PDA

View Full Version : காதல் பேரானந்தம்



ப்ரியன்
19-01-2006, 11:06 AM
கூந்தல் காட்டில்
அலைந்து திரிந்து;
அந்த வகிடு
ஒற்றைப் பாதையில்
ஒற்றையாய் உலாத்தி இருந்து;
உன் உச்சித் தொட்டு
எட்டிப் பார்க்கையில்
நெற்றிவெளியில்
விழுந்து தெறித்து;
கண் பள்ளத்தில்
விழுந்து தொலைந்துப் போன
அந்த கணம்!
ஆகா!பேரானந்தம்!!

- ப்ரியன்.

பென்ஸ்
19-01-2006, 03:08 PM
மீண்டும் ஒரு அருமையான கவிதை... பாராட்டுகள்...

சந்தேகம்: இது "பேன்" தன் வரலாறு கூறுதலா???:D :D

இளசு
22-01-2006, 11:04 PM
காதல் புகுந்து கைப்பிடித்து எழுதவைத்த கவிதையா ப்ரியன்?
புதுக்கற்பனை..

(வியர்வைத்துளியா என விகற்பமாய் யோசித்து வருவதற்குள்
பேனா? என பேதலிக்கவைக்கும் பென்ஸூக்கு ஒரு (கொ)ஷொட்டு..)

aren
22-01-2006, 11:08 PM
மீண்டும் ஒரு அருமையான கவிதை... பாராட்டுகள்...

சந்தேகம்: இது "பேன்" தன் வரலாறு கூறுதலா???:D :D

என்னப்பா, அருமையான கவிதைக்குள் "பேன்" எங்கிருந்துவரும். பேனாவினால் ஒரு கவிதை வந்திருக்கிறது.

gans5001
24-01-2006, 09:32 AM
கண் பள்ளத்தில்
விழுந்து தொலைந்துப் போன


"கண் பள்ளம்" என்பது சற்று சரியாக பொருந்தவில்லை என்பது என் கருத்து. "இரு விழிக் கிணற்றில்" என்பது போன்ற மாற்று வரிகள் கவிதைக்கு மேலும் கவித்துவம் கொடுக்கும் என நினைக்கிறேன்.

அறிஞர்
26-01-2006, 03:45 AM
பிரியனின் கவிக்கு... கன்ஸின்.... மாற்று வரிகள்.. சிறப்பை கூட்டுகிறது....

பெண்ஸை குழம்ப வைத்த கவிதை.... பிரியன் அன்பருக்கு விளக்கம் கூறிவிடுங்களேன்

பென்ஸ்
26-01-2006, 06:56 PM
ஹிஹி.. அறிஞரே... நானும் வியர்வை என்றுதான் நினைத்தேன்,
இருந்தாலும் இந்த மாதிரி "இடக்கு முடக்கா" கேள்வியை கேட்டி
அன்பா அடி வாங்கலைனா தூக்கம் வரமாட்டேங்குது...