PDA

View Full Version : சங்கீதமா சீ சீ.....

மயூ
03-03-2006, 04:43 AM
எனக்கு சிறுவயதில் ( வயது 10) கொஞ்சமும் பிடிக்காத விடயம் சங்கீதம் படிப்பது. ஆயினும் எனது அம்மா ஒரு சங்கீதப்பள்ளியில் என்னை சேர்த்து விட்டார். எனக்கு சங்கீத ஆசிரியையின் அடித்தொல்லை ஒரு புறம் அம்மாவின் அரியண்டம் ஒரு புறம். இறுதியாக் இருவருக்கு அலுவா குடுக்க முடிவு சேய்தேன்.

மாலை 4 மனிக்கு வகுப்புக்கு கிளம்புவது போல் ஒவ்வொரு நாளும் கிளம்புவேன். பின்பு வீதியெல்லாம் சுத்திவிட்டு மாலை 6 மணியளவில் சாதாரணமாக வகுப்பு முடிந்து வீடு திரும்புவது போல் வீடு திரும்புவேன். சுமார் 6 மாதம் இந்த நாடகம் தொடர்ந்தது.

ஒரு நாள் துரதிஷ்டவசமாக அம்மாவும் சங்கீத ஆசிரியையும் ஒருவரை ஒருவர் வீதியில் சந்தித்துவிட்டனர். சும்மா இருக்கேலாமல் எனது அம்மாவும் " அப்ப டீச்சர் என்ற மகன் இந்த முறை சங்கீதபரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் தானே??" என கேட்டார். அப்போது டீச்ச்ர் " உங்கட மகன் கிலாசுக்கு வரதேயில்லை". அப்போது தான் என்னுடைய திருவிளையாடல் அம்பலமானது.

பின்னர் இருவரு கையும் களவுமாக என்னை வீதியில் வைத்துப்பிடித்தனர். அப்பப்பா பின்பு என்ன இரவிரவாக எனக்கு சங்கீதப்பயிற்சி தந்து 1 ம் தரம் பரீட்சையை எடுக்க வைத்தன்ர். அதன்பின்பு நான் அம்மாவிடம் அட்ம்பிடித்து ஒரு மாதிரி வகுப்பிலிருந்து நின்று விட்டேன். ஆயினும் இப்போ ஏன் படிக்காமல் விட்டேன் என்று கவலையாக உள்ளது.:confused:
கண் கெட்டபின்பு சூரிய நம்ஸ்காரம்

pradeepkt
03-03-2006, 05:05 AM
அடேயப்பா பெரிய பிடிவாதக் காரராக இருப்பீர் போல...
நானும் வயலின் கற்றுக் கொள்ளப் போனேன். ரெண்டு வருஷம் எல்லாம் ஒழுங்காகத்தான் போனது.
திடீரென்று சின்னப் பயல்கள் நிறைய பேர் இன்னொரு இசைப் பள்ளிக் கூடத்திலிருந்து வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு ஒரு கடும் போட்டியைக் கொடுக்க இஷ்டமில்லாமல் (அத்தோடு பன்னிரண்டாவது பரீட்சையும் வந்ததால்) விலகி விட்டேன்.
அன்றிலிருந்து என் வயலினைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு ஆர்வம் பொங்கி எழுந்தாலும் மற்றவர்களின் கதியை நினைத்து அடக்கிக் கொள்கிறேன். :)

தாமரை
03-03-2006, 05:18 AM
(ஒரு ஆர்வம் பொங்கி எழுந்தாலும் மற்றவர்களின் கதியை நினைத்து அடக்கிக் கொள்கிறேன். :)
நானும் உங்களைப் போலத்தான் பிரதீப், பெங்களூர் ஃபாரம் சந்திப்பின் போது பெஞ்சமின், ராகவன் போன்றவர்கள் என் பாடலின் டியூனை கேட்டபோது கூட.. அவர்களின் (சுற்றி இருந்த அனைவரின்) கதியை எண்ணி பாடவில்லை..:D :D :D :D

sarcharan
06-03-2006, 08:34 AM
நானும் பென்ஸ மாதிரி ஒரு ஆர்வத்துல (ஆர்வக் கோளாறுல !!!) கிதார் படிச்சேன். ஆறு மாசத்துக்கு மேல என்னால தாக்கு பிடிக்க முடியல...
அதென்னமோ என் கித்தார பாக்குறப்ப எல்லாம் ஒரு ஏக்கம்....
ஹ்ம்ம் ஒரு நல்ல இசைக்கலைஞன் உருவாவது இயற்கைக்கு பிடிக்கவில்லை போலும்...:confused: ;) ;)

sarcharan
06-03-2006, 08:36 AM
நல்ல வேளை நீங்க பாடலை இல்லாட்டா....
நுணலும் தன்....:confused: :confused: :confused:
டேய் சரவணா சும்மா இருடா....:eek: :eek: :eek:

