PDA

View Full Version : ஒரு கவிதையின் கதை



மதி
18-01-2006, 03:35 AM
பதினொன்றாம் வகுப்பில் ஒரு நாள்
"மாணவர்களே ஒரு போட்டி"
என்றார் தமிழய்யா...
நாளை கவிதையெழுதி வாருங்கள்
காதலும் இயற்கையும் தலைப்பென்றார்.
சிட்டென பறந்தது மாணவர் கூட்டம்..
வைரமுத்துவையும் கண்ணதாசனையும்
நகலெடுக்க..

என்ன எழுதுவதென்று யோசித்தபடி
வீட்டிற்கு சென்றேன்...
வீற்றிருந்த தந்தையிடம் கேட்டேன்..
கவிதை எப்படியப்பா எழுதுவதென்று...

காதலித்துப் பார்.
கவிதை தானாய் வருமென்றார் தந்தை...
யாரை காதலிக்கலாம் என சிந்தித்தேன்..

மனக்கண் முன் நெருங்கிய சினேகிதி..
எழுத தொடங்கி விட்டேன் கவிதையை

அன்று முதல்
கவிதைகள் மாறவில்லை
காதல் மாறிவிட்டது...?!

Mano.G.
18-01-2006, 03:55 AM
கவிதை நல்லாவே வந்திருக்கு போல
இருந்தாலும் வேர ஏதும் வராம பார்த்துக்குங்க


மனோ.ஜி

மதி
18-01-2006, 04:23 AM
கவிதை நல்லாவே வந்திருக்கு போல
இருந்தாலும் வேர ஏதும் வராம பார்த்துக்குங்க

மனோ.ஜி
மனோஜி..
தங்கள் வாக்குப்படியே..

பென்ஸ்
19-01-2006, 04:27 AM
அன்று முதல்
கவிதைகள் மாறவில்லை
காதல் மாறிவிட்டது...?!

மாறியது காதலா... காதலியரா :rolleyes: :rolleyes: :D :D


காதலித்துப் பார்.
கவிதை தானாய் வருமென்றார் தந்தை..

அப்பா சரியாகதான் சொன்னார்... ஆனால் நீங்கள் தான் அதை முழுமையாக எடுத்து கொள்ளவில்லை....
காதல் பெண்ணோடு மட்டும் தானா???
இயர்க்கை முதல் இல்லாதது முதல் காதலிக்கலாமே :D :D

மதி
19-01-2006, 04:36 AM
மாறியது காதலா... காதலியரா :rolleyes: :rolleyes: :D :D



அப்பா சரியாகதான் சொன்னார்... ஆனால் நீங்கள் தான் அதை முழுமையாக எடுத்து கொள்ளவில்லை....
காதல் பெண்ணோடு மட்டும் தானா???
இயர்க்கை முதல் இல்லாதது முதல் காதலிக்கலாமே :D :D
அது தான் எனக்கும் புரியவில்லை...
என் காதல் மாறிவிட்டதா..இல்லை என் காதலி மாறிவிட்டாளா என்று?:confused:

அப்பா சரியா தான் சொல்லியிருக்கார்..நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன்..
ஹ்ம்ம்ம்..என்ன பண்றது..
எல்லாம் பட்டா தான் தெரியறது..:confused: :confused: :confused:

இளசு
22-01-2006, 11:14 PM
நம்மில் இருக்கும் நல்லதை வெளிக்கொணரும்
எல்லாமே காதலுக்குரியவைதான்..


ஒருமுறைதான் காதல் வரும்.. தமிழர் பண்பாடு!
அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது!


என்ன மதி + பென்ஸ்..

கண்ணதாசனின் பாடலிலேயே
பதில் இருக்குறாப்ல இல்ல..???

மதி
23-01-2006, 07:26 AM
நம்மில் இருக்கும் நல்லதை வெளிக்கொணரும்
எல்லாமே காதலுக்குரியவைதான்..


