PDA

View Full Version : காப்போம் காப்போம்!.பாரதி
20-01-2006, 04:23 PM
உச்சி வெயில் நேரம்
உண்ட களைப்பில் கண்ணயர...

"காப்போம் காப்போம்
மண் வளத்தைக் காப்போம்

வளர்ப்போம் வளர்ப்போம்
மரங்களை வளர்ப்போம்

தடுப்போம் தடுப்போம்
மாசு படுதலைத் தடுப்போம்"

குழந்தைகளின் கோஷங்கள்
வீதியில்...

மகிழ்ச்சி பொங்க
எட்டிப்பார்த்தேன்

பள்ளிச்சிறார்கள்
படை வீரர்கள் போல்

சுட்டெரிக்கும் வெயிலில்
சுடும் தார்ச்சாலையில்

புழுதி படிந்த
பிஞ்சுக்குழந்தைகளின்
பஞ்சுக்கால்கள்......
காலணிகளின்றி.

pradeepkt
20-01-2006, 06:25 PM
இத்தகைய முரண்பாடுகள் எத்தனையோ காண்கிறோம் வாழ்வில்...

எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்தில்தான் காங்கிரஸின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. எக்கச்சக்க விளம்பரங்கள், அருமையான புயல் வேகத்தில் சாலைகள் (ஒரே நல்லது!) என்று கலக்கி இருந்தார்கள்.

பேருந்தில் வரும்போது பக்கத்து கிராமத்தில் கண்ட விளம்பரம் ஒன்று:
"எங்களுக்கு வேலை வாய்ப்பளிக்க கிராமப்புற வேலை வாய்ப்பு மசோதாவைக் கொண்டு வந்த அன்னை சோனியா காந்திக்கு இந்தியாவின் 80 கோடி கிராம மக்களின் சார்பாக வரவேற்பு"

பக்கத்தில் ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் தேநீர்க் குவளைகளைக் கருமமே கண்ணாய்க் கழுவிக் கொண்டிருந்தான்.

aren
21-01-2006, 01:17 AM
பாரதி அவர்களின் கவிதையின் கடைசி வரியும், பிரதீப்பின் கடைசி வரியும் நெஞ்சை கலங்க வைக்கிறது.

இந்த முரண்பாடுகள் என்று மாறும். அப்துல்கலாம் அவர்கள் சொல்லும் இந்தியா என்று நாம் பார்ப்போம்.

sarcharan
21-01-2006, 03:24 AM
நான் திருச்சியில் பணிபுரிந்து கொண்டு இருந்த சமயத்தில் எங்கள் அலுவலகத்தின் முன் சிறுவர்களும் அவர்களது பெற்றோருடன்(!!!!) சேர்ந்து கல் உடைக்கும் காட்சிகளைக் கண்டு நெஞ்சம் நொந்துள்ளோம்......

கொடுமையான காட்சி.....

இளமையில் கல் என்பது அவர்களது வாழ்வில் எப்படி விளையாடிடுள்ளது....

அவர்களை எல்லாம் எண்ணும்போது நாம் எவ்வளவோ நல்ல நிலைமையில் உள்ளோம்.


http://www.oxfam.org.uk/coolplanet/kidsweb/world/india/indioxf3.htm--இவ்வலைதளத்தில் கண்ட செய்தி.....


"India has the largest number of children under the age of 15 in work in the world. Some estimates put the figure at 100 million children. In some cases, young children are forced to work for long hours for low pay and in dangerous conditions. Oxfam is supporting efforts to end this type of child labour, which harms young children."


http://www.vibha.org/

http://www.indianchild.com/child_labor_india.htm

http://www.indianchild.com/child_labour_law_in_india.htm

அரசு மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் கட்டாயக்ககல்வி இது போன்ற அத்தியாவசக்காரியங்களை செய்து கொடுத்தாலே வோட்டுக்கள் தானாக வந்து குவியும் என்பது என் கருத்து.....

இத்தகைய முரண்பாடுகள் எத்தனையோ காண்கிறோம் வாழ்வில்...

எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்தில்தான் காங்கிரஸின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. எக்கச்சக்க விளம்பரங்கள், அருமையான புயல் வேகத்தில் சாலைகள் (ஒரே நல்லது!) என்று கலக்கி இருந்தார்கள்.

பேருந்தில் வரும்போது பக்கத்து கிராமத்தில் கண்ட விளம்பரம் ஒன்று:
"எங்களுக்கு வேலை வாய்ப்பளிக்க கிராமப்புற வேலை வாய்ப்பு மசோதாவைக் கொண்டு வந்த அன்னை சோனியா காந்திக்கு இந்தியாவின் 80 கோடி கிராம மக்களின் சார்பாக வரவேற்பு"

பக்கத்தில் ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் தேநீர்க் குவளைகளைக் கருமமே கண்ணாய்க் கழுவிக் கொண்டிருந்தான்.

aren
21-01-2006, 04:01 AM
அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க அரசாங்கம் தயார், ஆனால் அரசியல் வாதிகள் தயாரா?

