PDA

View Full Version : யாரும் கேட்காத பாட்டுப்ரியன்
28-02-2006, 10:38 AM
அடுத்தப் பெட்டியில் இருக்கும் போதே
காட்டிக் கொடுத்துவிட்டது
அவனை
கட்டைக்குரலில் அந்த சோகப்பாட்டு!

முந்தைய நிமிடம் வரை சும்மா இருந்தவர்கள்
அவசர அவசரமாய் செய்திதாளில்
மூழ்கிப் போனார்கள்!

கண் தெரியாதவனுக்கு
சில்லறை இல்லேப்பா
சைகை மொழி சொன்னார்கள் சிலர்!

ஒரு சிலர்,
முன்னங்காலில் முகம் புதைத்து
தற்காலிகமாய்
செத்தும் போனார்கள்!

இவன் நகர்ந்தால் போதுமென
அவசரமாய் அம்பது நூறு காசுகள்
இட்டனர் இன்னும் சிலர்!

தகரத்தில் காசு விழுந்த ஒலியில்
மனம் நிறுத்தி
கொஞ்சம் சந்தோசமாகவே
அடுத்தப் பெட்டிக்கு நகர்ந்தான் அவன்!

யாரும் கண்டுக் கொள்ளாத கவலையில்
அந்தப் பாட்டு
அழுதபடியே போனது
அது பாட்டிற்கு!

- ப்ரியன்.

sarcharan
28-02-2006, 10:49 AM
நல்ல கவிதை

ப்ரியன்
28-02-2006, 11:10 AM
நன்றி சரவணன்...

pradeepkt
28-02-2006, 05:29 PM
ஹூம்.
பாட்டு படும் பாட்டைச் சொன்ன விதத்தில் ஒரு சோகம் இழையோடுகிறது. பிச்சை எடுப்பவர்கள் எவ்வளவுதான் இனிமையாகப் பாடினாலும் அவருக்கும் முதல் குறிக்கோள் பணம்தான். கேட்பவருக்கும் உதவி செய்ய முதல் உந்துதல் பாடகரின் ஏழ்மைதான். இங்கே செவிக்குணவிருந்தாலும் வயிற்றுக்கே முதலிடம்.

நான் எத்தனையோ ரயில்களில் பஸ்களில் கேட்டிருந்தாலும் இப்படி எல்லாம் நினைத்ததில்லையே என்று யோசிக்க வைத்த கவிதை!

ப்ரியன், தாக்கம் இது! வாழ்த்துகள்.

பென்ஸ்
01-03-2006, 07:36 AM
நன்றி... ப்ரியன் :D :D :D

நம்மூரில் பாக்கமுடியுமோ இல்லையோ என்று தெரியவில்லை, ஆனால் வடநாட்டில் அதிகமாக பார்த்திருக்கிறேன்...

கண்னிலாதவர்கள் வயதானவர்கள் பாடி கொண்டு பிச்சை எடுக்கவரும் போது பல நேரங்களில் உணர்ச்சிகளின் தாக்கங்களால் உறைந்து போவேன்... அப்படி இருக்கையில் சிலர் இவர்களை தீண்டதகாதவர்களாக விரட்டுவதை பார்க்கையில் மனம் ரத்தம் வடிக்கும்...


கண் தெரியாதவனுக்கு
சில்லறை இல்லேப்பா
சைகை மொழி சொன்னார்கள் சிலர்
.......
........
தகரத்தில் காசு விழுந்த ஒலியில்
மனம் நிறுத்தி
கொஞ்சம் சந்தோசமாகவே
அடுத்தப் பெட்டிக்கு நகர்ந்தான் அவன்

அழகாக தேவைக்கு மட்டும் வார்த்தைகளை இட்டு எழுதி இருக்கிறீர்கள்...

