தவறிய படைப்பு எது?

அப்படி ஏதாவது இருக்கிறதா?

விகடன்
03-04-2007, 07:10 PM
நண்பர்களே சாண்டில்யனின் படைப்புக்களில் உங்களின் மனதினைக் கவரத் தவறிய படைப்பு எது?

அப்படி ஏதாவது இருக்கிறதா?

யாருங்க சாண்டில்யன்.
அறிமுகம் தரமுடியாதா?

பாஹிம்
03-04-2007, 07:31 PM
சாண்டில்யனின் கவர்ந்த கண்கள் சகிக்க முடியவில்லை

leomohan
03-04-2007, 07:57 PM
சாண்டில்யனின் கவர்ந்த கண்கள் சகிக்க முடியவில்லை

வாருங்கள் பாஹிம். உங்கள் வரவு நல்வரவாகட்டும். சற்றே உங்களை அறிமுகப்பகுதியில் அறிமுகம் செய்துக் கொள்கிறீர்களா? நன்றி.

ஓவியன்
05-04-2007, 03:56 AM
சாண்டில்யனின் விஜய ராணி எனும் படைப்பை யாராவது படைத்துள்ளீர்களா?

எனக்கு கொஞ்சமும் பிடிக்காத படைப்பு அது. அதில் சாண்டில்யனின் வழமையான நடையை காணவில்லை. அதனை சாண்டில்யன் தான் எழுதினாரோ என்று பல முறை நான் சிந்தித்ததுண்டு.

ஓவியன்
05-04-2007, 04:03 AM
சாண்டில்யனின் கவர்ந்த கண்கள் சகிக்க முடியவில்லை


கவர்ந்த கண்களை நான் இன்னமும் படிக்கவில்லை நண்பரே!
ஒரு மாதிரி அந்த நெடி அதிகமாக இருந்ததால் நீர் அப்படி நினைத்திருக்கலாம்.
நீர் ராஜஸ்ரீ படித்துள்ளீரா?, ராஜஸ்ரீயில் அவர் கதைக்கு ஏற்ப அவ்வாறு எழுத வேண்டி வந்த்து. ஏனென்றால் பெண் மோகம் அதிகமானால் அரசரின் நிலமை என்னவாகும் என்பதற்கான கதை அது. என்றாலும் அது வாசிக்க கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தானிருந்தது.

உதயா
12-04-2007, 04:36 AM
யாருங்க சாண்டில்யன்.
அறிமுகம் தரமுடியாதா?
இது என்ன விளையாட்டுக்கு கேட்கப்பட்ட கேள்வியாக எடுத்துக்கொள்ளலாமா?

ஓவியன்
12-04-2007, 04:44 AM
இது என்ன விளையாட்டுக்கு கேட்கப்பட்ட கேள்வியாக எடுத்துக்கொள்ளலாமா?

அவர் அந்த பெயரைக் கேள்விப் படாமல் இருந்திருக்க முடியாது, ஆனால் சில வேளை அவருக்கு சாண்டில்யனின் படைப்புக்கள் பிடிக்ககமலோ அல்லது சாண்டில்யனின் படைப்புக்களை அறிய வாய்ப்போ அவருக்கு கிடைக்காமலிருந்திருக்கலாம்.

ராசராசன்
20-04-2007, 07:02 PM
அடாடா, பல நாட்கள் கழித்து வந்து பார்த்தால் எனக்கு தேவையான நல்ல தகவல்களை பலர் தந்துள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஷீ-நிசிக்கு.

ஓவியன்
21-04-2007, 06:57 AM
அடாடா, பல நாட்கள் கழித்து வந்து பார்த்தால் எனக்கு தேவையான நல்ல தகவல்களை பலர் தந்துள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஷீ-நிசிக்கு.

வாங்க தேனிசை!
உங்கள் மீள் வரவு நல்வரவாகட்டும்.

