PDA

View Full Version : தமிழ்மென்பொருட்கள் - குறுவட்டுபாரதி
20-01-2006, 04:47 PM
அன்பு நண்பர்களே,

தற்போது வெளிவந்திருக்கும் 'தமிழ் கம்ப்யூட்டர்' (ஜனவரி 16 -31,2006) இதழுடன் பனேசியா நிறுவனத்தின் மென்பொருட்கள் அடங்கிய குறுவட்டையும் இணைத்து தருகிறார்கள். இதழின் விலை 30 ரூபாய். இதில் உள்ள சில மென்பொருட்களை சில தினங்களுக்கு முன்புதான் சோதனைக்காக இணையத்திலிருந்து பதிவிறக்கினேன். தற்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களும் குறுவட்டில் உள்ளன.

1. செல்வம் - கணக்குப்பதிவியல்
2. முகவரி - பெயர்,முகவரி
3. புலவன்_பாலம் - அகராதி
4. ஆர்4யூ (R4U) - மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற கோப்புகளை உருவாக்க
5. சங்கம் புரோ - குழு கணக்கு வழக்கு, உறுப்பினர் பட்டியல் போன்ற பயன்பாட்டிற்கு
6. தமிழ் ஓலை - தமிழ்கோப்புகள் உருவாக்க
7. வள்ளுவன் - ஆவண சேமிப்பு மற்றும் தேடுபொறி
8. வலையோடி - இணைய உலாவி
9. பதிப்பு 250 - தமிழ் எழுத்துருக்கள்
10. சாரதி - தமிழ் விசைப்பலகை இயக்கி

இதில் சிறப்பு என்னவென்றால் மென்பொருட்களின் மூலநிரலும் குறுவட்டிலேயே கிடைக்கிறது. கணினி வல்லுநர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப தேவையான மாறுதல்களை செய்து கொள்ள இயலும். சுமார் 313 MB அளவுடைய மென்பொருட்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்வதை விட புத்தகத்தை வாங்குவது எளிது என்று எண்ணுகிறேன். இணைய வேகம் குறைவாக உள்ள, தமிழகத்தில் இருக்கும் நண்பர்களுக்காவது இது உதவும்.

தமிழ் ஆர்வலர்கள் இதை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மென்பொருட்களின் செயல்பாடு நடைமுறையில் எந்த அளவில் பயன்படப்போகிறது என்பது சரியாக தெரியாவிட்டாலும், முன்னோடியாக இந்த முயற்சியை மேற்கொண்ட பனேசியா நிறுவனத்தின் திரு.துரைப்பாண்டி, திரு. கார்த்திகேயன், திரு.ஜாகீர் உசேன், திரு.ஐசக், திரு.விஜயன் ஆகியோரையும், தமிழ்கம்ப்யூட்டர் நிறுவனத்தையும் மனதாரப் பாராட்டுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

pradeepkt
20-01-2006, 06:26 PM
அருமையான தகவல் பாரதி அண்ணா
இதை எப்படி வாங்குவது?

aren
21-01-2006, 01:15 AM
தமிழ் கம்ப்யூட்டர் என்பது மாத இதழா? நீங்கள் சொல்வது சரிதான். இணையத்திலிருந்து இறக்குவதைவிட 30 ரூபாய் கொடுத்து புததகத்தை வாங்கிவிடலாம்.

நீங்கள் இதை உபயோகித்துவிட்டு இதன் பயன்களை கொஞ்சம் இங்கே எழுதினால் இன்னும் சிலருக்கு வாங்குவதற்கு எண்ணம் தோன்றும்.

பாரதி
21-01-2006, 05:37 PM
தமிழ் கம்ப்யூட்டர் என்பது தமிழகத்தில் வெளிவரும் மாதமிருமுறை கணினி இதழ். வளர்தமிழ் அச்சகத்தினரால் சென்னையிலிருந்து வெளியிடப்படுகிறது. இந்தப்புத்தகம் இந்த மாத இறுதி வரைக்கும் அனைத்து புத்தகக்கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். மென்பொருட்கள் குறித்து - நேரமும் வாய்ப்பும் கிடைப்பதைப் பொறுத்து சோதனை செய்ய முயற்சிக்கிறேன்.புத்தகம் வாங்க இயலாதவர்கள் கீழே உள்ள சுட்டியில் உள்ள தளத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.pdsoftware.in/download.html

aren
22-01-2006, 03:53 AM
செய்திக்கு நன்றி பாரதி அவர்களே.

