PDA

View Full Version : யாரையும் கைநீட்டி அடிக்காதே...



பென்ஸ்
25-02-2006, 06:17 PM
யாரையும் கைநீட்டி அடிக்காதே...


இன்று நினைத்தாலும், மறக்க வேண்டும் என்று நினைக்கும் சில நினைவுகள் இன்றும் மனதை வேட்டையாடும்.... அன்று செய்தது தவறு என்று இன்றும் மனது சொல்வதால் எடுத்த முடிவுதான் ... இந்த தலைப்பு...

நாங்கள் கல்லூரியின் இரண்டாவது செட் மாணவர்கள், கல்லூரியில் எல்லா படத்திற்க்கும் ஆசிரியர்கள் கிடையாது, இருக்கும் ஆசிரியர்கள் கூட என்னை போல் இரண்டாம் வருடத்தில் நேரடியாக சேர்ந்த மாணவர்களை விட வயதில் சிறியவர்கள்.... வேறும் மூன்று பிரிவுகள் மட்டும் அப்போது இருந்தது, என் வருடத்தில் மொத்தம் 114 பேர், இதில் 75 பேர் டிப்பிளமோ படித்து இரண்டாம் ஆண்டில் சேர்ந்தவரகள் .... கல்லூரியில் சேர்ந்த முத வாரத்திலையே சீனியருடன் நடந்த ரத்தகளரி பிரச்சினை முதல் மூன்றாம் ஆண்டில் கடைசியில் கல்லூரியில் அத்து மீறி நுழைந்து, மாணவர்களை ரவுடிகளுடன் சேர்ந்து அடித்த கல்லூரி போர்ட் உறுப்பினர்களை விரட்டி விரட்டி அடித்தது வரை நடந்த சம்பவங்களுக்கு காரணமாய் இருந்ததால்.... நம்மை ஏத்தி விட்டு கூத்து பாக்கவே ஒரு கூட்டம் இருந்தது... நானும் நம்மை சுத்தி எப்பவுமே நாலு பேரு சிங்கி அடிக்க இருந்ததால்.... சின்ன சின்ன விஷயத்தை கூட எதோ ரொம்ப பெருசா பன்னுவேன்.... எங்கள் வருடத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல ஒற்றுமை இருந்ததால் எனக்கு பின்னால் ஒரு கூட்டமே இருக்கும் தைரியம்... அசட்டு தைரியம்...
கல்லூரியில் உள்ள ஜூனியர்களில் 20% பெயருக்கு கூட என்னை பிடிக்காது, மற்றவர்கள் என் மேல் ஒருவித பயம் இருந்ததால் ஒதுங்கி போயிடுவாங்க... ஆனால் சேட்டை பன்னினாலும் , வகுப்புக்கு போக விட்டாலும் பரிச்சை சமயத்தில் கண்விழித்து படித்து எல்லா பாடங்களிலும் நம்ம பசங்களும் பாஸ் ஆயிடுவாங்க, எல்லா கலை விழாவுலையும் முதலில் வந்திருவோம்... அதனால கல்லூரியில் பிரின்சிபால் முதல் பியூன் வரை ஒரு நல்ல பெயரும் இருந்தது.

கல்லூரி கடைசி வருடத்தில் கால் வைத்த முதல் காரியமாக கல்லூரி சுற்றுலா என்று சுற்றி கொண்டு, நிறைய நல்ல நினைவுகளுடன் கல்லூரி வந்த போது அந்த 20 நாளிலையே கல்லூரி வேகுவாக மாறி இருந்தது.... நாங்கள் வகுப்புக்கு போகாமல் இருந்த அரட்டை அடிக்கும் வேப்பமரம் வெட்டி முறிக்க பட்டிருந்தது, அதம் கிழே நாங்கள் இருப்பதற்க்காக அடுக்கி இருந்த எல்லை கல்கள் தூர எறியபட்டிருந்தன... "மாப்பிளை, நம்ம அக்கூஸ்ட் (accused) கல்லையும் தூர போட்டு விட்டாங்கடா." ... அக்கூஸ்ட் கல் , தப்பு செய்யும் அட்களை அதில் இருந்தி, சுற்றி இருந்து விசாரனை நடக்கும், அது ஒருவன் இருந்தால் அவனுக்கு கண்டிபாக அடி கிடைக்கும் என்பது எழுதாத விதி. அவர்கள் தூர எறிந்த கல்லை மீண்டும் அதே இடத்தில் அடுக்கி வைத்து மீண்டும் இருக்க ஆரம்பித்தோம், சில நாட்கள் சுற்றுலா நினைவிலையே போயிற்று.

அன்று வெள்ளிகிழமை, கல்லூரியில் மதியத்துக்கு மேல் விடுமுறை சொல்லி இருந்தார்கள், ஆசிரியர்கள் கூடுவதால் இந்த விடுமுறை. வார கடைசியின் கூத்துகளுக்காக பிளான் செய்து கொண்டிருந்த போது, ஒரு நண்பன் வந்து கூட்டமாக இருந்த எங்களிடம் வந்து , "ஒரு ஜூனியர் , அக்கூஸ்ட் கல்லில் இருந்தான் எழும்ப சொன்னேன், அடித்து விட்டான்" என்று கூறியதும் , மீண்டும் புறப்பட்டது ஒரு கூட்டம்.. எதோ சாதிக்க போகிற மாதிரி... வரப்போகும் விபரீதம் புரியாமல்....

எங்கே அவன் என்றால், அவன் கேண்டீனில் சாப்பிட்டு கொண்டிருக்கிறான் என்றார்கள்... அங்கு சென்றால்...

"மாப்பிள்ளை, அந்த இங்கிளிஸ் புரபசர் இருக்கார்டா...!!!" என்று எச்சரிக்கை வர.. சரி அவன் வேளியே வரட்டும் பாக்கலாம் என்று இருந்தோம்...

" நான் வேளியே பசியா இருக்கிறேன், அவன் உள்ள உக்காந்த்து சாப்பிடுறான்" என்று எவனோ பின்னால் இருந்து சப்தமிட...

என்னை தாண்டி இரண்டு போக... எனக்குள் எதோ விபரீத அலாரம் அடிக்க... அவர்கள் பின்னால் நானும் போக....
அவர்கள் உள்ளே போய் அவனிடம் என்னவோ பேச எத்தனிக்க... அவன் எச்சி கையால் நீட்டி பேசி கொண்டிருந்தான்...

சரி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம் என்று முன்னால் போக, என் பின்னால் நின்றவர்கள் அதை தப்பாக புரிந்து எனக்கு முன்னாலையே போயி....

அப்புறமா, மூலையில் ஒரு கசங்கிய துணியாக இருந்தவன், முகத்தில் இருந்த ரத்ததை துடைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தான்...

வேளியே நின்ற எனக்கு... அட்ரெனலின் அதிகமாக சுரக்க ஆரம்பித்து... இது வரை எதிர்கொள்ளாத எதோ ஒன்றை எதிர்கொள்ள போகும் பயம்....

"டேய்.. அவன் பிரின்சிபால் ரூமுக்கு போறாண்டா.." என்றதும், வண்டியை கிளப்பி கொண்டு அங்கு போக அவன் பிரின்சிபால் ரூமை நோக்கி போக அவனை வேளீயே இழுத்து வந்த்து..
மீண்டும் ....
கல்லூரி வண்டியில் காத்திருந்த அனைத்து பெண்கள் முன்னாலையும் வைத்து... எங்கள் எல்லோர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து.....வீட்டிற்க்கு அனுப்பினோம்...
இருந்தாலும் என் மனதில் எதோ பயம் இருக்க முதல் வேலையாக அவன் பெயரிலையே ஒரு புகார் எழுதி ஆசிரியன் சந்திப்பில் இருந்த பிரின்சிபாளிடம் கொண்டு சென்றால்.. அங்கு அந்த இங்கிளீஸ் புரபசர்... " போன வருடம் இதே மாதிரிதான் என்னையும் அடித்தானுங்க..." என்று பிளாஸ் பேக்கை எழுக்க.. அவரை முறைத்து கொண்டு அவரவர் வீட்டிர்க்கு சென்றோம்...

அதிகாலை 6:00 மணிக்கே என் வீட்டு தொலைபேசி ஒலிக்க அதை எடுத்தால், கல்லூரி நண்பனில் ஒருவன்..." பேப்பர் , பார்த்தாயா????..."
"இல்லை".. நான்
"ராக்கிங் கொடுமையில் மாணவர் சித்திரவதை, 20 பெயரை போலிஸ் தெடுகிறது, மாணவர் மருத்துவமனையில் அனுமதி...." என்று அவன் வாசித்து காட்ட, எனக்கு தூக்கம் மொத்த்மாக போயிருந்தது...
"நம்ம பெயர் போட்டிருக்கா??" ... நான்
இல்லைடா...
"நான் உடனே வாறேன்"....

அடுத்த 2 மணி நேரத்தில், எங்கள் வருடத்தில் உள்ள மாணவர்களில் சுமார் 25 பேர், எங்கள் வழக்கமாக சந்த்திப்பு இடத்தில்...

இதுவரை என்ன செய்தாலும் பிரச்சினை கல்லூரிக்கு வேளியே போயிருக்கவில்லை, கல்லூரிக்கு வேளியே உள்ளவை கல்லூரிக்கும் வரவில்லை, அதனால் கையாளுவதில் சிரமம் இருக்கவில்லை, இந்த முறை எல்லாம் எதிராக மாறி இருப்பதை புரிய முடிந்தது...

கல்லூரியில் நடந்த பிரச்சினை ஒவ்வொன்றின்போதும் எங்கள் கல்லூரியில் இருந்த சில மூத்த பிரபஸர்களிடம் (எல்லாம் வேறு கல்லூரியில் இருந்து ரிடயர்ட் ஆனா பிரின்சிபால், புரபசர்கள்) சென்று ஆலோசனை கேட்பது வழக்கம்... இந்த முறையும் வழக்கம் தப்பாமல்....

கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலையை திறக்க முதல்வர் வருவதால், இந்த விஷயம் பெரிதாக வாய்ப்பில்லை என்றும், போலிஸ் பிரச்சினைகள் அதுவரை குறைவாக இருக்கும் என்று பொறி தட்டியதால் எப்படியும் இரண்டு நாளாவது நேரம் கிடைக்கும் என்று தெரிந்த்தால்... முதலில் பிரச்சினையை தீர்க்கும் முடிவோடு நண்பர்கள் எல்லோருக்கும் ... சிறு சிறு வேலையை கொடுத்து விட்டு நான் நம்ம அடி வாங்கின ஜூனியரை ( ஜாண்- என்று வைத்து கொள்வோம்)... சாமாதான படுத்த வழி இருக்குமா என்று தேட ஆரம்பிக்க.... என் சோதனை காலமும் ஆரம்பித்தது...