ராசராசன்
21-04-2007, 07:05 AM
வரவேற்பிற்கு நன்றி ஓவியன்.

ஷீ-நிசி
26-04-2007, 06:04 AM
நண்பர்களே! இங்கே நிறைய தமிழ் புத்தகங்கள் மின் வடிவில் இருக்கின்றன...

http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

(சாண்டில்யனின் படைப்புகள் கிடைக்கவில்லை)

lolluvathiyar
27-04-2007, 09:02 AM
கடல்புறா, யவனரானி, கண்ணிமாடம்
சாந்தில்யன் எழுதிய இந்த கதைகள் மட்டுமே
நான் படித்திருகிறேன்.

கடல்புறா தொடர்கதையாக படித்தேன் குமுதத்தில்
கடல்புறா தான் எனக்கு அதிகம் பிடித்த கதை.

வரலாறு மட்டுமல்ல அவர் அறிவியலை அதிகம் பயன்படுத்துவார்.
கதாநாயகிய வர்னிக்க ஆரம்பித்தால் இரண்டு அத்தியாயம் எடுத்து கொள்வார்

ஒரு வேடிக்கை என்னவென்றால், அவர் அத்தியாயத்தை முடிக்கும் போது
சொல்லவொன்னா ஆச்சர்யம் அடைந்தான்
செய்யவன்னா திகைத்து நின்றான்
இந்த வார்த்தைகளை தான் அதிகம் பயன்படுத்துவார்

நானும் சாண்டில்யன் ரசிகனே (ஆனால் எனக்கு அதிகம் கல்கியை தான் பிடிக்கும்)
கல்கி யை போற்ற ஏதாவது தனி திரி இருக்கா

க.கமலக்கண்ணன்
27-04-2007, 02:14 PM
ஆனால் எனக்கு அதிகம் கல்கியை தான் பிடிக்கும் கல்கியை போற்ற ஏதாவது தனி திரி இருக்கா


அன்புள்ள லொல்லு வாத்தியாருக்கு

கல்கியின் பதிப்புகள்

http://www.chennailibrary.com/ebooks/ponniyinselvan.html

படித்துவிட்டு சொல்லுங்கள்.

சுட்டிபையன்
27-04-2007, 02:29 PM
சாண்டில்யன் படைப்புகளில் கடல்புறா, யவனராணி மிகபிரசித்தமானது.

சாண்டில்யன் படைப்புகளின் களபதிப்புகள்/இணையதளம் இருந்தால், அதுபற்றி யாராவது கூற முடியுமா?


யார் இவர் சாண்டில்யன்:icon_wacko:

lolluvathiyar
27-04-2007, 02:29 PM
நன்றி கமல்
எனக்கு நேரடியாக கனினியில் படிக்க புடிக்க வில்லை
காகிதமாக இருப்பதை தான் படிக்க வசதியாக இருக்கு
கல்கி கதைகளை நான் நிறைய படித்திருகிறேன்

எனக்கு வாய்த்த நன்பர்கள் யாருடனும் அதை பற்றி
பேசி பரவச பட முடியவில்லை.
ஆகையால் நம் லோகத்தில் கல்கி கதைகளின்
அனுபவங்களை பற்றி பேச ஏதாவது திரி
இருகிறதா என்று தான் கேட்டேன்.
நன்றி

