PDA

View Full Version : பேக்ஸ்



இளந்தமிழ்ச்செல்வன்
22-02-2006, 06:19 PM
நண்பர்களே,

கணணியில் இண்டர்னல் மோடம் நிறுவி உள்ளேன். அதிலிருந்து அப்படியே பேக்ஸ் அனுப்ப இயலவில்லை. நிறுவிய சில காலம் வேலை செய்தது .

XP Pro நிறுவியுள்ளேன்,. பேக்ஸ் சேவையையும் நிறுவியுள்ளேன்.மோடத்திற்கு தேவையான டிரைவர்யும் சரியாக நிறுவியுள்ளேன்.

எதிர்முனையில் பேக்ஸ் ஆன் ஆகும் போது இங்கே துண்டிக்கப்படுகிறது.

யாரேனும் உதவ முடியுமா?

aren
23-02-2006, 12:27 AM
பேக்ஸ் இணைப்பு இருக்கிறதா? பேக்ஸிற்கான உங்கள் தொலைபேசி இணைப்பு சரியாக உள்ளதா? அப்படி சரியாக இருந்தால், அதற்கு போன மாதம் பில் தொகை கட்டியாகிவிட்டதா????

எதிர்முனையில் பேக்ஸ் ஆன் ஆகும் சத்தம் வந்தால் லைன் சரியாக இருக்கிறது என்றே அர்த்தம். ஆகையால் உங்கள் கணிணியில் பேக்ஸ் செட்டப்பை (உங்கள் செட்டப்பைப் பற்றி சொல்லவில்லை) கொஞ்சம் கவனியுங்கள்.

sarcharan
23-02-2006, 03:14 AM
செல்வன் சார் மாதிரியே பேசுகிறீங்களே எப்படி....?


ஆகையால் உங்கள் கணிணியில் பேக்ஸ் செட்டப்பை (உங்கள் செட்டப்பைப் பற்றி சொல்லவில்லை) கொஞ்சம் கவனியுங்கள்.

sarcharan
23-02-2006, 03:35 AM
"Zetafax " என்கிற computer fax software ல் முயன்று பாருங்களேன்..

ராசராசன்
23-02-2006, 06:57 AM
"வின்பாக்ஸ்" அல்லது "பிட்வேர்" போன்ற மென்பொருட்கள் இணய தளங்களில் இலவசமாக கிடைக்கின்றன. "லைம்வேர்" அல்லது "இமுல்" பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மிகக் கவனம்: உங்கள் கணனியில் எப்பொழுதும் சமீபத்திய வைரஸ் கொல்லியை வைத்திருப்பது முக்கியம்

இளந்தமிழ்ச்செல்வன்
26-02-2006, 04:24 PM
மிக்க நன்றி ஆரென், சரவணன், தேனிசை. தாமதத்திற்கு மன்னிக்கவும். நீங்கள் கூறிய அனைத்தையும் முயன்று கடைசியில் நன்றி சொல்ல வந்தேன்.

வின்பாக்ஸ் இறக்குமதியில் வைரஸ் என்று ஏவிஜி அழித்டுவிட்டது. செட இறக்குமதி ஆகவில்லை. கடைசியில் ஆரென் கூறியதைப் போல் "செட்டப்பை" செட் செய்துதான் காரியம் முடித்தேன். பேக்ஸ் நிரலியை நீக்கிவிட்டு மீண்டும் நிறுவி மீண்டும் நீக்கி மீண்டும் நிறுவி ஒரு வழியாய் வேலை செய்கிறது. நன்றி நண்பர்களே.

aren
26-02-2006, 04:28 PM
இதசெ, ஒரு வழியாக பேக்ஸ் வேலைசெய்து அதன் மூலம் ஆர்டர் வந்தால் மகிழ்ச்சிதான்.

இளந்தமிழ்ச்செல்வன்
26-02-2006, 07:31 PM
இதசெ, ஒரு வழியாக பேக்ஸ் வேலைசெய்து அதன் மூலம் ஆர்டர் வந்தால் மகிழ்ச்சிதான்.

கண்டிப்பாய். மிக்க நன்றி