PDA

View Full Version : ரசித்த கவிதைகள்



அறிஞர்
14-02-2006, 10:16 PM
பல தளங்களில் புதுக்கவிதைகளை படிக்கிறோம்... அவற்றில் ரசித்தவைகள் சிலவற்றை.. இங்கு கொடுக்கலாமே....
----
காபி ஷாப், கடற்கரை
தியேட்டர், தீம்பார்க்
சேர்ந்து போனவர்கள்
தனித்தனியே போனார்கள்
கல்யாணமாகி!
----
வயசுங்கிறது
வைகோ மாதிரி
அலை பாயும்
மனசுங்கிறது
கலைஞர் மாதிரி
புதிர்போடும்
---------
லெட்டர் போய்
எஸ்.எம்.எஸ். வந்ததில்
பாதிக்கப்பட்டவர்கள்
அழகான பெண்களின் தம்பிகள்!
-------
காதல் வந்தவனின்
செல்போன் கதறியது
'செல்லம் ஐ ஹேட் யூ'
----
(நன்றி விகடன்)

Mano.G.
15-02-2006, 12:01 AM
பல தளங்களில் புதுக்கவிதைகளை படிக்கிறோம்... அவற்றில் ரசித்தவைகள் சிலவற்றை.. இங்கு கொடுக்கலாமே....
----
காபி ஷாப், கடற்கரை
தியேட்டர், தீம்பார்க்
சேர்ந்து போனவர்கள்
தனித்தனியே போனார்கள்
கல்யாணமாகி!
----
வயசுங்கிறது
வைகோ மாதிரி
அலை பாயும்
மனசுங்கிறது
கலைஞர் மாதிரி
புதிர்போடும்
---------
லெட்டர் போய்
எஸ்.எம்.எஸ். வந்ததில்
பாதிக்கப்பட்டவர்கள்
அழகான பெண்களின் தம்பிகள்!
-------
காதல் வந்தவனின்
செல்போன் கதறியது
'செல்லம் ஐ ஹேட் யூ'
----
(நன்றி விகடன்)



அட எல்லாமே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிரது
நன்றி அறிஞரே எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு

மனோ,ஜி

RRaja
16-02-2006, 09:47 AM
லெட்டர் போய்
எஸ்.எம்.எஸ். வந்ததில்
பாதிக்கப்பட்டவர்கள்
அழகான பெண்களின் தம்பிகள்!
------- புரியவில்லையே!

தாமரை
16-02-2006, 09:52 AM
புரியவில்லையே!
அட கூரியர் சர்வீசுப்பா!!!

mazhai
17-02-2006, 03:12 AM
கவிதை அருமை..வாழ்த்துக்கல்.....:)

பென்ஸ்
17-02-2006, 03:38 AM
வாங்க மழை...
உங்களை பற்றி அறிமுகபகுதியில் கொஞ்சம் எழுதுங்களேன்

RRaja
22-02-2006, 09:58 AM
ம்ஹீம் புரியல! கூரியருக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் செல்வன்?

sarcharan
22-02-2006, 10:06 AM
வாங்க மழை.
மன்றத்திற்க்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். தங்கள் படைப்புகளை காணலாமா?
(பி.கு: தாங்கள் ஜெயம் ரவியின் விசிறியா....?)


கவிதை அருமை..வாழ்த்துக்கல்.....:)

இளசு
22-02-2006, 10:17 PM
நன்றி அறிஞரே, தெரிவுகள் அருமை.

காதலர்தினம் வந்தால் லாவண்யா ராம்பால் பப்பி உட்பட பலர் போட்டி போட்டு பலப்பல காதல் கவிதைகளை இங்கே கொட்டுவார்கள்.

அது ஒரு கனாக்காலம்...

மறக்காமல் மரபைத் தொடர்ந்த அறிஞருக்கு மீண்டும் நன்றி..

தாமரை
23-02-2006, 03:37 AM
ம்ஹீம் புரியல! கூரியருக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் செல்வன்?
எந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தம்பியின் வழியே லெட்டர் அனுப்பியதில்லை என நீங்கள் நடித்தால் அதை நம்ப நாங்கள் தயாராக இல்லை

மதி
23-02-2006, 03:41 AM
எந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தம்பியின் வழியே லெட்டர் அனுப்பியதில்லை என நீங்கள் நடித்தால் அதை நம்ப நாங்கள் தயாராக இல்லை
ம்ம்ம்ம்ம்ம்...அனுபவங்கள்...:eek: :eek: :eek:

sarcharan
23-02-2006, 04:00 AM
என்ன மதி ,
பெரியவங்களுக்கு அனுபவம் ஜாஸ்தி.. அவங்க சொன்னா சரியாதான் இருக்கும்....

உதாரனமா செல்வன், பரம்ஸ்... நம்ம எல்லாரையும் விட பெரியவங்க இல்லையா ஹி ஹி



ம்ம்ம்ம்ம்ம்...அனுபவங்கள்...:eek: :eek: :eek:

சந்திரமுகி
29-09-2006, 06:17 PM
சக்தி எப்.ம்-ல் எப்போதோ கேட்ட கவிதை இன்னும் ரசிக்க வைக்கிறது..

நினைவுகள்..
உனக்கு ஒட்டடை..
எனக்கு வீடு.

mgandhi
22-11-2006, 06:27 PM
மம்மி என்றழைத்து
தமிழைக் கொல்லும் மகனை
மகனென்றும் பாராமல்
மாட்டுத் தொழுவத்தில்
கட்டி வையுங்கள்

அம்மா என்றழைத்து
தமிழை வாழ வைத்த கால்நடைகளை
வீட்டிற்குள் கொண்டு வாருங்கள்

பூக்களைப் பறிக்கும் பழக்கத்தை
இன்றோடு மாற்றி விட்டு
நாளை முதல் முட்களைப்
பறிக்க ஆரம்பியுங்கள்

பூக்கள் உதிர்ந்தால்
பாதங்களை காயப்படுத்தாது
முட்கள் உதிர்ந்தால்
பாதங்களை
காயப்படுத்தி விடுமே என்பதற்காக

ஓவியன்
26-02-2007, 11:42 AM
வயசுங்கிறது[/B]
வைகோ மாதிரி
அலை பாயும்
மனசுங்கிறது
கலைஞர் மாதிரி
புதிர்போடும்


இந்த வரிகளைப் பார்த்து உண்மையிலேயே சிரித்து விட்டேன்