PDA

View Full Version : இவர்கள் பாட்டு பாடினா



sarcharan
20-02-2006, 04:03 AM
பாட்டு வாத்தியார்: நிலவே நிலவே ஸ ரி க ம ப த நி ஸ பாடு...........

ஆங்கில வாத்தியார்: A B C நீ வாசி எல்லாம் என் கைராசி................

பைத்தியக்காரன்: ஐயையோ ஐயையோ புடிச்சிருக்கு! எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு.......

டப்பிங் ஆர்டிஸ்ட்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்......

வக்கீல்: பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை சொன்னால் பொய் பொய் தானே............

குடிகாரன்: (குடிவகையைப் பார்த்து) என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே............

டெண்டுல்கர் பாடினால் "அடிச்சால் சிக்ஸரு.... எடுத்தால் செஞ்சுரி.........."

தொனி பாடினால்: பறக்கும் பந்து பறக்கும், அது பறந்தோடி...

gragavan
20-02-2006, 05:14 AM
சூப்பர்...பிரமாதம்...இன்னும் இது மாதிரி நெறைய சொல்லலாமோ!

வைகோ - அங்கும் இங்கும் பாதை உண்டு..இன்று நீ எந்தப் பக்கம்
கருணாநிதி - அவனா சொன்னான் இருக்காது...அப்படி எதுவும் நடக்காது...நம்ப முடியவில்லை...
ஜெயலலிதா - வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை...
மக்கள் - சோதனை மேல் சோதனை போதுமடா சாம

pgk53
21-02-2006, 02:31 PM
சர்சரன் - ராகவன் இருவருமே அருமையான விருந்து படைத்துள்ளார்கள்.

aren
22-02-2006, 01:28 AM
நன்றாகவே கலக்குகிறீர்கள். தொடருங்கள்.

சோதனை மேல் சோதனை - அருமை

அறிஞர்
23-02-2006, 01:05 AM
கலக்கல் சிரிப்புக்கள்.. மக்களுக்கு சோதனை மேல் சோதனை தான் எப்பவுமே

இளசு
24-02-2006, 06:04 AM
சரவணன் கலக்க, இராகவன் பொடி தூவ..

மணக்கிறது பாட்டு..

இன்னும் தொடருங்கள் நண்பர்களே..


தேர்தல் நேரம் வேறு.. சொல்லியா கொடுக்கணும் நம்ம மக்களுக்கு...

Mathu
24-02-2006, 09:55 AM
சரவணன், ராகவன் பிரமாதம்.... இன்னும் கொஞ்சம் கொடுங்கப்பா...!

இளசு
24-02-2006, 11:22 PM
பசியோடிருக்கும் பாம்புகள் பாடினால்?

'தண்ணி கருத்திருச்சு - புள்ள
தவள சத்தம் கேட்டிருச்சு'

பால்காரர் பாடினால்:

தரைமேல் பிறக்கவைத்தான் - எங்களைத்
தண்ணீரால் பிழைக்க வைத்தான்


பறவைக்காய்ச்சல் சேவலைப் பார்த்து கசாப்பு ஆடு பாடினால்:

அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா?

Mano.G.
25-02-2006, 12:24 AM
பசியோடிருக்கும் பாம்புகள் பாடினால்?

'தண்ணி கருத்திருச்சு - புள்ள
தவள சத்தம் கேட்டிருச்சு'

பால்காரர் பாடினால்:

தரைமேல் பிறக்கவைத்தான் - எங்களைத்
தண்ணீரால் பிழைக்க வைத்தான்


பறவைக்காய்ச்சல் சேவலைப் பார்த்து கசாப்பு ஆடு பாடினால்:

அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா?

அருமையான டைமிங் பாடல்
கீப்பிட் அப்


மனோ.ஜி

aren
25-02-2006, 01:27 AM
இளசு அவர்களே,

நன்றாகவே கலக்குகிறீர்கள்.

கங்குலி பாடுகிறதுமாதிரி ஒரு பாட்டு கட்டுங்களேன்.

கிரெக் சாப்பலைப் பார்த்து கங்குலி:

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா
யாரும் இருந்த இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

aren
25-02-2006, 01:29 AM
கிரெக் சாப்பலைப் பார்த்து கங்குலி:

கண்ணா நீயும் நாணுமா
கண்ணா நீயும் நாணுமா

காலம் மாறலாம், கெளரவம் மாறுமா
நெவர்
கண்ணா நீயும் நாணுமா?

aren
25-02-2006, 01:33 AM
இளசு அவர்கள் எழுதிய அதே பாடல்:

திராவிட் கங்குலி போய்விட்டதால்:

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா

இளசு
26-02-2006, 04:57 AM
நன்றி அன்பு மனோஜி, அன்பின் ஆரென் அவர்களே..

ஆரென் அவர்களின் கிரிக்கெட் கலக்கல்ஸ் தூக்கல்..

கங்குலிக்கென்றால் கணக்கில்லாமல் பாட்டுகள் வரும் போல...


கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி அடி மானே...

sarcharan
28-02-2006, 12:22 PM
கிரெக் சாப்பலைப் பார்த்து கங்குலி பாடுனா கங்குலி ஜெயிச்சதா இல்ல அர்த்தமாகும்( கௌரவம் படம்படி அப்பன் சிவாஜி தோற்றுவிடுகிறார்...)
அதனால் ஜல்லிக்கட்டு படத்துல வர்ற இந்த பாட்டு நல்லா இருக்கும்
கங்குலியைப் பார்த்து கிரெக் சாப்பல்:
"ஏரியில் ஒரு ஓடம் ஓட
ஓடத்தில் ஒரு பாடல் பாட
ஓடத்தின் மேல நீயும் பாடத்த கேளு ராஜா
ஏலோ ஐலசா..."



