PDA

View Full Version : நான், மாரன் வந்திருக்கிறேன்!

mkmaran
15-02-2006, 07:03 AM
வணக்கம் நண்பர்களே,

நான், மாரன் வந்திருக்கிறேன்...!
மிக சமீபத்தில்தான், நான் இந்த இணையபக்கம் கண்டேன்.

ஒவ்வொருவரின் மடல்களையும் படித்தபோது,
நிஜமாகவே மகிழ்ச்சியாக இருந்தது.

உங்களின் நட்பை நாடி...

நண்பன்
மாரன் 15/02/2006 04:04PM SG

Mano.G.
15-02-2006, 07:16 AM
வாங்க மாரன்,
நம்ம பக்கத்து ஊருகாரராச்சே,
உங்கள இங்க இந்த மன்றத்துல வரவேற்பதில மிக்க
மகிழ்ச்சி, அதோட இங்க உள்ள படிச்சு விமர்சனம்
எழுதுவதோட இல்லாமல் உங்கள் படைப்புக்களையும்
எங்களோட பகிர்ந்து கொள்ளுங்கள்

மனோ.ஜி

மதி
15-02-2006, 07:44 AM
வணக்கம் மாரன்..
உங்களது வரவு நல்வரவாகட்டும்.

mkmaran
15-02-2006, 07:48 AM
முதல் வரவேற்பு வழங்கிய மனோஜி சாருக்கு மிக்க நன்றி.
நிட்சயமாக எனது படைப்புகளை பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன்.

மீண்டும் உங்களுக்கு நன்றி!

sarcharan
15-02-2006, 07:58 AM
வணக்கம் மாறன்..
உங்களது வரவு நல்வரவாகுக.

பி.கு: தங்கள் பேச்சில் "முரசொலி"க்குமோ...:D :D :D :)

mkmaran
15-02-2006, 08:15 AM
நன்றி ராஜேஷ்குமார். (க்ரைம் நாவல் எழுதுவீர்கள்தானே..!)

உங்களுக்கும் நன்றி சரவணன்.
==>தங்கள் பேசசில் "முரசொலி"க்குமோ
ஹா..ஹா.. அவ்வளவு பெரிய ஓசை இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. சிறு குண்டூசி அளவுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

மதி
15-02-2006, 08:23 AM

க்ரைம் நாவலா..?

பண்ற க்ரைம் போதாதுன்னு அத நாவலா வேற எழுத சொல்றீயளே..!?:confused: :confused:

mkmaran
15-02-2006, 08:29 AM
ராஜேஷ்,
என்ன கலக்கலா கவிதை எழுதுவீங்க போலிருக்கு...! முதல் கவிதை (http://http://itzrajesh.blogspot.com/)அருமை!
தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

மதி
15-02-2006, 08:41 AM
ராஜேஷ்,
என்ன கலக்கலா கவிதை எழுதுவீங்க போலிருக்கு...! முதல் கவிதை (http://itzrajesh.blogspot.com/)அருமை!
தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!
உங்க பாராட்டுக்கு நன்றி மாரன்...
நீங்களும் உங்க படைப்புக்களை அள்ளி வந்து கொட்டுங்க..!

மதி

sarcharan
15-02-2006, 09:49 AM
மதி என்ன இது? " எக்ஸ்க்யூஸ் மீ " யாலா (இந்த ஆரம்பம்!!!)?

பை தி பை மாறன் அது என்ன எதிர்நீச்சல் பட வசனம் மாதிரி " நான் மாறன் வந்திருக்கிறேன்...")
அவதார் படமும் அப்படியே வைச்சிருக்கிய...
:D :D :D

நன்றி ராஜேஷ்குமார். (க்ரைம் நாவல் எழுதுவீர்கள்தானே..!)

aren
15-02-2006, 09:53 AM
வாருங்கள் மாறன். உங்களை வருக வருக என்று வரவேற்&ாழ்த்துக்கள்.

pradeepkt
15-02-2006, 09:54 AM
வணக்கம் மாரன்
தமிழ் மன்றத்தில் தங்கமாய் அங்கம் பெறுக
வாழ்த்துகள்

mkmaran
15-02-2006, 10:18 AM
ராஜேஷ்குமார் ==>நீங்களும் உங்க படைப்புக்களை அள்ளி வந்து கொட்டுங்க..!

புறப்பட்டோம்ல....மன்னார்குடி எக்ஸ்பிரஸ்ல....

