PDA

View Full Version : குழந்தை



Divya
31-01-2006, 07:59 PM
குழந்தை



http://www.thamilsky.com/forum/baby.gif


அன்பு செய்யும் மனம் குழந்தை மனம்
ஆடிப் பாடும் மனம் குழந்தை மனம்
குற்றம் மறக்கும் மனம் குழந்தை மனம்
குறும்பு செய்யும் மனம் குழந்தை மனம்
கள்ளம் அற்ற மனம் குழந்தை மனம்
கவலை அற்ற மனம் குழந்தை மனம்
குழந்தை மனம் என்றும் வேண்டும்:)

துளசி

www.thamilsky.com

இளசு
31-01-2006, 11:44 PM
வாருங்கள் திவ்யா (என்கின்ற துளசி?)

குற்றம் மறக்கும் மனம் என்றீர்களே..
அதைத்தான் வயது வந்ததும் தொலைத்துவிட்டு தேடுகிறோம்..
அவ்வப்போது கிடைத்தாலும் நிலைக்காமல் மீண்டும்......



கவிதையோடு நுழைந்த உங்களுக்கு வாழ்த்தும் வரவேற்பும்..

sarcharan
01-02-2006, 04:18 AM
வருக வருக திவ்யா/ துளசி,

மன்றத்திற்க்கு அன்புடன் உங்களை வரவேற்கிறோம்.

"அன்பு செய்யும் மனம் குழந்தை மனம்
ஆடிப் பாடும் மனம் குழந்தை மனம்
குற்றம் மறக்கும் மனம் குழந்தை மனம்
குறும்பு செய்யும் மனம் குழந்தை மனம்
கள்ளம் அற்ற மனம் குழந்தை மனம்
கவலை அற்ற மனம் குழந்தை மனம்
குழந்தை மனம் என்றும் வேண்டும் " :)

ஹ்ம்ம் மழலைப்பருவம் மகத்தான பருவம். தாயின் அன்பான அரவணைப்பு.... ஹ்ம்ம் என்றும் நினைவில் நிற்கும்.

சும்மாவா சொன்னார்கள்
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனதால் ஒன்று" என்று...




[COLOR=blue]குழந்தை

பென்ஸ்
01-02-2006, 05:52 AM
வாருங்கள் துளசி... தங்கள் வரவு நல்வரவாகுக...:)

கவிதையுடன் வந்து கலக்குகிறிர்கள்....:)

குழந்தை மனம்.... இதற்கும் சுயனலம், கள்ளம் எல்லாம் உன்டுதானே???:D :D

தன் அண்ணனை/அக்காவை இடுப்பில் எடுக்கும் தாயை நோக்கி அழுது புரண்டு, தன்னை எடுக்கா விட்டால் கூட தன் உடன்பிறப்பினை இறக்கியது அழுகையை நிறுத்தும் குழந்தைகள் அனேகம் தானே????:D :D

இரு குழந்தையை கூப்பிட்டு ஒரு குழந்தைக்கு ஒரு மிட்டாயையும் அடுத்ததற்க்கு இரண்டு மிட்டாயும் கொடுத்து பாருங்கள்...!!!!:rolleyes: :rolleyes: :D :D

சரவணா: பதில் எழுதும் போத்கு தேவையானதை மட்டும் QUOTE செய்யலாமே??

pradeepkt
01-02-2006, 07:35 AM
குழந்தை மனத்தில் கள்ளம் என்பதெல்லாம் கிடையாது. அண்ணனை அக்காவை இடுப்பில் எடுக்கும்போது அழுவதைச் சுயநலம் என்றா சொல்லுவது? வேண்டுமென்றால் தன் தாயின் மேல் கொண்ட பொசஸ்ஸிவ்னெஸ் என்று சொல்லலாம். ஆயினும் அடுத்த நிமிடமே அதே அக்காவையோ அண்ணனையோ பார்த்து அழுத கண்ணைத் துடைத்துக் கொண்டே சிரிக்கும் காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா?

சரவணனுக்கு நானும் பல முறை சொல்லிட்டேன் :D
பென்ஸூ, நீங்க நேரில ஆட்டோவில போயி புரியுற மாதிரி சொல்லலாமே!

ப்ரியன்
01-02-2006, 09:41 AM
வாருங்கள் துளசி...

நல்ல கவிதை தந்தீர்...வாழ்த்துக்கள்

தாமரை
01-02-2006, 10:21 AM
துளசி : பெயர் பரிச்சயமானதைப் போல இருக்கு...
கவிதை : நடை பரிச்சயமானதைப் போல இருக்கு...

எந்த ஊர் நீங்க?

sarcharan
01-02-2006, 11:01 AM
ஆரம்பிச்சுட்டாருய்யா...


துளசி : பெயர் பரிச்சயமானதைப் போல இருக்கு...
கவிதை : நடை பரிச்சயமானதைப் போல இருக்கு...

எந்த ஊர் நீங்க?

Divya
01-02-2006, 12:36 PM
உங்கள் அனைவரது கருத்துக்களுக்கு நன்றி. :)

அறிஞர்
01-02-2006, 02:37 PM
கள்ளம் கபடமற்ற குழந்தை மனம் அனைவருக்கும் இருந்தால்... எல்லா நாடுகளில் இன்பம் நிலவுமே....

நல்ல கவிதை அன்பரே..... இன்னும் நிறைய கொடுங்கள்..

தமிழ்ஸ்கை உங்கள் தளமா.... அல்லது நீங்கள் அங்கு உறுப்பினரா.