PDA

View Full Version : ராகிங் அனுபவம் உண்டா?

ராசராசன்
27-02-2006, 08:51 PM
'ராகிங்' என்ற பெயரைக் கேட்டாலே பொது மக்கள் முகம் சுளித்து வெறுப்புடன் பார்ப்பது உண்டு. ஆனால் அதில் அடிபட்டு தெளிந்து(?) வந்த இளஞ்சிங்கங்கள் தங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டால் வளரும் சிறுசுகளுக்கு வழி காட்டியாக இருக்குமென நினைக்கிறேன்.

எனது பொறியியல் கல்லூரியில் நான் அனுபவித்த சில நிகழ்வுகளை அசைபோட்டு கூறலாமென உள்ளேன்.

கள உறவுகளின் அபிப்பிராயம் என்ன? :confused:

gragavan
28-02-2006, 03:35 AM
ராகிங் அனுபவங்களைப் பொறுத்த வரையில் எனக்குக் கேள்வி ஞானம் மட்டுமே. ராகிங்கில் சிக்கிக் கொண்டதும் இல்லை. ராகிங் செய்ததும் இல்லை. ஆனாலும் மற்றவர்களின் அனுபவங்களை அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

pradeepkt
28-02-2006, 04:09 AM
எங்கள் கல்லூரியில் நடந்த ராகிங் எல்லாம் சொன்னால் இந்தப் பகுதியைப் பண்பட்டவர் பகுதிக்குக் கூட அனுப்பாமல் நேரடியாகத் தூக்கி விடுவார்கள்.

mukilan
28-02-2006, 04:36 AM
ராகிங் என்றதும் சில நினைவுகள் வந்து போகின்றன. தீஸிசைக் கொஞ்சம் ஓரம் வைத்து விட்டு ஜோதியிலே கலந்து கொள்ள வந்து விட்டேன்.

நான் கல்லூரியில் சேர்ந்த வருடத்திற்கு முந்தைய வருடம்தான் நாவரசு ராகிங் கொடுமையால் கொலை செய்யப்பட்டார்.அப்பொழுதே முடிவு செய்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேரக் கூடாதென. ஆனால் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்களே அது போல அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தான் சேர்ந்தேன். ஏதோ விட்ட குறை தொட்ட குறை என நினைக்கிறேன். மிகுந்த பயத்துடன் தான் சென்றேன். ஆனால் அவ்வருடம் வேறு எந்தக் கல்லூரியில் வேண்டுமானாலும் ராகிங் இருந்திருக்கலாம். ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலோ சீனியர் மாணவர்கள் எங்களைக் கண்டால் ஓடி ஒழிந்து கொள்ள வேண்டிய நிலைமை.விசாரணையின்றி வெளியேற்றக் கூடிய கடுமையான சட்ட திட்டங்கள். எனவே யாரும் எங்களை ஏறெடுத்தும் பார்க்காத நிலை.சேர்ந்த முதல் வார இறுதி நாட்களில் அனைவரும் சொந்த ஊருக்குச் சென்று விட வெகு தொலைவில் இருந்து படித்த என் போன்ற 4 நண்பர்கள் மட்டும் தங்கி இருந்தோம். என்னடா இது யாருமே நம்மிடம் பழக வில்லை என நான் ஏங்கிப் போனேன். பின்னர் அடுத்தடுத்த நாட்களில் சில தைரியமுள்ள மாணவர்கள் என்னை ராகிங் செய்ய அவர்கள் அறக்கு அழைத்துச் சென்றனர். எனக்கு சிறு தைரியம் மனதில். (எப்படியும் கடுமையாக இருக்காது. ஏனெனில் கல்லூரி சட்டங்கள் மிகக் கடுமையானவை. ஏற்கனவே ஒரு சீனியர் என் வகுப்பு மாணவனிடம் பேசியதற்குத் தண்டனையாக ஒரு வாரம் இடை நீக்கம் செய்யப் பட்டிருந்தார்.) சென்றால்.. முதலில் அவர்களின் செய்முறைப் பயிற்சி ஏட்டில் படங்கள் வரைய விட்டனர்.நான் சுமாராக வரைவேன். அதனால் அதிக வேலை கொடுக்கப் பட்டது.இப்படியே அவர்கள் எனக்கு நெருங்கியவர்கள் ஆனார்கள். என்னை எங்கு வேண்டுமானாலும் வண்டியில் அழைத்துச் செல்வது,திரைப்படங்கள் அழைத்துச் செல்வது என எனக்கு ராஜ உபசாரம் வேறு. அத்தோடு என்னை வேறு சீனியர்கள் அழைத்தால் இவர்கள் வந்து அழைத்துச் சென்று விடுவார்கள்.
ச்ச்சே! இவ்வளவுதானா ராகிங் என வெறுப்பாக இருந்த்தது. இச்சமயத்தில்தான் ஒரு சீனியர் என்னிடம் வந்து ஒரு காதல் கடிதம் எழுத சொன்னார். நானும் எழுதினேன்.உன் வகுப்பிலுள்ள பெண்கள் பேரெல்லாம் சொல் என்றார். நானும் சொன்னேன்.உனக்குப் பிடித்த பெண் யாரென்றார். அப்பொழுது தேர்ந்தெடுத்த சில பெண்களின் பெயர்களாய்ச் சொன்னேன். பின்னர் அதிலே மிகவும் பிடித்த பெண் என்றதும் எனக்கு நிலைமையின் விபரீதம் புரிந்த்து. அடுத்த நாள் காலையில் வகுப்பில் அவரும் அமர்ந்திருந்தார். எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. நான் சொன்ன அந்தப் பெண் வந்ததும் அவளிடம் போய் எனது கடிதத்தை (ஏற்கன்வே எழுதிய காதல் கடிதம்) கொடுத்தே விட்டார். தொடை நடுங்கும் அளவிற்கு பயம் என்றால் எனக்கு அப்பொழுதுதான் புரிந்த்து. உண்மையிலேயே தொடை நடுங்க ஆரம்பித்தது. பின்னே ஆண்கள் பள்ளியிலேயே பயின்ற எனக்கு பெண்களிடம் பேசவே கூச்சமாய் இருக்கும். அப்படி இருக்கையில் ஒரு பெண்ணிற்கு நான் எழுதியதாய் காதல் கடிதம்...அவளோ அதே பல்கலைக் கழகத்தில் வேறொரு துறையின் தலைவராக இருக்கும் ஒரு பேராசிரியரின் மகள். நல்ல வேளையாக அப் பெண் என் நிலையை உணர்ந்து என்னைக் கோபிக்க வில்லை.ஆனால் அதற்குப் பின் நாங்களிருவரும் மிக நெருங்கிய நண்பர்களானோம். இன்று அவள் மணம் முடித்து சென்னையில் இருக்கிறாள் அவள் கணவரோடு. ஆனால் இப்பொழுதும் அவள் கணவரிடம் இவன் தான் எனக்கு முதலும் கடைசியுமாக காதல் கடிதம் கொடுத்தவன் என்று கிண்டலடித்து சிரிப்பது நினைத்து நெகிழக் கூடிய இனிய தருணம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் எனக்கு அறிவியலை விட வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தது. மன்றத்தில் அண்ணாமலையின் மாணவர்களிருந்தால் அவர்கட்குப் புரியும். இன்னமும் என் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் அவர்களின்(சீனியர்கள்) பங்கு இருந்து கொண்டேதான் இருக்கின்றது. சென்னையில் வேலை தேடிய காலங்கள் என்க்கு மற்றுமொரு தாய் வீடாகிப் போன அவர்களின் வீடுகள், பண முடைக் காலங்களில் (வீட்டில் பெற்றோரிடம் கேட்க கூடாது என வம்பான எண்ணங் கொண்டிருந்த காலங்களில்) சொந்த சகோதரனைப் போல பார்த்துக் கொண்ட அவர்களின் அன்பை எக்காலத்திலும் மறக்க முடியாது.

ராசராசன்
28-02-2006, 04:37 AM
அய்யோ முகிலன் ஜூனியரே! நீங்க நம்ம பேட்டை ஆளா? சிதம்பரம் ரயில் நிலையமே எம் பொழுது போக்கு பூங்கா! சரியா?

சில விஷயங்களை நாசூக்காக சொல்லலாம் தானே? முதல் மூன்று மாதங்கள் முதல் வருட படிப்பில் அவஸ்தை பட்டுள்ளேன்.

என் கிராமத்திலிருந்து கல்லூரிக்குச் செல்ல, மதுரை இரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது சீனியரிடம் மாட்டிக்கொண்டேன். அதன்பிறகு கேட்கவா வேண்டும்?

mukilan
28-02-2006, 04:42 AM
பிரதீப்பு, நான் மட்டும் எனக்கும் இன்னும் சிலருக்கும் நடந்த வேறு பல ராகிங் நிகழ்வுகளை (கவனிக்க: கொடுமையில்லை) இங்கெ பதிந்தால் வயது வந்தோருக்கான தளத்தில் மட்டுமே பதிக்க முடியும்.