நானும் உங்களைப் போலத்தான் பிரதீப், பெங்களூர் ஃபாரம் சந்திப்பின் போது பெஞ்சமின், ராகவன் போன்றவர்கள் என் பாடலின் டியூனை கேட்டபோது கூட.. அவர்களின் (சுற்றி இருந்த அனைவரின்) கதியை எண்ணி பாடவில்லை..:D :D :D :D

மயூ
07-03-2006, 07:47 AM
நானும் பென்ஸ மாதிரி ஒரு ஆர்வத்துல (ஆர்வக் கோளாறுல !!!) கிதார் படிச்சேன். ஆறு மாசத்துக்கு மேல என்னால தாக்கு பிடிக்க முடியல...
அதென்னமோ என் கித்தார பாக்குறப்ப எல்லாம் ஒரு ஏக்கம்....
ஹ்ம்ம் ஒரு நல்ல இசைக்கலைஞன் உருவாவது இயற்கைக்கு பிடிக்கவில்லை போலும்...:confused: ;) ;)
ஆ ஆ.. இதானே வேனாம்கிறது.

gragavan
07-03-2006, 09:47 AM
நானும் உங்களைப் போலத்தான் பிரதீப், பெங்களூர் ஃபாரம் சந்திப்பின் போது பெஞ்சமின், ராகவன் போன்றவர்கள் என் பாடலின் டியூனை கேட்டபோது கூட.. அவர்களின் (சுற்றி இருந்த அனைவரின்) கதியை எண்ணி பாடவில்லை..:D :D :D :Dநல்ல வேள...நீங்க பாடலை....இல்லைன்னா...நீங்க பாடனும்னு நெனச்சதுமே உங்க பின்னால வந்து நின்ன செக்குருட்டிங்க ஒங்கள ஒரு வழி செஞ்சிருப்பாங்க. தப்பிச்சீங்க நீங்க. (நாங்களுந்தான்)

நான் பாட்டுப் படிக்கத் தொடங்குனேன். நல்லாத்தான் படிச்சேன்னு நினைக்கிறேன். பாட்டு மட்டும் படிக்கிறேன்னு... படிக்கிற வயசுல பாட்டெதுக்கு சொல்லி நிப்பாட்டீட்டாங்க.

gragavan
07-03-2006, 09:48 AM
அடேயப்பா பெரிய பிடிவாதக் காரராக இருப்பீர் போல...
நானும் வயலின் கற்றுக் கொள்ளப் போனேன். ரெண்டு வருஷம் எல்லாம் ஒழுங்காகத்தான் போனது.
திடீரென்று சின்னப் பயல்கள் நிறைய பேர் இன்னொரு இசைப் பள்ளிக் கூடத்திலிருந்து வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு ஒரு கடும் போட்டியைக் கொடுக்க இஷ்டமில்லாமல் (அத்தோடு பன்னிரண்டாவது பரீட்சையும் வந்ததால்) விலகி விட்டேன்.
அன்றிலிருந்து என் வயலினைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு ஆர்வம் பொங்கி எழுந்தாலும் மற்றவர்களின் கதியை நினைத்து அடக்கிக் கொள்கிறேன். :)நீங்க மட்டும் வயலின் வாசிச்சா வைய-லைன் நிக்குமாமே :D :D :D :D

மதி
07-03-2006, 09:59 AM
நல்ல வேள...நீங்க பாடலை....இல்லைன்னா...நீங்க பாடனும்னு நெனச்சதுமே உங்க பின்னால வந்து நின்ன செக்குருட்டிங்க ஒங்கள ஒரு வழி செஞ்சிருப்பாங்க. தப்பிச்சீங்க நீங்க. (நாங்களுந்தான்)

நான் பாட்டுப் படிக்கத் தொடங்குனேன். நல்லாத்தான் படிச்சேன்னு நினைக்கிறேன். பாட்டு மட்டும் படிக்கிறேன்னு... படிக்கிற வயசுல பாட்டெதுக்கு சொல்லி நிப்பாட்டீட்டாங்க.
நீங்க பாட்ட பாடாம..படிச்சதுனால தான் நிப்பாட்டிட்டாங்கன்னு நெனக்கிறேன்...

