PDA

View Full Version : கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?



பாரதி
02-03-2006, 04:53 PM
அன்புள்ள நண்பர்களே,

நம்மில் பலரும் இப்போது விண்டோஸ் எக்ஸ்-பி நிறுவப்பட்ட கணினியை கையாளுகிறோம். இதில் குறிப்பிட்ட சில வேலைகளை நிறுத்துவதன் மூலம் கணினியின் செயல் வேகத்தைஓரளவுக்கு நம்மால் அதிகரிக்க முடியும். இதில் இருக்கும் குறிப்புகள் பெரும்பாலும் புதிய நண்பர்களுக்கே உதவக்கூடும். சமீபத்தில் படித்த புத்தகத்தில் இருந்த விபரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பயாஸின் மூலம் வேகத்தை அதிகரிக்க வழிமுறைகள்:

1. சில கணினிகளில் பயாஸில் (BIOS) 'பூட் செக்டார்' வைரஸை கண்டுபிடிக்க "அட்வான்ஸ்ட் பயாஸ் ஃபியூச்சர்ஸ்" பகுதியில் ஒரு வழி இருக்கிறது. பூட் செக்டாரை குறி வைத்து இப்போது
யாரும் நச்சுநிரல்களை வடிவமைப்பதில்லை. எனவே இதை செயலிழக்க [disable] வைப்பதன் மூலம் கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்.

2. பொதுவாக விண்டோஸ் எக்ஸ்-பி குறுவட்டில் இருந்து நிறுவப்படுவதால், கணினி பூட் ஆகும் முறையில் முதலில் குறுவட்டும் [CD-ROM], அதை தொடர்ந்து வன் தகடும்[ Hard disk] இருக்கும். பெரும்பாலும் வன் தகடு-0 [Hard Disk 0] என்பது கணினியில் உள்ள இயங்குதளம் நிறுவப்பட்டதாக இருக்கும். வன் தகட்டை முதன்மையாக்குவதன் மூலம் கணினி பூட் ஆகும் நேரத்தில் சில விநாடிகள் குறையும்.

3. சில கணினிகளில் கணினி பூட் ஆகும் போது "ஸ்கேன் ஃபிளாப்பி டிரைவ்" என்ற முறையும் தேர்வு செய்யப்பட்டிருக்கும். மிகவும் அரிதாக சில நேரங்களில் மட்டுமே நமக்கு இந்த முறை தேவைப்படும். எனவே இதையும் நிறுத்தினால் சில விநாடிகளை சேமிக்க முடியும்.

4. மேலும் சில மதர்போர்டுகளில் உள்ளமைந்த வசதியாக ஈத்தர்நெட், ஃபயர்வயர், சீரியல் மற்றும் பேரலல் போர்ட்டுகள் ஆகியவையும் அமைந்திருக்கும். இவற்றை அடிக்கடிஉபயோகிக்கப்போவதில்லை என்றால் இந்த வசதிகளை நிறுத்துவதன் மூலம் மேலும் சில விநாடிகளை நாம் சேமிக்க முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளை தேவைகேற்றாற் போல உங்களால் எப்போது வேண்டுமானாலும் பயாஸுக்கு சென்று மாற்றிக்கொள்ள முடியும்.

aren
02-03-2006, 11:38 PM
ஆனால் இப்படி எப்போதாவதை தேவைப்படுவதை நிறுத்திவிட்டால் அவை தேவைப் படும்பொழுது மறுபடியும் செட்டப் சென்று மாற்றங்கள் செய்யவேண்டுமே? இது கொஞ்சம் பேஜாரான வேலை இல்லையா?

தேவையில்லாததை நிறுத்திய ஐந்து நிமிடத்தில் ஏதாவது ஒரு விஷயத்தை அலசப்போய் அந்த நிறுத்தியதை மறுபடியும் இயங்க வைக்க வேண்டிய அவசியம் வந்துவிடும். இதுதான் மர்ஃபிஸ் லா என்பதா?

நீங்கள் மேலே குறிப்பிட்டது கணிணியை ஸ்டார்ட் செய்யும்பொழுது மிச்சப்படுத்தும் நேரம்.

எனக்குத் தெரிந்து சில குக்கீஸை வெளியே எடுத்துவிட்டால் வேகம் அதிகரிக்கும் என்பது என்னுடைய் கருத்து.