சரவணன் ==> அது என்ன எதிர்நீச்சல் பட வசனம் மாதிரி " நான் மாறன் வந்திருக்கிறேன்

அது ஒண்ணுமிங்க.. சமீபத்துல... விவேக் நகைச்சுவை கேட்டதோட பாதிப்புன்னு நினைக்கிறேன்.."நான் ஆல்தோட்ட பூபதி வந்திருக்கேன்"

மீண்டும் நாளை சந்திப்போம். 07:15PM

mkmaran
15-02-2006, 10:22 AM
ஆரென் , ப்ரதீப்
வாழ்த்தக்கள் வழங்கிய உங்கள் இருவருக்கும் நன்றி, நன்றி..!

நாளை சந்திப்போம்!

மதி
15-02-2006, 11:05 AM
மதி என்ன இது? " எக்ஸ்க்யூஸ் மீ " யாலா (இந்த ஆரம்பம்!!!)?

பை தி பை மாறன் அது என்ன எதிர்நீச்சல் பட வசனம் மாதிரி " நான் மாறன் வந்திருக்கிறேன்...")
அவதார் படமும் அப்படியே வைச்சிருக்கிய...
:D :D :D
ஆஹா..
தேதிய கவனிச்சீயளா..
அந்த எக்ஸ்க்யூஸ் மீ க்கும் இதுக்கும் சம்பந்தமில்லை...

அறிஞர்
15-02-2006, 01:57 PM
வாருங்கள் மாரன்.. தங்கள் வரவு அனைவருக்கும் இன்பத்தை தரட்டும்....

mkmaran
16-02-2006, 05:21 AM
ஆஹா..
தேதிய கவனிச்சீயளா..
அந்த எக்ஸ்க்யூஸ் மீ க்கும் இதுக்கும் சம்பந்தமில்லை...

ராஜேஷ், அது என்ன "எக்ஸ்க்யூஸ் மீ" மேட்டர்? நான் இந்த தளத்துக்கு புதியவன் என்பதால் கிச்சிந்தும் புரியவில்லை.

அறிஞர் சார், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

நம்ம தமிழ் திறையிசையின் பழைய பாடல்களின் மீது அலாதி பிரியம். என்னைப்போல் விருப்பம் இருப்பபவர்களுக்காக, ஒரு இணையதளம் உருவாக்கி அதில் சுமார் 200 பாடல்கள்வரை பதிவு செய்திருக்கிறேன்.

அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்,
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக. பழைய பாடல் விரும்பிகளுக்கு பிடித்தமானது. எனக்கும் ரொம்ப பிடிக்கும். அதேபோல்,

இராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே - கனிமுத்து பாப்பா
இது மாலை நேரத்து மயக்கம் இதை காதல் என்பது - தரிசனம்
காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான் - பூக்காரி
இங்குவந்த இந்தமயக்கம் என்னை எங்கயோ கொண்டுபோகுதம்மா -

இவையெல்லாம், நமது பழையபாடல் தொகுப்பில் இருக்கும் பாடல்களில் சில.

இப்போது நான் தேடிக்கொண்டிருக்கும் பாடல்கள்,
ஆனிமுத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே - பாமாவிஜயம்
ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா - சக்கரம் (சரியாக தெரியவில்லை)

இந்த பாடல்கள் கிடைக்கும் இடம் / தளம் தெரிந்தவர்கள், எனக்கு சொல்லுங்களேன்!

மதி
16-02-2006, 05:44 AM
ராஜேஷ், அது என்ன "எக்ஸ்க்யூஸ் மீ" மேட்டர்? நான் இந்த தளத்துக்கு புதியவன் என்பதால் கிச்சிந்தும் புரியவில்லை.

இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வாழ்த்துக்கள் பகுதியில் உள்ள "பெங்களூரில் ஒரு சந்திப்பு" திரியில் பாருங்கள்..

mkmaran
16-02-2006, 06:12 AM
ஹா..ஹா... அந்த திரியில் அனைவரின் பின்னோட்டங்களையும் படித்து பலமுறை சிரித்துக்கொண்டேன்... நிஜமாகவே உங்களின் இனிய சந்திப்பு அனுபவம். கலக்கல்! "எக்ஸ்க்யூஸ் மீ" மேட்டர் சந்தேகம் தீர்ந்தது.

