PDA

View Full Version : சானியாவுக்கு பத்மஸ்ரீ



அறிஞர்
26-01-2006, 09:04 PM
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு இந்த ஆண்டிற்கான பத்ம்ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த (19) வயதில் விருது நபர் என்ற அந்தஸ்தை பெறுகிறார்.

டென்னிஸ் உலகில் சாதிக்க தொடங்கியுள்ளார். இந்த ஆண்டின் துவக்கம் அவருக்கு சரிவாக உள்ளது. தொடர்ந்து இன்னும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை...

இப்பொழுது விருதுக்கு முழுவதும் தகுதியானவரா... என்று அலசுங்களேன்.

விட்டால் அடுத்த வருடம் டோனி பெறுவார் என எண்ணுகிறேன்.

aren
27-01-2006, 03:50 AM
இவ்வளவு சிறிய வயதில் பத்மஸ்ரீ விருது வாங்கியா சானியா மிர்சாவிற்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஸ்வநாதன் ஆனந்த் கூட குறைந்த வயதில் விருது வாங்கினார் என்று நினைக்கிறேன்.

aren
27-01-2006, 03:53 AM
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரிகிறது.

இன்னும் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை, அதற்குள் பத்மஸ்ரீ விருது கொடுக்கவேண்டுமா? அப்படியானால் இந்த விருதின் மதிப்பு என்ன. அப்படித்தானே?

இந்தியப் பெண்கள் அதிகமாக விளையாட்டுப் போட்டிகளுக்கு வருவதில்லை. வந்த ஒரு சிலரும் அதிகமாக சோதிப்பதில்லை உலக அளவில். அதனால் வந்த ஒரு சிலரையாவது உற்சாகப்படுத்தினால் பின்னார் வரும் சந்ததியினர் கொஞ்சம் உற்சாகத்துடன் கலந்துகொள்வார்கள் என்ற நினைப்பால் இருக்கலாம் அல்லவா?

தாமரை
27-01-2006, 04:45 AM
செத்த பின்பு விருது கொடுக்க வேண்டும் என்கிறீர்களா?

விருது கொடுத்த பின்னும் விருது வாங்கியவர் மேலும் வளர்ச்சி அடைவார் என்றால் அது தவறா?

கௌரவ டாக்டர் பட்டங்களை வாரியிரைப்பதை போல இல்லாமல் தரவரிசை பட்டியலில் 50 -க்குள் வந்ததற்கு கொடுக்கப்படுவதால் தவறொன்றுமில்லை...

உங்கள் சிறு குழந்தை முதன் முதலாக எழுந்து நின்றதிற்கு மகிழ்ந்திருக்கிறீர்களா...

உங்கள் 20 வயது மகன் எழுந்து நிற்பதுடன் அதை ஒப்பிடுவீர்களா?

சானியா மிர்சா பல வீராங்கனைகள் உருவாவதற்கு உதாரணமாய் இருக்கிறார்...

கைதட்டி வரவேற்போம்

pradeepkt
27-01-2006, 12:56 PM
சானியாவுக்கு வாழ்த்துகள்

இளசு
27-01-2006, 10:07 PM
சானியாவுக்கு வாழ்த்துகள்..

வளர்செடிக்கு உரங்கள் வரவேற்கவேண்டியவையே..

சரிதானே நண்பர் அறிஞரே..

gragavan
28-01-2006, 07:16 AM
சானியா மிர்சாவிற்கு வாழ்த்துகள்.

இந்த விருதை ஊக்குவிப்பாகக் கொள்ளலாம். தவறில்லை.

அறிஞர்
28-01-2006, 08:25 AM
எல்லாரின் வாழ்த்துக்கள் சானியாவுக்கு உரித்தாகட்டும். நானும் சானியாவுக்கு ரசிகன் தான். இன்னும் சில சாதனைகள் புரிந்த பின் கொடுத்து இருக்கலாம் என்பது என் எண்ணம்.

வளரும் செடிக்கு உரம் அவசியம் தான்,

இந்த ஊக்குவிப்பை, எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற சானியா முயலட்டும்.

சுபன்
28-01-2006, 07:28 PM
சானியா அவரின் சமூகத்தின் கட்டுபாடுகளுக்கு மத்தியிலும் சாதித்திருப்பதால் இவ்விருது தேவையானஒன்று

இளந்தமிழ்ச்செல்வன்
28-01-2006, 07:32 PM
சானியாவிற்கு வாழ்த்துக்கள். மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்