நானும் ஒரு முறை இதை போல எழுத நினைத்து கிறுக்கியதில் வந்த ஒரு கவிதை "பிச்சைகாரியாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5908)"
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5908


எல்லாம் சரி.. பல நேரங்களில் நமதி நிலமை இவர்களை விட கேவலமாக போகும்... இவர்கள் நமக்கு தொந்தரவு வேறு கொடுப்பார்கள்... அந்த உணர்வை நம்ம பூ அழகான கவிதையாக கொடுத்தாற்... "ஒன்றுமில்லை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5951)" என்று..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5951

sarcharan
01-03-2006, 08:01 AM
தென்னிந்தியர்களை விட வட இந்தியர்கள் தான் பெரும்பாலும் இப்படி நடந்துகொள்கிறார்கள்.
அவர்களை தீண்டதகாதவர்களாக எண்ணி இவர்கள் விரட்டுவதை பார்க்கையில் நம் உள்மனம் ரத்தம் சிந்தும்...


நன்றி... ப்ரியன் :D :D :D

நம்மூரில் பாக்கமுடியுமோ இல்லையோ என்று தெரியவில்லை, ஆனால் வடநாட்டில் அதிகமாக பார்த்திருக்கிறேன்...

கண்னிலாதவர்கள் வயதானவர்கள் பாடி கொண்டு பிச்சை எடுக்கவரும் போது பல நேரங்களில் உணர்ச்சிகளின் தாக்கங்களால் உறைந்து போவேன்... அப்படி இருக்கையில் சிலர் இவர்களை தீண்டதகாதவர்களாக விரட்டுவதை பார்க்கையில் மனம் ரத்தம் வடிக்கும்...

gragavan
02-03-2006, 04:07 AM
தெற்கில் மட்டும் என்ன வாழுகிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி....பிச்சை எடுக்கிறவர்களில் யாருக்குக் கொடுப்பது? யாருக்குக் கொடுக்கக் கூடாது? அதுவும் கடினமான முடிவே. இன்னாருக்குப் பிச்சை போடலாம் என்று தெளிவான வரைமுறை இருந்தால் தெளிவாக இருக்கும். இப்படிச் சொல்வதே கொடூரம்தான். ஆனால் யாராவது பிச்சை கேட்கையில் கொடுக்காமல் போகும் பொழுது உண்டாகும் குற்ற உணர்ச்சிக்கும்...கொடுத்தால்...ஏமாந்து விட்டோமா என்ற நினைப்பிற்கும் என்ன செய்வது? உடல் ஊனமுற்றவர்களுக்கும் முதியவர்களுக்கு மட்டும் என்று வைத்துக் கொள்ளலாமா?....சரி...அரவாணிகளுக்கு?

பென்ஸ்
02-03-2006, 06:25 AM
நல்ல கேள்வி ராகவ்ன்....

அரவாணிகள்... நமது சமுதாயத்தில் ஒதுக்கபட்டவர்கள்.... நான் திருச்சியில் யூத் ரேட் கிராஸின் ஒரு சந்திப்புகாக சென்ற போது ஒருவர், அரவானிகளின் வாழ்க்கையை ஒரு குறும் படமாக காட்டினார்...

இவர்களுக்கு எவரும் வேலை தருவது இல்லை
இவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைத்திருக்கிறொம்

ஒரு விதத்தில் இவர்கள் இயர்க்கை மீறிய பாலியல் மற்றும், பிச்சை எடுப்பதாலும் அனைவராலும் வெறுக்க படுகிறார்கள்...

மேலும் நமது சினிமா உலகம் இவர்களை இன்னும் கேவல படுத்துகிறது...

இவர்களுக்கு நான் பிச்சை இட நான் மறுப்பது கிடையாது... ஆனால், நாம் இவர்களுக்கு பிச்சை இடுவதை விட சமுதாயத்தில் அங்கிகரித்தால் மட்டும் போதும்... இவர்கள் இவர்களது காரியத்தை பார்த்து கொண்டு போவார்கள்....

இதே போல சமுதாயத்தில் இருந்து ஒதுக்கபடுபவர்கள், குஷ்டரோகிகள்... இவர்களும் பாதுகாக்கபடவேண்டியவர்கள்... அரசாங்கம் இவர்களை வேளியே பிச்சை எடுக்க வைக்ககூடாது...

