PDA

View Full Version : இல்லாமல் போனவை

meeravi
06-02-2006, 07:08 AM
தனிமையில் சிரித்து
பழக்கமில்லை

மௌனத்தோடு பேசிய
அனுபவமில்லை

அசோகன் பரப்பிய மதம்
வசப்பட்டதில்லை

மேற்குறிப்பிட்ட 'இல்லை'
இன்று என்னிடம் இல்லை.

-மீரவி

பென்ஸ்
06-02-2006, 07:58 AM
என்ன இது ஒன்னுமே புரியலை.....

விளக்கலாமா????

pradeepkt
06-02-2006, 09:27 AM
அட என்ன பென்ஸூ...
இன்னைக்குத் தனிமையில் சிரிக்கவும் மௌனத்தோடு பேசவும் அமைதியை விரும்பவும் மீரவியால் முடிகிறது....
காரணம் புரியவில்லையெனில், அதுவும் உங்களுக்குப் புரியவில்லையெனில் நாளை சூரியன் மேற்கில் உதிக்கும்

தாமரை
06-02-2006, 09:36 AM

1. இல்லை என்னிடம் இல்லை என்பதுதான் உதைக்கிறது...
மேற்கூறிய இல்லை என்று சொல்வதினால் மேலே குறிப்பிட்ட இல்லைகள் என்று அர்த்தம் ஆகாது.. அப்படி சொல்ல விரும்பினால் இல்லை-கள் என பன்மையில் குறிப்பிட வேன்டும்.

2. தனிமையில் சிரிக்க கற்றுக்கொண்டதாகவும், மௌனத்துடன் பேசுவதாகவும்..ஆசோகர் பரப்பிய புத்த மதம் வசப்பட்டதாகவும் கொள்வோம். அப்படியானால் அதை மட்டுமே சொல்ல வேண்டிய எண்ணம் மிரவி -யாருக்கு வர வாய்ப்பு இல்லை. இவை மூன்றையும் நான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதில்லை இக்கவிதையின் அடி நாதம்..

இதன் அடி நாதம் இந்த இல்லை என்ற வருத்தங்கள் இப்போது வராத அளவு பக்குவப் பட்டு விட்டேன் என்பதே...

சரியா மிரவி

மதி
06-02-2006, 09:46 AM
என்னமோ போங்க..!
இந்த சின்ன பயலுக்கு(எனக்குத்தேன்) ஒன்னுமே புரிய மாட்டேங்குது..
ஹ்ம்ம்...

pradeepkt
06-02-2006, 10:10 AM
செல்வன்,
நீங்கள் பக்குவப் படுதல் என்கிறீர்கள். பக்குவப் படுதல் என்பது பெரிய வார்த்தை.
நான் இந்த நடத்தைக்கான காரணங்களைப் பற்றிக் கூறுகிறேன்.
அனேகமாக காதல் வயப்பட்டவர்களின் புதிதான பழக்க வழக்கங்கள் பற்றிக் கூற வருகிறார் என்று நினைக்கிறேன்.

மதி
06-02-2006, 10:18 AM

ச்சே...
இந்த பெரிசுகளே:D :D ..இப்படி தான்..
நெனக்கிறேன்..காயப்போடறேன்னு..:eek: :eek:

யாராவது எனக்கு புரியற மாதிரி சொல்லுங்களேன்...:angry: :angry: :angry:

தாமரை
06-02-2006, 10:22 AM
செல்வன்,
நீங்கள் பக்குவப் படுதல் என்கிறீர்கள். பக்குவப் படுதல் என்பது பெரிய வார்த்தை.
நான் இந்த நடத்தைக்கான காரணங்களைப் பற்றிக் கூறுகிறேன்.
அனேகமாக காதல் வயப்பட்டவர்களின் புதிதான பழக்க வழக்கங்கள் பற்றிக் கூற வருகிறார் என்று நினைக்கிறேன்.
பதிலை கவிதை எழுதியவரே சொல்லட்டும் பொறுத்திருப்போம்.

meeravi
06-02-2006, 12:32 PM
இக்கவிதையை செல்வன் கூறியது போலும் எடுத்துக்கொள்ளலாம்
ப்ரதீப் கூறியது போலும் எடுத்துக்கொள்ளலாம்.