பென்ஸ்
28-02-2006, 04:43 AM
முகில்ஸ்... ம்ம்ம்.. நல்ல நினைவுகள்.... ரிக்காட் புத்தகம்... தமாசுக்கு காதல் கடிதம், நட்பு சகோதரி... மீண்டும் வருடும் நினைவுகள்... சுகமானவை...

ஆனால், வேற எதுவுமெ சொல்லவேயில்லை... சத்தியமா இவ்வளவுதானா???

mukilan
28-02-2006, 04:49 AM
பென்ஸீ ! உங்களுக்கு வேணுமானா தனி மடல் அனுப்பறேன். ஏன்யா மன்றத்திலே மானத்தை வாங்கிடுவீங்க போல இருக்கே!

mukilan
28-02-2006, 04:52 AM
அய்யோ முகிலன் ஜூனியரே! நீங்க நம்ம பேட்டை ஆளா? சிதம்பரம் ரயில் நிலையமே எம் பொழுது போக்கு பூங்கா! சரியா?

சில விஷயங்களை நாசூக்காக சொல்லலாம் தானே? முதல் மூன்று மாதங்கள் முதல் வருட படிப்பில் அவஸ்தை பட்டுள்ளேன்.

என் கிராமத்திலிருந்து கல்லூரிக்குச் செல்ல, மதுரை இரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது சீனியரிடம் மாட்டிக்கொண்டேன். அதன்பிறகு கேட்கவா வேண்டும்?

நீங்கள் அண்ணாமலையின் தயாரிப்பா!(அதாங்க அண்ணாமலை புராடக்ட்) மிக்க மகிழ்ச்சி. நீங்கள் எந்த வருடம் பயின்றீர்கள். நான் 1997-2001. அத்தோடு நான் வேளாண்புல மாணவன்.

ராசராசன்
28-02-2006, 04:58 AM
நான் ஒரு கெழடு முகிலன். பொறியியல் கல்லூரியின் மேற்கத்திய விடுதியில் என் வாசம். 1977-82 என் வசந்த காலம்.

gragavan
28-02-2006, 05:03 AM
சரி, சரி, வயது வந்தவர்கள் விஷயமுன்னா நேரடியா மெயில்ல எனக்கு அனுப்புங்க...

முகிலன்....நல்லாத்தான் ராகிங்கீருக்காங்க ஒங்கள.....அந்தப் பொண்ணு கம்பெளியின் பண்ணீருந்தாலும் நீங்க அந்த சீனியரு மேல பழிய (உண்மையப்) போட்டிருக்கலாமுல்ல.

mukilan
28-02-2006, 05:04 AM
ஓ! Western Hostel (காவேரி இல்லம்) எப்படி மறக்க முடியும்.ரயில் நிலையத்தின் சுகந்த அனுபவங்களை. அதுவும் கல்லூரியை ஒட்டியே செல்லும் மாயவரம், கும்பகோணம் புகைவண்டிகள்...

mukilan
28-02-2006, 05:06 AM
சரி, சரி, வயது வந்தவர்கள் விஷயமுன்னா நேரடியா மெயில்ல எனக்கு அனுப்புங்க...

முகிலன்....நல்லாத்தான் ராகிங்கீருக்காங்க ஒங்கள.....அந்தப் பொண்ணு கம்பெளியின் பண்ணீருந்தாலும் நீங்க அந்த சீனியரு மேல பழிய (உண்மையப்) போட்டிருக்கலாமுல்ல.
இவ்வளவு வெவரமெல்லாம் அப்போ இல்லையே! :D :D

mkmaran
28-02-2006, 05:21 AM
நமக்கு ராகிங் செய்த அனுபவம் கிடையாது. ஆனால் ராகிங்கில் சிக்கிய அனுபவம் உண்டு. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இளநிலை சேர்ந்த ஆரம்பத்தில் கிடைத்தது.

மென்மையான அனுபவமே.

கல்லூரி விடுதியில் சேர்ந்து முதல் நாள் எப்படியோ தப்பித்துவிட்டேன். ஆனால் இரண்டாம் நாள் மாட்டிக்கொண்டேன்.

முதல் நாள் செய்தது போல... எனக்கென்று ஒதுக்கப்பட்ட கட்டிலில் படுக்காமல்... கட்டிலுக்கு கீழே சென்று படுத்துகொண்டேன்.

('நாங்க சிங்கம்ல' என்று வீரவசனமெல்லாம் சில நேரங்களில் பொருந்தாது)

இரவு 10 மணி இருக்கும், முதல் நாள் வந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அன்றும் என் அறைக்கு வந்து பார்த்தார்கள்.

கட்டிலில் யாரும் இல்லை என்று தெரிந்ததும்,

'இந்த ரூம்ல ஒரு ஃப்ர்ஸ்ட் இயர் இருக்குறான், ஆனால் ஆளு மாட்டாமல் தப்பிச்சிகிட்டே இருக்கான்'னு சொல்லிக்கொண்டே அறையை விட்டு வெளியேற... அந்த சமயத்தில்தானா தும்மல் வரவேண்டும், எவ்வளவோ கட்டு படுத்தியும் முடியாமல் தும்மி வைத்தேன். ஒன்றுக்கு இரண்டாக...! அப்பன் குதிருக்குள் இல்லை!

வெளியேறிக்கொண்டிருந்தவர்கள்... திரும்பி வந்து கட்டிலுக்கு கிழே பார்த்துவிட்டு...
'டேய் இங்க பாருங்கடா... இவன் எவ்வளவு விவரம்னு..." என்றபடி கண்டுபிடித்து விட்டார்கள்.

வழக்கம்போல்.. ஏதாவது ஒரு முதலாம் ஆண்டு மாணவனின் அறைக்கு
(மாட்டிய) மற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் கூடவேண்டும். அங்கு
மூத்தமாணவர்கள் சொல்வதை செய்து காட்டி தப்பித்து கொள்ளலாம்.

அன்று அவர்கள் தேர்ந்து எடுத்தது, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சினிமா பாடலை ஆடிக்கொண்டே பாடவேண்டும்.

ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தோன்றிய பாடலை பாட...

என் முறை வந்தது....

புதியபறவை படத்தில் சிவாஜி அவர்கள் பாடும்,
'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்'
பாடினேன், இதுக்கு ஆடவேண்டியது இல்லை பாருங்க!

அப்போது ஒரு மூத்த மாணவர்..
'இவனை ரொம்ப ராகிங் பண்ணிட்டானுங்க போல.. அதான் வாழ்க்கையின்
விளிப்புக்கே போய்ட்டான்... இனிமேல் இவனை ராகிங் பண்ணவேண்டாம் விட்டுடலாம்டா..' என்று சொல்ல... இன்னொரு மாணவர் என்னருகே வந்து...
'ப்ரதர் இதெல்லாம்.. சும்மா ஒரு ஜாலிக்குதான்... அப்போதுதான் உன்னைப்பற்றி நாங்களும், எங்களைப்பற்றி நீயும் அறிமுகபடுத்திக்க செய்துக்க முடியும், யாரையும் கஷ்டப்படுத்த மாட்டோம். எங்களுக்கு
நம்ம ப்ரின்ஸிபல் ஸ்வாமிராஜ் சார் பற்றி ரொம்ப நல்லா தெரியும்.' என்றார்.

நானும் 'சரி அண்ணா' என்றேன்.

எங்களின் ப்ரின்ஸிபல் ராகிங்கை ஒழிப்பதற்கு எத்தனை கடுமையான கட்டுபாடுகள் கொண்டு வந்திருக்கிறார் என்பதை எண்ணி பின் வந்த நாட்களில் அதிசயித்து போனேன்.

பின்னாளில் அவர்களில் பலர் எனக்கு நல்ல நண்பர்கள் ஆனார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

அவைகளை நினைவுகூற உதவிய தேனிசை அவர்களுக்கும் உங்களின் திரி பகுதிக்கும் நன்றி!

தாமரை
28-02-2006, 05:28 AM
அய்யா சிங்கம்.. என்னை ராக்கிங் செய்ய யாருக்குத் தைரியம் வரும்..
டாய் யார்ரா அவன் சீனியர்..என்னது யாரையும் காணோம்..

(ஹி ஹி நாங்க ஃபர்ஸ்ட் பேட்ஜ்.. )

mukilan
28-02-2006, 05:30 AM
அய்யா சிங்கம்.. என்னை ராக்கிங் செய்ய யாருக்குத் தைரியம் வரும்..
டாய் யார்ரா அவன் சீனியர்..என்னது யாரையும் காணோம்..

(ஹி ஹி நாங்க ஃபர்ஸ்ட் பேட்ஜ்.. )

உங்களூக்கு ராகிங் இல்லையா?.அடடா! இப்போதான் புரியுது.

மதி
28-02-2006, 05:33 AM
நல்ல சுவையான பகுதி..
இந்த திரியை ஆரம்பித்த தேனிசைக்கு வந்தனங்கள்..
ஒவ்வொருவர் வாழ்விலும் கல்லூரி நினைவுகள்..என்றும் பசுமையாய் இருக்கும்...பார்த்த..சிரித்த..பேசிய..விஷயங்கள் எண்ணற்றவை..
ஆனா..பாருங்க..
இந்த ராகிங்-ல மட்டும் நான் மாட்டவே இல்ல..
நம்ம ஏரியால.(வல்லம் சண்முகா..).அதிகமா ராகிங் பண்ணமாட்டாங்கன்னு நம்பி அங்க போய் சேர்ந்துட்டேன்..
அப்புறம் பாத்தா தான் தெரியும்..கல்லூரிக்குள்ள பண்ணமாட்டாய்ங்க..
ஆனா கல்லூரிக்கு வெளியே..டீக்கடைல ராகிங் ஜெகஜோதியா..நடக்கும்..