சரி... நான் அலுவலக்கத்தில் இருந்து வழக்கத்திற்கு முன்னதாக கிளம்பவேண்டும். நம்ம இந்திய ஹை-கமிஷன் சென்று பாஸ்போர்ட் புதிப்பிப்பு பெறவேண்டும்.

இந்த ஞாயிறு மீண்டும்... வியட்நாம் பயணம்..!

மீண்டும் நாளை சந்திப்போம். 03:10PM

Quote:
Originally Posted by Rajeshkumar
ஆஹா..
அந்த பொண்ணு எப்பலேர்ந்து கூப்பிட்டான்னு தெரியாது..பேசி முடிச்சதுக்கு அப்புறமா தான் கவனிச்சேன்..அவ மொறச்சதுலேயே ரொம்ப நேரமா கூப்பிட்டிருப்பாளோன்னு நெனச்சேன்..

போதுமா..இந்த வெளக்கம்ம்..

யப்பா....என்னமா சுத்தி சுத்தி அடிக்கறாக...

கூப்பிட்டிருப்பாளோன்னு நெனச்சேன்..
இது மட்டும் தான் கரெக்ட் மதி.. மத்தபடி ஒண்ணும் நடக்கலே. நான் உங்க அருகில் வந்த பொழுது நீங்கள் தள்ளி நின்றீர்கள். அப்புறம் உங்கள் பேச்சு முடிந்ததும், நான் ஃபோன் போட்டேன்.. அந்த பொண்ணு, கடந்தது உன்னை வித்தியாசமாய் பார்த்துக் கொண்டே..
__________________
தாமரை செல்வன்

மதி
16-02-2006, 06:55 AM
உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்க்கள்

இளந்தமிழ்ச்செல்வன்
16-02-2006, 05:25 PM
வாருங்கள் மாரன். உங்கள் பங்களிப்பை காண ஆவலாய் உள்ளோம். கொஞ்சம் முன்னமே சேர்ந்திருக்கலாம்தானே? அங்கு வந்த போது உங்களையும் சந்தித்து இருக்கலாம்.

வட்டா
16-02-2006, 06:15 PM
வாருங்கள் உங்கள் பங்களிப்பைத் தாருங்கள்

mkmaran
17-02-2006, 06:31 AM
RoadRash வாழ்த்துக்களுக்கு நன்றி.

செல்வன் உங்களுக்கும் நன்றி. ஏனோ இத்தனை காலம் தெரியவில்லை. நிச்சயமாக அது எனக்கு இழப்புதான். இன்னும் உங்கள் அனைவருடனும் நிறைய பேசியிருக்கலாம். இப்போதாவது தெரிந்ததே அதுமட்டும் சந்தோஷம். மறுமுறை எப்போது இங்கு வருவீர்கள் என்று சொல்லுங்கள். மீண்டும் ஒருமுறை சிங்கபூரை வட்டமடிக்கலாம். வாருங்கள்.

mkmaran
17-02-2006, 07:40 AM
உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்க்கள்

நன்றி மதி. :D

பரஞ்சோதி
17-02-2006, 12:59 PM
வாங்க வாங்க மாறன்.

உங்களை மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

mkmaran
20-02-2006, 07:33 AM
நன்றி, பரம்ஸ்!

இங்கு வியட்நாமில் இருக்கிற, ஊர்வசி உணவகத்தில் மதிய சாப்பாடு,
அருமையிலும் அருமை. உண்ட மயக்கம், உறக்கததுக்கு அழைப்பு விடுகிறது.

விரைவில், புதிய படைப்புக்களை பதிய முயல்கிறேன்.

இளசு
22-02-2006, 05:50 AM
வருக மாரன்,

உங்கள் விருப்ப பாடல்கள் அனைத்தும் எனக்கும் மிக மிக பிடிக்கும்..

உங்கள் வரவால் மகிழும் மன்ற நெஞ்சங்களின் பட்டியலில் நானும்..

வாருங்கள்.. தாருங்கள்... வாழ்த்துகள்..

mkmaran
22-02-2006, 09:19 AM
வருக மாரன்,

உங்கள் விருப்ப பாடல்கள் அனைத்தும் எனக்கும் மிக மிக பிடிக்கும்..

உங்கள் வரவால் மகிழும் மன்ற நெஞ்சங்களின் பட்டியலில் நானும்..