ஜாண் தனியாக இதை செய்ய முடியாது, இவனுடம் யாராவது இருக்கனும்... இல்லை என்றால் ஒரே நாளில் பேப்பர், போலிஸ், மருத்துவமனை சாத்தியம் இல்லை என்று உணர்ந்த்து... என் ஊரில் உள்ள நண்பர்களில் சிலரை மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்க... அவன் அவன் ஊரில் உள்ள ஒரு அரசியல் பிரமுகர் மூலம் செய்வதாக கூற... அவரை நோக்கி நமது ஆட்களை அனுப்ப... அவரும் மசிந்த்தார்... ஆனால் அவர் பேசியும் ஜாண் மசியவில்லை...
மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் அளவுக்கு அடியும் இல்லை, ஆனால் அவன் மருத்துவமனையில் இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து அவனை அங்குள்ள தெரிந்த மருத்துவர்களிடம் கூறி வேளீயேற்றினோம்....

போலிஸ் நடவடிக்கைகளை தடுக்க அரசியல்வாதிகளின் துனை தேவை பட, அதுவும் எளிதாக கிடைத்தது... எங்கள் பகுதி MLA, MP கள் எங்கள் நண்பர்கள் ஆனார்கள்.... அவர்கள் அலுவலகம் எங்கள் வீடு போல் ஆனாது... இதில் சிலர் கல்லூரி நிர்வாகத்தில் பங்காக இருந்த்தால் ... கல்லூரியும் எங்களுக்காக பேச வேண்டிய கட்டாயம்.... ஆனால் பிரச்சினை மட்டும் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருந்தது... இதை செய்யும் சூத்திரதாரி யார் எம்பது த்ரியாமல் இருந்ததால்.. பிரச்சினையும் தீர வழி தெரியவில்லை... ஆனால் பலர் இந்த பிரச்சினையை தீர்ப்பதாக சொல்லி "ஆளுக்கு 2 லச்சம் கொடுங்கள்.. போதும்" என்று பேரம் மட்டும் பேசினார்கள்....

ஆனாலும் நாங்கள் வீட்டில் தங்கவில்லை... இதுவரை பாத்திராத நண்பர்களுடன் கூட இரவு தங்கினோம்... செப்டம்பர் 11, என்னுடைய பிறந்த நாள்... இரவு முளுவதும் உறக்கம் வரவில்லை.... திரும்பி படுத்தால் நண்பன் ஒருவன் பயத்தால் பெருமூச்சு விட்டு கொண்டிருந்தான்.... சாப்பிட கூட பிடிக்கவில்லை... மனம் பயத்தில் செத்து போயிருந்தது... வாழ்க்கை முடிந்து போகுமோ என்ற பயம்..... காலையில் எழும்பி பேப்பரை வாங்கி பெயர் வந்திருக்கிறதா என்று தேடி.... மனது மிகவும் சோர்ந்த்து போயிருத்தது.... வீட்டில் உள்ளவர்களுக்கு எதையும் யாரும் தெரிவித்திருக்கவில்லை.... அவர்களிடம் சொல்லி அவர்களையும் கஷ்ட படுத்தவும் மனம் வரவில்லை....

அன்று நண்பன் ஒருவன் வந்து, நம்முடைய ஜூனியர்கள் தாம் நம் பெயரை பட்டியல் இட்டு போலிசிடம் கொடுத்திருக்கிறார்கள் என்றும், ஆனால் அதில் என் பெயர் மட்டும் இல்லை என்பதும் (ஆச்சரியாமாக இருந்தாலும் ... காரணமாகதான்) ... இந்த பிரச்சினையின் சூத்திரதாரி ரவுடியாக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்த ஒருவரை சொல்ல...
"சரி வா என்று நண்பர் இருவரிடம் அந்த அரசியல்வாதியை பார்க்க சென்றேன்..."

அரைமணி காத்திருப்பிற்க்கு பின் வந்தார் (ன்)... "என்ன பெஞ்சமின், இந்த பக்கம் பாக்கிறேன் என்று ஆச்சிரிய பட.."

நான் பிரச்சினையை கூற.... சிரித்து கொண்ட "நான் தான்.. எல்லாம் நான் தான்..."

" வீடு எரிந்த ஒரு காலில்லாத பெண்ணையும், உன்னுடம் அழைத்து வந்து... கலக்டரிடம் மனு கொடுத்து அவளுக்கு பணம் கிடைக்க உதவி இருக்கிறாய்... அப்படி பட்ட உனக்கு நான் உதவாமலா.... ஆனால், அன்று என்னிடம் வந்து விட்டு காப்பி குடிக்க மறுத்த நீ, இன்று குடிப்பாய் என்று நினைக்கிறேன்" என்று எனக்கு உத்தரவிட... அந்த காப்பியை குடித்தேன்....

விசயம் அறிந்த என் நண்பர்கள் மற்ற அரசியல்வாதிகளையும் அங்கு அழைத்து வர... அங்கு பிரச்சினையை தீர்க்க எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டு என்று பேச்சு போக ஆரம்பித்தது....
ஆனால் பிரச்சினை தற்க்காலிகமாக தீர்ந்த்திருந்தது......

இரண்டு நாட்களில் கொஞ்சம் மறந்து போயிருந்தது... இந்த பிரச்சினையினால் எங்கள் கூட்டம் குறைந்த்திருந்தது.. மந்தமாயிருந்த்து... மீண்டும் கல்லூரிக்கு போக ஆரம்பித்தோம்... அவனும் வர ஆரம்பித்தான்...

இரண்டு வாரம் கழிந்திருந்தது.. எல்லாம் மறந்து போயிருந்தது... அடுத்த வகுப்பில் போய் கடலை வறுத்து கொண்டிருந்த என்னை எங்கள் புரபஸர்களில் ஒருவர் தேடுவதாக கூற... நான் வேளியே வர அவர் எனக்காக காத்து கொண்டிருந்தார்...என்னிடம் வந்து..
"அந்த ராக்கிங் பிரச்சினை மீண்டும் முளை விட்டுள்ளது, CM ஆபிசில் இருந்து உங்களை அரஸ்ட் பன்ன சொல்லி ஃபேக்ஸ் வந்து இருக்காம், அதனால் போலிஸ் வந்து இருக்கு... நீங்கள் எல்லாம் கல்லூரியின் பின் வழியாக ஓடிவிடுங்கள், நாங்கள் நீங்கள் கல்லூரிக்கு வரவில்லை என்று சொல்லிவிடுகிறோம்" என்று கூற...
உடனே எனக்கு அது அபத்தமாக பட..." இன்னைக்கு ஓடி விடலாம் ... ஆனால் நாளைக்கு????" என்று வினாவ....
பதில் இல்லை..
" சரி, நானே வந்து இன்ஸ்பெக்டரை சந்திக்கிறேன் என்று கூற என்னை அழைத்து சென்றார்...

இன்ஸ்பெக்டர், ஒரு நல்ல ஜேண்டிமேனாக நடந்து கொண்டார்... நான் நடந்ததை ஒரு விதமாக கூறி மூடித்தேன்... (எல்லாம் நமக்கு பங்கம் இல்லாமல் தான்)... அவர் சரி பிரச்சினை உங்களால் சரி செய்யமுடியும் என்றால் எவ்வளவு நேரம் வேண்டும் என்றார்....
நான் பண விஷயத்தை கூறி....ஒரு வாரம் கேட்க....
நம்ம பிரின்சிபால்.. " சாரே .. வேணுமெங்கில் இவரை பிடிச்சேண்டு போ" என்று சொல்ல...
இன்ஸ்பெக்டர், போலிஸ் வேனை போன் செய்து வர சொல்ல ... நான் காலில் விழாத குறையாக .. அன்று மாலை 5:00 மணி வரை நேரம் கேட்க அவரும் சம்மதித்தார்.... அப்போது மணி 11:00 ஆகி இருந்தது....

நான் திரும்பி என் வகுப்புக்கு வர விஷயம் அறிந்த நண்பர்கள் அங்கு எனக்காக காத்திருந்தனர்..... அவர்களை எங்களுக்கு தெரிந்த பஞ்ஜாயத்து தலைவர்கள் முதல் அர்சியல் தலைவர்கள் வரை எல்லொரையும் அழைத்து கொண்டு ... பிரச்சினைக்கு காரணமான அரசியல்வாதி வீட்டுக்கு வர சொல்லிவிட்டு ,...நான் ஜாணின் வகுப்பை நோக்கி நடந்தேன்....

அவனை நான் வேளியே வரும்படி அழைக்க, வகுப்பில் இருந்த ஆசிரியை இதற்க்கு முன் ஒரு மானவனை இதேபோல் அழைத்து அடித்ததை நினைவுபடுத்தி மறுத்தார்..... நான் அவரை அழைத்து நிலமையை சொல்ல , அவர் ஜாணை என்னோடு அனுப்பினார்....
நான் ஜானை அழைத்து கொண்டு என்னுடைய பைக்கில் போகும் போது தான்.... என் வாழ்வில் ஒருவரை முதல் முதலாக கவுன்சிலிங் செய்ய ஆரம்பித்தேன்.... அது வரை சமாதானத்துக்கு மறுத்தாவன் சம்மதித்தான்....

அரசியல்வாதியின் வீட்டில் சென்றால் அவர் அங்கு இல்லை... எப்படியோ நண்பர்கள் தெடி கண்டுபிட்த்து அவரிடம் விஷயத்தி சொல்ல... அவர் நம்மிடம் ஒரு ஒப்பந்த கடிதம் எழுதி வாங்கிவிட்டு... மீண்டும் போலிஸ் நிலையம் சென்றால்.. இன்ஸ்பெக்டர் எனக்காக காத்துகொண்டிருக்க.... அங்கு ஒரு சமாதான ஒப்பந்தம் மீண்டும் எழுதி பிரச்சினையை தீர்த்து கொண்டோம் .....

இந்த பிரச்சினை, எதோ யோசிக்காமல், தேவையில்லாமல் ஒரு அப்பாவியை அடிக்க.... நான் பட்ட கஷ்டங்கள்... இன்றும் நான் அந்த நினைவுகளை அசையிட்டால் மனம் ஒரு நிமிடம் ஆட்டம் காணும், அந்த நேரத்தில் அதை ச்ம்மாளித்தாலும்... இன்றும் எனக்கு அந்த பயம் மாறவில்லை....

அதன் பிறகு மிக அவசியம் இல்லாமல் கையை நான் நீட்டி அடித்திருக்கவும் இல்லை....

இளசு
26-02-2006, 04:47 AM
இனிய பென்ஸ்,

இதை இன்று(ம்) எழுதி வெளியிட மனத்திண்மை வேண்டும்.
தவறை அப்பட்டமாய் ஒத்துக்கொள்ள நேர்மை வேண்டும்.
கோர்வையாய்ச் சொல்ல எழுத்துவன்மை வேண்டும்.


முன்றும் சரிவிகிதத்தில் அமைந்ததால் விளைந்த படைப்பு.


முழுதும் படித்ததும் ----

பெருமூச்சு, வருத்தம், மகிழ்ச்சி என மூன்று உணர்வுகள் ஒரே நேரத்தில்....


