PDA

View Full Version : கணவருக்காக



kavinila
15-01-2006, 06:29 PM
வேலை முடித்து
விரைவாக
வீடு வந்தேன்.
பார்த்தேன்...............
தட்டினேன்..................
அழைப்பு மனியை
ஆசை தீர
அழுத்தினேன்.
கதவு திறக்கவில்லை!!!
என்
இல்லக்கிளத்தி இல்லையென
என்றெண்ணி
கதவைத் திறப்பதற்கு
கதவிடுகில்
கையைவிட்டேன்................
கண்டவர்கள் என்னை
கள்வன்
என்றெண்ணி
கண்மண் தெரியாமல்
கன்டபடி அடித்தார்கள்
அரை மனி நேரம் வரை
அரையுயிராய் நான் கிடக்க
கதவத் திறந்து.............................
அன்னநடை நடந்து
அசைந்தாடி வந்தாள்
என் வீட்டு மகாலட்சுமி
"என்னம்மா செய்தாய்
இவ்வளவு நேரமும்
இல்லத்தினுள்" என்று
இயலாமல் நான் கேட்க
"கணவருக்காக"........................
தொடர் பார்த்தேன்
என்றாளே

pradeepkt
16-01-2006, 02:00 AM
நடப்பு நிகழ்வா அல்லது நடந்த நிகழ்வா என்று பிரித்தறிய இயலாத பதிவு.
பாராட்டுகள்

இளசு
16-01-2006, 06:58 PM
தொ(ல்)லைக்காட்சித் தொடர் இடரின் பெயராக இருக்கிறதே என்றபடியே படிக்க வந்தால்....

அதை வைத்தே கடைசி வரியில் ' நறுக்'.


பாராட்டுகள் கவிநிலா..

பென்ஸ்
18-01-2006, 05:00 AM
கவிநிலா... அருமை....

என்று தீரும் இந்த சீரியல் மோகம்.... ஆனாலும் பெண்களின்
இயலாமையையும், மனநிலையையும் நன்றாக பயன்படுத்தும் இவர்கள் (சீரியல்காரர்கள்)..
ஆண்களின் நிலையை நினைத்து பார்க்கமாட்டார்களா???
பாவம் என் நன்பன் ஆபிஸ் முடிந்து வீட்டிர்க்கு வந்தால் எல்லா
சீரியலும் முடித்த பிறகுதான் ஒரு கப் தண்ணியே கிடைக்குதாம் ...
அதுவும் இப்ப எல்லாம் அவனே எடுத்து குடிக்கிறானாம்... :-(

Mano.G.
18-01-2006, 06:31 AM
நாட்டு நடப்போ
இல்லை நாட்டின் நடப்போ
என்ன தான் ஆக போகுதோ
இந்த சீரியலால் வந்த மோகம்

பொழுதை போக்க வந்த கருவி
பொழைப்பை அல்லா போக்குது

திருந்துமா இல்லை நமது தாய்குலம்




மனோ.ஜி

kavitha
19-01-2006, 10:08 AM
இப்படி வாரிவிடுகிறீர்களே கவிநிலா!
திருமதிகளால் முடியாததை தொடரில் பார்த்து திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள். ஆனாலும் ஆண்களும் இன்னும் மாறவில்லை! சினிமாவையும், டிராமாவையும் அதில்வரும் கனிகைகளுமே நிதர்சனம் என்று நம்பி... பாவம்!