PDA

View Full Version : கைக்கூ கவிதைகள் சில



kavinila
17-01-2006, 10:07 AM
"காசா லேசா என்றாள்" மனைவி
"காசாலே சா என்றேன்" நான்


--------------------------
அடிமை
-------
வந்தே மாதரம்
இன்று
வந்த மாது ரோம் கையில்

-------------------------

ஒற்றுமை
--------
கதிரைக்கும் கட்டிலுக்கும்
பெரிய வித்தியாசமில்லை
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க கதிரை
----------------------
இந்தியா
--------
காந்தியின் கைதடியால்
கொல்லப்பட்ட
திலீபன்
..................

சூரியன்
--------
மகனைப் போலவே
தான் உருகி பிறர் வாழ
உதவும் தந்தை
.............

காதல்
--------
..........
...........
.........
வாழ்க்கை.

...........
யனநாயகம்
...........
பெயரில் மட்டும்
பெயரளவில்
உள்ளது
..........


இலங்கை
--------
துதிக்கையாலும்
இருக்கையாலும்
இயற்கையாலும்
இருக்கை இல்லாத நாடு

ஒழுங்கு
--------
வரிசையாய் போகின்றது
எறும்பு
ரேசன் கடையில் நிற்பவர்கள்
முன்னால்

kavitha
17-01-2006, 10:11 AM
கடைசி இரண்டும் மிக அருமை கவிநிலா

aren
17-01-2006, 10:25 AM
சூரியன் ஹைகூ கொஞ்சம் புரியவில்லை.

மற்றவை அனைத்தும் அருமை.

காதல் மற்றும் வாழ்க்கை பற்றி எதுவுமே இல்லையே.