நான் கொஞ்சம் வளர்ந்து கெட்டவன் -கறதுனால..யாருக்கும் என்ன பாத்தா first year ஸ்ட்டுடண்டாவே தெரியாது..அப்படியே ஒரு வருசம் தப்பிச்சுட்டேன்...

மதி
28-02-2006, 05:35 AM
உங்களூக்கு ராகிங் இல்லையா?.அடடா! இப்போதான் புரியுது.
எத்தன பேர் இவர்கிட்ட மாட்டி இருப்பாங்கன்னா..?:D :D :D
முகிலன்..
அப்படியே உங்க கல்லூரி கால அனுபவங்கள..நம்மளுக்கும் அனுப்பி வைய்யுங்க..

mukilan
28-02-2006, 05:38 AM
எத்தன பேர் இவர்கிட்ட மாட்டி இருப்பாங்கன்னா..?:D :D :D
முகிலன்..
அப்படியே உங்க கல்லூரி கால அனுபவங்கள..நம்மளுக்கும் அனுப்பி வைய்யுங்க..

அதே! அதே! சபாபதே! இவர் யார்கிட்டையாவது மாட்டியிருந்தா இப்படி நம்மள எல்லாம் ராகிங் செய்ய மாட்டாருல்ல!

gragavan
28-02-2006, 05:41 AM
எத்தன பேர் இவர்கிட்ட மாட்டி இருப்பாங்கன்னா..?:D :D :D
முகிலன்..
அப்படியே உங்க கல்லூரி கால அனுபவங்கள..நம்மளுக்கும் அனுப்பி வைய்யுங்க..அதான நீங்க செஞ்ச ராகிங் பத்திச் சொல்லுங்க தாமரை....உங்க திறமையையும் கற்பனை வளத்தையும் பாப்போம்.

பொதுவா ஹாஸ்டல்லதான் நெறைய இருக்குமுன்னு சொல்வாங்க...இதுல ஹாஸ்டல்ல இருந்தது யாரு?

mukilan
28-02-2006, 05:44 AM
அதான நீங்க செஞ்ச ராகிங் பத்திச் சொல்லுங்க தாமரை....உங்க திறமையையும் கற்பனை வளத்தையும் பாப்போம்.

பொதுவா ஹாஸ்டல்லதான் நெறைய இருக்குமுன்னு சொல்வாங்க...இதுல ஹாஸ்டல்ல இருந்தது யாரு?

நானெல்லாம் 6ம் வகுப்பில் இருந்தே வீட்டை விட்டு வெளியில் தங்கித்தான் படிக்கிறேன். நான் ஹாஸ்டல்தானுங்கோ. ஆனா நீங்க கேட்கிற கேள்வியைப் பார்த்தா ஹாஸ்டலுக்குள்ளேயே போனது இல்லை போல.

மதி
28-02-2006, 05:46 AM
நானெல்லாம் 6ம் வகுப்பில் இருந்தே வீட்டை விட்டு வெளியில் தங்கித்தான் படிக்கிறேன். நான் ஹாஸ்டல்தானுங்கோ. ஆனா நீங்க கேட்கிற கேள்வியைப் பார்த்தா ஹாஸ்டலுக்குள்ளேயே போனது இல்லை போல.
அடியேனும் தான்...
கல்லூரி முடித்து..ஒரு இரண்டு மாசம்..IISc-ல் ஹாஸ்டல்ல இருந்தது தான் என் அனுபவம்..அங்கே கூட..யாரும் யாரையும் கண்டுக்க மாட்டாங்க..

ராசராசன்
28-02-2006, 06:56 AM
நான், மதுரை இரயில் நிலையத்தில் "ஜனதா" விரைவு வண்டிக்காக அட்டவணையை பார்த்துகொண்டிருந்தேன். பல்கலைக்கழகம் "ஸ்ட்ரைக்" முடிந்து மறு நாள் துவங்க இருந்ததால் ஏகப்பட்ட மாணவர் கூட்டம். நான் வேஷ்டியில் இருந்ததால் என்னை யாரும் மாணவனாக பார்க்கவில்லை.

என் அருகில் நின்ற ஒருவரிடம், "சார்! இந்த ஜனதா இரயில் எப்போது சிதம்பரம் போய்ச் சேரும்?" என வினவினேன்.

அவ்வளவு தான்...பிடித்தது சனி...!

அவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு, " நீங்க எங்கே போகனும்? அண்ணாமலை நகரா?" என சந்தேகத்துடன் வினவினார்.

நான் "ஆமாம், பொறியியல் கலூரியில் முதல் வருடம் சேர்ந்துள்ளேன், நான் ஊருக்கு புதிது..நீங்கள் உதவ முடியுமா?"..என அப்பாவியாகக் கேட்டு விட்டேன்.

உடனே அவர் "சரி, உங்கள் பெயர் என்ன?"

நான் பெயர் கூறினேன்.

அவர், உடனே அருகில் உள்ள சக சீனியர் மாணவர்களை அழைத்தார்.

அவர்கள் உடனே என்னிடம் "உன் தந்தை பெயர் என்ன?" என வினவினர்.

நான் மொட்டையாக என் தந்தை பெயரைக் கூறினேன். உடனே பிடித்துக்கொண்டனர். "உன்னை கஸ்டப்பட்டு வளர்த்து, படிக்கவைத்து, பொறியாளராக்கிய உன் தந்தைக்கு ஒரு "Mr" என்று மரியாதையில் சொல்ல இயலாத உனக்கு எங்களின் தண்டனை கும்பகோணம் வந்தவுடன் கிடைக்கும் என எச்சரித்து விட்டு, "பெர்த்" நம்பர் கேட்டு சென்றனர்.

கும்பகோணம் வந்தவுடன், "ரயில் ராகிங்" திருவிழா ஆரம்பித்து விட்டது.. அதே பெட்டியில் மாட்டிய இன்னும் சில முதலாண்டு மாணவர்களையும் சேர்த்து, எல்லோர் கையிலும் பக்கெட் கொடுத்து "தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா.." பாடலை பாடச் சொல்லி சக பயணிகளிடம் பிச்சையெடுக்க வைத்தனர்.

சிலரிடம், இரயில் விளக்கை பார்த்து "ஆயிரம் விளக்கே வா,,,தொள்ளாயிரத்து தொன்னூத்தொம்பொது விளக்கே வா.." என பின்னோக்கி பாடும் தண்டனையை கொடுத்து கெளரவித்தனர். இது நடுநிசியில் சிதம்பரம் சென்றடையும் வரை தொடர்ந்தது...:D :D

மீதி...கள உறவுகளின் பதிலை பார்த்தபின் தொடர்கிறேன்..

gragavan
28-02-2006, 07:00 AM
நானெல்லாம் 6ம் வகுப்பில் இருந்தே வீட்டை விட்டு வெளியில் தங்கித்தான் படிக்கிறேன். நான் ஹாஸ்டல்தானுங்கோ. ஆனா நீங்க கேட்கிற கேள்வியைப் பார்த்தா ஹாஸ்டலுக்குள்ளேயே போனது இல்லை போல.என்னங்க இப்பிடிச் சொல்லீட்டீங்க...ஒரு பத்துப் பதினைஞ்சு வாட்டி அங்க இருக்குற நண்பர்களப் பாக்கப் போயிருக்கேங்க....நானா ஹாஸ்டலுக்குப் போனதில்லை :D :D :D :D

மதி
28-02-2006, 07:02 AM
ஆஹா..
இவ்வளவு சம்பவங்கள் நடந்திருக்கா..?
ம்ம்ம்..மேலும் தொடருங்கள்..

பென்ஸ்
28-02-2006, 07:04 AM
நான் மூன்றாம் வருடம் படித்த போது நடந்த சம்பவம்....

வருடம் முடியும் தருனம்... எங்களது சீனியருக்கு பெர்வேல் கொடுக்கலாம் என்றபோது,

"மாப்பிள்ளை, நம்ம ஜூனியருக்கு கூட நாம, வெல்கம் டீரீட் கொடுக்கலைடா" என்றதும் வேப்பமூட்டில் அடுத்த மீட்டிங் போட்டு தீர்மானம் நிரைவேறியாச்சு...

இரன்டையும் ஒரே நாளீல் நடத்துவது என்று...
பிராஜக்ட் செய்து கொண்டிருந்த சீனியருக்கு செய்தி அனுப்பியாகிவிட்டது, ஜூனியரையும் சென்று அழைத்தாகிவிட்டது... விழாவில் பேச 4 சீனியரும் , 4 ஜூனியரையும் அழைத்திருந்தோம்.. அவர்கள் சம்மத்தோடு...

விழா தொடங்கியாச்சு... வழக்கமான ஆட்டம் பாட்டம் இல்லாமல் அமைதியாக நடப்பது குறித்து கல்லூரி முதல்வருக்கு சந்தோசம்....

கடைசியில் 4 சீனியரும் வந்து பேசினார்கள்... இன்ப துன்பங்கள் எல்லாம் பேசபட்டது..
அடுத்து ஜூனியரை என் நன்பன் அழைக்க...
ஆ****...
பி****...
இருவரும் ஒன்றும் த்ரியாத மாதிரி, முகத்தை வைத்து கொண்டு "வரலைப்பா" என்று ஸ்டைலாக... அடுத்தௌ

எமில்..வந்து ராக்கிங் இல்லாமல் நாங்கள் அவர்களுடன் ஒரு சகோதரனை போல் பழகியதாக கூரி சென்றான்....

இந்த பெண்கள் என்னிடம் வரலாம் என்று கூறி ஏமாற்றியது கோபத்தை கொடுக்க... நான் விழா நடக்கும் இடத்தை விட்டு வேளீயேற... அடுத்த சில நிமிடங்களில் விழா முடிந்தது....

முதலில் , ஆண்கள் வேளியேற.. பின்னாள், சீனியர் பெண்கள், எங்கள் தோழிகள், இரன்டாம் வருட பிகர்கள்... அடுத்ததாக இவர்கள்.... எனக்கு எதோ கோபமாய் வர... படியில் இருந்த நான் ஓடி போயி... முதலில் ஆர்**** கோபத்தில் கை ஓங்க... என்னை சுற்றி ஒரு கூட்டம்... "எல்லாம் உள்ள போங்க... எல்லாம் உள்ள போங்க"...

என்று வந்திட்டாங்கையா... வந்திடாங்கையா....

கோபம் பயமாக ஒரு நொடியில் :D

சுமார் 25 பேர் மட்டும் சிக்கினார்கள் , மற்றவர்கள் சீனியரோடு எஸ்கேப்...

ஆழுக்கு ஒரு துன்டு எழுதி ஒவ்வொரு செயலை செய்ய சொல்லி எழுதியாயிற்று...

குலுக்கல், முறையில் அவர்களே தேர்ந்து எடுத்து கொள்ளலாம்... பின்னால் வேடிக்கை பார்க்க ... நம்ம ஆசிரியர்கள்.. (இவங்கயெல்லாம்ம்ம்... ஐயோ ஐயோ...)

கொஞ்சம் நடுக்கம் இருந்தாலும் அநேகரும் எங்களுடம் நன்றக பழகி இருந்ததால் மருக்காமல் நன்றக செய்தனர்.... (ஒரு வருடத்திலையா என்று கேக்க கூடாது.... நான் இது வரை ஒரு ரிக்காட் கூட என் கையால் எழுதியது இல்லை... எதாவது ஒரு பிகரை முதலிலையே பார்த்து கொடுத்துடுறதுதான்...)

என் பிகருக்கு (ளில் ஒன்றுக்கு) ... " ஐ லவ் யூ" சொல்ல்வும் என்று இருந்தது.... நம்ம மக்கா எல்லாம் சேர்ந்து என்னை கை காண்பிக்க.. அவளுக்கு வெக்கமா பொயிடுச்சு... பாவம்... அவளது தோழியை பார்த்து அதை சொல்லி விட்டு போனாள்...

அடுத்தது வந்தது வினை... எனக்கும் அவளுக்கும் ஒத்து போனது கிடையாது... "அவளுக்கு மரம் ஏறுவது போல் கான்பிக்க " என்று வந்திருக்க, அவள் ஏதோ கப்பியில் தண்ணிர் இறைப்பது போல் கான்பித்து போக நினைக்க...

நான் "உங்க ஊரில் இப்படிதான் மரம் ஏறுவாண்க்களா??"
அவள்: "எனக்கு இப்படிதான் தெரியும், வேனுமுன்ன, நீங்க செய்து காண்பியுங்கள்"...
இது என்னையே ராக்கிங் செய்வது போல் தெரிய... என் நன்பனை அழைத்து அவனை அவள் முன் நிறுத்தி...
நான்: இவனை மரம் என்ரு நினைத்து கொள், நான் எப்படி ஏறுகிறேன் பார்...
என்று கட்டிபுடித்து மரம் ஏறுவது போல் காண்பித்துவிட்டு, அவள் முன் சென்று..
நான்: இப்போ என்னை மரமாக நினைத்து கொள்... ஏறி காண்பி...
வெறுத்து போனாள்... சாரி சொல்லிவிட்டு... நிஜமாகவே மரம் ஏறுவது போல் காண்பித்து சென்றாள்....

நான் அவளிடம் அதன் பிறகு பேசியது இல்லை... என் தோழன் ஒருவன் அவளை காதல் திருமணம் செய்து கொண்டான்... இவர்களை சில மாதங்களுக்கு முன் சந்திக்க வேண்டி இருந்தது... அவள் எதனாலோ என் மீது ஒரு நல்ல மரியாதை வைத்திருக்கிறார்.. நானும் எதனால் என்று கேட்கவில்லை...:rolleyes: :rolleyes: :rolleyes:

gragavan
28-02-2006, 07:19 AM
அட்டகாசம் பென்சு....கலக்கல் சுந்தரம்னு ஒரு பட்டமே குடுக்கலாம் போல....

பென்ஸ்
28-02-2006, 07:32 AM
"தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா.." பாடலை பாடச் சொல்லி சக பயணிகளிடம் பிச்சையெடுக்க வைத்தனர்.
.

வேலியில் போனதை எடுத்து .... :D :D :D

ஐயோ ஐயோ... :rolleyes: :rolleyes: :rolleyes:

இந்த பாடல் ஒரு கலக்கல் பாட்டுதான் இல்லையா.... ஆமா மீதியை பாடவேண்டியதுதானே... பாடுங்க...:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D

எங்க கல்லூரியிலையும், பெண்களை கலாய்க்க காதல் பிச்சை கேட்டு பாடுவாண்க்க...கல்லூரியில் எல்லோருக்கும் ஒரு பாட்டு உண்டு.. எனக்கும் தான்....

மதி
28-02-2006, 07:40 AM
உண்மையிலேயே பென்ஸு..
உங்க வாழ்க்கைய எஞ்ஜாய் பண்ணியிருக்கீங்க..
அப்பா..அப்பயே சொன்னார்..
கோயம்புத்தூர் போய் படிடான்னு..
நாந்தான் கேக்கல..

தாமரை
28-02-2006, 07:40 AM
எங்க கல்லூரியிலையும், பெண்களை கலாய்க்க காதல் பிச்சை கேட்டு பாடுவாண்க்க...கல்லூரியில் எல்லோருக்கும் ஒரு பாட்டு உண்டு.. எனக்கும் தான்....
அட உங்களைப் பார்த்து காதல் பிச்சை கேட்டு எவன் பாடினான்?:confused: :confused: :confused: :confused:

மதி
28-02-2006, 07:42 AM
அட உங்களைப் பார்த்து காதல் பிச்சை கேட்டு எவன் பாடினான்?:confused: :confused: :confused: :confused:
ஏங்க..பென்ஸ் எது சொன்னாலும்...:confused: :confused: :confused:

பென்ஸ்
28-02-2006, 07:46 AM
அட உங்களைப் பார்த்து காதல் பிச்சை கேட்டு எவன் பாடினான்?:confused: :confused: :confused: :confused:

மன்னிக்க... எவா பாடினா???:D :D :D
என்று கேக்கனும்...:rolleyes: :rolleyes: :rolleyes:

பி.கு.: எங்க பசங்க அந்த மாதிரி எல்லாம் கிடையாது...;)

மதி
28-02-2006, 07:51 AM
மன்னிக்க... எவா பாடினா???:D :D :D
என்று கேக்கனும்...:rolleyes: :rolleyes: :rolleyes:

பி.கு.: எங்க பசங்க அந்த மாதிரி எல்லாம் கிடையாது...;)
ஆக மொத்தம் காலேஜில சிம்பு மாதிரி தான் திரிஞ்சிருக்கீர்...:D :D

பென்ஸ்
28-02-2006, 07:54 AM
இல்லைபா.. பெஞ்சு மாதிரிதான்....

தாமரை
28-02-2006, 07:56 AM
வேலியில் போனதை எடுத்து .... :D :D :D

ஐயோ ஐயோ... :rolleyes: :rolleyes: :rolleyes:

இந்த பாடல் ஒரு கலக்கல் பாட்டுதான் இல்லையா.... ஆமா மீதியை பாடவேண்டியதுதானே... பாடுங்க...:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D

எங்க கல்லூரியிலையும், பெண்களை கலாய்க்க காதல் பிச்சை கேட்டு பாடுவாண்க்க...கல்லூரியில் எல்லோருக்கும் ஒரு பாட்டு உண்டு.. எனக்கும் தான்....
இதுக்கு என்ன சொல்றீங்க பென்ஸூ

பென்ஸ்
28-02-2006, 07:57 AM
முதல் மூன்று மாதங்கள் முதல் வருட படிப்பில் அவஸ்தை பட்டுள்ளேன்.

