PDA

View Full Version : இரயில்



ப்ரியன்
17-01-2006, 11:06 AM
என் கையசைப்பு
உணர்ச்சியில்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
அந்த மனிதர்களுக்கானதல்ல;
என்னைக் கடக்கும்போதெல்லாம்
மறக்காமல்
உற்சாகமாய் கூவிச் செல்லும்
அந்த இரயிலுக்கானது!

- ப்ரியன்.

aren
17-01-2006, 11:15 AM
உற்சாகம் ரயிலிக்காவது இருக்கிறதே என்கிறீர்களா.

நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ப்ரியன்
17-01-2006, 11:40 AM
நன்றி ஆரென்...மக்களுக்கு பயணிக்கும் மக்களுக்கு கையசைக்கும் பிள்ளையின் உற்சாகம் புரிவில்லை என்பது என் வருத்தம் ஆரென்...

பென்ஸ்
17-01-2006, 04:04 PM
ப்ரியன்... அடுத்தமுறை கவிதை எடுதும்போது என் கருத்துகளுக்கும்
என் எண்ணங்களுக்கும் ஒத்து போகாதபடி ஒரு கவிதை எழுதுங்கள்,
விமர்சிக்க வசதியாக இருக்கும்...

எவ்வளவு நாள்தான் "ஆகா அற்புதம்!!!" என்று பாராட்டுவது...

ரயிலுக்கு கையசைக்கும் குழந்தையாய் நான் இந்த மன்றத்தில்....
உங்கள் கவிதைகள் ஒரு சிறு பதில் புன்னகை...
அடுத்த ரயில் எப்போது விட போகிறிர்கள்????

ப்ரியன்
19-01-2006, 11:21 AM
ப்ரியன்... அடுத்தமுறை கவிதை எடுதும்போது என் கருத்துகளுக்கும்
என் எண்ணங்களுக்கும் ஒத்து போகாதபடி ஒரு கவிதை எழுதுங்கள்,
விமர்சிக்க வசதியாக இருக்கும்...

எவ்வளவு நாள்தான் "ஆகா அற்புதம்!!!" என்று பாராட்டுவது...


எனக்கும் ஒரு சில தடவையாவது விமர்சனங்கள் நன்றாக திட்டி வரவேண்டும் என ஆசைதான்...அந்த அளவுக்கு ஆழமான ஆபத்தான பொருள்களை (Theme) ஒருவேளை நான் தொடுவதில்லையோ என்னவோ?

இளசு
22-01-2006, 11:08 PM
உற்சாகம் கட்டாயம் தொற்றவேண்டிய நோய்..

அதற்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து மரத்துப்போகும் மனித வாழ்க்கை
ஒரு வித பரிதாபம்..

பலமுறை யோசித்த கரு..


ப்ரியனின் கவிவண்ணத்தில் படிக்கையில் 'அட...'


(பென்ஸின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் போறமாதிரி
உப்புசப்பில்லாத விமர்சனம் எழுதுங்கள் பென்ஸ்.. சரியா?????!!)

gans5001
24-01-2006, 09:47 AM
இரயிலை ஒரு கலமாகப் பார்க்காமல், பாத்திரமாய் பார்த்தது புதிய கோணம். தொடர்ந்து யோசித்துப் பார்க்கிறேன். உற்சாகத்தால் மட்டும் தான் கூவுகிறதா?
1) எத்தனை எத்தனை காதலர் பிரிவுகளை பார்த்து அழுவதாய் இருக்குமோ?
2) ஒருவர் கால்சட்டைப் பிடித்து மற்றொரருவர் என அதோ தூரத்தே ஓடும் சிறுவர் இரயிலிக்கு போட்டி போட முடியாத பெருமூச்சா?
3) சொந்தமென நினைத்து சுமந்தவர்கள் அவரவர் ஊற் வந்ததும் இறங்குவது போல் வேக உலகில் விட்டுச்சென்ற பிள்ளைகளை நினத்து அழும் வயதான பெற்றவர்களுக்கான ஒப்பாரியா?
4) எனது பாதை தனிப்பாதை என்ற கர்வ செறுமலா?

நண்பர்கள் தொடருவார்கள் என நினைக்கிறேன்.

அறிஞர்
26-01-2006, 03:39 AM
பிரியனின் கவியும்...
கன்ஸின் தொடர்ச்சியும் வெகு அருமை....

உயிரற்ற ஜீவனை (இரயிலை) பற்றி எத்தனை சிந்தனைகள்.... அருமை....

பல உணர்வுகளின் சங்கமம்...

பென்ஸ்
26-01-2006, 06:58 PM
கன்ஸ்... அப்படியே அதை ஒரு கவிதையா கொடுத்து
இருந்திருக்கலாமோ???

இல்லாமல் கூட அந்த சிந்தனை அருமையாகதான் இருக்கிறது....