PDA

View Full Version : பாழாப் போன உலகமே!



தாமரை
27-01-2006, 06:22 AM
பாழாப் போன உலகமே! - இது
பணமிருந்தாக்கா பாதத்தில் கிடக்கும்
பாழாப் போன உலகமே.
நாளா பொழுதா இரத்தத்தை கொடுத்து
உழைச்சிடுவான் அவன் பாட்டாளி - அதை
நாலாப் பிரிச்சி தேரா வடிச்சி -
நரம்பினைக் கொண்டு வடங்கட்டி - மனித
நரம்பினைக் கொண்டு வடங்கட்டி

ஊர்கோலம் போவார் உல்லாசம் கொள்வார்
உன்மத்த சிரிப்பு சிரிப்பார் - சிலர்
உன்மத்த சிரிப்பு சிரிப்பார்.

---------------------------------பாழாப் போன உலகமே

கல்லுல செஞ்ச சிலைக்கு வைரக்
கல்லுல மாலை போட்டிடுவார் - அந்தக்
கல்லுல சிலையை செதுக்கிய பேர்கள்
கட்டாந்தரையிலே படுத்திடுவார் - அங்கு
கட்டெறும்பு கடித்திட துடித்திடுவார்

பொன்னும் மணியும் கண்ணைச் சிமிட்டி
ஊர்கோலம் போகும் அங்கே - பல
உயிர் போகும் பட்டினியில் இங்கே !

--------------------------------- பாழாப் போன உலகமே

ஆகாரம் இல்லாம ஆயிரம் வயிறு
பட்டினியால் தினம் துடிக்கும் - இங்கு
அடிக்கடி தின்று உப்பிய வயிறு
ஜீரணிக்க முடியாம தவிக்கும் - அது
ஜிஞ்ஜர் சோடாவைக் குடிக்கும்

பாலும் தேனும் பாதாம் கீரும்
ஆறாய் போகும் அங்கே - - பல
உயிர் போகும் பட்டினியில் இங்கே !

--------------------------------- பாழாப் போன உலகமே

பென்ஸ்
27-01-2006, 06:38 AM
நல்ல சாடல் கவிதை செல்வன்:) (ஆனால் மெட்டு மட்டும் சொல்ல
மாட்டேன்னு சொல்லுறிங்க...:rolleyes: :rolleyes: )

சமத்துவம் தேவையா??? என்று ஒரு கேள்வி என்னுள் அடிக்கடி வரும்... அதாவது எல்லோரும் பசி, பட்டினி, நோய், சாவு இல்லாமல் இருக்கலாமோ என்று கூட தோன்றும்....

ஆனால் இது எல்லாம் இல்லை என்றால் இந்த சமுதாயம் கண்டிபாக
சீரளிந்து போகுமோ???
யாரிடமாவது பாசமிருக்குமா????
முன்னோற்றம் என்பது இருக்குமா????
காதலும் கசந்து போகுமோ????
ஒழுக்கம் என்பது இருக்குமா???

என்று பல எதிர் கேள்விகளும் வரும்போது "இந்த வடிவமைப்பாளன்
(கடவுள்) ஒரு பிசிறு கூட இல்லாத ஒரு சிறந்த டிசைனை
அமைத்திருக்கிறான், இதில் அனைத்தும் அதன் வேலையை சரியாக
செய்கின்றான" என்று தோன்றும்.....

அதே உணர்வு அப்படியே இந்த பாடலை படிக்கும் போதும் :) :)

தாமரை
27-01-2006, 07:26 AM
[QUOTE=benjaminv]நல்ல சாடல் கவிதை செல்வன்:) (ஆனால் மெட்டு மட்டும் சொல்ல
மாட்டேன்னு சொல்லுறிங்க...:rolleyes: :rolleyes: )

மெட்டு எப்படி சொல்றது.. எனக்கு இசை மொழி தெரியாது...
சும்மா ஃப்ரீ-ஆ இருந்தா ஒரு மெயில் அனுப்புங்க.. நம்பர் தர்ரேன். ஃபோன் ல பாட்டு கேட்டுக்குங்க

இளசு
27-01-2006, 10:27 PM
ஆஹா பாடவும் செய்வீங்களா செல்வன்?

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் பாடிய டிஎம்எஸ்ஸின் இளைய குரல் இதற்குப் பொருத்தமாய் இருக்கும்..

இன்றைய குரல் என்றால் கார்த்திக்?


---------------------------------------------


பட்டுக்கோட்டையின் பாட்டு வரிகளை நினவுபடுத்தும் கருத்தாழம், எளிமை இருக்கிறது.


உங்களின் இத்திறனுக்கு என் வந்தனங்கள் செல்வன்.. வாழ்த்துகளும்..