PDA

View Full Version : அறியாமை



meeravi
20-01-2006, 07:16 AM
அறியாமையில்
கிடக்கிறேன் என்கிறார்கள்
ஆமாம்
உன்னை அறியாமல்
இருப்பது - எனக்கு
அறியாமையன்றி வேறென்னவோ?

அறியாமையில்
கிடக்கிறாய் என்கிறார்கள்
ஆமாம்
என்னை அறியாமல்
இருப்பது - உனக்கு
அறியாமையன்றி வேறென்னவோ?

-meeravi

Mano.G.
20-01-2006, 07:27 AM
அறிந்தும் அறியாமலும்
அறியாமல் அறிந்து இருப்பது
தெரிந்தும் தெரியாமல் போலவோ



மனோ.ஜி

பென்ஸ்
20-01-2006, 12:57 PM
எதோ ஒரு திரியில் வலிமை என்ற சொல்லை பிரித்து விளையாடி இருந்தார்கள்,
(காதல் வலிமையானது)
வலிமை = வலி + மெய்
வலிமை = வலி + மை (இருள்)

அதே போல் இந்த அறியாமையும் பிரித்து விளையாடுங்க, நல்ல பதில் கிடைக்கும் ...:rolleyes: :D :D

மீராவி... நல்ல கவிதை வருது... கலக்குறிங்க.... வாழ்த்துகள்

இளசு
22-01-2006, 10:52 PM
புரிந்துகொள்ளப்படாமையின் விளைவுகள் ஆழமானவை..

மீரவியின் கவிதை அர்த்தம் போல..

பாராட்டுகள்..


பென்ஸின் நறுக் விமர்சனத்துக்கும்தான்..

aren
22-01-2006, 10:56 PM
மீராவி கவிதை அருமை.

அறியாமையினால் நடக்கும் விபரீதங்கள் பல. அவற்றில் நீங்கள் கவிதை நயத்துடன் சொன்னதும் ஒன்று.

தொடருங்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்