அக்னி
27-04-2007, 05:17 PM
சாண்டில்யன்..! ஒரு காலத்தில் எங்கள் நகர நூலகத்தில் அவரின் நூல்களை தடவித் திரிந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அவரது எழுத்தின் கவர்ச்சியான பகுதிகளைக் கேள்விப்பட்டு வாசிக்கத் தொடங்கியிருந்தாலும் (அதனால்தான் யாரிடமும் கேட்காமல் தேட வேண்டியநிலை. அதாவது தப்பான எதிர்பார்ப்ப்பு.), பின் அவரது எழுத்துக்கள் ஆபாசமல்லாத, சிறந்த நடையிலமைந்த, இலக்கியச் சுவை மிகுந்த, என்றுமே திகட்டாத படைப்புக்கள் என்பதை முதலாவதாக வாசித்த "கடல்புறா" நூலிலேயே புரிந்து கொண்டேன். அதன்பின் இவ்வாறான சரித்திர நூல்களை போய்க் கேட்பதே எனக்குப் பெருமையாகத்தான் இருந்தது. சாண்டில்யனின் சில பல நூல்களை வாசித்திருந்தாலும் அவை யாவும் இப்பொழுது நினைவில் இல்லை. மீண்டும் வாசித்துவிட வேண்டும் என்ற ஆதங்கம் இப்பொழுது ஏற்பட்டுவிட்டது...

aflacnerd
23-05-2007, 07:37 PM
கடல் புறா யவண ரானி இரண்டையும் பல முறை படித்தது உண்டு. சாண்டில்யனின் கற்பனைத் திறன் என்னை மிகவும் கவர்ந்தது.

majindr
12-06-2007, 09:20 AM
வாருங்கள் லொள்ளுவாத்தியார் அவர்களே
நானும் கல்கியின் நாவல்கலின் ரசிகன். சாண்டியல் படைப்புகளை அனைவராலும் படித்துவிடமுடியாது
சில கதைகளில் காமநெடி இருக்கும், அதற்க்காக அவ்ர் படைப்புகளை குறை சொல்லவில்லை,ஆனால் கல்கியின் நாவல்கள் அப்படி அல்ல எலலா வயதினரும் படிக்கலாம்.நான் பத்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் பொன்னியின் செல்வன் அனைத்து பாகங்களையும் படித்து முடித்தேன். ஏன் இன்றும் கூட போரடித்தால் உடனே பொன்னியின் செல்வனை எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவேன், வந்தியதேவன். ராஜராஜன் , குந்தவை, பூங்குழலி, பழுவேட்டயர்,ஆழ்வார்கடியான்,ரவிதாசன் ஏன் மந்தாகினி அம்மையார் எல்லாம் மறக்ககூடிய பாத்திரங்களா. இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார்கள். பொன்னியின் செல்வன் மட்டுமில்லாமல் பார்திபன் கனவு , சிவகாமியின் செல்வன் போன்று எல்லா நாவல்களுமே அருமை

சிதம்பரம்
12-06-2007, 12:19 PM
சாண்டில்யன் நூல்கள் அனைத்தும் காப்புரிமை கொண்டதாக இருக்கிறது. ஒரு வேளை முதல்வர் கலைஞர் பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் போன்ற சாண்டில்யன் அவர்களின் எழுத்தையும் நாட்டுடைமையாக்கப் பட்டால் மின்நூல்களாகவும் பல்வேறு பதிப்பகங்கள் மலிவு விலை பதிப்புகளாகவும் வெளியிட ஏதுவாக இருக்கும். அது வரை நாம் தற்போது உரிமை கொண்டுள்ள பதிப்பகம் வெளியிடும் விலை உயர்ந்த புத்தகங்களையே படிக்கவேண்டியுள்ளது

கடல்புறா 350ல் இருந்து 400 ஆகி இப்போது 425 ருபாய் ஆக உயர்ந்துள்ளது.

விகடன்
12-06-2007, 12:51 PM
இவற்றிற்கெல்லாம் ஏதாவதொரு பொது நூலகத்தில் அங்கத்தவரானால் சரியாகிவிடுகிறது. வெறும் 250 ரூபா அங்கத்துவப்பணத்துடன் ஒரு வருடகாலத்தில் வாசிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களையும் (நூலகத்திலிருக்கும்) வாசித்து முடித்துவிடலாம்.