வாருங்கள்.. தாருங்கள்... வாழ்த்துகள்..

ilasu உங்களுக்கு மிக்க நன்றி. அவற்றில் அதிகமாக இருப்பது, இனிமையான பழைய பாடல்கள். கேட்டு மகிழுங்கள். தொடர்ந்து புதிதாக
பாடல்கள் பதிவு செய்துகொண்டிருக்கிறேன்.

05:05PM VN

Shanmuhi
22-02-2006, 05:44 PM
வணக்கம் மாறன்..
உங்களது வரவு நல்வரவாகுக.

aren
23-02-2006, 12:31 AM
கீழே கொடுத்துள்ள தளத்திற்கு சென்று தேடிப்பாருங்கள். ஊங்களுக்குத் தேவையான பழைய பாடல்கள் அனைத்தும் கிடைத்தாலும் கிடைக்கும்.

http://www.palanikumar.com/psusheela.phtml

நன்றி வணக்கம்
ஆரென்

pgk53
23-02-2006, 12:49 AM
சிங்கை மாறன் அவர்களை வருக வருக என்று வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..........உங்கள் பதிவுகளால் மன்றம் மேலும் சிறப்படையும் என நம்புகிறேன்.

mkmaran
23-02-2006, 01:50 AM
Shanmuhi உங்களின் வரவேற்புக்கு நன்றி.

Aren சார், அருமையான இணையதள முகவரி கொடுத்துருக்கீங்க. திரு. பழனி என்பவரின் அந்த இணையதளத்துல ஏராளமான பாடல்கள் இருக்கிறது. நான் தேடிய 2 பாடல்கள் அதில் கிடைத்தது. அவரின் அந்த
சேவையை பாராட்டி அவருக்கும் மெயில் அனுப்பிருக்கிறேன்.

தகவல் தந்த உங்களுக்கு ரொம்பவும் நன்றி.

mkmaran
23-02-2006, 02:30 AM
சிங்கை மாறன் அவர்களை வருக வருக என்று வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..........உங்கள் பதிவுகளால் மன்றம் மேலும் சிறப்படையும் என நம்புகிறேன்.

உங்களின் வரவேற்புக்கு நன்றி pgk53. சிங்கை மாறன் அப்படிங்கற பெயரில் மலேசியாவுல ஒருத்தர் இருக்கிறாராம்.:D

aren
23-02-2006, 03:13 AM
மாறன் நீங்க இங்த பகுதியில் மட்டுமே வலம் வருகிறீர்கள். மற்ற இடங்களுக்கும் வாருங்கள். வந்து உங்கள் பங்களிப்பைச் சிறப்பாக்குங்கள்.

mukilan
23-02-2006, 07:11 AM
கீழே கொடுத்துள்ள தளத்திற்கு சென்று தேடிப்பாருங்கள். ஊங்களுக்குத் தேவையான பழைய பாடல்கள் அனைத்தும் கிடைத்தாலும் கிடைக்கும்.

http://www.palanikumar.com/psusheela.phtml

நன்றி வணக்கம்
ஆரென்

எனக்கு பகவதிபுரம் ரயில்வே கேட் என்ற திரைப்படத்தில் இருந்து "செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நினைச்சேன்" என்ற பாடல் வேண்டும். இணைய தளத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கூல்கூசில் கூட இல்லை. இளையராஜா மற்றும் உமா ரமணன் பாடியது. யாரேனும் உதவ முடியுமா?

ராசராசன்
23-02-2006, 07:58 AM

அந்த பாடல் இங்கே கிடைக்கிறதே..! முயன்றீர்களா? :confused:
இத்தளம் ஒரு தமிழ் பாடல்களின் சுரங்கம் தானே? :D

http://as01.cooltoad.com/music/song.php?id=225027

mukilan
23-02-2006, 08:22 AM
அந்த பாடல் இங்கே கிடைக்கிறதே..! முயன்றீர்களா? :confused:
இத்தளம் ஒரு தமிழ் பாடல்களின் சுரங்கம் தானே? :D

http://as01.cooltoad.com/music/song.php?id=225027
மிக்க நன்றி தேனிசை. நான் தவறான எழுத்துக்கள் கொண்டு தேடியிருப்பேன் என் நினைக்கிறேன். பெயருக்கேற்றார் போல (தேன்) இசையை பல தளங்களில் இருந்து சேர்த்து வைக்கிறீர்கள் போல.