அலைவரிசைகள், அதிர்வுகள்..... பல தளங்களில் ஒத்தபடி..

அதியசத்தபடி ... உங்கள் ரசிகனாய் நான்..

அசத்துறீங்க.. பென்ஸ்...

aren
26-02-2006, 04:09 PM
பென்ஸ், எப்படி உங்களால் இப்படி உண்மைகளை ஒத்துக்கொள்ள முடிகிறது.

நான் படிக்கும் காலத்தில் பண்ணாத அக்கிரமங்கள் கிடையாது. இருந்தாலும் அதை வெளியே சொல்ல மனது மறுக்கிறது.

படித்தது வேறு கல்லூரியாக இருந்தாலும் நான் அட்டெண்டன்ஸ் கொடுத்தது பச்சையப்பன் கல்லுரி. அங்கே ஹாஸ்டலில் எனக்கென்று ரூம் இல்லாவிட்டாலும் ரூம் இருப்பவனைவிட அதிக மதிப்புடன் இருப்பேன். அங்கே செய்யாத அக்கிரமங்கள் கிடையாது. ஆனால் அதை நினைத்து பார்த்தாலே நெஞ்சு கொஞ்சம் வலிக்கிறது.

நீங்கள் தைரியமாக வெளியே சொல்கிறீர்கள். பாராட்டுக்கள்.

எனக்கும் ஒரு நாள் தைரியம்வந்து நானும் வெளியே சொன்னாலும் சொல்லலாம்.

இளந்தமிழ்ச்செல்வன்
26-02-2006, 06:53 PM
பென்ஸ் சொல்ல வார்த்தைகள் ஏதும் வரவில்லை. இளசு அழகாய் கவிதையாய் சொல்லிட்டார், ஆரென் கலக்கல் பச்சையப்பாஸ் கதைய எப்போ சொல்வாரோ தெரியல. தலை நீங்கள் எதுனா எடுத்து உடுவீங்களா தெரியல.

ஆனா நீங்க இருக்கிற பெங்களூரில் குமாரசாமி லேஅவுட்டில் எங்கள் கல்லூரி வாழ்க்கை மனதில் வந்து பல நினைவுகளை கிளப்பி விட்டுவிட்டது. போதாதற்கு இன்று காலை இரு நன்பர்களுடன் சாட்டியதும், மாலை ஒருவருடன் பேசியதும் இரவில் உங்கள் பதிவை படித்ததும் மனதிற்குள் ஓடும் எண்ணங்களும் உணர்வுகளும் சொல்லத்தெரியவில்லை.

உணர்ச்சிப் போராட்டத்தில் கோர்வைகிடைக்கவில்லையாதலால் நிகழ்ந்த சம்பவங்களை சுருக்கமாகவும் பதிக்கமுடியவில்லை. சீனியர் ஜூனியர், காவிரி கலாட்டா, இந்து முஸ்லிம் பிரச்சினை, இருந்த ஏரியாவில நடந்த ரவுடியிஸம் அனைத்தும் நான் வளர்ந்த சூழலுக்கும் முற்றிலும் மாறுபட்டவை. ஆனால் வாழ்க்கையை கிட்டத்தட்ட உணர்த்தியவை. அதற்காகவே இன்றும் பெங்களூரை எங்கள் ஊர் என்றே சொல்வேன். பலருக்கும் மலரும் நினைவுகளை இந்தப் பதிவு கிளப்பும் என்பது நிச்சயம்.

மக்கா மத்தவுக எல்லாம் என்னென்ன கதை சொல்லப் போறீகளோ...????????

pradeepkt
27-02-2006, 04:01 AM
அடேயப்பா.
பென்ஸூ இத்தனை வேலை செஞ்சிருக்கீரா...
நானும் சின்ன வயதில் சின்னச் சின்ன தப்புகள் செய்திருக்கிறேன் (பெரிய பெரிய தப்புகள் செய்ய ஆசை இருந்தாலும் தைரியம் இருந்ததில்லை :D) அவற்றை ஒத்துக்கொள்ளவும் ஒரு தனித் துணிவு வேண்டுமய்யா!
தவறு செய்வதில் இல்லை பிரச்சினை, அது தவறு என்று அறிந்த பின்னும் திருத்திக் கொள்ளாதிருப்பதே வேதனை! அந்த வகையில் நீங்கள் தங்கம்!

gragavan
27-02-2006, 04:07 AM
பென்ஸ், நீங்கள் இப்பொழுது மன்னிப்புக் கேட்டு விட்டீர்கள். சரிதான். தவறை என்றைக்காவது உணரத்தான் வேண்டும்.

ஆனாலும் கவுன்சிலிங் என்ற சொல்லை நீங்கள் பயன்படுத்தி இருப்பது பெரிய தவறு. நீங்கள் அவனைக் கவுன்சிலிங் cஎய்ய வில்லை. உங்களைக் காப்பாற்றிக் கொள்ள கெஞ்சியிருக்கின்றீர்கள். அவ்வளவுதான். கவுன்சிலிங் என்பது மிகப் பெரிய பணி. தொண்டு.

இன்று நீங்கள் நண்பர்...ஆகையால் நதி மூலம் நாங்கள் பார்க்கவில்லை. பார்க்கவும் மாட்டோம்.

ஆனால் என்னைப் பொருத்த வரையில் என் கருத்துகளைச் சொல்கிறேன். எங்கள் பள்ளியிலும் கல்லூரிகளிலும் இந்த மாதிரி மாணவர்கள் உண்டு. அவர்களால் நல்லது என்று நடந்ததே இல்லை. வீன் பிரச்சனைகள். தேவையற்ற குழப்பங்கள். மற்றவர்களுக்கும் இடைஞ்சல்.

இதில் பாருங்கள். அவர்களில் ஒருவன் என்னுடைய நெருங்கிய நண்பன். என்னோடு இருக்கும் பொழுது அவன் நடந்து கொள்வதற்கும் அவர்களோடு இருக்கும் பொழுது அவன் நடந்து கொள்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. சிகரெட்டை ஊதித் தள்ளுவான். ஆனால் நான் இருந்தால் குடிக்க மாட்டான். அவனுக்கு நான் ஒரு பரிசு கொடுத்தேன். ஒரு அழகான சிகரெட் கேஸ். அதை நான் குத்தேன் என்பதற்காகவே அவன் அதில் சிகரெட் வைக்கப் பயன்படுத்தவில்லை.

இந்த நண்பனால் அவர்களும் எனக்குக் கொஞ்சம் பழக்கம் ஆனார்கள். ஒரு ஒற்றுமை எல்லாருக்கும் இருந்தது. ஆமாம். வீட்டில் தண்ணீர் தெளித்து விடப்பட்டவர்கள் என்று சொல்லலாம். ஏதாவது ஒரு பிரச்சனை.

ஆனாலும் பொதுவாக முரட்டு மாணவர்கள்களால் யாருக்கும் ஒரு நன்மையும் இருந்தது இல்லை என்பதே உண்மை.

இப்பொழுதாவது திருந்தினீர்களே என்று மகிழ்சி. வாழ்க வளமுடன்.

மதி
27-02-2006, 04:29 AM
இம்புட்டு அலும்பு செஞ்சிருக்கீயளா..?
ஹ்ம்ம்....
செஞ்சத ஒத்துக்கிட்டீங்கல..அதுவே பெரிய விசயம்...

பென்ஸ்
27-02-2006, 05:39 AM
இதை இன்று(ம்) எழுதி வெளியிட மனத்திண்மை வேண்டும்.
தவறை அப்பட்டமாய் ஒத்துக்கொள்ள நேர்மை வேண்டும்.
கோர்வையாய்ச் சொல்ல எழுத்துவன்மை வேண்டும்.


நான் ஒன்றும் நாட்டின் நல்லதுக்காக இதை செய்து விட்டு சுயசரிதை எழுதவில்லையே...
என் வாழ்வில் நடந்த சம்பவம்... பலசமயம் என்னில் கனவுகளாய் வந்து பயமுறுத்தும்...
அப்போது ஒரு பயம்... இனம்புரியாத பயம்...
பயம் எல்லோருக்கும் உன்டுதானே???
குருதிபுயலில் கமல் சொல்லுவது போல் "வீரன் என்பதே பயம் இல்லாது போல் நடிப்பது" தானே என்றும் தோன்றும்...
ஆனால்... இல்லை இல்லை,
பயம் தரகுடியவற்றை தைரியமாக எதிர்கொள்வது....
அதற்க்கு என்ன செய்யலாம் என்று நினைத்தபோது, இதை சரி செய்ய மன்றம் ஒரு வடிகாலாய்,,,

A form of self-disclosure....

மனம் திறக்க இடமளித்தமைக்கு நன்றி....

sarcharan
27-02-2006, 05:43 AM
ஹ்ம்ம் பென்ஸூ
கட்டதுரை கெட்டப்பெல்லாம் போட்டுருக்கிய....

gragavan
27-02-2006, 05:50 AM
நான் ஒன்றும் நாட்டின் நல்லதுக்காக இதை செய்து விட்டு சுயசரிதை எழுதவில்லையே...
என் வாழ்வில் நடந்த சம்பவம்... பலசமயம் என்னில் கனவுகளாய் வந்து பயமுறுத்தும்...
அப்போது ஒரு பயம்... இனம்புரியாத பயம்...
பயம் எல்லோருக்கும் உன்டுதானே???
குருதிபுயலில் கமல் சொல்லுவது போல் "வீரன் என்பதே பயம் இல்லாது போல் நடிப்பது" தானே என்றும் தோன்றும்...
ஆனால்... இல்லை இல்லை,
பயம் தரகுடியவற்றை தைரியமாக எதிர்கொள்வது....
அதற்க்கு என்ன செய்யலாம் என்று நினைத்தபோது, இதை சரி செய்ய மன்றம் ஒரு வடிகாலாய்,,,

A form of self-disclosure....

மனம் திறக்க இடமளித்தமைக்கு நன்றி....பெஞ்சு....செஇதது தவறுதான். ஆனால் அது இப்பொழுது புரிந்து விட்டது. மனமும் திருந்தி விட்டது. நன்றே. இனி நடப்பவைகள் நன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை. உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.
நமக்கெல்லாம் மனதில் இருப்பதை யாரிடமாவது சொல்ல வேன்டும். உள்ளேயே பூட்டி வைத்திருந்தால் நல்லது அல்ல. எனக்கும் சில நண்பர்கள் உண்டு. அவர்களிடம் மறைக்காதது ஒன்றில்லை. நீங்கள் மன்றத்தை நட்பாகக் கருதுவது எங்களுக்குப் பெருமைதான்.

பென்ஸ்
27-02-2006, 05:57 AM
நான் படிக்கும் காலத்தில் பண்ணாத அக்கிரமங்கள் கிடையாது. இருந்தாலும் அதை வெளியே சொல்ல மனது மறுக்கிறது.



பலருக்கும் மலரும் நினைவுகளை இந்தப் பதிவு கிளப்பும் என்பது நிச்சயம்.

ஆரென்.. இதசெ... உங்கள் நினைவுகளை இந்த பதிவு தூன்டிவிட்டதில் எனக்கு மகிழ்ச்சி...

ஆரென், பச்சையப்பா என்று சொல்லி நீங்கள் என்னுடிய வேறு நினைவுகளை தூன்டிவிட்டீர்கள்...:D :D :D

இதசெ... பெங்களுரை நானும் இப்போது எங்க ஊர் என்றுதான் சொல்லுறேன்....

பிரதிப்...
தவறை ஒத்து கொண்டேன்... சரி...
மன்னிப்பும் கேட்டுவிட்டேன் சரி...
அடிவாங்கியவனும் என்னிடம் நண்பனாக மாறிவிட்டான் சரி...
ஆனால் பாதிப்புகள்.... அவனுக்கு நான் கொடுத்த மன்கஸ்டம்... எங்களுக்கு எற்ப்பட்ட கஸ்டம்... எல்லாம் இன்னும் இருக்கிறது அல்லவா...
முதலிலையே நான் கொஞ்சம் யோசித்திருக்கலாம் அல்லவா???

மதி.. சரவணன்... நன்றி

மதி
27-02-2006, 06:08 AM
தவறு செய்தவன் திருந்தி விட்டால் இனி தன் வாழ்நாளில் அந்த தவறினை ஒருபோதும் செய்ய மாட்டான்..
ஆனால் தவறினை செய்யாதவன் இனி செய்யமாட்டான் என சொல்வதற்கில்லை..
அந்த வகையில் நீர்....!!

பென்ஸ்
27-02-2006, 06:40 AM
பென்ஸ், நீங்கள் இப்பொழுது மன்னிப்புக் கேட்டு விட்டீர்கள். சரிதான். தவறை என்றைக்காவது உணரத்தான் வேண்டும்.

ஆனாலும் கவுன்சிலிங் என்ற சொல்லை நீங்கள் பயன்படுத்தி இருப்பது பெரிய தவறு. நீங்கள் அவனைக் கவுன்சிலிங் cஎய்ய வில்லை. உங்களைக் காப்பாற்றிக் கொள்ள கெஞ்சியிருக்கின்றீர்கள். அவ்வளவுதான். கவுன்சிலிங் என்பது மிகப் பெரிய பணி. தொண்டு.

இன்று நீங்கள் நண்பர்...ஆகையால் நதி மூலம் நாங்கள் பார்க்கவில்லை. பார்க்கவும் மாட்டோம்.
.

ராகவன்... நாம் எப்போதும் அடுத்தவர்கள் நாம் விரும்புவது போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்....
ஒருவன் செய்தது தவறா இல்லை சரியா என்று நான் நம்மை வைத்து தீர்மானிக்கிறொம்....

நான் அன்று செய்தது என் நண்பர்கள் எல்லோருக்கும் சரியாக பட்டது... ஆனால் பாதிக்கபட்டவனுக்கும், அவனது நண்பர்களுக்கும் தவறாக பட்டது...

மத பணி செய்யும் ஒருவருக்கு அவர் செய்வது தொண்டு, அதுவே அடுத்த மததை சார்ந்தவருக்கு குற்றம் அல்லவா....???
இப்படி இருக்க நான் செய்தது உன்மையிலையே தவறு என்று நினைக்கிறீர்களா???

ஒரு உயிரை வதம் செய்வது தவறு என்றால் தவறு செய்தவர்களை தன்டிப்பதை ஏன் தவறாக இல்லாமல் இருக்கிறது...???

நான் அவன் நிலையில் இருந்து இன்று சிந்திப்பதால் எனக்கு நான் அன்று செய்தது தவறாக படுகிறது... என் மனமும் என்னை கண்டிக்கிறது.

கவுன்சிலிங்... ம்ம்ம். நீங்கள் அதை ஒரு உயர்ந்த பணியாக பார்க்கிறீர்கள், சந்தேகமே இல்லை, அதனாள் தான் அதை நானும் ஒரு வார இறுதி வேலையாக பார்க்கிறேன்... நான் அந்த வார்த்தையை தவறாக பயன்படுத்தவில்லை...

மேலும் உன்னையில் ராகவன், நான் அவனிடம் கெஞ்சவில்லை, அவன் சம்மதிக்காமல் இருந்திருந்தால், நானும் அவனும் எதாவது ஒரு லாரி அல்லது பஸ்சுக்கு அடியில் இருந்திருப்போம்... :D :D :D :D



இந்த நண்பனால் அவர்களும் எனக்குக் கொஞ்சம் பழக்கம் ஆனார்கள். ஒரு ஒற்றுமை எல்லாருக்கும் இருந்தது. ஆமாம். வீட்டில் தண்ணீர் தெளித்து விடப்பட்டவர்கள் என்று சொல்லலாம். ஏதாவது ஒரு பிரச்சனை.


மேலும்... இளமையில், நம்மை புரிந்து, நன் உனர்வுகளை புரிந்து செம்மையாக பிள்ளைகளை வளர்க்கும் பேற்றோர் கிடைப்பது அரிது... அந்த பாக்கியம் உங்களுக்கு... எனக்கும் :) :)

ஆனால் அனேகபெருக்கு கிடைப்பதில்லை.... டீன் ஏஜில் நுளையும் பிள்ளைகளை அடித்து கட்டுபாட்டினும் வைக்க நினைக்கும் பேற்றோர், அவர்களது உணர்வுகளை புரியாமல் கடுப்படிக்கும் இவர்களை பிள்ளைகள் எதிரியாகதான் பார்ப்பர்... இது அந்த வயதில் கண்டிப்பாக இருக்கும்... இதனாள் வரும் வருத்தம்தானெ இந்த "தண்ணி தெளித்து" விடப்படும் புராணம்.. இதற்க்காக அவர்களை குறி சொல்வதா, இல்லை அவர்களை பேற்றோரை குறை சொல்ல்வதா????


ஆனாலும் பொதுவாக முரட்டு மாணவர்கள்களால் யாருக்கும் ஒரு நன்மையும் இருந்தது இல்லை என்பதே உண்மை.


முரட்டு மாணவர்கள்.. யார்..???
வளைந்து கொடுக்காமல் இருப்பதா, இல்லை புரட்சி செய்வதா????
தீமைக்கு எதிராக கொடிபிடிப்பதா????

ஒரு மாணவன், தன்னில் வைத்திருக்கும் தீ பொறியை தீபம் ஏற்ற வைக்காமல் இருக்கும் வரை அது வெந்து வெதும்பி, எரிமலையாய் எதோ ஒரு ரூபத்தில் கொட்டும்...
உன் கண்முன்னால் ஒரு அசிங்கம் (என்ரு உனக்கு தொண்றுவதை) நடந்தாள் பார்த்து கொண்டு சும்மா இருந்தால் அது நல்லதா... நியாயத்தை தட்டிகேப்பதிலும் ஒரு முரட்டு குணம் இருப்பதில் அவசியம் இருக்கிறதே....
ஆனால் உங்கள் சிந்தனைபடியே, அதன் அளவு (intensity of violence) ரெம்பவே முக்கியம்...

பகத் சிங்கும் , கோட்சேயும் செய்தது அவரவர் நிலையில் இருந்த சரியான விஷ்யங்கள் தாமே???
நாம் தானே அதில் ஒன்றை கொலை என்றும் ஒன்றை வீரம் என்றும் வித்தியாசமாக்கி காட்டுகிறொம்....
அன்று பகத்சிங், ஆங்கிலயோருக்கு துரோகி...
கோட்சே, அவரை சார்ந்தவர்களுக்கு மாவீரன்...
முரட்டுதனம் ஒரு இருமுனைவாள்....

நான் இந்த பதிவை கொடுத்ததில், உங்கள் பதில் எனக்கு ஒரு இதமான விளைவு (நன்றி:இளசு) ... ஒரு சிறந்த நண்பனாக கருதி தங்கள் கருத்துகளை இட்டமைக்கு நன்றி...

gragavan
27-02-2006, 01:34 PM
ராகவன்... நாம் எப்போதும் அடுத்தவர்கள் நாம் விரும்புவது போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்....
ஒருவன் செய்தது தவறா இல்லை சரியா என்று நான் நம்மை வைத்து தீர்மானிக்கிறொம்....

நான் அன்று செய்தது என் நண்பர்கள் எல்லோருக்கும் சரியாக பட்டது... ஆனால் பாதிக்கபட்டவனுக்கும், அவனது நண்பர்களுக்கும் தவறாக பட்டது...

மத பணி செய்யும் ஒருவருக்கு அவர் செய்வது தொண்டு, அதுவே அடுத்த மததை சார்ந்தவருக்கு குற்றம் அல்லவா....???
இப்படி இருக்க நான் செய்தது உன்மையிலையே தவறு என்று நினைக்கிறீர்களா??? பெஞ்சமின் நீங்கள் செய்தது தவறா என்று எனக்குத் தெரியாது. நீங்கள் எழுதியதை வைத்துப் பார்த்தால் நீங்கள் செய்தது சரியில்லை என்று தோன்றுகிறது. போர் என்பது போர்க்களத்தில் மட்டும் தவறாகாது. கணவனே தெய்வம் என்று பூஜித்தாலும் கட்டிலில் கால் பட்டாலும் குற்றமாகாது. ஒரு செயல் அது நடக்கும் சூழலைப் பொறுத்தே சரியா தவறா என்று சொல்ல முடியும். மேலும் நம்முடைய நண்பர்கள் எப்பொழுதும் நம் பக்கம் பேசுவதற்கே வாய்ப்புள்ளது. நண்பர்கள்தான் நமது குற்றங்களையும் சொல்ல வேண்டும் என்றாலும் பெரும்பாலான சமயங்களில் நமது தவறுகள் எதிரிகளாலேயே சொல்லப்படுகின்றன.



ஒரு உயிரை வதம் செய்வது தவறு என்றால் தவறு செய்தவர்களை தன்டிப்பதை ஏன் தவறாக இல்லாமல் இருக்கிறது...???

நான் அவன் நிலையில் இருந்து இன்று சிந்திப்பதால் எனக்கு நான் அன்று செய்தது தவறாக படுகிறது... என் மனமும் என்னை கண்டிக்கிறது.

தவறு செய்வதைத் தண்டிப்பது ஏன் தவறில்லை என்று கேட்பது செய்த தவறை நியாயப்படுத்துவது போலவே. வேண்டாம் பெஞ்சமின். அந்த வழியில் சிந்திக்கத் தொடங்கினால் எதுவுமே சரிதான் என்று ஆகும்.



கவுன்சிலிங்... ம்ம்ம். நீங்கள் அதை ஒரு உயர்ந்த பணியாக பார்க்கிறீர்கள், சந்தேகமே இல்லை, அதனாள் தான் அதை நானும் ஒரு வார இறுதி வேலையாக பார்க்கிறேன்... நான் அந்த வார்த்தையை தவறாக பயன்படுத்தவில்லை...

