PDA

View Full Version : பொருத்தம்



meeravi
19-01-2006, 02:49 AM
நீ காற்றானால்
நான் மரமாவேன்..

நீ மலரானால்
நான் இதழாவேன்..

நீ விளக்கானால்
நான் திரியாவேன்..

நீ நதியானால்
நான் கரையாவேன்..

நீ பறவையனால்
நான் வானமாவேன்..

இதெல்லாம்
பழங்கவிதைகள்

நீ நீயாய் இரு
நான் நானாய் இருக்கிறேன்
பொருத்தம் இருந்தால்
நீயும் நானும் நாமாய் மாறுவோம்!

-meeravi

பென்ஸ்
19-01-2006, 03:07 AM
நீ வீசாவிட்டால் நான் சோகத்தின் சிலை

காலத்தால் என் பிரிவு, நீ காம்பாய்...

உன் பாச எண்ணை தீர்ந்தால் எனக்கு இருளா??

கோடையில் நான் பாலையா??

இரவின் அனைப்பு என்னைவிட்டு எங்கோ மரத்திலா???

இத்தனை கேள்விகளும் பழங்கவிதையின் மீது....

இன்று ஒரு புது கவிதையுடன் மன்றம் வந்த மீராவி (சரிதானே???) அவர்களை வருக வருக என்று வரவேற்க்கிறேன்....

மதி
19-01-2006, 03:20 AM
வணக்கம் மீராவி..
தங்கள் வரவு நல்வரவாகட்டும்...

நண்பர்களே..
ஒரு விஷயம்..
மீராவி (இயற்பெயர் வேறு) என் கல்லூரி தோழியாவார்..

மதி
19-01-2006, 03:31 AM
சுயம் இழக்காத இணைப்பே
சிறந்த பொருத்தமென்கிறீர்..

நன்று.:D :D

பென்ஸ்
19-01-2006, 04:07 AM
மதியின் தோழியா.... சந்தோஷம்....விமர்சனம் முதலிலையே துவங்கலாம் :D

மீராவி, இயர்க்கையோடு காதலையும், காதலரையும் ஒப்பிடும் போது நான் அதில் ஒரு ஒத்துபோகும் தன்மையை அல்லது சார்ந்திருக்கும் தன்மையை பார்க்கமுடியும்...

காற்றாய் நீ என்னை தழுவு, நான் சிலிர்க்கிறேன்
காம்பும் இதழும் வேறு வேறுதாண்; ஒத்திருக்கும் வரை பூ...
(இன்னும் சொல்லிகொண்டே......;) )

நான் நானாக இருந்து
நீ நீயாக இருந்து
நமக்கான பொருத்தம்
தேடுதல் காதலா???

என்னை உன்னில்
தேடுதல் அல்லவா???

பொருத்தம் இருந்தால் மட்டும் நாம் என்பது கொஞ்சம் உதைக்கிறது..
நாமாக இருக்க பொருத்தம் தேடுவோம் என்றால் நன்றாக இருக்குமோ????

உங்களுக்கு கவிதை அருமையாக வருகிறது... பாராட்டுகள்:)

மீராவி-- பெயர்காரணம்.. (அல்லது பொருள்) தரமுடியுமா???:D :D

kavitha
19-01-2006, 10:05 AM
நீ நீயாய் இரு
நான் நானாய் இருக்கிறேன்
பொருத்தம் இருந்தால்
நீயும் நானும் நாமாய் மாறுவோம்!
இயல்பை இயல்பாய் ஏற்றுக்கொள்வது அழகான பண்பு. தொடருங்கள்.மீரா(சுருக்கமாக இப்படி அழைக்கலாமா?)

meeravi
20-01-2006, 07:11 AM
தங்கள் கருத்துக்கு நன்றி... தமிழ்மன்ற நன்பர்களே!

பெயர் காரணம் :-
பெற்றோரிட்ட பெயர் 'மோனிகா'
பெற்றோர் பெயர் இணைத்து வந்தது 'மீரவி'
ஆம் என் பெற்றோர் பெயர் மீரா/ரவி

மதி
20-01-2006, 07:19 AM
தங்கள் கருத்துக்கு நன்றி... தமிழ்மன்ற நன்பர்களே!

பெயர் காரணம் :-
பெற்றோரிட்ட பெயர் 'மோனிகா'
பெற்றோர் பெயர் இணைத்து வந்தது 'மீரவி'
ஆம் என் பெற்றோர் பெயர் மீரா/ரவி
அருமையான விளக்கம் தோழியே..!
இனிமே எப்படி கூப்பிடறது..
"மோனிகா"ன்னா "மீரவி"ன்னா..:confused: :confused:

Mano.G.
20-01-2006, 07:22 AM
நமக்கு கிடைத்த மற்றொரு
கவிதை முத்து "மீராவி"

உங்களின் இரண்டு கவிதைகளையும் படித்தேன்
மகிழ்ந்தேன்

வாழ்த்துக்கள்


மனோ.ஜி

இளசு
22-01-2006, 10:57 PM
வாருங்கள் மோனிகா, (மீரவி)

மதியின் தோழியை மன்றம் அழைத்து வந்தமைக்கு பாராட்டுகள்.


விமர்சனங்கள் வரவைக்கும் புதுவீச்சுக்கவிதைகள்..


பென்ஸ் மீண்டும் மீண்டும் சொல்வதுபோல் கவிதை நன்றாய்க் கைவருகிறது உங்களுக்கு...


கவீயும் பென்ஸூம் ஒட்டியும் வெட்டியும் தொடங்கியுள்ள ஆரோக்கிய விமர்சனம் அருமை...

என் கருத்து --- இரண்டுமே சரிபோல ஒரு மோனநிலை..!!!!!!!

aren
22-01-2006, 11:04 PM
வாருங்கள் மீரவி (மோனிகா).

அருமையாக எழுதுகிறீர்கள். நம் மன்றத்தின் முக்கியமாக சொத்துகளில் நீங்களும் ஐக்கியமாக வாழ்த்துக்கள்.

தொடருங்கள்.

ஒரு கவிஞரை மன்றத்திற்கு அழைத்துவந்து மது அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

gans5001
24-01-2006, 09:37 AM
எனது விழியில் உனது பார்வை என்றால் தானே காதல் உலகிற்கு அழகு?தன்னைத்தருவதும், தன்னிலை மறப்பதும் தானே காதலர்கட்கு அழகு?

அறிஞர்
26-01-2006, 03:42 AM
வாருங்கள் மீரவி.... கலக்கல் ஆரம்பம்....

இரு நிலைகள் மாறி ஒரு நிலையாய் ஐக்கியமாவதில் ஏற்படும்
இன்பமே தனிதான்......

இன்னும் தொடருங்கள்

இளந்தமிழ்ச்செல்வன்
26-01-2006, 06:30 PM
வாருங்கள் மீர(ா)வி. கவிதை அருமை.நண்பர்களின் கருத்துகKஉக்கு தங்கள் பதில் என்னவோ?

ஒரு கவிஞரை அறிமுகப் படுத்திய மதி அவர்களுக்கு நன்றி

meeravi
02-02-2006, 11:28 AM
தங்கள் விமர்சனத்துக்கும்/ஊக்குவித்தலுக்கும் நன்றி திரு Ilasu, Mano, Benz, Kavitha, Rajesh, Aringar, Aren and Gans.
-meeravi