ராசராசன்
23-02-2006, 08:34 AM
மிக்க நன்றி தேனிசை. நான் தவறான எழுத்துக்கள் கொண்டு தேடியிருப்பேன் என் நினைக்கிறேன். பெயருக்கேற்றார் போல (தேன்) இசையை பல தளங்களில் இருந்து சேர்த்து வைக்கிறீர்கள் போல.

நன்றி!

நான் பொழுபோக்காக சேமித்ததில், 20GB அளவில் தமிழ் MP3 சேகரித்து வைத்துள்ளேன். தமிழ் நண்பர்கள் கேட்கும்பொழுது கொடுப்பதுண்டு.

தீவிரமாக 'கண்டசாலா' பாடல்களை சேகரித்து வருகிறேன்..

mkmaran
23-02-2006, 08:40 AM
முகிலன், தேனிசை வருகைக்கு நன்றி.
coolgoose.com என்ற அந்த இணையதளமே இப்போது cooltoad.com என்ற பெயரில் இயங்குகிறது.

உங்களுக்கு பழைய பாடல்கள், பிடிக்கும் என்றால்
எனது பெயருக்கு கீழே இருக்கும் தமிழமுதம் சுட்டியை க்ளிக் செய்யுங்கள்.

ராசராசன்
23-02-2006, 08:50 AM

நன்றி, மாறன்.

எனக்கு சிவாஜி நடித்த 'தங்கை' படத்திலிருந்து "இனியது இனியது உலகம்" என்ற பாடல் வேண்டும்..தேடிக்கொண்டே இருக்கிறேன்.

தங்களால் உதவ முடியுமா?

mkmaran
24-02-2006, 01:21 AM
தேனிசை, நீங்கள் தங்கை படப்பாடல்கள் என்னிடம் இருக்கும் தொகுப்பில் இருக்கும் என் நினைக்கிறேன். இருந்தால் உங்களுக்கு அனுப்புகிறேன்.

கண்டசாலா பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல்
"முத்துக்கு முத்தாக சொத்தாக ". அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்றது. உங்களிடம் இல்லை என்றால் சொல்லுங்கள். என்னிடம்
இருக்கிறது.

20GB அளவுக்கு பாடல் தொகுப்பு வைத்திருக்கிறீர்களா? ஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் உங்களுக்கென்று ஏதும் இணையபக்கம் வைத்திருந்தால்
சொல்லுங்கள்.

ராசராசன்
27-02-2006, 07:40 AM

நன்றி, மாறன். நீங்கள் கூறியுள்ள பாடல் என்னிடம் உள்ளது. எனக்கென்று இணயம் இதுவரை இல்லை. கூடிய விரைவில் தொடங்கவுள்ளேன்.

pradeepkt
27-02-2006, 09:19 AM
நன்றி!

நான் பொழுபோக்காக சேமித்ததில், 20GB அளவில் தமிழ் MP3 சேகரித்து வைத்துள்ளேன். தமிழ் நண்பர்கள் கேட்கும்பொழுது கொடுப்பதுண்டு.

தீவிரமாக 'கண்டசாலா' பாடல்களை சேகரித்து வருகிறேன்..
அருமை தேனிசை
நானும் பாடல்கள் சேமித்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

aren
27-02-2006, 09:35 AM
நாணும் ஒரு 3000 பழைய பாடல்கள் சேமித்து வைத்திருந்தேன். என்னுடைய கணிணி பழுதடைந்துவிட்டதால் நிறைய போய்விட்டது. ஒரு சிலது இன்னும் தட்டில் சேமித்து வைத்திருக்கிறேன். அதை ஒரு நாள் உட்கார்ந்து என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.

ராசராசன்
27-02-2006, 05:41 PM
பிரதீப் மற்றும் ஆரென்,

வணக்கம்.

நான் சென்னையில் பணிபுரிகிறேன். திட்ட வேலை நிமித்தம் அயல்நாடு செல்வதுண்டு. இத்தருணம் வெளிநாட்டில் உள்ளேன். தமிழ் பாடல்களை நம் கள நண்பர்களிடையே பரிமாற்றம் செய்து கொள்ள வசதியான இணயதளம் ஏதும் இருந்தால் கூற இயலுமா? இத்தளத்திற்கு நான் புதியவனாக இருந்தாலும், அனைவரின் கருத்துக்களை இது விடயமாக அறிய விரும்புகிறேன்.

நன்றி!