கிரெக் சாப்பலைப் பார்த்து கங்குலி:

கண்ணா நீயும் நாணுமா
கண்ணா நீயும் நாணுமா

காலம் மாறலாம், கெளரவம் மாறுமா
நெவர்
கண்ணா நீயும் நாணுமா?

sarcharan
28-02-2006, 12:28 PM
கங்குலி:
பூங்காத்து திரும்புமா என் பாட்ட (பாட்டிங்க) விரும்புமா...
உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்குறேன் நல்ல வேஷம் தான் வெளுத்து வாங்குறேன்...

pradeepkt
28-02-2006, 05:33 PM
அடப்பாவி, அவரு வெளியயும் அழுதுகிட்டுத்தான் இருக்காரு...

அறிஞர்
28-02-2006, 06:56 PM
கங்குலி நிலை அதோகதிதான்..
எப்படியிருந்த ஆளு
இப்படியாயிட்டாரு...

aren
01-03-2006, 04:16 PM
கங்குலி டீம் இந்தியாவைப் பார்த்து:

யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும்
வென்ற பின்னே
வாங்கடா வாங்க

அழுகையில் பாட்டு அப்படியே நின்னுபோயிடுது

aren
01-03-2006, 04:18 PM
கங்குலி தான் முதல் டெஸ்டிற்கு தேர்வு செய்யப்படவில்லை என்பதை அறிந்தவுடன்:

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை.

sarcharan
01-03-2006, 05:07 PM
சூப்பர் ஆரென்
உண்மையிலேயே கங்குலி இதையெல்லாம் கேட்டா ரொம்ப வருத்தப்படுவான்

pradeepkt
02-03-2006, 02:05 AM
சூப்பர் ஆரென்
உண்மையிலேயே கங்குலி இதையெல்லாம் கேட்டா ரொம்ப வருத்தப்படுவான்
வருத்தப்படுவார்னு சொல்லணும்...
அவருக்கும் வயசாவுதில்லை? நீயும் உன்னைச் சின்னப் பையன் மாதிரி காட்டிக்கலாமே.. :D

கண்டிப்புடன்,
பிரதீப்

aren
02-03-2006, 03:14 AM
நன்றி சரவணன்.

உண்மையிலேயே கங்குலி எனக்கு மிகவும் பிடித்த ஆட்டக்காரர். அவரை அணியிலிருந்து இப்படி விலக்கிவைப்பது கொஞ்சம் மனதிற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.

mania
02-03-2006, 03:52 AM
கலக்கல் பதிவு.....ஆரென் ஃபுல் ஃபார்ம்ல இருக்கார்.....:D :D
அன்புடன்
மணியா...:D :D

pradeepkt
02-03-2006, 05:39 AM
என்னது ஆரென் அண்ணா ஃபுல்லா இருக்காரா?
தலை என்னது இது???? :D :D :D

மயூ
05-03-2006, 06:57 AM
கருனாநிதி வைகோவை பார்த்து
உயிரே உயிரே வ்ந்து என்னோடு கலந்து விடு
நினைவே நினைவே வந்து என் நெஞ்சோடு கலந்து விடு
காலம் கடந்தால்.....

mukilan
05-03-2006, 04:06 PM
ம.தி.மு.க-அ.தி.மு.க உடன் பாட்டுக்கு முன் S.M.S ல் வந்ததாக தினமலர் நாளிதழில் படித்தது.

கருணாநிதி: வருவியா? வரமாட்டியா? வரலேன்னா உன் பேச்சு கா....!

ஜெயலலிதா: வாராய் நீ வாராய்.. போகுமிடம் வெகுதூரமில்லை...!

வைகோ: எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் .....!

lavanya
05-03-2006, 11:05 PM
இப்போது கலைஞர் பாடிக்கொண்டிருப்பது ( வைகோவை பார்த்து )

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க

வைகோ கலைஞரை பார்த்து

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே

ராமதாஸ் கலைஞரை பார்த்து

( அலை பாயுதே வசனம் போல் பாவிக்க )

நான் போமாட்டேன்.. உங்க பக்கம் தான் இருப்பேன்.. நீங்க இதயத்துலயும் சீட்டு தாரேன்னு சொல்ல மாட்டீங்க ஆனா எனக்கு பயமா இருக்கு எங்கே நானும் போயிடுவேனோன்னு..

sarcharan
06-03-2006, 02:47 AM
இதை மக்கள் தான் பாடணும்... ஹி ஹி



வைகோ: எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் .....!

மயூ
11-03-2006, 10:26 AM
வைக்கோவைப்பார்த்து ஜெயலலிதா
ரா ரா சரசிக்கு ரா ரா..........

pradeepkt
11-03-2006, 07:28 PM
இது கொஞ்சம் ஓவர்...

சே-தாசன்
09-02-2007, 09:53 AM
இது கொஞ்சம் ஓவர்...

ஏன் தாங்கள் அ.தி.மு.க வின் ரத்ததின் ரத்தங்களில் ஒருவரோ?

pradeepkt
09-02-2007, 10:52 AM
ஏன் தாங்கள் அ.தி.மு.க வின் ரத்ததின் ரத்தங்களில் ஒருவரோ?
நான் சுத்தத்திலும் சுத்தம் :)

ஆமா, அவன் பாடின தெலுங்கு வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு???