PDA

View Full Version : வேப்பம் பூக்கள்



ப்ரியன்
25-01-2006, 08:56 AM
தொட்டுச் செல்லும்
தென்றலுக்குக் கூட
ஏராளமான பூக்களை
அள்ளி உதிர்க்கிறது
அவ்வேப்பமரம்!

என்றாலும்,
சிலப்பூக்களையாவது
காய்க்கவும் பழுக்கவும்
செய்கிறது அதுவே!

- ப்ரியன்.

Mano.G.
25-01-2006, 09:30 AM
வேப்பமரத்தின் சுயநலமற்ற
சேவைகளில் இதுவும்
ஒன்றே, கிருமி நாசினியாகவும்
பல நோய்களுக்கு மூலிகை மருந்தாவும்
இருப்பதோடு இல்லாமல்
தனது இனவிருத்திக்காவும்
பூ பிஞ்சாகி காயாகி, பழமாகிறது


மனோ.ஜி

பென்ஸ்
25-01-2006, 09:54 AM
ப்ரியனின் அருமையான கவிதையும்,
நமது மனோஜியின் பின்னோட்டமும் அருமை...

ப்ரியன்... நன்றி... (புரிந்ததா..???)....

தாமரை
25-01-2006, 10:13 AM
வேப்பம்பூ கசக்குமா?
இதைப் படித்த பின்னும்

அறிஞர்
26-01-2006, 03:36 AM
அருமை.. இன்னும் சில வரிகள் நீட்டியிருக்கலாம் போல் உள்ளதே

மனோஜியின் கருத்துக்களும் அரும்...

செல்வன்... வேப்பம்பூ கசாயம் குடித்து பாரும்...

இளசு
27-01-2006, 10:20 PM
அபூர்வப்பார்வை..

சுயநிலைப்பாடு, வளர்ச்சி + சகிப்பு, பொதுமை என்ற சரிவிகித வாழ்வியல் கணக்கு ..


அருமை ப்ரியன்..


அன்பு மனோஜியின் பின்னூட்டமும் சிறப்பு சேர்க்கிறது..