இல்லை பெஞ்சு இன்னமும் நீங்கள் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாகவே நினைக்கிறேன். வேண்டுமானால் Convincing என்று சொல்லலாம். மிகவும் பொருத்தமான சொல்.



மேலும் உன்னையில் ராகவன், நான் அவனிடம் கெஞ்சவில்லை, அவன் சம்மதிக்காமல் இருந்திருந்தால், நானும் அவனும் எதாவது ஒரு லாரி அல்லது பஸ்சுக்கு அடியில் இருந்திருப்போம்... :D :D :D :D

அட மக்கான்! நல்லவேள கடவுள் ஒங்க ரெண்டு பேத்தையும் காப்பாத்துனாரு.



மேலும்... இளமையில், நம்மை புரிந்து, நன் உனர்வுகளை புரிந்து செம்மையாக பிள்ளைகளை வளர்க்கும் பேற்றோர் கிடைப்பது அரிது... அந்த பாக்கியம் உங்களுக்கு... எனக்கும் :) :)
உண்மைதான் பெஞ்சு. நமக்கு நல்ல பெற்றோரைக் கொடுத்ததிற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். ஆனாலும் பத்தாது.



ஆனால் அனேகபெருக்கு கிடைப்பதில்லை.... டீன் ஏஜில் நுளையும் பிள்ளைகளை அடித்து கட்டுபாட்டினும் வைக்க நினைக்கும் பேற்றோர், அவர்களது உணர்வுகளை புரியாமல் கடுப்படிக்கும் இவர்களை பிள்ளைகள் எதிரியாகதான் பார்ப்பர்... இது அந்த வயதில் கண்டிப்பாக இருக்கும்... இதனாள் வரும் வருத்தம்தானெ இந்த "தண்ணி தெளித்து" விடப்படும் புராணம்.. இதற்க்காக அவர்களை குறி சொல்வதா, இல்லை அவர்களை பேற்றோரை குறை சொல்ல்வதா????

எனக்கும் தெரியவில்லையே!



முரட்டு மாணவர்கள்.. யார்..???
வளைந்து கொடுக்காமல் இருப்பதா, இல்லை புரட்சி செய்வதா????
தீமைக்கு எதிராக கொடிபிடிப்பதா????

ஒரு மாணவன், தன்னில் வைத்திருக்கும் தீ பொறியை தீபம் ஏற்ற வைக்காமல் இருக்கும் வரை அது வெந்து வெதும்பி, எரிமலையாய் எதோ ஒரு ரூபத்தில் கொட்டும்...
உன் கண்முன்னால் ஒரு அசிங்கம் (என்ரு உனக்கு தொண்றுவதை) நடந்தாள் பார்த்து கொண்டு சும்மா இருந்தால் அது நல்லதா... நியாயத்தை தட்டிகேப்பதிலும் ஒரு முரட்டு குணம் இருப்பதில் அவசியம் இருக்கிறதே....
ஆனால் உங்கள் சிந்தனைபடியே, அதன் அளவு (intensity of violence) ரெம்பவே முக்கியம்...

தீமைக்கு எதிராகக் கொடி...செடி எல்லாம் சரி. நீங்கள் எந்தத் தீமைக்கு எதிராகக் கொடி பிடித்தீர்கள் என்று சொல்லவே இல்லையே. உங்கள் பதிவைப் படித்துப் பார்த்த வரையில் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலம் தெரியவில்லையே. ஒருவேளை அப்படி இருந்து நீங்கள் விளக்கியிருந்தீர்கள் என்றால் நான் நீங்கள் தவறு செய்தீர்கள் என்று சொன்னது தவறு.



பகத் சிங்கும் , கோட்சேயும் செய்தது அவரவர் நிலையில் இருந்த சரியான விஷ்யங்கள் தாமே???
நாம் தானே அதில் ஒன்றை கொலை என்றும் ஒன்றை வீரம் என்றும் வித்தியாசமாக்கி காட்டுகிறொம்....
அன்று பகத்சிங், ஆங்கிலயோருக்கு துரோகி...
கோட்சே, அவரை சார்ந்தவர்களுக்கு மாவீரன்...
முரட்டுதனம் ஒரு இருமுனைவாள்....

நான் இந்த பதிவை கொடுத்ததில், உங்கள் பதில் எனக்கு ஒரு இதமான விளைவு (நன்றி:இளசு) ... ஒரு சிறந்த நண்பனாக கருதி தங்கள் கருத்துகளை இட்டமைக்கு நன்றி...நல்லது பெஞ்சு. நானும் ஒரு நட்புடந்தான் இதை இட்டேன். முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பதே நட்பு...இல்லையா! :)

mkmaran
28-02-2006, 05:46 AM
இனிமேல் நீங்க வெறும் பென்ஸ் இல்லை, அடேங்கப்பா...பென்ஸ்!

உள்ளிருக்கும் சிங்கம்
உறங்கிகொண்டிருக்கும் துணிச்சலில்
மனம் திறந்த
மனசாட்சியே நீ வாழ்க!

(ம்ம்ம்ம்....கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கறது நல்லது, கோபக்கார பென்ஸ்!:D )

gragavan
28-02-2006, 06:57 AM
இனிமேல் நீங்க வெறும் பென்ஸ் இல்லை, அடேங்கப்பா...பென்ஸ்!

உள்ளிருக்கும் சிங்கம்
உறங்கிகொண்டிருக்கும் துணிச்சலில்
மனம் திறந்த
மனசாட்சியே நீ வாழ்க!

(ம்ம்ம்ம்....கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கறது நல்லது, கோபக்கார பென்ஸ்!:D )அட என்னங்க மாறன். அவரு கோவக்காரரா இருந்ததெல்லாம் அப்போ. இப்போ அவரு தங்கக் குடம். நல்லா அமைதியா இருக்காரு. எதுவும் செய்யனும்னாலும் நிறுத்தி நிதானமா சிறப்பா செய்வாரு.

தாமரை
01-03-2006, 08:05 AM
இதைப் படிக்கும் போது எங்கள் கல்லூரியில் நடந்தது நினைவுக்கு வருகிறது..

எங்களுடைய 3 ஆம் ஆண்டு துவங்கிய காலமது. வருட ஆரம்பத்திலேயே 2 ஆம் ஆண்டு மாணவர்களில் சிலர்,"நாம் சீனியர் ஆகி விட்டோம், இனி எவனுக்கும் பணிய வேண்டிய அவசியமில்லை" என திரிந்தனர்.

ஒரு புதன்கிழமை மதியம், கேண்டீனில் மதிய உணவிற்காக 3 மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த 2 ஆம் ஆண்டு மாணவன் ஒரு சேரை எடுக்கப் பார்க்க, வை ஆள் வரும் என ஒரு மாணவன் சொன்னான்,

வந்த பின்னாடி பாக்கலாம் என்று அவன் மீண்டும் எடுக்கப் பார்க்க சின்ன வாய்த்தகராறு.

அன்று மாலை, 7 மணிக்கு அந்த 2 ஆம் ஆண்டு மாணவனின் ஒரு நண்பனை அழைத்த 3 ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர், கிரவுண்டுக்கு வரச் சொன்னார்கள். கிரவுண்டில் ஒரு 30/40 பேர் இருந்தனர்..

அந்த நண்பன் நேராய் வார்டனிடம் போய், கிரவுண்டில் மக்கள் கூடியிருப்பதை சொல்லி என்னவோ நடக்கப் போகுது என்று வத்தி வைத்தான். வார்டன் கிரவுண்டுக்கு வந்து எல்லோரும் ரூமுக்கு போங்க என சொல்லி கூட்டத்தை கலைத்தார். வார்டன் முன்னே செல்ல, பெருமிதமாய் அந்த 2 ஆம் ஆண்டு மாணவன் நடக்க

"பளார்" என் அறையும் சத்தமும்..."அய்யோ செவுளு பிஞ்சு போச்சே" என்ற அவன் அலறலும் கிரவுண்டில் எதிரொலித்தன.

என்ன் என்ன என்று ஓடி வந்த வார்டன் அனைவரும் ரூமுக்கு போக கட்டளை இட்டார்.

அடுத்த நாள் காலை... கல்லூரிக்குச் செல்லும் வரை எல்லாம் அமைதியாகத்தான் இருந்தது.. காலை நோட்டிஸ் போர்டில், 5 மாணவர்களை கல்லூரியை விட்டு சஸ்பெண்ட் செய்து இருப்பதாகவும் 3 மாணவர்கள் ஹாஸ்டலை விட்டு டிஸ்மிஸ் செய்வதாகவும் ஒட்டப்பட்டிருந்தது.

இருவர் டே ஸ்காலர்கள். ஒருவன் ஸ்பாட்டிலேயே இல்லை (திருச்சி சென்றிருந்தான்.. ) குபுக்கென்று பற்றியது நெருப்பு...

ஹாஸ்டலை விட்டு மூட்டை முடிச்சுடன் ரோட்டிற்கு வாருங்கள்.. உடனடி மீட்டிங்.. 3 ஆம் ஆண்டு மாணவர்கள் (64 பேர்) உடனே பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினோம்.

எங்களுக்கு யார் தலைவர்? தெரியாது..
எப்படிப் போராடப் போகிறோம்? தெரியாது..
போராட்டத்திற்கு யார் யார் ஆதரிப்பார் தெரியாது..

போனா காலேஜுக்கு வராத மாதிரி செஞ்சுருவேன் போன்ற எச்சரிக்கைகளையும் மிறி பெட்டி படுக்கைகளுடன்.. காலேஜ் காம்பவுண்டிற்கு வெளியே வந்தோம்...

இங்கே யாரும் நிற்கக் கூடாது போங்கடா... என உருமிய டைரக்டருக்கு...

கோபப் பார்வைகளும்.. "காலேஜ் அங்கயே முடிஞ்சு போச்சு.. நீங்க வெளிய வந்தா... என்ற மிரட்டலும் பதிலாக கிடைக்க...

உள்ளுக்குள்ளேயே ஒடுங்கினார் அவர்..

இனி .. இனி என்ன?


தொடரும்

மதி
01-03-2006, 08:14 AM
ம்ம்ம்..சீக்கிரம்...சீக்கிரம்...சொல்லுங்க செல்வன்..
இதெல்லாம் படிக்கற போது...
என்னையுமறியாமல் முதலாமாண்டில்..நான் விளைவித்த ஒரு குழப்பம் ஞாபகத்திற்கு வருது...

sarcharan
01-03-2006, 08:25 AM
அட மதி 500 அடிச்சிட்டாரா...

இம்புட்டு அலும்பு செஞ்சிருக்கீயளா..?
ஹ்ம்ம்....
செஞ்சத ஒத்துக்கிட்டீங்கல..அதுவே பெரிய விசயம்...