-----------

1. செல்வன் கூறியது போல் ஓர் பக்குவ நிலையை எடுத்துக் கூறுதல்.
எப்படியெனில் தனிமை என்பது கொடுமையாகும்; ஆனால், தனிமையிலும் ஆனந்த நிலையை காண்பது ஓர் பக்குவ நிலை.

மௌனத்தொடு பேசுதல் என்பது உள் மனதோடு பேசுதலாகும். நாம் மௌனமாக இருக்கும் பொழுதுதான் நம் உள்மனம் பேசுவதை உணர முடியும். அதற்கு கட்டளையிட்டு நாம் நினைத்ததை சாதிக்க முடியும். இதுவும் ஓர் பக்குவ நிலையே.

புத்த மதம் - எந்த உயிரினத்துக்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது என்பதைச் சொல்ல எடுத்தாண்டுள்ளேன்.

மனம் பக்குவம் அடைந்த பிறகு இதெல்லாம் வசப்பட்டது என்ற பொருள்.

இந்த பக்குவ நிலையில் எல்லாம் ஒன்றே.(ஒருமையே)
ஆதலால் தான் 'இல்லை'(கள்) என்று குறிப்பிடவில்லை.
----------

2. ப்ரதீப் கூறியது போல் காதல் வயப்பட்டவரின் புதிய பழக்கவழக்கம் எடுத்துக் கூறுதல் என்ற பொருளும் பொருந்தும்.

-மீரவி

பென்ஸ்
06-02-2006, 12:35 PM
எப்படிதான் எழுதுறாங்களோ??? இருந்து யோசிப்பாய்ங்களோ????

எப்படியோ... ஒரு நல்ல கவிதை கிடச்சிது...நன்றி மீரவி...

மதி
06-02-2006, 12:37 PM
ஹ்ம்ம்...
இப்படி பக்குவப்பட்ட தோழி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..(எவ்வளவு..யார்கிட்டேன்னு கேக்காதீங்க..)

கவிதையை விட விளக்கம் நன்றாய் உள்ளது..

pradeepkt
07-02-2006, 03:40 AM
ஹ்ம்ம்...
இப்படி பக்குவப்பட்ட தோழி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..(எவ்வளவு..யார்கிட்டேன்னு கேக்காதீங்க..)

கவிதையை விட விளக்கம் நன்றாய் உள்ளது..
இதெல்லாம் நக்கலாத் தெரியலை????

மதி
07-02-2006, 03:42 AM
இதெல்லாம் நக்கலாத் தெரியலை????
ஏனுங்கண்ணா..
சம்பந்தபட்டவங்களே...புரியாம இருக்கும் போது..
இப்படி எடுத்து கொடுத்து மாட்டிவிடறேளே....!?:mad: :angry:

தாமரை
07-02-2006, 04:01 AM
ஏனுங்கண்ணா..
சம்பந்தபட்டவங்களே...புரியாம இருக்கும் போது..
இப்படி எடுத்து கொடுத்து மாட்டிவிடறேளே....!?:mad: :angry:
எனக்குப் புரியலிங்கண்ணா.. கொஞ்சம் விளக்கமாச் சொன்னீங்கண்ணா.. புரிஞ்சுக்கோவோமுங்கண்ணா:D :D :D :D

மதி
07-02-2006, 04:14 AM
எனக்குப் புரியலிங்கண்ணா.. கொஞ்சம் விளக்கமாச் சொன்னீங்கண்ணா.. புரிஞ்சுக்கோவோமுங்கண்ணா:D :D :D :D
நான் கவிஞர சொன்னேங்கண்ணா..!!!:) :)

pradeepkt
07-02-2006, 04:18 AM
அண்ணா,
விட்ருங்ணா.. போதும்ங்ணா..
அவங்களுக்குப் புரிய வேண்டிய அளவு புரிஞ்சுருச்சுங்ணா...

ஆதி
03-05-2012, 04:49 PM
இந்தக் கவிதை இப்போதுதான் கண்ணில் பட்டது, மீரவி அவர்களின் கவிதைக்கான விளக்கம் அசத்தல், விவாதங்களும் அருமை

நல்ல கவிதை