PDA

View Full Version : கண்டுகொள்வேன்...கண்டுகொள்வேன்...



meeravi
01-02-2006, 06:04 AM
நீ எங்கு இருக்கிறாய்
என்பதை அறிவிக்காமல் இருந்தாலும்
என் தேடலை
நான் நிறுத்தமாட்டேன்.
ஏனெனில்
உன்னைக் கண்டுகொள்ள
என்னா லன்றி - வேறு
எவரால் முடியும்?

-meeravi

பென்ஸ்
01-02-2006, 06:50 AM
இன்னும் ஒரு அருமையான கவிதை....

தேடல்....

எல்லோரும் உன்னை போல்
ஆனால்..
எல்லோரும் நீயாய் இல்லை...
---------தமிழ்மன்றத்தில் வாசித்தவரிகள்....

காதலில் இருக்கும் ஒவ்வொருவருக்கும், தான் கடந்து வரும் அனைவரும் தன் காதலன் அல்லது காதலியை ஏதோ ஒரு விதத்தில் நினைவு படுத்துவர்.

அவளை மாதிரியே சிரிப்பு...
அவரை மாதிரியே நடை...

இப்படி பொருத்தி பார்க்கும் மனதிர்க்குள் பிரித்து பார்த்து தன் துனையின் தனிதன்மையை நோக்கிய ஒரு தேடலா???

இல்லை தன்னுள் எங்கோ புதைந்து கிடக்கும் அவரை/ளை நோக்கிய தேடலா???

காதலின் தன்னம்பிக்கை இக்கவிதையில் அதிகமாக தெரிகிறது....
வாழ்த்துகள் meeravi....

மதி
01-02-2006, 06:58 AM
எப்போம்மா வந்தே ஊரிலேர்ந்து..?
கலக்குறியே..?!!
வாழ்த்துக்கள்..
தேடுதல் பலிதமாகட்டும்

இளசு
03-02-2006, 06:00 AM
பூங்காற்றிலே அவள் சுவாசத்தை தேடுவதும்
காலடி ஓசையிலே காதலை அறிவதும்...

மீரவியின் கவிதைக்கு ஒரு தரமும்..
பென்ஸின் விமர்சனத்துக்கு மறுதரமும்..

இருமுறை படித்தேன்... இருமடங்கு ரசித்தேன்..