தாமரை
07-03-2006, 12:30 PM
நல்ல வேள...நீங்க பாடலை....இல்லைன்னா...நீங்க பாடனும்னு நெனச்சதுமே உங்க பின்னால வந்து நின்ன செக்குருட்டிங்க ஒங்கள ஒரு வழி செஞ்சிருப்பாங்க. தப்பிச்சீங்க நீங்க. (நாங்களுந்தான்)

எவ்வளவு நாள்தான் ????

gragavan
07-03-2006, 12:44 PM
எவ்வளவு நாள்தான் ????ஆண்டவன் அருள் இருக்குற வரைக்கும்.....:D :D :D

pradeepkt
08-03-2006, 07:51 AM
நீங்க மட்டும் வயலின் வாசிச்சா வைய-லைன் நிக்குமாமே :D :D :D :D
அடப்பாவி மக்கா.... :D :D :D

senthilkumarsb
08-03-2006, 10:14 AM
அப்போ உங்க தெருவில் நாய் தொல்லை இருக்காதுன்னு நினைக்கிறேன்.:p :p :p :p

தாமரை
08-03-2006, 10:21 AM
அப்போ உங்க தெருவில் நாய் தொல்லை இருக்காதுன்னு நினைக்கிறேன்.:p :p :p :p
வயலினிஸ்டை.. நான்-வயலினிஸ்டா மாத்திருவீங்க போல இருக்கே...:D :D :D :D :D

sarcharan
08-03-2006, 11:16 AM
ஜே.ஜே படத்துல மாதவன் மாதிரி வாசிப்பான்..

அப்போ உங்க தெருவில் நாய் தொல்லை இருக்காதுன்னு நினைக்கிறேன்.:p :p :p :p

மயூ
11-03-2006, 10:55 AM
ஜெ ஜெ படத்தில நாயாவது எதோ தப்பிடிச்சு. இவரு வாசிச்சா நாய் மண்டையை போட்டிடும். கார்பரேசன் காரர்கூட இவரை இதுக்கு பயன் படுத்துவதாக தகவல் உலாவுது உண்மையா?

pradeepkt
11-03-2006, 07:34 PM
மயூரேசன்,
இப்படி இன்னொரு தடவை என்னைப் பகிடி பண்ணினால் நேரே வயலினோடு கொழும்புக்கு வந்துவிடுவேன். :)

தாமரை
13-03-2006, 11:47 AM
மயூரேசன்,
இப்படி இன்னொரு தடவை என்னைப் பகிடி பண்ணினால் நேரே வயலினோடு கொழும்புக்கு வந்துவிடுவேன். :)
மயூரேசன் இன்னும் கொஞ்சம் பகிடி பண்ணுங்கள்... வயலினோடு பிரதீப்பை பார்க்கணும்-னு ஆசையாய் இருக்கு. (வாசிக்கச் சொல்லலை..:D :D )

sarcharan
13-03-2006, 11:54 AM
பாவம் மயூரேசன் சின்ன பையன் விட்டுவிடு பிரதீப்பு....:eek: :eek:

மயூரேசன்,
இப்படி இன்னொரு தடவை என்னைப் பகிடி பண்ணினால் நேரே வயலினோடு கொழும்புக்கு வந்துவிடுவேன். :)

sarcharan
13-03-2006, 11:55 AM
பிரதீப்பு என்ன நேபாள கூர்க்கா மாதிரியா?
அவன் தான் கத்தி எடுத்தா ரத்தம் பாக்காம விடமாட்டான்....
அப்போ இவன்....?

மயூரேசன் இன்னும் கொஞ்சம் பகிடி பண்ணுங்கள்... வயலினோடு பிரதீப்பை பார்க்கணும்-னு ஆசையாய் இருக்கு. (வாசிக்கச் சொல்லலை..:D :D )

sarcharan
13-03-2006, 11:56 AM
விமானத்துல ஆயுதங்கள அனுமதிக்க மாட்டாங்களே.....