இளசு
22-01-2006, 10:14 PM
தமிழ் கம்ப்ப்யூட்டர் இதழுக்கும், தமிழ் மென்பொருள் வல்லுநர்களுக்கும், தகவல் தந்த தம்பிக்கும் நன்றிகள்..


பவர்பாயிண்ட் தமிழில் தட்டச்ச இயலுமா பாரதி?

aren
22-01-2006, 10:39 PM
பவர்பாயிண்ட் தமிழில் தட்டச்ச இயலுமா பாரதி?

அப்படி போடுங்கள். பாரதி அவர்கள் நிச்சயம் இதற்கு ஒரு வழிகண்டுபிடித்து நமக்கு இங்கே அளிப்பார் என்று நம்பலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளந்தமிழ்ச்செல்வன்
26-01-2006, 06:11 PM
பயனுள்ள தகவலுக்கு நன்றி பாரதி.

pradeepkt
27-01-2006, 12:50 PM
பவர் பாயிண்டில் நானும் சிலப் பல முயற்சிகள் செய்து பார்த்தேன்.
இகலப்பை கொண்டு தட்டச்ச முடிகிறது.
ஆனால் என்கோடிங்கை வேறு விதமாகச் செய்வதால் சில உயிர்மெய்யெழுத்துகள் தப்பாக வருகின்றன.

பாரதி
27-01-2006, 12:51 PM
பவர்பாயிண்ட் தமிழில் தட்டச்ச இயலுமா பாரதி?

அன்புள்ள அண்ணா,
முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

நிச்சயமாக பவர்பாயிண்டிலும் தமிழ் எழுத்துருக்களைக்கொண்டு வர இயலும். யுனிக்கோட் எழுத்துருக்களில் தட்டச்சு செய்யப்பட்ட வார்த்தைகளை "காப்பி" செய்து, பவர்பாயிண்டில் "பேஸ்ட்" செய்யவும். முதலில் கட்டங்களாகத்தான் தெரியும். "பேஸ்ட்" செய்த எழுத்துருக்களை தேர்வு செய்து, மேலே உள்ள எழுத்துருவை "TheeniUniTx" அல்லது "Latha" எழுத்துருவை தேர்வு செய்தால் எழுத்துக்கள் தமிழிலேயே தெரியும். மற்றொரு வழி - மேலே சொன்ன முறையில் யுனிக்கோட் எழுத்துருவை தட்டச்சு செய்து "paint" போன்ற செயலிகளில் ஒட்டி, 'bmp' அல்லது 'jpeg' படங்களாக சேமிக்கலாம். சேமித்த படத்தை பவர்பாயிண்டில் உபயோகிக்கலாம். எழுத்துக்கள் தமிழிலேயே தெரியும்.

இளசு
27-01-2006, 10:05 PM
அன்புத்தம்பிகள் பிரதீப், பாரதி

உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

பாரதி, விரைவில் செய்துபார்க்கிறேன்.

தம்பி உடையான் பவர் பாயிண்ட்டுக்கும் அஞ்சான்..

என்ன அன்பின் ஆரென், நான் சொல்வது சரிதானே?

aren
28-01-2006, 03:23 PM
அன்புத்தம்பிகள் பிரதீப், பாரதி

உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

பாரதி, விரைவில் செய்துபார்க்கிறேன்.

தம்பி உடையான் பவர் பாயிண்ட்டுக்கும் அஞ்சான்..

என்ன அன்பின் ஆரென், நான் சொல்வது சரிதானே?

நிச்சயம் இளசு அவர்களே. உங்கள் அன்புத்தம்பிகள் சொன்னதுபோல் செய்து பாருங்கள். நானும் பார்க்கிறேன். நிச்சயம் பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

நான் எங்கே இதை உபயோகிப்பது என்று யோசிக்கிறேன்.