மேலும்.. மற்ற எல்லோரும்,, கைவிடபட்ட வயதானோர், முதை பிச்சைக்காக பழக்க பட்ட குழந்தை வரை, இவர்களுக்காக மறு வாழ்வு மையங்கள் நிறுவபடவேண்டும்... பிச்சை குழந்தைகள் திருத்தபட வேண்டும்... வயதானோர் காப்பாற்றபட வேண்டும்... சீர்திருத்த சட்டங்கள் இயற்றபடவேண்டும்...

இந்த மாற்றங்களை தரவேண்டியது, தனிமனிதன் அல்ல, அரசாங்கம்...


ப்ரியன்... தங்கள் திரியில் இவற்றை பேசுவதற்க்கு மன்னிக்க,
பேச துண்டியமைக்கு நன்றி...

ப்ரியன்
03-03-2006, 05:26 AM
நான் கண்ணால் கண்ட பாதிப்பின் வரிவடிவங்கள் அவை..

என்னதான் காதல் கவிதை எழுதினாலும் இப்படி சில கவிதைகள் எழுதும் போது மனம் அடையும் திருப்தி அதிகம், அதிலும் நல்ல விமர்சனம் கிடைக்கும் போது சொல்லவா வேண்டும் நன்றி பிரதீப்,பெஞ்சமின்,சரவணன் & ராகவன்

ப்ரியன்
03-03-2006, 05:48 AM
/* ப்ரியன்... தங்கள் திரியில் இவற்றை பேசுவதற்க்கு மன்னிக்க,
பேச துண்டியமைக்கு நன்றி...*/

இது என் திரியில் இவற்றை அலசுவதால் எனக்கு சந்தோசமே பெஞ்சமின்

ப்ரியன்
03-03-2006, 05:51 AM
*/ செவிக்குணவிருந்தாலும் வயிற்றுக்கே முதலிடம் */

மேலே நீங்கள் சொன்ன இவ்வரிகளில் அருமையான கவிதை ஒன்று ஒளிந்திருக்கிறது பிரதீப்...இதை கருவாக வைத்து முயன்று பாருங்கள்

sarcharan
03-03-2006, 06:45 AM
மாதவி மணிமேகலை மாதிரி கவிதையோ...


*/ செவிக்குணவிருந்தாலும் வயிற்றுக்கே முதலிடம் */

மேலே நீங்கள் சொன்ன இவ்வரிகளில் அருமையான கவிதை ஒன்று ஒளிந்திருக்கிறது பிரதீப்...இதை கருவாக வைத்து முயன்று பாருங்கள்

RRaja
04-03-2006, 10:00 AM
ஊனமுற்றவர்களுக்கென்று அரசாங்கம் நிதியுதவி, கடனுதவி அளிக்கும்போது ஏன் இவர்கள் கையேந்த வேண்டும்?

மயூ
05-03-2006, 06:07 AM
கொழும்பில் பிச்சைக்காரர்கள் சரியான அட்டகாசம் செய்வர். இவர்கள் பரிதாபமாக பிச்சைஎடுப்பர் பின்பு கசிப்பு சாராயம் போன்றவையைதான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வேண்டுவர். எப்பயாவது கொழும்பு வந்தால் கவனமாக இருக்கவும். முக்கியமாக தேவையில்லாமல் யாருடனும் கதை கொடுக்காதீர்கள். தமிழ் என்று தெரிந்தால் சிலர் மண்டையில் நல்லாக அரைத்துவிடுவார்கள்.

pradeepkt
05-03-2006, 04:24 PM
மயூரேசன், இது இலங்கையில் மட்டுமல்ல, இங்கும்தான்.
ஹைதராபாத் எஸ் ஆர் நகர் சிக்னலில் அவ்வளவு நேரம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு நொண்டி (வழக்கமாக நான் இப்படிச் சொல்வதில்லை, ஆனால் கோபத்தை மறைக்க இயலவில்லை) தனது கைத்தடியைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு இரண்டு கால்களாலும் ஓடிப் போய்ச் சாலையைக் கடந்து வெண்குழல் வத்தி புகைத்தார். அன்றிலிருந்து எந்தப் பிச்சைக்காரருக்கும் என் கை நீள்வதில்லை.