மயூரேசன்,
இப்படி இன்னொரு தடவை என்னைப் பகிடி பண்ணினால் நேரே வயலினோடு கொழும்புக்கு வந்துவிடுவேன். :)

pradeepkt
14-03-2006, 04:51 AM
நக்கலு, ஹ்ம்ம்... தம்பி இதெல்லாம் நல்லதுக்காப் படலை... :D :D

சுபன்
14-03-2006, 04:00 PM
நானும் உங்கள மாதிரி ஆர்வகோளாறில் மிருதங்கம் படிக்கப்போய் ஆசிரியர் பாவம் எண்டு வந்துட்டன்

மயூ
15-03-2006, 03:54 AM
மயூரேசன் பாவமப்பா. விட்டிடுங்களேன். பிளீஸ்......
நான் கூட மிருதங்கம் படித்தேன். 3 ம் தரம் வரை படித்துவிட்டு அரைவாசியில் கைவிட்டு விட்டேன். தீம் கிட தக தின் தின்னா...........

sarcharan
15-03-2006, 07:56 AM
என்ன மயூரேசன் சின்ன புள்ளைகள பயமுறுத்துறீர்கள்....?:confused: :confused: :confused:
நல்ல வேளை வாசிப்பதை நிப்பாட்டிட்டீங்க;) ;) ;)

மயூரேசன் பாவமப்பா. விட்டிடுங்களேன். பிளீஸ்......
நான் கூட மிருதங்கம் படித்தேன். 3 ம் தரம் வரை படித்துவிட்டு அரைவாசியில் கைவிட்டு விட்டேன். தீம் கிட தக தின் தின்னா...........

sarcharan
15-03-2006, 07:57 AM
ஒரு உயிரைக்காத்த புண்ணியம் உங்களுக்கு கிடைத்தது ன்னு சொல்லுங்க சுபன்;) ;)

நானும் உங்கள மாதிரி ஆர்வகோளாறில் மிருதங்கம் படிக்கப்போய் ஆசிரியர் பாவம் எண்டு வந்துட்டன்

தீபன்
15-03-2006, 02:32 PM
ஷெல் சத்தம்தான் மத்தளம்... துப்பாக்கி வேட்டுக்கள்தான் மிருதங்கம்..... கடைசி காலத்தில மல்ரி பரல் சத்தம்தான் நம்மோட லெற்ரஸ் ட்றம்ஸ்... ம்ம்ம்.... வயலின் எண்டா ... ஆ..ஆஅ இருக்கவெ இருக்கு ஆட்லறி.... புல்லாங்குளல் வேணுமா... நம்ம சுப்ப சொனிக், புக்காரா.. எல்லாம் அதுக்குதான்...
ம்ம்ம்.. இப்பிடி கந்தகத்துக்குள் இசை படித்துக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். இப்ப கொன்ச காலமாத்தான் நம்க்கு ஒறியினல் இசையை கேக்க முடியுது....

அதுசரி மயூரேசா... யாராச்சும் வெருட்டினா பயந்திடாதை... உனக்கு நானிருக்கிறேன்...
(எதுக்கும் பிரச்சினையெண்டா உடன சொல்லிப்போடு... எஸ்கேப்பாக ஈஸியாயிருக்கும்.!)

மயூ
17-03-2006, 01:21 AM

அடப்பாவி இப்படி காலை வாரி விட்டிட்டியே

தீபன்
18-03-2006, 06:01 PM
அடப்பாவி இப்படி காலை வாரி விட்டிட்டியே
அதானே நமக்கு கைவந்த கலையாச்சே....

இளந்தமிழ்ச்செல்வன்
19-03-2006, 09:35 AM
மயூரேசனின் சங்கீத வகுப்பில் ஆரம்பித்து கதை எங்கெங்கோ போகுது. நல்ல வேலை நான் எந்த பாவமும் செய்யலை.

தாமரை
20-03-2006, 09:24 AM
மயூரேசனின் சங்கீத வகுப்பில் ஆரம்பித்து கதை எங்கெங்கோ போகுது. நல்ல வேலை நான் எந்த பாவமும் செய்யலை.
இப்படி பொய் சொல்கிறீர்களே இது பாவம் இல்லையா?

மயூ
21-03-2006, 02:23 AM
பாவம் செய்யாட்டியும் பாவம் செய்ய வைப்பமில்ல...

sarcharan
31-03-2006, 09:08 AM
பாவம் செய்யாட்டியும் பாவம் செய்ய வைப்பமில்ல...
ஹ்ம்ம் மயூரேசன் அப்ப ஒரு முடிவோட தான் இருக்கீங்க...;) ;)

மயூ
03-04-2006, 11:29 AM
இப்ப உதாரணத்துக்கு உங்க மண்டைய குழப்பலயா?