ஓவியன்
13-06-2007, 04:39 AM
இவற்றிற்கெல்லாம் ஏதாவதொரு பொது நூலகத்தில் அங்கத்தவரானால் சரியாகிவிடுகிறது. வெறும் 250 ரூபா அங்கத்துவப்பணத்துடன் ஒரு வருடகாலத்தில் வாசிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களையும் (நூலகத்திலிருக்கும்) வாசித்து முடித்துவிடலாம்.

அது சரி தான் ஜாவா!, ஆனால் என்னால் இலங்கையில் சாண்ண்டில்யனின் அனைத்து பதிப்புக்களையும் ஒரே நூலகத்தில் பெற இயலாமல் இருந்தது. அத்துடன் புலம் பெயர்ந்து வசிப்பவர்கள்ளெல்லாம் தமிழ் நூலகங்களுக்கு எங்கே போவது?

இனியவள்
10-07-2007, 06:51 PM
அது சரி தான் ஜாவா!, ஆனால் என்னால் இலங்கையில் சாண்ண்டில்யனின் அனைத்து பதிப்புக்களையும் ஒரே நூலகத்தில் பெற இயலாமல் இருந்தது. அத்துடன் புலம் பெயர்ந்து வசிப்பவர்கள்ளெல்லாம் தமிழ் நூலகங்களுக்கு எங்கே போவது?

ஓவியன் நீங்கள் சொல்றதும் சரி தான்
இலங்கையில ஒரு சண்டில்யன் புத்தகம்
வாங்கவே ஒரு மாச சம்பளம் வேணும்

கனவுல படிச்சுட்டு போக வேண்டியது தான் :grin: :grin: :grin:

மள்ளர்
22-07-2007, 06:50 AM
பொன்னியின் செல்வன் ஆசிரியர் நடையை விட சாண்டில்யன் எட்டா உயரத்தில் இருக்கிறார்.

ஓவியன்
22-07-2007, 06:58 AM
பொன்னியின் செல்வன் ஆசிரியர் நடையை விட சாண்டில்யன் எட்டா உயரத்தில் இருக்கிறார்.இங்கே படைப்பாளிகளை ஒப்பிட முடியாது நண்பரே - ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நடை பாணி, தனித்தன்மை இருக்கும். அவற்றை ஒப்பிட்டு மதிப்பிட எந்த ஒரு சட்டமும் யாரிடமும் இல்லை.

மள்ளர்
22-07-2007, 07:21 AM
என்னிடம் சட்டமா இருக்கு? ஏதோ தோனுச்சு சொன்னேன்.மன்றச் சட்டமாச்சே.ஒங்க கொட்டு ஒங்க கொழலு தட்டுங்க.

இளசு
22-07-2007, 07:29 AM
பொன்னியின் செல்வன் ஆசிரியர் நடையை விட சாண்டில்யன் எட்டா உயரத்தில் இருக்கிறார்.



ஓவியன் படைப்புகளை விமர்சிக்கும் மனித தர்மத்தைச் சொல்கிறார்...

மன்றச்சட்டமல்ல.. அவை வேறு..

உங்கள் ரசனைகளை, ஒப்பீடுகளை கண்ணியமாகச் சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு..

அந்த ரசனை, மதிப்பீடுகள் பற்றி அதே கண்ணியத்துடன் வெட்டி ஒட்டி பதிக்க மற்றவருக்கும் உரிமை உண்டு..

உங்கள் ரசனைகள்... உங்கள் கொட்டு..
உங்கள் மதிப்பீடுகள்.. உங்கள் குழல்..

நீங்கள் கொட்டி முழக்கலாம்...நன்றி!

lolluvathiyar
22-07-2007, 07:39 AM
சாண்டில்யன் கல்கி ஒப்பிடுவதற்க்கு இந்த திரி வேண்டாமே. இது சான்டில்யன் பற்றிய திரி. மலர் நீங்கள் இருவரையும் ஒப்பிட வேண்டுமானல் தனி திரி துவங்கலாமே.