PDA

View Full Version : விடை வேண்டும்!



meeravi
02-02-2006, 11:18 AM
நீ யென்பது நீயன்று

நீ யில்லாமல் போனால்
நான் என்பது நானன்று

நான் அழிந்து போனால்
நானும் நீயும் ஒன்று

எனில்
நான் யார்? நீ யார்?

பி.கு.:
வாழ்க்கை யெனும் விடுகதை
இந்த விடையில்
விடை பெருமோ?

-meeravi

தாமரை
02-02-2006, 11:44 AM
1988 ஆம் ஆண்டு - மெசன்னஸ் அனைத்துக் கல்லூரி கலை விழா!
எங்கள் கல்லூரியில் நடந்தது...அதில் நடந்த அறுவைப் போட்டியில் பச்சையப்பா கல்லூரியிலிருந்து முதுகலை தமிழிலக்கியம் படிப்பவர் கலந்து கொண்டு பேசியது...

நான் நானாக இருந்து,
நீ நீயாக இருந்து
அது அதுவாக இருந்து
இது இதுவாக இருந்து
அவன் அவனாக இருந்து
இவன் இவனாக இருந்து
அவள் அவளாக இருந்து
இவள் இவளாக இருந்து
அவர்கள் அவர்களாய் இருந்து
இவர்கள் இவர்களாய் இருந்து விட்டால்

நாம் நாமாக இருக்கலாம்..

நான் நானாக இல்லாமல்
நீ நீயாக இருந்து
அது அதுவாக இருந்து
இது இதுவாக இருந்து
அவன் அவனாக இருந்து
இவன் இவனாக இருந்து
அவள் அவளாக இருந்து
இவள் இவளாக இருந்து
அவர்கள் அவர்களாய் இருந்து
இவர்கள் இவர்களாய் இருந்து விட்டால்

நாம் நாமாக இருக்க முடியாது...

நான் நானாக இருந்து
நீ நீயாக இல்லாமல்
அது அதுவாக இருந்து
இது இதுவாக இருந்து
அவன் அவனாக இருந்து
இவன் இவனாக இருந்து
அவள் அவளாக இருந்து
இவள் இவளாக இருந்து
அவர்கள் அவர்களாய் இருந்து
இவர்கள் இவர்களாய் இருந்து விட்டால்

நாம் நாமாக இருக்க முடியாது...

என்று மூச்சு விடக் கூட சமயமெடுக்காமல் போக எல்லோரும் அயர்ந்து விட்டனர். முதல் பரிசை அவர் வென்றாலும்.. நடுவர் தீர்ப்பு அளித்த போது...

இது பேச்சுப் போட்டியாய் இருந்திருந்தால் பேச ஆரம்பித்த உடனே தோற்றிருப்பார்.. ஆனால் அறுவைப் போட்டி என்பதினாலே..
மற்ற யாரும் சீரிய கருத்தை வைக்க முடியவில்லை ஆதலால் முதல் பரிசை தட்டிச் செல்கிறார் என்றார்..

அதற்கு விளக்கம் சொன்னார்.

நான் நானாக இருந்து நீ நீயாக இருந்தால் போதும்.. நாய் பேயானால் என்ன,, நரி பரியானால் என்ன, நாம் நாமாக இருக்கலாம்..


எப்படி.......

பென்ஸ்
02-02-2006, 05:34 PM
"உன்னை கானாத கண்ணும் கண்ணல்ல" என்ற பாடலை நினைவு
படுத்துகிறது... அருமை

பி.கு. இந்த விடுகதையை வேளியெ சொல்லதிங்க, நான் இதை
பயன்படுத்தலாம் என்று இருக்கிறேன்....

செல்வன்... மக்கள் பாதிபேர் அப்படியே தலையை பிச்சிருப்பாங்களே???

தாமரை
03-02-2006, 03:37 AM
செல்வன்... மக்கள் பாதிபேர் அப்படியே தலையை பிச்சிருப்பாங்களே???[/


யார் தலையை பிச்சிகிட்டாங்களோ தெரியாது நான் பிச்சிக்கலை.. ஏன்னா நாந்தானுங்களே அங்க நடுவர்.. :D :D :D :D :D :D