PDA

View Full Version : மகாத்மா காந்தியின் நினைவு நாள் (Martyrs Day).



sarcharan
30-01-2006, 12:26 PM
http://www.hindu.com/thehindu/holnus/002200601301517.htm

இன்று நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் உயிர் நீத்த நாள் (Martyrs Day).
பெரும்பாடு பட்டு அவர் வாங்கித்தந்த சுதந்திரம் இன்றும், இனியும் வரலாறு சொல்லும்.

காண்க:
http://www.engagedpage.com/gan2.html

http://www.engagedpage.com/gandhi.html

பள்ளியில் பயின்ற காலத்தில் இந்நாளில் அரை நாள் விடுப்பு கொடுப்பர்.
வீட்டுக்கு சென்று பென் கிங்க்ஸ்லி நடித்த "காந்தி" படம் பார்த்ததும் இந்நாளில் நம்மில் பலர் நினைவுகூரலாம்.

ஆனால் இன்று பல அலுவலகத்தில் ஒரு ஒரு மணி நேர விடுப்பு அட ஒரு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்த மறந்து வாழும் இந்தியர்களையும் நாம் காணலாம்.

:mad: :mad:

aren
30-01-2006, 01:40 PM
அரைநாள் விடுப்பா? எப்பொழுது, எந்த பள்ளியில். எனக்குத் தெரிந்து விடுப்பெல்லாம் கிடையாது. ஒரு நிமிடம் மெளனம் மட்டுமே.

பாரதி
30-01-2006, 02:02 PM
அன்பு நண்பரே... இன்று ஒரு நாள் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தி மறந்து விடும் பல அரசியல்வாதிகளைப்போல நாமும் ஆக வேண்டுமா...? நண்பர்கள் யாரேனும் காந்தியின் சுயசரிதையை படிக்காமல் இருந்தால் தயவு செய்து ஒருமுறையேனும் படியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

aren
30-01-2006, 02:55 PM
பாரதி அவர்களே, நீங்கள் சொல்வது முற்றிலும். அனைவரும் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

aren
30-01-2006, 02:58 PM
காந்திஜீ குண்டடி பட்டபொழுது ஹே ராம் என்று சொல்லவில்லை என்று அருகிலிருந்து பார்த்த வெங்கட்கல்யாணம் என்பவரு இன்று பேட்டி கொடுத்திருக்கிறார். இப்பொழுது எது உண்மை, எது பொய் என்று தெரியவில்லை.

sarcharan
23-01-2008, 11:24 AM
காந்திஜீ குண்டடி பட்டபொழுது ஹே ராம் என்று சொல்லவில்லை என்று அருகிலிருந்து பார்த்த வெங்கட்கல்யாணம் என்பவரு இன்று பேட்டி கொடுத்திருக்கிறார். இப்பொழுது எது உண்மை, எது பொய் என்று தெரியவில்லை.


இது பற்றி கோட்சேவின் சகோதரரின் பதில்:

http://www.tamilmantram.com/photogal/file.php?n=326&w=o