நிறைய கணிணியில் ஸ்கிரீன் சேவரில் விதவிதமான மீன்கள் ஓடுவதுபோல் வைத்திருப்பார்கள். இதை இலவசமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஆனால் இது முழுவதும் குக்கீஸ் மட்டுமே. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உளவு பார்க்கும். அதனால் இது வேகத்தை கட்டுப்படுத்தும். ஆகையால் இந்த மாதிரி குக்கீஸை வெளியே எடுத்துவிடுவது நல்லது.

ராசராசன்
08-03-2006, 03:43 AM
உங்கள் கணனியின் இயக்க மென்பொருள் விண்டோஸ் XP அல்லது 2000 ஆக இருந்தால், கன்ட்ரோல் பேனலில் உள்ள மேலாண்மை கருவியின் ஒரு பகுதியான 'சேவைகள்' என்பதில் தேவை இல்லாத சேவைகளை நிறுத்துவதன் மூலம் கணனியின் வேகத்தை அதிகரிக்கலாம்.

கணனி இயக்கப்பெற்று நிதானத்திற்கு வந்தவுடன், ஸ்டார்ட்>ரன்>msconfig என்ற கட்டளையை கொடுப்பதன் மூலம் வரும் பல்வேறு இயக்க சூழல்களை ஆராய்ந்து, தேவையில்லாத சேவை அறிவுறுத்தல்களை மாற்றி / நீக்குவதன் மூலமும் கணனியின் வேகத்தினை செம்மை படுத்த இயலும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

இளந்தமிழ்ச்செல்வன்
08-03-2006, 03:53 AM
அன்பு நண்பர்களே,

1. வன்தகட்டை பிரிக்கும் போது "C" தகட்டிற்கு குறுகியை அளவே இடம் ஒதுக்கி பிரித்தால் (உதாரணம் 40 GB தகட்டில் 5-லிருந்து 8 GB மட்டும் வைத்டுக்கொண்டு மற்றவற்றை உங்கள் செளகர்யத்திற்கு ஏற்றார்போல் பிரித்துக்கொள்ளலாம்) புராசசர் தேடும் நேரம் குறைந்து வேகம் அதிகமாகும்.


2. D- தகட்டில் Program Files என்று ஒரு போல்டரை உருவாக்கி ஆப்பரேட்டிங் சிஸ்டம் தவிர மற்ற அனைத்து மென்பொருளையும் இந்த போல்டரில் நிறுவினால் C-யிற்கு குறைந்த இடமும் போதும். அதே போல் வேகமும் அதிகப்படும்.

3. அவ்வப்போது அல்லது எப்போதும் ஆரென் அவர்கள் கூறியபடி பிரவுசரிலிருந்து வெளியேறும்போது குக்கீஸை தானே (மொசில்லா, ஒபேரா ஆகியவற்றில் இந்த வசதி உண்டு) சுத்தம் செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொண்டால் வேகம் கிட்டும். மேலும் டிராக்கிம் பிரச்சினையும் இருக்காது.

4. ரன் கமாண்டில் %tmp% தட்டச்சு செய்தால் அனைத்து தற்காலிக பைல்களும் உள்ள போல்டர் தோன்றும் அவற்றை சுத்தம் செய்தலும் சற்றே வேகம் கிட்டும்.

5. வாரம் ஒரு முறை கணணியை ஆரம்பிக்கும் போது F8 அழுத்தி சேப்ஃ மோடில் சென்று டிபிராங்மென்ட் செய்துவந்தாலும் வேகம் கிட்டும்.

6. ரன் கமாண்டில் "msconfig" டைப் செய்து starup-ல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தவிர மற்றவற்றை எடுத்துவிட்டால் விண்டோஸ் ஆரம்பிக்கும் நேரம் குறையும்.

பாரதி
09-03-2006, 05:47 PM
நண்பர்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தேவையான கருத்துக்களை ஏற்றுக்கொண்டு கணினியை சீர் செய்ய முயல்வோம். மீண்டும் சில குறிப்புகளை தர முயற்சிக்கிறேன்.

arul5318
17-06-2006, 08:28 AM
நண்பர்களின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது இருந்தாலும் நாம் கொம்பியூட்டரில் செய்கின்ற மாற்றங்களை எப்படி திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டு வருவது பற்றிய குறிப்புக்களையும் கொடுத்திருந்தால் மிகவும் உதவியாக இருந்திருக்கும்.

rajasi13
05-07-2006, 05:05 AM
மிகவும் பயனுள்ள கருத்துக்கள். நன்றி நண்பர்களே.