மதி
01-03-2006, 08:33 AM
என்னங்க வேற ஏதோ அளவு மாதிரி சொல்லுறீங்க

தாமரை
01-03-2006, 09:15 AM
ஹாஸ்டலில் இருந்து வெளியேறிய எங்களுடன்.. மூன்றாம் வருட மாணவ மாணவிகள் அனைவரும் கூடினர்.. முதல் வருட மாணவர்கள் கிலியுடன் என்ன நடக்குமோ என பயப்பட.. மெதுவாய் கிளம்பி விட்டனர்.

1. 2 ஆம் வருட மாணவர்கள் தங்களுடைய பெட்ஷீட் போன்றவற்றை கொண்டு வந்து தந்தனர்.

2. தலைவராக M*** என்பவரைத் தேர்ந்தெடுத்தோம்.

3. ஒரு கும்பல் இரவு டிஃபன் கொண்டு வர கீரனூர் கிளம்பியது

4. சில பேர் திருச்சி சென்று போஸ்டர் தயார் செய்தனர்.
(மூகாம்பிகை கல்லூரி முதல்வரின் அராஜகம் பாரீர்.. ரோட்டில் படுத்திருக்கும் 64 மாணவர்கள் கதி என்ன.. போல வார்த்தைகளுடன்)

4. 4 பேர் கீரனூர் போலீஸ் ஸ்டேஷன் சென்று, கல்லூரியில் காரணமின்றி 5 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளதால் மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் பாதுகாப்பு தேவை என புகார் பதிவு செய்து இரண்டு போலீஸ்களுடன் திரும்பினர்.


முதல்சுற்று பேச்சு வார்த்தை : 10 மாணவர்களும் சில ஆசிரியர்கள் மற்றும் டைரக்டர் இடையே நடந்தது..

டைரக்டர் மசிந்து கொடுக்கவில்லை.. மக்கள் திட்டமிட்டு அடிதடியை நடத்துவதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் ரவுடிகள் என்றும் அடுக்கிக் கொண்டே போனார்.. கல்லூரித் தாளாளருக்கும் செய்தி போக அவரும் வந்து பிரச்சனைகளைக் கேட்டார்..

பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது..

இரவு .. கீரனூரில் இருந்து இட்லி, உப்புமா என பார்சல் வர எல்லோருக்கும் தரப்பட்டது..

மாண்வர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று எண்ணிக் கொண்ட சில ஆசிரியர்கள் மாணவர்களை அணுகி,, இப்படி செய்தால் கேரியர் பாதிக்கும் எனப் பூச்சாண்டி அட்வைஸ் செய்து அலட்சியப் பார்வைகளையும். சிகரெட் புகைகளையும் வாங்கிக் கொண்டனர்.

போஸ்டர் வரவும், ஒவ்வொரு வாகனமாய் நிறுத்தி போஸ்டர் ஒட்டி அனுப்பப்பட்டது. போஸ்டர் திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை என அருகில் இருந்த நகரங்களிலும் கிராமங்களிலும் ஒட்டப்பட்டது..

மாணவர்களின் கட்டுப்பாட்டை பார்த்து வியந்து களமாவூர், மேலப்புதுவயல், பள்ளத்துப் பட்டி என பல கிராமங்களில் இருந்து மக்கள் வந்து மோர், டீ என அளித்து விஷயம் கேட்டு ஆறுதல் சொல்லிச் சென்றனர். (ஒரு வாரம் முன்னதாகத் தான் சண்முகா கல்லூரி மாணவர்கள் 2 பஸ்களை அடித்து நொறுக்கி இருந்தனர்..)

இரவு கழிந்தது....

மறுநாள் காலை..

3 ஆம் ஆண்டு மாணவர்கள் எல்லாம் கல்லூரி வாசலில் கூடினர். முதலாம் ஆண்டு மாணவர்கள் பல பேர் வரவே இல்லை.. 2 ஆம் ஆண்டு மாணவர்களும் வகுப்புகளுக்கு செல்லவில்லை.

ஆசிரியர்கள் 2 ஆம் ஆண்டு மாணவர்களையும் முதலாண்டு மாணவர்களையும் சமாதானப் படுத்தி (உங்களுக்காகத் தான் நாங்க இவ்வலவு செய்யறோம்..) வகுப்பிற்கு கொண்டு செல்ல முயன்றனர்.. தாசில்தார், கலெக்டர், எஸ்.பி எனப் பெரிய தலைகள் எல்லாம் கூடினர்..
இரண்டாம் நாள் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது..

டைரக்டர் குண்டு போட்டார்,...

"சார், அந்த கேஸ்ட் மக்கள் எல்லாம் சேர்ந்து தாழ்த்தப் பட்ட மாணவனை அடிச்சுட்டான்"

உடனே அந்த குண்டு பிசுபிசுத்துப் போனது.. ஏனெனில் மாணவகள் சார்பில் சென்ற 10 பேரில் 3 பேர் தாழ்த்தப்பட்டவர்கள்...

டைரக்டர் என்ன என்னவோ சொல்ல, மாண்வர் குழுவினர் ஒருவன் ஸ்பாட்டிலேயே இல்லாததையும் இரு மாணவர்கள் டே ஸ்காலர் என்பதையும், கல்லூரி சில மாணவர்கள் கேள்வி கேட்காமல் இருக்க தட்டி வைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் தான் 5 பேரை சஸ்பெண்ட் செய்ததாகவும் எடுத்துச் சொல்லி வாதாட.. போராட்டத்திற்கு பரவலாகவே ஆதரவு இருப்பதைக் காட்டி நியாயம் மாணவர் பக்கம் என்று சொல்லி முடிப்பதற்குள் மாலை ஆகி விட்டது..

இன்று விட்டு விட்டால் 2 நாட்கள் விடுமுறை.. சனி ஞாயிறு.. போராட்டம் சற்று சுதி இறங்கிவிடும். மக்கள் கல்லூரிப் பக்கமே வராமல் கூட போகலாம்.. கேட்டின் வெளியே படுக்க மனது கஷ்டப்படலாம்..

எனவே அதிரடி முடிவு எடுக்கப் பட்டது..

தொடரும்

sarcharan
01-03-2006, 09:28 AM
கலக்கியுள்ளீர்கள் செல்வன்...

மதி
01-03-2006, 10:13 AM
ம்...நடத்துங்க...நடத்துங்க...

பென்ஸ்
01-03-2006, 10:46 AM
கலக்கல்...

எங்க சீனியரும் (அவங்களும் முதல் பேட்ச்) இதே போலதான் ...
எங்களை விட கலக்கல் மக்கள்..
தொடர்ந்து 53 நாள் ஸ்ட்ரை அடித்து அதை வென்றார்கள்...
அது முற்றிலும் நியாயமான போராட்டம்....

பிறகு விளக்கமாக சொல்லுகிறேன்...

sarcharan
01-03-2006, 12:03 PM
ஹைய்யோ....இதில் எல்லாமா அரை செஞ்சுரி அடிப்பாங்க....

கலக்கல்...
எங்க சீனியரும் (அவங்களும் முதல் பேட்ச்) இதே போலதான் ...
எங்களை விட கலக்கல் மக்கள்..
தொடர்ந்து 53 நாள் ஸ்ட்ரை அடித்து அதை வென்றார்கள்...
அது முற்றிலும் நியாயமான போராட்டம்....

பிறகு விளக்கமாக சொல்லுகிறேன்...

pradeepkt
01-03-2006, 12:27 PM
எங்க கல்லூரியில இதெல்லாம் நடந்ததில்லை.
ஆனால் கல்லூரி வரலாற்றிலேயே முதன் முறையாக எங்கள் பேட்ச்சிலதான் ஸ்டிரைக் என்பது நடந்தது. அதுவும் ஒரு மாணவன் மருத்துவ வசதிகள் இல்லாததால் இறந்துவிட பற்றிக் கொண்டு எரிந்தது.

கல்லூரி நிர்வாகம் கவலையே படாமல் நான்கு பேரை விடுதியை விட்டு நீக்கியது. எங்கள் வீடு கல்லூரிக்கு உள்ளேயே இருந்ததால் இருவர் எங்கள் வீட்டிலேயே ஒரு வருடம் தங்கிப் படித்தனர்.

திருச்சிப் பக்கம் இருந்ததால் அவ்வப்போது சண்முகா, மூகாம்பிகை, செயிண்ட் ஜோசப், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற காலேஜூகளில் நிகழும் ஸ்டிரைக்கைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொள்வோம். இதற்கு இன்னொரு முக்கிய காரணம், தன்னாட்சி பெற்ற கல்லூரி நிர்வாகம் - எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் பல மாணவர்கள் வாழ்க்கையை முக்கியமாக நினைத்தனர்! இப்போது நினைத்துப் பார்த்தால் வேறு விதமாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சில விஷயங்களை யோசித்துப் பார்த்தால் இளரத்தம் துள்ளுது என்றுதான் தோன்றுகிறது.

தாமரை
02-03-2006, 04:53 AM
முக்கிய முடிவு.. முடிவு தெரியாமல் கல்லூரியை விட்டு யாரையும் னகர விடக் கூடாது என்பதுதான்.

3 ஆம் ஆண்டு மாணவிகள் 20 பேரும் மெயின் கேட்டின் முன் அமர்ந்தனர். ஒன்றுமில்லாத பிரச்சனையை பெரிதாக்கும் கல்லூரியை எதிர்த்து கோஷமிட்டனர்.

3 ஆம் ஆண்டு மாணவர்கள் அனைத்து வழிகளையும் மறித்து அமர்ந்தனர்..

2 ஆம் ஆண்டு மாணவ, மாணவியரும் நிலைமையை அறிந்து கல்லூரி வாசலில் அமர்ந்தனர்.

கல்லூரி மாணவ மாணவியரின் வீடுகளிலிருந்து கல்லூரி அலுவலகத்திற்கு விடாமல் போன் வரத்துவங்கியது..

இரண்டாம் ஆண்டு மாணவர்களே போராட்டத்தில் குதித்ததும் நிர்வாகத்தின் முகத்தில் கரி பூசியது போல் ஆயிற்று.

கலெக்டரும், தாசில்தாரும் எதுவும் செய்ய இயலவில்லை. நிர்வாகத்தை பணியச் சொன்னார்கள்.

நிர்வாகமும் பணிந்து அனைத்து உத்தரவுகளையும் நிபந்தனையின்றி வாபஸ் பெற்றது. கல்லூரிக்கு காலவரையறையற்ற விடுமுறை அறிவித்தது..

அனைவரும் ஊருக்கு கிளம்பினோம்.. 1 வார விடுமுறை கழித்து வந்ததும்..

.....

....

.....

மறுபடியும் கல்லூரி களைகட்டியது... எலக்ஷன் அறிவிக்கப் பட்டது.

தண்டிக்கப்பட்ட மாணவர்கள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்..

அது இன்னொரு ஆரம்பம்..