ஒருமுறைதான் காதல் வரும்.. தமிழர் பண்பாடு!
அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது!


என்ன மதி + பென்ஸ்..

கண்ணதாசனின் பாடலிலேயே
பதில் இருக்குறாப்ல இல்ல..???
ஹ்ம்ம்..அப்பயே.சொல்லிருக்காங்க..
ஆனால்...
ஆர்வக்கோளாறு..தந்தையின் பதில், விடலைப்பருவம்..
எல்லாம் என்னை வேறு மாதிரி சிந்திக்க வைத்துவிட்டது...
இருப்பினும்,
இதில் உள்ள அனைத்தும் கற்பனை இல்லாத அக்மார்க் உண்மை.:confused: :confused:

மதி
23-01-2006, 07:30 AM
இதோ அப்போ எழுதிய முதல் கவிதை..
தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்கப்பா..!
-----------------------------------------------------------
தென்றலே!
உன்னை நான் விரும்புகிறேன்
நீ
என்னவளைத் தாண்டி
என்னைத் தீண்டுவதால்
அவ்வமயம்
பூந்தென்றலே!!
உன்னை நான் வெறுக்கிறேன்
நீ
என் முன்னே
என்னவளைத் தீண்டுவதால்

தாமரை
23-01-2006, 07:49 AM
பதினொன்றாம் வகுப்பில் ஒரு நாள்
"மாணவர்களே ஒரு போட்டி"
என்றார் தமிழய்யா...
நாளை கவிதையெழுதி வாருங்கள்
காதலும் இயற்கையும் தலைப்பென்றார்.
சிட்டென பறந்தது மாணவர் கூட்டம்..
வைரமுத்துவையும் கண்ணதாசனையும்
நகலெடுக்க..

என்ன எழுதுவதென்று யோசித்தபடி
வீட்டிற்கு சென்றேன்...
வீற்றிருந்த தந்தையிடம் கேட்டேன்..
கவிதை எப்படியப்பா எழுதுவதென்று...

காதலித்துப் பார்.
கவிதை தானாய் வருமென்றார் தந்தை...
யாரை காதலிக்கலாம் என சிந்தித்தேன்..

மனக்கண் முன் நெருங்கிய சினேகிதி..
எழுத தொடங்கி விட்டேன் கவிதையை

அன்று முதல்
கவிதைகள் மாறவில்லை
காதல் மாறிவிட்டது...?!


காதலும் இயற்கையுமா?
இல்லை
காதலே இயற்கையா?
இல்லை
இயற்கையின் காதலா...

சிந்தித்து சிந்தித்து
எழுதத் தேவையில்லை...

கண்ணை மூடிக்கொண்டு
காதலி...

சொன்னது அப்பா..
செய்வது தப்பா?

aren
23-01-2006, 07:53 AM
அன்று முதல்
கவிதைகள் மாறவில்லை
காதல் மாறிவிட்டது...?!

காதலிகளும் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள் என்கிறீர்களா?

மதி
23-01-2006, 09:55 AM
காதலிகளும் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள் என்கிறீர்களா?
ஒரு தலையாய் காதலிப்பவர்களும் காதலிகள் என்றால்
காதலிகளும் மாறுகின்றனர்.:eek: :eek:

ப்ரியன்
23-01-2006, 12:52 PM
வைரமுத்துவையும் கண்ணதாசனையும்
நகலெடுக்க..

நகலெடுத்து கவிதைக் கற்றுக் கொண்டவன்தான் நானும்

காதலித்துப் பார்.
கவிதை தானாய் வருமென்றார் தந்தை...

நல்ல அப்பா...என்னுடைய அப்பாவைப் போலவே

அன்று முதல்
கவிதைகள் மாறவில்லை
காதல் மாறிவிட்டது...?!

கவிதைகள் மாறவில்லை காதல் மாறிவிட்டது...?! - இதன் அர்த்தம் இப்படி உணர்கிறேன் நான் சரியா என தெளிவுபடுத்தவும்...

கவிதைகள் அதே கருத்தைத்தான் சொல்கின்றன கவிதைக்கு உரியவர்கள்தான் மாறுகிறார்கள் சரியா???

கவிதை நல்ல இருக்கு ராஜேஷ்

ஒரு யோசனை: தேவையில்லா வார்த்தைகளையையும் சில பாராக்களின் நீளத்தையும் குறைக்கலாம்...

மதி
23-01-2006, 01:16 PM
பிரியன் தங்கள் விமர்சனத்திற்கு நன்றி..


கண்ணதாசனையும் வைரமுத்துவையும் வைத்து கற்றுக்கொள்வது தவறில்லை..
அன்று போட்டியில் பாடலை அப்படியே எழுதிவந்தனர்..அதை தான் சொல்ல வந்தேன்.

மேலும்..
என் கவிதைகள் என்றும் அவளுக்காக படைக்கப்படுவது..ஆயினும் என்னமோ தெரியவில்லை..
அவளுக்கான என் காதல், அந்த உணர்வு..சிறிது சிறிதாய் மாறுகிறதோ எந்த் தோன்றுகிறது..

மேற்கொண்டு வேண்டாமே..!

aren
23-01-2006, 09:31 PM
மேற்கொண்டு வேண்டாமே..!

ஏன்? இங்கே கவிதை அருவியாய் கொட்டுங்கள்.

இளசு
24-01-2006, 06:23 AM
..
அவளுக்கான என் காதல், அந்த உணர்வு..சிறிது சிறிதாய் மாறுகிறதோ எனத் தோன்றுகிறது..

..!

மாற்றம் மட்டுமே மாறாதிருப்பது...

ஓவியன்
27-02-2008, 11:54 AM
அன்று முதல்
கவிதைகள் மாறவில்லை
காதல் மாறிவிட்டது...?!

கவிதைகள் மாறாததால்
காதல் மாறியதா...??
இல்லை
காதல் மாறியதால்
கவிதைகள் மாறாதிருக்கிறதா...?? :rolleyes:

அப்பாடா மதியின் காதலைத் தோண்டி எடுத்தாச்சு........!!! :icon_rollout:

மதி
27-02-2008, 12:00 PM
ஹைய்யோ...ஹைய்யோ..
கண்டுபுடிச்சிட்டாங்கப்பா...

இது என்ன அதலபாதாளத்துலேயா கிடந்தது..? தோண்டி எடுக்க.. :)

ஓவியன்
27-02-2008, 12:02 PM
இது என்ன அதலபாதாளத்துலேயா கிடந்தது..? தோண்டி எடுக்க.. :)

ஆமாம் உங்க மனமென்னும் அதளபாதாளத்திலே இந்த காதல் ஒளிந்து கிடந்ததே....!! :D:D:D

மதி
27-02-2008, 12:08 PM
ஆமாம் உங்க மனமென்னும் அதளபாதாளத்திலே இந்த காதல் ஒளிந்து கிடந்ததே....!! :D:D:D

அதெல்லாம் ஒன்னுமில்லீங்கண்ணா... அவ்ளோ ஆழத்துல எல்லாம் இல்லே.... ஆனா.. ஒன்னு மட்டும் நிச்சயம்.. ஒன்றா.. இரண்டா...? எவ்ளோ பேர காதலிச்சாச்சு.. யாருக்குமே என் காதல் தெரியாமலேயே போச்சு.. :D:D:D:D

ஓவியன்
27-02-2008, 12:16 PM
யாருக்குமே என் காதல் தெரியாமலேயே போச்சு.. :D:D:D:D

ஆமா, அதள பாதாளத்திலே ஒளித்து வைச்சிருந்தா எப்படி அவங்களுக்குத் தெரியும்.....??? :lachen001:

அவங்க என்ன பாதாள விளிம்பிலே நின்று எட்டியா பார்கிறாங்க........!! :D:D:D

மதி
27-02-2008, 12:25 PM
ஆமா, அதள பாதாளத்திலே ஒளித்து வைச்சிருந்தா எப்படி அவங்களுக்குத் தெரியும்.....??? :lachen001:

அவங்க என்ன பாதாள விளிம்பிலே நின்று எட்டியா பார்கிறாங்க........!! :D:D:D
ஹ்ம்ம்ம்.. வேற ஒன்னுமில்ல..பெருமூச்சு..
அட..இனி ஆகற காரியங்கள பாக்கறேங்க...!:eek::eek::eek:

ஓவியன்
27-02-2008, 12:29 PM
ஹ்ம்ம்ம்.. வேற ஒன்னுமில்ல..பெருமூச்சு..
அட..இனி ஆகற காரியங்கள பாக்கறேங்க...!:eek::eek::eek:

சரி, சரி...
அலுத்துக்காதீங்க....

அந்த கோயில் ஜோசியக்காரர்கூறியது விரைவில் நடக்க வாழ்த்துக்கள்..!! :)

அனுராகவன்
27-02-2008, 12:32 PM
சரி, சரி...
அலுத்துக்காதீங்க....

அந்த கோயில் ஜோசியக்காரர்கூறியது விரைவில் நடக்க வாழ்த்துக்கள்..!! :)

அது என்ன ஓவியன்..
கோயில் ஜோசியர் சொன்னது..
எதும் ரகசியமா..

யவனிகா
27-02-2008, 12:41 PM
அட கவிதை...கவிதை...

மனிதர் உணர்ந்து கொள்ள...இது மனிதக் கவிதை அல்ல...
அதையும் தாண்டி ஒரு தெய்வம் எழுதியது....

மறுபடியும் ஓடிப் போய் அருவிலிருந்து குதிச்சிராதே...

நாங்களே உன் கவிதையப் படிச்சிட்டு அந்த அருவிக்குத்தான் ஓடிட்டிருக்கோம்....

சும்மா...உலூலுவாங்காட்டிக்கு...

கவிதன்னா இது கவித,,,

எங்கே ஐ.எஸ்.ஐ முத்திரை...எடுத்து வா மலரு...கவித மேல நச்சுன்னு ஒரு குத்து குத்தலாம்....

மதி
28-02-2008, 01:20 AM
சரி, சரி...
அலுத்துக்காதீங்க....

அந்த கோயில் ஜோசியக்காரர்கூறியது விரைவில் நடக்க வாழ்த்துக்கள்..!! :)
ஆஹா.. உங்களுக்கும் அது தெரிஞ்சுடுச்சா..?

:icon_ush::D:D:D:D:D

நன்றீஈஈஈஈஈஈ..:icon_rollout::icon_rollout:

மதி
28-02-2008, 01:22 AM
அட கவிதை...கவிதை...

மனிதர் உணர்ந்து கொள்ள...இது மனிதக் கவிதை அல்ல...
அதையும் தாண்டி ஒரு தெய்வம் எழுதியது....

மறுபடியும் ஓடிப் போய் அருவிலிருந்து குதிச்சிராதே...

நாங்களே உன் கவிதையப் படிச்சிட்டு அந்த அருவிக்குத்தான் ஓடிட்டிருக்கோம்....

சும்மா...உலூலுவாங்காட்டிக்கு...

கவிதன்னா இது கவித,,,

எங்கே ஐ.எஸ்.ஐ முத்திரை...எடுத்து வா மலரு...கவித மேல நச்சுன்னு ஒரு குத்து குத்தலாம்....

அக்கா...உண்மையா தான் பாராட்டுறீங்களா...??:eek::eek::eek::eek:

ஓவியன்
28-02-2008, 01:43 AM
அது என்ன ஓவியன்..
கோயில் ஜோசியர் சொன்னது..
எதும் ரகசியமா..

ஆமா பரமரகசியம்...!! :D
அந்த ஜோசியரே கேட்டாலும் நான் இனி வாயைத் திறக்க மாட்டேன்...!! :icon_ush::icon_ush::icon_ush: