PDA

View Full Version : இந்தியா-இங்கிலாந்து தொடர்



அறிஞர்
23-02-2006, 01:03 AM
மார்ச் 1 முதல் அடுத்த கிரிக்கெட் திருவிழா.

இந்திய அணி புது தெம்புடன் இருக்கிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டித்தொடர்களை தாய்நாட்டில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

யுவராஜ் சில போட்டிகளில் இடம்பெறமாட்டார் என எண்ணுகிறேன்.

சேவாக், ஹர்பஜன், கங்குலிக்கு வாய்ப்புகள் இருக்கும்..

aren
23-02-2006, 01:57 AM
எனக்குத் தெரிந்து, டீம் இதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

1. திராவிட்
2. டெண்டுல்கர்
3. ஷேவாக்
4. காம்பீர்
5. கங்குலி
6. தோனி
7. பதான்
8. ஹர்பஜன்
9. கும்ளே
10. ஆர். பீ. சிங்
11. ஜாஹீர் கான்
12. அகர்கர்
13. வாசீம் ஜாபர்

பரஞ்சோதி
23-02-2006, 03:39 AM
இன்று தொடங்கும் 3 நாள் போட்டியினை பொறுத்து வாசிம் ஜாபரும், ரெய்னாவும், வி.ஆர்.சிங் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்படலாம்.

aren
23-02-2006, 10:15 PM
இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக உத்தரப்பிரதேசத்திலிருந்து நான்கு விளையாட்டு வீரர்கள் டெஸ்ட் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். முகமது கைஃப், சுரேஷ் ரைனா, ஆர்.பீ.சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியார் இந்த நால்வர்.

இவர்கள் நால்வரும் நன்றாக ஆடி இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு அளித்திட வாழ்த்துக்கள்.

அறிஞர்
27-02-2006, 06:14 PM
கைப் என்னவோ அதிர்ஷட்டத்தில் உள்ளே வந்தார் என்றே சொல்ல வேண்டும்... இந்த தொடரில் அவர் ஜொலிக்கவிட்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

mania
28-02-2006, 03:01 AM
கைப் என்னவோ அதிர்ஷட்டத்தில் உள்ளே வந்தார் என்றே சொல்ல வேண்டும்... இந்த தொடரில் அவர் ஜொலிக்கவிட்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

:rolleyes: :rolleyes: :D :D அது என்ன ஷட்டம் அறிஞரே.....!!!!:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D

aren
04-03-2006, 09:34 AM
இந்த டெஸ்டில் கைஃப் மற்றும் ஜாஃபர் இருவரும் முதல் இன்னிங்ஸில் அடித்துவிட்டதால் அடுத்த டெஸ்டில் யாரை வெளியே தள்ளுவார்கள் என்று தெரியவில்லை யுவராஜ் சிங்கை உள்ளே கொண்டுவரவேண்டும். லஷ்மனை அனுப்புவார்கள் என்று நினைக்கிறேன்.

அப்படியென்றால் கங்குலி இனிமேல் உள்ளே வருவது என்பது அவ்வளவு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் நம் மக்களால் வேகப்பந்துவீச்சை சமாளிக்கத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது, அதுவும் பந்து ஸ்விங் ஆகும் சமயத்தில் சரியாக கணித்து ஆடமுடியவில்லை என்றே தோன்றுகிறது. மாத்யூ ஹாகார்டின் பந்துவீச்சில் நம் மக்கள் மிகவும் தினறிவிட்டார்கள்.

இந்த டெஸ்டில் ஜெயிப்பது கொஞ்சம் கஷ்டம்தான், டிரா செய்தாலே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது.

அடுத்த டெஸ்டிலாவது பார்த்து விளையாடவேண்டும்.

aren
15-04-2006, 01:25 AM
இன்று கடைசி ஆட்டம். இந்தியா வென்று வெற்றிக்களிப்புடன் அபுதாபி செல்வார்களா?

ஷேவாக் மற்றும் கைஃப் இருவரின் இடமும் ஆட்டம் கண்டுள்ளது. தேறுவார்களா?

sarcharan
17-04-2006, 09:13 AM
வெற்றி!!!! வெற்றி!!!! வெற்றி!!!!:) :) :)