அதன் பிறகு.. கலந்து கொண்ட அனைத்து கலாச்சார விழாக்களிலும் வெற்றி வாகை சூடி 4 கேடயங்களை வென்று சாதனை படைத்தது ...
பாடம் கற்றுக் கோண்ட மாணவர் அணி...

மதி
02-03-2006, 06:59 AM
சூப்பரா கலக்கிருக்கீங்க..!!!

தாமரை
02-03-2006, 10:06 AM
திருச்சிப் பக்கம் இருந்ததால் அவ்வப்போது சண்முகா, மூகாம்பிகை, செயிண்ட் ஜோசப், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற காலேஜூகளில் நிகழும் ஸ்டிரைக்கைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொள்வோம். .
எந்தக் கல்லூரி அய்யா நீங்கள் படித்தது???

sarcharan
02-03-2006, 10:27 AM
என்ன பிரதீப்பு,
உன்னுடைய கையொப்ப பகுதியிலிருந்து கள்வனின் காதலிய எடுத்துட்ட.....

sarcharan
02-03-2006, 10:28 AM
அவன் திருச்சி இல்ல சார் திருச்சி மாதிரி ... ஹி ஹி

எந்தக் கல்லூரி அய்யா நீங்கள் படித்தது???

pradeepkt
02-03-2006, 11:25 AM
எந்தக் கல்லூரி அய்யா நீங்கள் படித்தது???
மண்டலப் பொறியியல் கல்லூரி.
திருச்சியில் இருக்கும் பொறியியல் கல்லூரிகள் எல்லாமே "திருச்சி மாதிரி" இடங்களில்தானே இருக்கின்றன. துவாக்குடி, கீரனூர், இனாம்குளத்தூர், செங்கிப்பட்டி, திருவெள்ளரை (பக்கத்தில்) - இங்கேதான் திருச்சியின் பொறியியல் கல்லூரிகளைக் காண முடியும்.
என்ன செய்வது?

pradeepkt
02-03-2006, 11:26 AM
அவன் திருச்சி இல்ல சார் திருச்சி மாதிரி ... ஹி ஹி
நீங்க எல்லாம் மெயின்கார்டுகேட்டுக்கு உள்ளயே படிச்சீகளோ...
லேய்... இதெல்லாம் ரொம்ப நக்கலு...

pradeepkt
02-03-2006, 11:27 AM
என்ன பிரதீப்பு,
உன்னுடைய கையொப்ப பகுதியிலிருந்து கள்வனின் காதலிய எடுத்துட்ட.....
அது கொஞ்சம் பழசாயிருச்சுல்ல...
அடுத்து ஏதாச்சும் புதுசு போடுற வரைக்கும் சும்மா விட்டு வைப்போமின்னுதான்.

தாமரை
02-03-2006, 11:40 AM
நீங்க எல்லாம் மெயின்கார்டுகேட்டுக்கு உள்ளயே படிச்சீகளோ...
லேய்... இதெல்லாம் ரொம்ப நக்கலு...
எங்க கல்லூரி திருச்சி மாவட்டத்திலயே இல்லியே.. புதுக்கோட்டை மாவட்டம் தானே..:cool: :cool:

தாமரை
10-03-2006, 01:23 PM
கலக்கல்...

எங்க சீனியரும் (அவங்களும் முதல் பேட்ச்) இதே போலதான் ...
எங்களை விட கலக்கல் மக்கள்..
தொடர்ந்து 53 நாள் ஸ்ட்ரை அடித்து அதை வென்றார்கள்...
அது முற்றிலும் நியாயமான போராட்டம்....

பிறகு விளக்கமாக சொல்லுகிறேன்...
இப்போ இல்லாட்டி எப்போ???

pradeepkt
11-03-2006, 07:20 PM
இப்போ இல்லாட்டி எப்போ???
ஹை...
இந்தத் திரியப் படிக்கிறதுக்கு முன்னாடி இப்போதான்... "இப்போ இல்லாட்டி எப்போன்னு" ஒரு கேள்வியை வேற திரியில கேட்டேன் :D :D

தாமரை
30-05-2007, 01:51 PM
கலக்கல்...

எங்க சீனியரும் (அவங்களும் முதல் பேட்ச்) இதே போலதான் ...
எங்களை விட கலக்கல் மக்கள்..
தொடர்ந்து 53 நாள் ஸ்ட்ரை அடித்து அதை வென்றார்கள்...
அது முற்றிலும் நியாயமான போராட்டம்....

பிறகு விளக்கமாக சொல்லுகிறேன்...
எப்பதான் சொல்லப்போறீகளோ!

மதி
30-05-2007, 01:59 PM
எப்பதான் சொல்லப்போறீகளோ!
எங்கிருந்தய்யா.. திரியெல்லாம் தோண்டி எடுக்கறீங்க..?

பென்ஸ்
30-05-2007, 02:09 PM
எப்பதான் சொல்லப்போறீகளோ!
ஏன்.. ஏன்...????
சீனா பயணம் இடையில் இருக்கு....
கவிதை விமர்சனம் நிறைய இருக்கு...
இந்த இடையில் நீர் வேற....

தாமரை
30-05-2007, 02:13 PM
ஏன்.. ஏன்...????
சீனா பயணம் இடையில் இருக்கு....
கவிதை விமர்சனம் நிறைய இருக்கு...
இந்த இடையில் நீர் வேற....


நான் இடைகளில் தடுமாறுவதில்லை.. நீங்க எப்படி?

பென்ஸ்
30-05-2007, 02:18 PM
நான் இடைகளில் தடுமாறுவதில்லை.. நீங்க எப்படி?
அனிருத் வேற "அவ்விடம்" வரை போயி என் புகழ்பாடி இருக்கிறான்....
இங்க நீங்க....
தப்பவே முடியாதா...!!!!

ஆதவா
30-05-2007, 02:24 PM
பொறுங்க பென்ஸ்.அண்ணா.. ஒரு பயணக் கட்டுரை நெஞ்சில் இருக்கு... ஒரு வாங்கு வாங்கிடப் போறேன்,......

மதி
30-05-2007, 02:24 PM
அனிருத் வேற "அவ்விடம்" வரை போயி என் புகழ்பாடி இருக்கிறான்....
இங்க நீங்க....
தப்பவே முடியாதா...!!!!
ரொம்ப கஷ்டம்...!

தாமரை
30-05-2007, 02:24 PM
தெரிஞ்ச விஷயம்தானே!.. ஆமாம் உம்ம புகழ்தான் கொடி கட்டிப் பறக்குது. நம்ம பிரபலத்தோட மணத்தில் கூட மணத்ததே!!

மதி
30-05-2007, 02:26 PM
பொறுங்க பென்ஸ்.அண்ணா.. ஒரு பயணக் கட்டுரை நெஞ்சில் இருக்கு... ஒரு வாங்கு வாங்கிடப் போறேன்,......
என்னத்தை சாமி..?:icon_nono:

தாமரை
30-05-2007, 02:30 PM
பொறுங்க பென்ஸ்.அண்ணா.. ஒரு பயணக் கட்டுரை நெஞ்சில் இருக்கு... ஒரு வாங்கு வாங்கிடப் போறேன்,......
ஆதவா உமக்கு விதியில் நம்பிக்கை உண்டா?

ஆதவா
30-05-2007, 02:40 PM
இல்லவே இல்லை அண்ணா

ஆதவா
30-05-2007, 02:41 PM
என்னத்தை சாமி..?:icon_nono:

கொஞ்சம் பொறுங்க.... கூடிய சீக்கிரமே வரும்..:food-smiley-022:

தாமரை
30-05-2007, 02:44 PM
இல்லவே இல்லை அண்ணா
அப்ப ஏன் மன்ற விதிமுறைகள் படி நடப்போம். உயர்வோம்
என்று போட்டிருக்கீங்க:nature-smiley-002: :nature-smiley-002: :nature-smiley-002:

மதி
30-05-2007, 02:46 PM
அப்ப ஏன் மன்ற விதிமுறைகள் படி நடப்போம். உயர்வோம்
என்று போட்டிருக்கீங்க:nature-smiley-002: :nature-smiley-002: :nature-smiley-002:
மாட்டியாச்சா...???
இப்ப என்ன செய்வீக..இப்ப என்ன செய்வீக...? :ernaehrung004:

ஆதவா
30-05-2007, 02:46 PM
அப்ப ஏன் மன்ற விதிமுறைகள் படி நடப்போம். உயர்வோம்
என்று போட்டிருக்கீங்க:nature-smiley-002: :nature-smiley-002: :nature-smiley-002:


நீங்கள் கேட்டது விதி.... தலைவிதி னு சொல்லுவாங்களே... அப்படீன்னு நினைச்சேன்..

விதி = விதித்தல்
விதிமுறை = விதித்த முறைகள்..

ஆக நான் சரியே..

(அப்பாடி..)

ஆதவா
30-05-2007, 02:47 PM
மாட்டியாச்சா...???
இப்ப என்ன செய்வீக..இப்ப என்ன செய்வீக...? :ernaehrung004:

இப்போ என்னா பண்ணுவீங்க? இப்போ என்னா பண்ணுவீங்க?

தாமரை
30-05-2007, 02:47 PM
நீங்கள் கேட்டது விதி.... தலைவிதி னு சொல்லுவாங்களே... அப்படீன்னு நினைச்சேன்..

விதி = விதித்தல்
விதிமுறை = விதித்த முறைகள்..

ஆக நான் சரியே..

(அப்பாடி..)

தலைவிதி என்று உங்க சமாளிப்பை ஏத்துக்கறேன்!:sport-smiley-007: :sport-smiley-007:

மதி
30-05-2007, 02:50 PM
நீங்கள் கேட்டது விதி.... தலைவிதி னு சொல்லுவாங்களே... அப்படீன்னு நினைச்சேன்..

விதி = விதித்தல்
விதிமுறை = விதித்த முறைகள்..

ஆக நான் சரியே..

(அப்பாடி..)
விதி வினை மட்டுமல்ல பெயருமாகும்...:icon_hmm:

தாமரை
30-05-2007, 02:53 PM
விதி வினை மட்டுமல்ல பெயருமாகும்...:icon_hmm:
மதி விளையாடினா விதி விளையாடுமா? மதியா விதியா? விதியின் மதியா? மதியின் விதியா?

ஆதவா
30-05-2007, 02:55 PM
மதி விளையாடினா விதி விளையாடுமா? மதியா விதியா? விதியின் மதியா? மதியின் விதியா?

என்னச் சொன்னீங்கள்லா.. இப்ப நீங்க மாட்டீகிட்டீங்க மதி... பதில் சொல்லுங்க...:ernaehrung004:

ஆதவா
30-05-2007, 02:56 PM
தலைவிதியே என்று உங்க சமாளிப்பை ஏத்துக்கறேன்!:sport-smiley-007: :sport-smiley-007:

ஒரு எழுத்து மறந்தாலும் அர்த்தம் மாறவில்லை.. :icon_wacko:

தாமரை
30-05-2007, 02:56 PM
விதி வினை மட்டுமல்ல பெயருமாகும்...:icon_hmm:
விதி வினையாகுமா?
விளையாட்டுதானே வினையாகும்?