அரசியல்வாதிகள் வீட்டின் கட்டுத்தறியும் பணம் கொட்டுமே? அவ்வளவு சேர்த்துவைத்திருக்கிறார்கள் அவர்கள். அவர்கள் ஒழிந்தால்தான் நாடு முன்னேறும்.

இளசு
22-01-2006, 10:42 PM
இளமையில் கல்..

கபிலனின் கவிதை வரி நினைவாடலில்..


வறுமை, பாடச்சுமை, தலைவர் வருகைக்கென வெயில் வதங்கல், வேறு பல என பிஞ்சில் கருகும் இழிநிலைக்குச் சாட்டையடி..


பாரதி என்றாலே சாடல் உண்டுதானே..!

aren
22-01-2006, 10:44 PM
பாரதி என்றாலே சாடல் உண்டுதானே..!

இந்த வரிகள் அந்த காலத்து சுப்ரமணிய பாரதிக்கும் இந்த காலத்து தமிழ்மன்ற பாரதிக்கும் நிச்சயம் பொருந்தும். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

பென்ஸ்
26-01-2006, 07:03 PM
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் பாரதி அவர்களே...

தங்கள் பதிவுக்கு உரம் சேர்க்கும் வகையில் நானும் நாலு வரிகள் சாடி
எழுதலாம் என்று நினைத்து மறந்துவிட்டேன்... இருப்பினும் அந்த
வரிகளின் சூடு இன்னும் இருப்பதால் வந்து "அருமை" என்று கூற
வந்தேன்....

இன்னும் தொடருங்கள்....

Shanmuhi
26-01-2006, 08:05 PM
சுட்டெரிக்கும் வெயிலில்
சுடும் தார்ச்சாலையில்

புழுதி படிந்த
பிஞ்சுக்குழந்தைகளின்
பஞ்சுக்கால்கள்......
காலணிகளின்றி...

தவிக்கும் தவிப்பினை அருமையாக வடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
மெலும் தொடருங்கள்...

அமரன்
16-06-2007, 08:47 AM
எதிர்கலாம் அவர்கள் கையில்
அவர்கள் காலம் யார்கையில்
நற்சிந்தனையைத் தூண்டும் கவிதை. ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கவேண்டியது. வாழ்த்த வயசில்லை நன்றிகூறிக்கொள்கின்றேன். நன்றி பாரதி அவர்களே

பாரதி
16-07-2007, 06:42 PM
நன்றி பிரதீப், சரவணன், ஆரென், அண்ணா, பென்ஸ், ஷண்முகி, அமரன்.
(வழக்கமான தாமதத்திற்கு மன்னிக்கவும்.)

ஆதவா
17-07-2007, 03:35 AM
இது பெரும்பாலும் அரசு கல்வி நிறுவனங்களில் நடக்கிறது// நான் கூட சில முறை கண்டிருக்கிறேன். தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக ஷூ அணிந்திருக்கவேண்டும்...

ஆசிரியர்கள் என்பவர்கள் பெற்றோருக்கு அடுத்தவர்கள். பெற்றோர் கவனிக்கும் அனைத்தும் அவர்களும் கவனிக்கவேண்டும். வெறும் மண்ணில் செருப்பின்றி சிறார்கள் படும் வேதனை ஆசிரியர்கள் பட்டிருக்கவேண்டும்..

மனித சங்கிலி ஊர்வலம் போல சில சமயங்களில் நடக்கும்.. அது எல்லாவற்றையும் விட கொடுமை.

நல்ல சமூகக் கருத்தோடடங்கிய கவிதை... வாழ்த்துக்கள் பாரதி அண்ணா.

பாரதி
22-03-2008, 08:04 AM
கருத்துக்கு நன்றி ஆதவா.

பூமகள்
09-04-2008, 12:22 PM
இங்கே இரு சாடல்கள் மனம் கவலையுறச் செய்யும் சமூகச் சாடல்கள்...!!

1. சாலை அகலப்படுத்துவதாகச் சொல்லி மரங்களின் அடர்த்தி குறைவாக்கிய அரசு..!!(எங்கள் ஊரில் இப்படி பல மரங்கள் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து.. முழுதும் வீழ்த்தப்பட்டு கிடக்கும் காட்சி அழுகையைத் தான் வரவழைக்கிறது.:frown::frown:)

2. காலணிகள் கூட இல்லாத ஏழைக் குழந்தைகளின் நிலை.

இவ்விரண்டுமே.. உலகிற்கு மிக முக்கிய அடிப்படைச் செல்வங்கள்..!


எப்போது காப்போம்..??
மர வளத்தையும்
மழலை வளத்தையும்?? :icon_ush:


சரியான சாடல். பாராட்டுகள் பாரதி அண்ணா. :)