மூன்று மாததில் முதள் நாள் மட்டும்தானெயா வந்திருக்கு...

பென்ஸ்
28-02-2006, 08:01 AM
எங்க கல்லூரியிலையும், பெண்களை கலாய்க்க காதல் பிச்சை கேட்டு பாடுவாண்க்க...

கல்லூரியில் எல்லோருக்கும் ஒரு பாட்டு உண்டு.. எனக்கும் தான்....

அடுத்த பாராவில் வந்திருக்கனும்... தப்பிடுச்சு... B) B) B)

மேலும் எல்லோரும் என்பது,, ஆண் பெண் இருவரையும் சொன்னேன்...

சரி.. இப்படி அடிகோடிட்டு எதை நிருபிக்க பாக்கிறிர்....:D :D

நீங்க சொல்லிட்ட :rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D

மதி
28-02-2006, 08:04 AM
இல்லைபா.. பெஞ்சு மாதிரிதான்....
அடுத்து ஏதாவது பெஞ்சு மேல நின்ன அனுபவத்த எடுத்து வுடறது...

தாமரை
28-02-2006, 08:19 AM
யாருமே நம்மளை ராக்கிங் பண்ணாதப்ப, ராகிங் னா என்னங்கற கேள்வி ஞானத்தோட ராக்கிங் வைபோகத்தை நடத்த மக்கள் எதிர் பார்த்து இருந்தனர்...

முதல் நாள், வித்தியாசமா வந்த எல்லோருக்கும் சாக்லெட் கொடுத்து வரவேற்பு... தயக்கத்தோட வாங்கிக் கொண்ட மக்களுக்கு ஒரு இனம் புரியாத உணர்வைக் கொடுத்து ....

லஞ்ச் டைம் தான் திருவிழா ஆரம்பம்... நல்லவனுங்க-ன்னு நம்பி பக்கம் வந்த மக்களை போட்டு படுத்தி எடுத்தானுங்க.

மண்ணில் நீச்சல்,
ட்ரெய்ன் விடறது, இல்லாத காதலிக்கு லட்டர் எழுதி வசனம் பேசி.. தப்பிச்சம்டான்னு னெனைக்கும் போது கிளாஸ்ல யாருக்காவது குடுக்க சொல்றது.. போற டவுன் பஸ்ஸை நிப்பாட்டி லண்டன் போகுமான்னு கேக்குறது.. சீனியர் பொண்ணுகளைக் கண்டால், வணக்கம் போடச் சொல்லி, ஒத்தைக் கால் செருப்பு ஒத்தைக் கால் ஷூ போட வச்சு.. எக்கச்ச்க்கம்.

ஹாஸ்டல்ல நள்ளிரவு ரெய்டு நடக்கும். வார்டன் ரூமை பத்திரமா வெளிய பூட்டிட்டு,, ஒவ்வொரு ரூமா போயி மக்களை அழைத்து வந்து, கண்ணைக் கட்டி சமந்தா ஃபாக்ஸை தொடச் சொல்லி.. தொட்டதை கவிதையாய் வர்ணிக்க சொல்லி... நண்பனை ஆயிரம் கெட்ட வார்த்தைகளால் திட்ட சொல்லி... ம்ம்ம்ம் சொல்லிகிட்டே போகலாம்..

என்னவோ தெரியலை, எங்க ப்ரின்சிபல் எங்க செட்டை தண்ணி தெளிச்சு விட்டுட்டார். கொஞ்ச நாளுக்கு பின் எல்லாம் ஃபிரண்ட்ஸ் ஆகி
ஜாலியா மாறிடுச்சி..

3 வது வருடம் ஒரு சின்னப் பிரச்சனை கல்லூரியை கலக்கிய பெரிய ஸ்ட்ரைக்காச்சு.. அப்புறம் ராக்கிங்கிற்கு மேலோட்டமான தடா...

இருந்தாலும்.. னாங்கள் இருக்கும் வரை ராக்கிங் இருந்தது..

ராசராசன்
28-02-2006, 08:42 AM
அடுத்து ஏதாவது பெஞ்சு மேல நின்ன அனுபவத்த எடுத்து வுடறது...

"பெஞ்சு மேல"ன்னு சொன்னவுடன் இப்பொதுதான் நினைவுக்கு வருகிறது..

ஒரு மூன்றாவது வருட சீனியர் ரூமில் காலையில் அகப்பட்டுக்கொண்டேன். அவர்கள் செய்ய சொன்ன காரியம் எனக்கு உகந்ததாக படவில்லை. அது ஒரு "A" சமாச்சாரம். நான் பிடிவாதமாக மறுக்க, அவர்கள் என்னை 'சிம்லா'விற்கு அனுப்பிவிட்டனர்.

அது வேறொன்றும் இல்லை.. ரூமில் அலமாரிக்கு மேலே உள்ள லாப்டில் போய் எறி உட்கார்ந்து குளிரில் நடுங்குவது மாதிரி நடித்துகொண்டே இருக்க சொல்லிவிட்டனர்.

மதியம் வரை அப்படியே இருந்துவிட்டதால், அவர்கள் சலித்துபோய், மெஸ்சுக்கு சாப்பிட அனுப்பி விட்டனர். :D :D

தாமரை
28-02-2006, 08:49 AM
நாங்கள் கல்லூரியில் படித்து முடித்து பட்டமளிப்பு விழா நடந்தபோது ராக்கிங்கே செய்யப்படாத நாங்கள், எங்கள் ஜூனியர்களுக்கு எங்களை ராக்கிங் செய்ய அனுமதி கொடுத்தோம். சீட்டு குலுக்கிப் போட்டு, என்ன வருதோ அதை செய்ய வேண்டும்..

எனக்கு ஒரு கடி ஜோக் சொல்லச் சொல்லி வந்தது...

.....:D :D :D :D :D :D

மதி
28-02-2006, 09:05 AM

இப்ப புரியுது..
எல்லாத்துக்கும் நதிமூலம் ரிஷிமூலம் என்னன்னு..?
அப்ப ஆரம்பிச்சது..இன்னும் அத இவர் விடல..
கடி ஜோக் சொல்லனும்ன்னு எழுதி வச்ச அந்த புண்ணியவான் யாரையா..?:angry: :angry: :angry:

தாமரை
28-02-2006, 09:56 AM
ஆஹா..
இப்ப புரியுது..
எல்லாத்துக்கும் நதிமூலம் ரிஷிமூலம் என்னன்னு..?
அப்ப ஆரம்பிச்சது..இன்னும் அத இவர் விடல..
கடி ஜோக் சொல்லனும்ன்னு எழுதி வச்ச அந்த புண்ணியவான் யாரையா..?:angry: :angry: :angry:
அது அப்ப ஆரம்பிக்கலை.. நாங்கள் இரண்டாம் ஆண்டு சென்றபோது ..
ஹாஸ்டலில் கடி ஜோக் தொடர் போட்டி..(சுவேதாவின் பாட்டுக்கு பாட்டு போல) நடந்தது.. அதுல ஆரம்பிச்சது..

தூங்குறவனை எழுப்பி ஒரு பிளேடு போடச் சொன்னாங்க...

நானும் நைசா என்னோட ஸேவிங் பிளேடை எடுத்து கீழப் போட்டுட்டு தூங்கிட்டேன்..

யார் வென்றார்கள் என்று சொல்லணுமா?

sarcharan
28-02-2006, 10:07 AM
அங்கேயுமா...!!!! ;) ;) :) :)

நாங்கள் கல்லூரியில் படித்து முடித்து பட்டமளிப்பு விழா நடந்தபோது ராக்கிங்கே செய்யப்படாத நாங்கள், எங்கள் ஜூனியர்களுக்கு எங்களை ராக்கிங் செய்ய அனுமதி கொடுத்தோம். சீட்டு குலுக்கிப் போட்டு, என்ன வருதோ அதை செய்ய வேண்டும்..

எனக்கு ஒரு கடி ஜோக் சொல்லச் சொல்லி வந்தது...

.....:D :D :D :D :D :D

mkmaran
28-02-2006, 10:18 AM
ஆக மொத்தம் காலேஜில சிம்பு மாதிரி தான் திரிஞ்சிருக்கீர்...:D :D

சரியாக சொன்னீர்கள் மதி, ஆனால் ஒரு சின்ன திருத்தம், பெஞ்சமின் போலதான் சிம்பு அப்படினு சொன்னால் இன்னமும் பொருத்தமாக இருக்கும். அவரும் சினிஃபீல்ட் வந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும். ஹா..ஹா..

mkmaran
28-02-2006, 10:22 AM
அது அப்ப ஆரம்பிக்கலை.. நாங்கள் இரண்டாம் ஆண்டு சென்றபோது ..
ஹாஸ்டலில் கடி ஜோக் தொடர் போட்டி..(சுவேதாவின் பாட்டுக்கு பாட்டு போல) நடந்தது.. அதுல ஆரம்பிச்சது..

தூங்குறவனை எழுப்பி ஒரு பிளேடு போடச் சொன்னாங்க...

நானும் நைசா என்னோட ஸேவிங் பிளேடை எடுத்து கீழப் போட்டுட்டு தூங்கிட்டேன்..

யார் வென்றார்கள் என்று சொல்லணுமா?

ஒரு வார்த்தைக்கூட பேசாமல் இப்பூட்டு பெரிய பிளேடை போட்டு தாக்கி இருக்கீங்க...?:eek: :D

தாமரை
28-02-2006, 10:55 AM
ஒரு வார்த்தைக்கூட பேசாமல் இப்பூட்டு பெரிய பிளேடை போட்டு தாக்கி இருக்கீங்க...?:eek: :D
அது ஆரம்பம்..

pradeepkt
28-02-2006, 05:25 PM
அப்புறம் உங்களைப் பாத்தவங்க எல்லாம் ஆ! ரம்பம் னு ஓட ஆரம்பிச்சாங்களோ :D

gragavan
01-03-2006, 04:03 AM
அது ஆரம்பம்..ஆகையால் தமிழ்மன்றத்தின் சார்பில் தாமைரக்கு ரம்பாதி ரம்ப ரம்பப் பிரசண்ட ரம்மந்தாண்டன் என்ற விருது வழக்கப்படுகிறது.

ராசராசன்
01-03-2006, 04:55 AM
இந்த திரி அவ்வளவு தானா? மிகக் குறைவான சிலரே அனுபவபட்டுள்ளனர் போலும்!

sarcharan
01-03-2006, 06:10 AM
ஹ்ம்ம் அந்த கொடுமைய ஏன் கேட்கின்றீர்கள்....
எல்லாருக்கும் முதல் நாள் கல்லூரிக்கு செல்ல திருச்சி டோல்கேட்டிலிருந்து பேருந்துக்குள் ஏறி ஒரு மூகாம்பிகை என்று டிக்கெட் கேட்டதுதான் தாமதம்.
ஒரு சீனியர் ஆரம்பிச்சான். என்ன பேரு, .....இத்யாதி,இத்யாதி, இத்யாதிகள்
ஆரம்பத்திலேயே ஆரம்பிச்சாங்க...
அவனுடன் கல்லூரிக்குள் உள்ளே நுழைந்தது தான் தாமதம்.

அப்புறம் "கல்லூரி சல்யூட்" :p (நம்மள்ள பலருக்கு பரிச்சயப்பட்டதுதான்...)
அப்புறம்... இன்னும் சொல்றேன்.:confused: :p

sarcharan
01-03-2006, 06:19 AM
கல்லூரிக்குள் வரும் விதிமுறைகள்:
1) மஞ்சள் பையில் தான் புத்தகங்கள் எடுத்துவர வேண்டும்
2) ஹவாய் சப்பல் (slippers..)தான் உபயோகிக்க வேண்டும்
3) பொண்ணுங்க பத்தின வெலாவாரியான(ஹ்ம்ம்ம்... அதேதானுங்கோ) டீட்டெயில்ஸ பட்டியல் போட்டு தரவேண்டும்.
4) சட்டைய tuck-in பண்ண கூடாது.
5) கைகடிகாரம் உபயோகிக்கக்கூடாது.
6) மினி-டிராஃப்டரால் எதிரில் வரும் எல்லோரையும் சுடவேண்டும்.
7) முழுவதுமாக சவரம் செய்யப்பட்ட முகமாய் இருக்கவேண்டும்
8) தலைக்கு எண்ணை போட்டு வகிடு எடுத்து சீவி இருக்க வேண்டும்
9) கோழி பிடித்தல், 5-பைசா நாணயத்தால கல்லூரி ஆடுகளத்தை அளத்தல், சல்யூடுகள் அடித்தல், அப்புறம் ஆட்டம் பாட்டம், **** புஸ்தகங்கள் (ஹ்ம்ம் அதேதானுங்ணா !!!!), சிறு சிறு கற்கள் கொண்டு ஒரு பாக்கெட்ட நிரப்புதல், ....

அட மத்ததெல்லாம் (சொல்லணுமின்னா )பண்பட்டவர் பகுதிக்குதானுங்க லாயக்கு

sarcharan
01-03-2006, 06:22 AM
கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது நாள் காலையில் கல்லூரிக்கு கிளம்பும் பொழுது என் பெற்றோர் என்னை பார்த்து
"என்னடா **** மாதிரி கோலத்துல கல்லூரிக்கு போற என்ன விஷயம்"ன்னு கேட்டாங்க...

ஹ்ம்ம்ம் நான் என்ன பதில் சொல்ல.....

sarcharan
01-03-2006, 06:36 AM
என் சகநண்பன் (பிரதீப்பு அவந்தாண்டா 2474ல கீழ் அறையில் இருந்தானே!!!) ஒருவன் பல்லுக்கு "க்ளிப்" பொருத்தி இருந்தான்.
அவன் தலை முடிகள் ஒவ்வொன்றும் சும்மா முள்ளுமாதிரி ஒவ்வொரு திசைக்கும் நட்டுக்கிட்டு நிக்கும்.

சீனியர்: ஏண்டா பல்லுல என்ன?:p
இவன்: சார். பல்லு நீட்டிட்டு இருக்குன்னு "க்ளிப்" பொருத்தி இருக்கேன். அதுதான் சார்.:confused: :confused:
சீனியர்: பல்லு நீட்டிட்டு இருக்குன்னு "க்ளிப்" பொருத்தி இருக்கே சரி. முடிஎல்லாம் நீட்டிட்டு இருக்கே அதுக்கு என்ன செய்யப்போற?

அவ்வளவுதான். எல்லாரும் (பெண்கள் உட்பட!!!) சிரித்தனர்.:D :D
இவன்: !!!!:confused: :confused:
சீனியர்: பேசாம நாளை முதல் தலைமுடிகளை இஸ்திரி செஞ்சுட்டு வாடா .

இது கேட்டு வகுப்பில் மேலும் சிரிப்பலை...:D :D

sarcharan
01-03-2006, 06:41 AM
பிரதீப்பு,
முள்ளுமாதிரி தலைமுடி இருந்தவனுக்கு இந்த கதின்னா
சுருள் சுருளா ஸ்பிரிங் மாதிரி தலைமுடி இருக்கவன் கதி என்னாயிருக்கும்....
ஹேய் நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லலை....
ஹி ஹி சும்மா ஒரு கேள்விய கேட்டு வெச்சேன்

தாமரை
01-03-2006, 07:24 AM
கல்லூரிக்குள் வரும் விதிமுறைகள்:
1) மஞ்சள் பையில் தான் புத்தகங்கள் எடுத்துவர வேண்டும்
2) ஹவாய் சப்பல் (slippers..)தான் உபயோகிக்க வேண்டும்3) பொண்ணுங்க பத்தின வெலாவாரியான(ஹ்ம்ம்ம்... அதேதானுங்கோ) டீட்டெயில்ஸ பட்டியல் போட்டு தரவேண்டும்.4) சட்டைய tuck-in பண்ண கூடாது.5) கைகடிகாரம் உபயோகிக்கக்கூடாது.
6) மினி-டிராஃப்டரால் எதிரில் வரும் எல்லோரையும் சுடவேண்டும்.
7) முழுவதுமாக சவரம் செய்யப்பட்ட முகமாய் இருக்கவேண்டும்
8) தலைக்கு எண்ணை போட்டு வகிடு எடுத்து சீவி இருக்க வேண்டும்
9) கோழி பிடித்தல், 5-பைசா நாணயத்தால கல்லூரி ஆடுகளத்தை அளத்தல், சல்யூடுகள் அடித்தல், அப்புறம் ஆட்டம் பாட்டம், **** புஸ்தகங்கள் (ஹ்ம்ம் அதேதானுங்ணா !!!!), சிறு சிறு கற்கள் கொண்டு ஒரு பாக்கெட்ட நிரப்புதல், ....

அட மத்ததெல்லாம் (சொல்லணுமின்னா )பண்பட்டவர் பகுதிக்குதானுங்க லாயக்கு
பரவாயில்லையே நாங்க ஆரம்பிச்ச சில ஐட்டங்கள் 10 வருஷம் வாழ்ந்ததா?

தாமரை
01-03-2006, 07:26 AM
சரவணன், ரயில் பாலம் தண்டணை கேள்விபட்டு இருக்கீங்களா?

sarcharan
01-03-2006, 07:57 AM
இல்லயா பின்ன..

சரவணன், ரயில் பாலம் தண்டணை கேள்விபட்டு இருக்கீங்களா?

மயூ
03-03-2006, 04:20 AM
எமது பல்கலையில் ராகிங் இல்லை. யாழ்பானம், கொழும்பு போன்ற பல்கலைக்கழகங்கள் இப்போது ராகிங்கில் சக்கைபோடு போடுகின்றன. ராகிங் மாணவர்களை ஓரணியில் திரட்டுவது உண்மை ஆனால் எல்லை மீறக்கூடாது. காட்சட்டையை கழட்டுதல் போன்ற வக்கிரமான ராக்கிங் கூடாது. அதைவிட்டு ஒருத்தனை கூப்பிட்டு எரியிற மின்குமிழை காட்டி ஊதி அனையடா ரஸ்கல் என்று கூறினால் அது பகிடி. அதை விட்டு எல்லை மீறக்கூடாது.

மயூ
03-03-2006, 04:28 AM
இலங்கையின் பிரபலமான ராகிங்கள்

1)பல்கலைக்கழகத்திற்கு ரபர் செருப்புதான்
2)பெட்டைகளைப்(பொண்ணுங்க) பார்க்க கூடாது
3)நடு வீதியில் திருவேடு ஏந்துதல்
4)சலூட் போன்ர போமாலிடி விஷயங்கள்
5)காதல் கடிதம் எழுதுதல்
6)சக மானவிகளுக்கு ராப், டிஷ்கோ, ராக் செய்து காட்டல்
7)மானவிகள் சீனியருக்கு காதல் கடிதம் மற்றும் காதலை நேரடியாக் சொல்லுதல் (சும்மா பகிடிக்கு)
9)மறந்து டி சார்ட் போடக்கூடாது. திருநீற்றுப்பட்டையுடன் சேர்ட்டுதான் (அதுவும் இன் பண்ணவேண்ண்டும்)
8)மேலும் சில

தாமரை
03-03-2006, 04:36 AM
இல்லயா பின்ன..
அதை ஆரம்பிச்ச புண்ணியவான் நாந்தேன்!!!!:D :D :D

pradeepkt
03-03-2006, 04:48 AM
இலங்கையின் பிரபலமான ராகிங்கள்

ராகிங் என்பதே பகடிக்குத்தானே... எல்லை மீறும்போதுதான் நாவரசுக்கு நேர்ந்தது போன்ற கொடுமைகள் நடக்கின்றன. மயூரேசன், உங்களுக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில 1998-99-ல் நிகழ்ந்த அந்தக் கொடுமை தெரியுமா?

mukilan
03-03-2006, 05:15 AM

பிரதீப் நாவரசு-ஜான் டேவிட் விவகாரம் 1996௧-1997ல். ஜான்டேவிட் மீதான குற்றச்சாட்டுக்கு சரியான ஆதாரங்கள் இல்லாமல் அவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.இப்பொழுது கிறித்தவ சமயத் தொண்டாற்றி வருவதாக கேள்வி. கடலூர் மத்திய சிறையில் காந்திஜெயந்தி அன்று நடந்த நிகழ்ச்சியில் பிரேமனந்தாவையும் ஜான்டேவிட்டையும் பார்த்தேன். இருவருக்கும் நல்ல சினேகமாம்.

பென்ஸ்
03-03-2006, 05:20 AM
ஆனா கடலூர் மத்திய சிறைக்கு நீர் எதுக்கு போனிரு???

mukilan
03-03-2006, 05:24 AM
காந்திஜெயந்தி அன்னைக்கு கைதிகளுக்கு கலைநிகழ்ச்சி நடத்தப் போனோம். அப்புறம் நான் எதுக்கு அங்க போகப்போறேன்.

பென்ஸ்
03-03-2006, 05:27 AM
அவ்வளவுதானா... :rolleyes: :rolleyes: :rolleyes: B) B) B)

நானும் நீர் அடுத்ததாக "கடலூர் ஜெயிலும் நானும்.." என்று ஒரு திரி துவங்க போறிரோ என்று நினைத்தேன்..:p :p :p :p .:D :D :D :D :D :D :D

mukilan
03-03-2006, 05:30 AM
ரொம்ப ஆசை போல என்னை உள்ளே அனுப்பிப் பார்க்க. அப்புறம் நானும் வைகோ போல சிறை அனுபவங்களையெல்லாம் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டி இருக்கும். அதுக்கு பெங்களூருல ஒரு விழா எடுத்து ..... எதுக்கு இதெல்லாம். அதான் போகலை...

மதி
03-03-2006, 07:26 AM
இருந்தாலும் சந்தேகமா இருக்கு...
உண்மையா கலைநிகழ்ச்சிகளுக்காகத் தான்..ஜெயிலுக்கு உள்ளே போனீர்களா..?????

sarcharan
03-03-2006, 07:31 AM
ஆஹா நீங்க தானா அது..உங்களைத்தான் பல பேரு தேடிக்கிட்டு இருக்காங்க.....:rolleyes: :rolleyes:
அதுக்கு பேரு போன ஆளு ராமலிங்கம்ன்னு ஒருத்தர். (1997ம் ஆண்டு நிறைவு செய்தார்)

அதை ஆரம்பிச்ச புண்ணியவான் நாந்தேன்!!!!:D :D :D

தாமரை
03-03-2006, 07:32 AM
காந்திஜெயந்தி அன்னைக்கு கைதிகளுக்கு கலைநிகழ்ச்சி நடத்தப் போனோம். அப்புறம் நான் எதுக்கு அங்க போகப்போறேன்.
அப்புறம் எப்பொ வெளிய விட்டாங்க?

sarcharan
03-03-2006, 07:36 AM
அட என்ன இது அவரு தான் ஜெயிலுக்கு போனேன்னு;) (ஹி ஹி கலைநிகழ்ச்சி நடத்தத்தான்...:p :p )சொல்லிட்டாரு இல்ல அப்புறமென்ன . சுத்த சின்னபுள்ளத்தனமா கேள்வி கேட்டுக்கிட்டு...
;) ;) ;)

இருந்தாலும் சந்தேகமா இருக்கு...
உண்மையா கலைநிகழ்ச்சிகளுக்காகத் தான்..ஜெயிலுக்கு உள்ளே போனீர்களா..?????

sarcharan
03-03-2006, 07:38 AM
இது என்ன புதுக்கூத்து....:eek:
என்ன சொல்றீங்க.... ஆனால் இருவரும் கைதானது வேற வேற காரணத்துக்காக இல்ல....
;) ;)
ஹ்ம்ம் நம்ம மக்கள் இதுபத்தி ஒரு புதுத்திரி போடாம தூங்கமாட்டாங்க போல:p :p

பிரதீப் நாவரசு-ஜான் டேவிட் விவகாரம் 1996௧-1997ல். ஜான்டேவிட் மீதான குற்றச்சாட்டுக்கு சரியான ஆதாரங்கள் இல்லாமல் அவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.இப்பொழுது கிறித்தவ சமயத் தொண்டாற்றி வருவதாக கேள்வி. கடலூர் மத்திய சிறையில் காந்திஜெயந்தி அன்று நடந்த நிகழ்ச்சியில் பிரேமனந்தாவையும் ஜான்டேவிட்டையும் பார்த்தேன். இருவருக்கும் நல்ல சினேகமாம்.

தாமரை
03-03-2006, 07:43 AM
ஆஹா நீங்க தானா அது..உங்களைத்தான் பல பேரு தேடிக்கிட்டு இருக்காங்க.....:rolleyes: :rolleyes:
அதுக்கு பேரு போன ஆளு ராமலிங்கம்ன்னு ஒருத்தர். (1997ம் ஆண்டு நிறைவு செய்தார்)
ரயில் பாலம் தண்டனையை மக்களுக்கு விளக்கிடுங்க.. மக்கள் சஸ்பென்ஸ் தாங்க மாட்டாங்க.:) :) :)

sarcharan
03-03-2006, 07:44 AM
நாவரசு என் கல்லூரி நண்பனோட வகுப்புத்தோழன். திருச்சி கேம்பியன் பள்ளியில் தான் பயின்றான்.
:D :D :D

பிரதீப் நாவரசு-ஜான் டேவிட் விவகாரம் 1996௧-1997ல். ஜான்டேவிட் மீதான குற்றச்சாட்டுக்கு சரியான ஆதாரங்கள் இல்லாமல் அவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.இப்பொழுது கிறித்தவ சமயத் தொண்டாற்றி வருவதாக கேள்வி.

தீபன்
03-03-2006, 03:05 PM
னாவரசுபோல்தான் நம்ம ஊரிலயும் வரப்பிரகாஷ் என்ர மாண்வரது கொலையும் நடந்தது... 1997ல் பேராதனை பல்கலைக்களகத்தில். அளவுக்கு மீறி 500தடவை டிப்ச் அடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டது. இதனோடு சம்பந்தப்பட்ட சதீஷ் என்ற மாண்வர் தலைமறைவாகி வெளினாடு சென்றுவிட்டார். இது நடந்தபோது நான் பாடசாலை இறுதியாண்டில் இருந்தேன். இப் பிரச்சினைக்கு பெருமெடுப்பில் ஆர்ப்பாட்டம் எல்லாம் செஇதோம்.
(ஆனால், நாங்க பல்கலை போனபின் பளயபடி அதே ராக்கிங்கில் ஈடுபட்டதை ஒத்துக்கதான் வேணும்.)

mukilan
04-03-2006, 04:32 AM
இது என்ன புதுக்கூத்து....:eek:
என்ன சொல்றீங்க.... ஆனால் இருவரும் கைதானது வேற வேற காரணத்துக்காக இல்ல....
;) ;)
ஹ்ம்ம் நம்ம மக்கள் இதுபத்தி ஒரு புதுத்திரி போடாம தூங்கமாட்டாங்க போல:p :p
ஆமாம்! ரெண்டு பேரும் வெவ்வேறு சமயங்களில் கைதானவர்கள்தான். ஆனால் கடலூர் மத்திய சிறையில் ஒரே சமயத்தில் இருந்தவர்கள்.

mukilan
04-03-2006, 04:35 AM
அட என்ன இது அவரு தான் ஜெயிலுக்கு போனேன்னு;) (ஹி ஹி கலைநிகழ்ச்சி நடத்தத்தான்...:p :p )சொல்லிட்டாரு இல்ல அப்புறமென்ன . சுத்த சின்னபுள்ளத்தனமா கேள்வி கேட்டுக்கிட்டு...
;) ;) ;)
அப்படிச் சொல்லுங்க சரவணன்.என்னை ஜெயிலுக்கு அனுப்பறதுன்னு முடிவோட பெங்களூருல 2 பேரு இருக்காங்க. இப்போவாவது புரியுதானு பார்ப்போம்.

sarcharan
04-03-2006, 04:55 AM
அய்யோ...பாவம் ஜான் டேவிட்...:eek: :eek: :eek:

ஆமாம்! ரெண்டு பேரும் வெவ்வேறு சமயங்களில் கைதானவர்கள்தான். ஆனால் கடலூர் மத்திய சிறையில் ஒரே சமயத்தில் இருந்தவர்கள்.

பென்ஸ்
04-03-2006, 07:53 AM
மதியம் வரை அப்படியே இருந்துவிட்டதால், அவர்கள் சலித்துபோய், மெஸ்சுக்கு சாப்பிட அனுப்பி விட்டனர். :D :D

அவ்வளவுதான.. மீதி கதையை சொல்லவேயில்லை....
தேனிசை.. எடுத்து விடுங்கள்...

ராசராசன்
04-03-2006, 08:11 PM
சரி...அடுத்த நிகழ்வு...

முதல் வருடத்தின் மூன்றாம் நாள். 'ராகிங்' உச்ச கட்டத்தை நோக்கி செல்லவே எம்போன்ற மாணவர்களுக்கு எப்படி அதிலிருந்து தப்பிப்பது / தவிர்ப்பது என்பதே அப்போதைய சிந்தனை.

சரி, விடுதியில் இருந்தால் தானே ராகிங்? :confused:

கல்லூரி நான்கு மணிக்கு முடிந்தவுடன், பெரும்பாலான முதல் வருட மாணவர்கள் விடுதிக்கு திரும்பாமல் நகரை நோக்கி படையெடுத்தோம். சிதம்பரம் கோயிலில் சிலமணி நேரம் வலம் வந்து விட்டு, சிறு குழுக்களாக பிரிந்து அவரவர் விரும்பிய திரையரங்குகளுக்கு சென்று தொடர்ச்சியாக இரண்டு காட்சியையும் பார்த்துவிட்டு இரவு ஒரு மணிக்கு மேல் இரயில் நிலையம் வழியாக விடுதியை நோக்கி நடந்தோம். மாணவர்கள் கூட்டம் மொத்தம் முப்பது பேருக்குமேல் தேறும்.

மேற்கத்திய விடுதியின் நுழைவாயிலை நாங்கள் சப்தமின்றி நெருங்கியவுடன், சடாரென பத்து சீனியர் மாணவர்கள் மறைவிலிருந்து வெளிப்பட்டனர். அதில் தலைவர் போலிருந்தவர், எங்கள் அனைவரையும் பார்த்து கேலிக் கூச்சலிட்டவாறு,

"டேய், பொடிபசங்களா, உங்களை மாதிரி எத்தனை 'எத்தன்' களை நாங்கள் கண்டிருப்போம்? நாங்கள் செய்த அதே சித்து வேலையை எங்ககிட்டயே காட்டுரீங்களா? " எனக்கூறியபடி எங்கள் அனைவரையும் வரிசையில் நிற்க கட்டளையிட்டனர். பின் 15 பேர் கொண்ட இரு அணிகளாக பிரித்துவிட்டு, ஒரு அணியில் உள்ள அனைவரையும் அவரவர் பின்புறம் உள்ள சட்டையை பிடித்துக்கொண்டு இரயில் வாகனம் போல் சத்தமிட்டபடி எதிரில் உள்ள மைதானத்தை வலம் வரச்சொல்லினர். அந்த இரயில் ஓடும் சப்தம் பல மோசமான அடுக்கு வார்தைகள் கொண்டது.

அதேபோல் இன்னொரு பிரிவு மாணவர்களுக்கு, கபடி விளையாட்டு போட்டியை வைத்தனர். அதுவும் மோசமான அடுக்கு மொழி வசனத்தில் தான் விளையாடினோம். இக்களத்தில் அவ்வார்த்தைகளை பதிக்க இயலாது.

அதிகாலை 3.30 மணி வரை விளையாடி, ரயில் பயணம்(?) செய்துவிட்டு எம் அறைக்கு சென்றபோது முடிவெடுத்தேன்..'ராகிங்'கை கண்டு பயந்து ஓடக்கூடாது, துணிந்து எதிர்கொள்வதே சாலச் சிறந்தது என்று. அதன்பின் சந்தித்த சீனியர்களை கண்டு நாங்கள் பயப்படுவதில்லை, மாறாக ஈடுபாடுடன் கலந்துகொண்டு வெற்றியும் கண்டோம்.

எங்களை இரயில் விடச்சொன்ன அந்த சீனியர் மாணவர் இப்போது மிகப்பெரிய "MNC" கம்பெனியில் பொது மேலாளராக (GM) உள்ளார். தமிழகத்தில் நாங்கள் சந்திக்கும்போது, இப்போதும் இச்சம்பவத்தை நினைவு கூர்ந்து கிண்டலடிப்பதுண்டு. :D

பல அனுபவங்கள் இருந்தாலும், இங்கே பதிக்க உகந்த, அடிமனதில் அழியாமலுள்ளவற்றை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சிதான்.

மயூ
05-03-2006, 05:23 AM
ஆனா கடலூர் மத்திய சிறைக்கு நீர் எதுக்கு போனிரு???
மாட்டுப்பட்டான்டா மச்சி

sarcharan
06-03-2006, 03:15 AM
ஹ்ம்ம் எங்கள் கல்லூரியிலும் இதேதான். ஆனால் இது இன்னும் சற்று கூடுதலாகவே இருக்கும்

"டேய், பொடிபசங்களா, உங்களை மாதிரி எத்தனை 'எத்தன்' களை நாங்கள் கண்டிருப்போம்? நாங்கள் செய்த அதே சித்து வேலையை எங்ககிட்டயே காட்டுரீங்களா? " எனக்கூறியபடி எங்கள் அனைவரையும் வரிசையில் நிற்க கட்டளையிட்டனர். பின் 15 பேர் கொண்ட இரு அணிகளாக பிரித்துவிட்டு, ஒரு அணியில் உள்ள அனைவரையும் அவரவர் பின்புறம் உள்ள சட்டையை பிடித்துக்கொண்டு இரயில் வாகனம் போல் சத்தமிட்டபடி எதிரில் உள்ள மைதானத்தை வலம் வரச்சொல்லினர். அந்த இரயில் ஓடும் சப்தம் பல மோசமான அடுக்கு வார்தைகள் கொண்டது.

அதேபோல் இன்னொரு பிரிவு மாணவர்களுக்கு, கபடி விளையாட்டு போட்டியை வைத்தனர். அதுவும் மோசமான அடுக்கு மொழி வசனத்தில் தான் விளையாடினோம். இக்களத்தில் அவ்வார்த்தைகளை பதிக்க இயலாது.
.

தாமரை
06-03-2006, 05:29 AM
அதைவிட்டு ஒருத்தனை கூப்பிட்டு எரியிற மின்குமிழை காட்டி ஊதி அனையடா ரஸ்கல் என்று கூறினால் அது பகிடி. அதை விட்டு எல்லை மீறக்கூடாது.
இப்படித்தானொரு மாணவனிடன் மொதல்ல ஒரு மெழுகு வர்த்தியை அணைக்கச் சொன்னாங்க.. அவன் ஊதி அணைச்சான். ஒரு குண்டு பல்பை காட்டி இதையும் மெழுகு வர்த்தி அணைக்கிற மாதிரி அணைன்னு சொல்ல அவன் ஒரு சொம்பு தண்ணீரை பல்பின் மேல் கொட்ட .. பல்பு படாரென வெடிக்க.. அவனுக்கு "பல்பு" குமரேசன் என பட்டப் பெயர் வைக்கப் பட்டது...

sarcharan
06-03-2006, 06:15 AM
"பல்பு" குமரேசனோட பல்பு எரிஞ்சிருக்குமே....
ஜூனியர்கிட்ட ஒண்ண செய்யச்சொல்லி அவன் அதை செய்யும்போதும் செய்து முடிச்சபின்பும், சீனியரெல்லாரும் சுத்தி நின்னு ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க... ஹ்ம்ம்

[QUOTE=stselvan .. பல்பு படாரென வெடிக்க.. அவனுக்கு "பல்பு" குமரேசன் என பட்டப் பெயர் வைக்கப் பட்டது...[/QUOTE]

sarcharan
06-03-2006, 06:31 AM
மதிய இடைவேளையின் போது நடக்கும் ராகிங் இருக்கே..
ஹ்ம்ம் சொல்றேன்...