விதியின் விளையாட்டோ!

தாமரை
30-05-2007, 02:58 PM
ஒரு எழுத்து மறந்தாலும் அர்த்தம் மாறவில்லை.. :icon_wacko:
ஏ என்று சொல்ல நான் என்ன சுள்ளானா?

ஆதவா
30-05-2007, 03:02 PM
ஏ என்று சொல்ல நான் என்ன சுள்ளானா?


சுள்ளான்கள் மட்டுமா ஏ சொல்கிறார்கள்/?

மனோஜ்
30-05-2007, 03:04 PM
பென்ஸ் அண்ணா ஒரு படம் பார்த்த மாதிரி கதை இருந்தது
அதில் ஒரு சந்தேகம் நீங்க
காதாநாயகனா வில்லனா ?

செல்வன் அண்ணாவின் கதையும் அருமை

தாமரை
30-05-2007, 03:05 PM
சுள்ளான்கள் மட்டுமா ஏ சொல்கிறார்கள்/?

மிஸ்டர் மெட்ராஸ்களும் தான்...

அப்பப்ப உங்க கவிதைகளைப் பார்த்து இன்னும் சிலபேர்.

ஆதவா
30-05-2007, 03:08 PM
பென்ஸ் அண்ணா ஒரு படம் பார்த்த மாதிரி கதை இருந்தது
அதில் ஒரு சந்தேகம் நீங்க
காதநாயகனா வில்லனா ?

செல்வன் அண்ணாவின் கதையும் அருமை

அடடே அருமையான பெயர்.... (ஒருவகையில் இது சரியான பெயரும் கூட...)

ஆதவா
30-05-2007, 03:09 PM
:Nixe_nixe02b: :icon_36: :Nixe_nixe02b: :icon_36:

என்னங்க ரோசாமனி அவர்களே! வெறும் ஸ்மைலீஸோடு நின்னுட்டீங்க. அது சரி உங்கள் கையெழுத்துல பிழை இருக்கே????!!!!:icon_wacko:

தாமரை
30-05-2007, 03:17 PM
அடடே அருமையான பெயர்.... (ஒருவகையில் இது சரியான பெயரும் கூட...)

பின்னங்கால் பிடரியில் பட காத துரம் ஒடும் நாயகரை பின்னே எப்படிச் சொல்றது?

தாமரை
30-05-2007, 03:18 PM
சிரித்துக்கொண்டே நின்றுவிட்டேன் அதான் ஸ்மைலீஸோடு நின்றுவிட்டேன்.

என்ன பிழை?

மேற்பார்வையாளரே தாங்களே பிழையைத் திருத்திவிடுங்கள். நன்றி.

போதுமா!!!

ஆதவா
30-05-2007, 03:18 PM
ஜாதி மதமில்லா சமத்துவம் வேண்டும்----------------------------
சமத்துவம் என்றாலே ஜாதிமதம் அல்லாமல் எல்லாம் கலந்தது... ஆக ஜாதி மதம் இல்லாத சமத்துவம் என்று எதுவும் சொல்லமுடியாது.. இதுதான் தவறு,,,,

ஆதவா
30-05-2007, 03:19 PM
பின்னங்கால் பிடரியில் பட காத துரம் ஒடும் நாயகரை பின்னே எப்படிச் சொல்றது?

:grin: :grin: :grin: :grin: :grin:

தாமரை
30-05-2007, 03:23 PM
ஜாதி மதமில்லா சமத்துவம் வேண்டும்----------------------------
சமத்துவம் என்றாலே ஜாதிமதம் அல்லாமல் எல்லாம் கலந்தது... ஆக ஜாதி மதம் இல்லாத சமத்துவம் என்று எதுவும் சொல்லமுடியாது.. இதுதான் தவறு,,,,
எல்லாம் சமமாக இருந்தல் சமத்துவம்
ஒரு வகுப்பில் அனைவரும் 100 மார்க்கு வாங்கினாலும் அனைவரும் சமம்தான்
அனைவரும் 0 மார்க்கு வாங்கினாலும் அனைவரும் சமம்தான்.

சாதிமதமெல்லாம் சமமாய் இருந்தால் சமத்துவம்
சாதிமதமே இல்லாம இருந்தாலும் சமத்துவம்..

ஆமாம் நீங்க என்ன மார்க் எடுத்தீங்கன்னு புரியுதா?

ஆதவா
30-05-2007, 03:24 PM
எல்லாம் சமமாக இருந்தல் சமத்துவம்
ஒரு வகுப்பில் அனைவரும் 100 மார்க்கு வாங்கினாலும் அனைவரும் சமம்தான்
அனைவரும் 0 மார்க்கு வாங்கினாலும் அனைவரும் சமம்தான்.

சாதிமதமெல்லாம் சமமாய் இருந்தால் சமத்துவம்
சாதிமதமே இல்லாம இரூதாலும் சமத்துவம்..

ஆமாம் நீங்க என்ன மார்க் எடுத்தீங்கன்னு புரியுதா?

மாட்டிக்கிட்டீங்க... நான் எடுத்தது நூத்துக்கு நூத்திஒன்னு..

சாதிமதமே இல்லாமல் இருந்தா சமத்துவம் சரிதான்...

சாதிமதமில்லாத சமத்துவம்னு ஏதும் இருக்கா?

தாமரை
30-05-2007, 03:26 PM
மாட்டிக்கிட்டீங்க... நான் எடுத்தது நூத்துக்கு நூத்திஒன்னு..

சாதிமதமே இல்லாமல் இருந்தா சமத்துவம் சரிதான்...

சாதிமதமில்லாத சமத்துவம்னு ஏதும் இருக்கா?

ஆமாம் இருக்கே!..

ஆணும் பெண்ணும் சமமென்னும் சமத்துவம்!
உயிர்கள் ஒன்றென்னும் ஒப்பற்ற சமத்துவம்!
இன்னும் எத்தனை சமத்துவம் வேண்டும்???:4_1_8: :4_1_8:

ஓவியா
31-05-2007, 09:36 PM
பென்சு, உங்க அனுபவத்தை படிச்சு ஆடி போய்ட்டேன்பா, யப்பாடா.
என்ன ஒரு அனுபவம். கடவுளுக்கு நன்றி சொல்லுவோம்.

பென்ஸ்
01-06-2007, 01:49 AM
பென்சு, உங்க அனுபவத்தை படிச்சு ஆடி போய்ட்டேன்பா, யப்பாடா.
என்ன ஒரு அனுபவம். கடவுளுக்கு நன்றி சொல்லுவோம்.

என்னாது பரதநாட்டியமா இல்ல டிஸ்கோவா...
நிலமை மோசமாயிருந்தா நான் ஓடி போஓயிருக்கனுமே...

இன்னும் லீலைகள் இருக்கு ....
எழுத நேரம் கிடைக்கனும்....

குறிப்பு: என்று என் அப்பார்ட்மெண்டில் இந்திய நண்பர்கள் சிலர் சந்தித்தோம், அதில் என் கல்லூரி நண்பரும் ஒருவர். நான் பார்பிக்கூ கிரில்லில் இருந்து உள்ளே வரும் போது நண்பர்கள் எல்லாம் என்னை எதோ விசித்திரமா பார்த்தார்கள். ஏன் என்று கேட்டால் என் கல்லூரி நண்பன் என் கல்லூரி கதைகளை சொன்னதாக சொன்னார்கள்...
நம்பமாட்டேங்கிறங்க, நான் இவ்வளவு நல்லவனான்னு....

ஆதவா
01-06-2007, 02:15 AM
யாரையும் கை நீட்டி அடிக்காதே னு சொல்லீட்டு இப்படி என்னை அடிக்கறீங்களே அண்ணா! இது நியாயமா/?

ஒரு பக்கம் அருவாளத் தூக்கிட்டு அலையறாங்க.. நான் என்ன செய்யறதுன்னே தெரியாம முழிக்கிறேன்...

சுகந்தப்ரீதன்
16-01-2008, 08:45 AM
சில செயல்களை செய்யும் போது இருக்கும் தைரியம் அதை செய்து முடித்தபின் சுத்தமாய் தொலைந்து போயிருக்கும்..! அதுபோன்ற உங்கள் சொந்த அனுபவம் சற்று அதிர வைக்கிறது..! இதுபோல எனக்கும் சில அனுபவங்கள் உண்டு அண்ணா.. ஒருமுறை கல்லூரியில் பிளாக் மார்க்(கரும்புள்ளி) வாங்கவேண்டிய கட்டாயம் வந்தது ஆனால் அதிர்ஷ்டவசமாக பஸ்ட் அண்டு லாஸ்ட் வார்னிங்ன்னு சொல்லி நிர்வாகம் எச்சரிச்சி மன்னிச்சி விட்டுட்டாங்க..! அதோட சரி.. அதன்பிறகு நாம அடிதடியில இறங்கறதே கிடையாது..! ஆனா அமைதியா உட்காந்து அடுத்தவனுங்க அடிச்சிக்கறத பார்ப்போம்..!

தாமரை
16-01-2008, 09:11 AM
மண்டலப் பொறியியல் கல்லூரிதானே!! முகத்தை மறைச்சுகிட்டா எங்களுக்குத் தெரியாதா என்ன?

சுகந்தப்ரீதன்
16-01-2008, 10:36 AM
மண்டலப் பொறியியல் கல்லூரிதானே!! முகத்தை மறைச்சுகிட்டா எங்களுக்குத் தெரியாதா என்ன?
அது சரி... மன்றத்துல ஒற்றர்படை இருக்குற வரைக்கும் முகத்தை மறைச்சாலும் முகவரியை மறைச்சாலும் தப்பிக்க முடியாது போலிருக்கே..?! (மன்றத்துல நல்லாவே வேவு பாக்கிறாங்கப்பா..)

சூரியன்
17-01-2008, 05:56 AM
பென்ஸ் அண்ணா இதேபோல் நாங்கள் படிக்கும் காலத்தில் தேவையில்லாமல் வம்புகள் செய்வதுண்டு ஆனால் அது அன்றே முடிந்துவிடும்.இந்த அளவுக்கு பெரிதாகியதில்லை .

பென்ஸ்
17-01-2008, 08:34 AM
பென்ஸ் அண்ணா இதேபோல் நாங்கள் படிக்கும் காலத்தில் தேவையில்லாமல் வம்புகள் செய்வதுண்டு ஆனால் அது அன்றே முடிந்துவிடும்.இந்த அளவுக்கு பெரிதாகியதில்லை .
அப்படியா...!!!!
சொல்லவேயில்ல...:rolleyes::D

சூரியன்
17-01-2008, 09:01 AM
அப்படியா...!!!!
சொல்லவேயில்ல...:rolleyes::D

அது ஒரு பெரிய கதை சொன்னா எல்லாரும் பயந்துடுவாங்க அண்ணா அதனால தான் சொல்லல*.:icon_ush: