PDA

View Full Version : பூஞ்சோலைக் காற்றே..



தாமரை
23-01-2006, 12:21 PM
பூஞ்சோலைக் காற்றே நீ தூது சொல்லு
பொன் மாலைப் பொழுதே நீ என்னோடு பேசு
அவளோரம் சென்று காதோடு சொல்லு
புரியாத ராகமிது - புதிரான கீதமிது
-------------------------------பூஞ்சோலைக் காற்றே..

உனக்காக நானும் எனக்காக நீயும்
ஒரு கோடி நாள் வாழலாம்
உன் தாமரை முகத்தைக் கண்டால்
என் பாடல் தானே வரும்
என் தேவி உன்பார்வை என் மீது வந்தால்
அது தானே நான் செய்த பல புண்ணியம்..

-------------------------------பூஞ்சோலைக் காற்றே..

கண்ணோடு கண்ணும் நெஞ்சோடு நெஞ்சும்
கலந்தாட உறவாட வா..
உன் காலின் ஜதியைக் கேட்டால்
என் பாடல் தானே வரும்
என்காதல் தேவி நீ யென்னை பார்த்தால்
அதுதானே நான் செய்த பலபுண்ணியம்..

-------------------------------பூஞ்சோலைக் காற்றே..

இளசு
24-01-2006, 06:16 AM
திரைப்பாட்டுக்கான அத்தனை தகுதிகளும் உள்ள பாடல்.

(இதற்கு மெட்டும் உங்களிடம் உண்டுதானே செல்வன்?)

பாராட்டுகள்.

தாமரை
24-01-2006, 06:46 AM
திரைப்பாட்டுக்கான அத்தனை தகுதிகளும் உள்ள பாடல்.

(இதற்கு மெட்டும் உங்களிடம் உண்டுதானே செல்வன்?)

பாராட்டுகள்.
நான் இப்பகுதியில் எழுதியுள்ள அனைத்துப் பாடல்களும் மெட்டுக்கள் உள்ளவை தான்