PDA

View Full Version : VoipStunt



aren
15-01-2006, 01:20 PM
VoipStunt என்ற புதிய தளம் மூலம் இலவசமாக பல நாடுகளுக்கு கணிணி மூலம் தொலைபேசியில் பேசலாம். ஐரோப்பாவின் பல நாடுகள், அமெரிக்கா, கணடா, மற்றும் ஆசியாவில் சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், மலேசியா, தைவான், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவசமாக கணிணி மூலம் தொலைபேசிக்கு ஃபோன் செய்யமுடியும். வேண்டுமென்பவர்கள் http://www.voipstunt.com என்ற இணைய தளத்திற்குச் சென்று இறக்குமதி செய்துகொள்ளலாம்.

நான் இறக்குமதி செய்துகொண்டுள்ளேன். தொலைபேசியில் பேசினேன், குரல் நன்றாக கேட்கிறது.

முயற்சி செய்து பாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இராசகுமாரன்
19-01-2006, 07:20 PM
ஆரன்,

நல்ல தளத்தை அறிமுகம் செய்துள்ளீர்கள். நானும் இறக்கிக் கொள்கிறேன். பலருக்கு பயன் கிடைக்குமென நம்புகிறேன்.

இந்தியா, இலங்கை போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்த வசதி கிடையாது என்று வருத்தம்.

மலேசியா, சிங்கப்பூர், மக்களுக்காவது கிடைக்கிறதே என்று சந்தோசம்.

aren
19-01-2006, 11:59 PM
நன்றி தலைவரே. ஆனால் நம் மக்கள் இதில் பெரிய ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. SKYPE, Yahoo போன்ற தளங்களே மேல் என்று இருந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

அறிஞர்
25-01-2006, 11:08 PM
இதற்கு முன் நான் voipbuster என்ற மின்பொருளை உபயோகித்தேன்.

அதைப்போலவே இதுவும் உள்ளது

aren
26-01-2006, 12:56 AM
அறிஞர் அவர்களே,
இவர்கள் voipbusterலிருந்து பிரிந்து வந்திருக்கலாம். ஏனெனில் எல்லாம அதேமாதிரி இருக்கிறது.

எதுவாக இருந்தாலும் சரிதான். நன்றாக இருக்கிறது. வரும்வரை உபயோகிக்கலாம்.

mukilan
26-01-2006, 03:04 AM
எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. இது பிரிந்து வந்ததல்ல. அதே நிறுவனம் போலதான் தோன்றுகிறது. ஆனால் இப்பொழுது இலவச அழைப்புக்கள் செய்ய முடியவில்லையே.

அறிஞர்
26-01-2006, 03:04 AM
எதுவாக இருந்தாலும் சரிதான். நன்றாக இருக்கிறது. வரும்வரை உபயோகிக்கலாம். அப்ப நீங்க.. என்னை ஈஸியா கூப்பிடலாம் :rolleyes:

aren
26-01-2006, 07:44 AM
எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. இது பிரிந்து வந்ததல்ல. அதே நிறுவனம் போலதான் தோன்றுகிறது. ஆனால் இப்பொழுது இலவச அழைப்புக்கள் செய்ய முடியவில்லையே.

ஒரு நாளைக்கு இத்தனை அழைப்புகள் அல்லது இத்தனை நேரம் பேசலாம் என்று வைத்திருக்கிறார்கள். அது முடிந்துவிட்டால் அன்றைக்கு இலவசமாக பேச முடியாது. ஆனால் மறுபடியும் அடுத்த நாள் பேச முடியும்.

அப்படியில்லையென்றால் 5 அல்லது 10 யூராவிற்கு கிரெடிட் வாங்கிக்கொண்டால் எத்தனை நேரமானாலும் இலவசமாக பேசக்கூடிய இடங்களுக்கு பேசலாம். நானும் இன்று பணம் கட்டிவிடலாம் என்றிருக்கிறேன்.

aren
26-01-2006, 07:44 AM
அப்ப நீங்க.. என்னை ஈஸியா கூப்பிடலாம் :rolleyes:

நிச்சயம் கூப்பிடுகிறேன். எப்பொழுது இருப்பீர்கள் என்று சொல்லுங்கள்.

சிங்கப்பூருக்கும் இப்பொழுது இலவசம். அதுபோல் உங்களுக்கு நேரம் கிடைத்தால் நீங்களும் என்னைக் கூப்பிடலாம்.

இளந்தமிழ்ச்செல்வன்
26-01-2006, 04:54 PM
நன்றி ஆரென் அவர்களே. இதை நிறுவிவிட்டு உதவிக்கு அழைக்கிறேன்.

பென்ஸ்
26-01-2006, 07:06 PM
நானும் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கிறேன், ஆனால் அவசியம்
இல்லாமல் 10 யூரோவை தொலைத்து விட்டேனோ என்று ஒரு
எண்ணம்...
நாம் பேசுவது சிறிது நேர தாமததிற்க்கு பிறகுதான் அடுத்த முனை
செல்லுகிறது....

aren
27-01-2006, 12:30 AM
நானும் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கிறேன், ஆனால் அவசியம்
இல்லாமல் 10 யூரோவை தொலைத்து விட்டேனோ என்று ஒரு
எண்ணம்...
நாம் பேசுவது சிறிது நேர தாமததிற்க்கு பிறகுதான் அடுத்த முனை
செல்லுகிறது....

எனக்கு உடனே செல்கிறதே. தாமதம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் உபயோகித்தவரை அருமையாக பேசமுடிந்தது.

Mathu
20-02-2006, 11:08 PM
நன்றி தலைவரே. ஆனால் நம் மக்கள் இதில் பெரிய ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. SKYPE, Yahoo போன்ற தளங்களே மேல் என்று இருந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இல்லை அரேன் இதை ஐரோப்பாவில் நிறைய பேர் பயன்படுத்து
கிறார்கள். நானே பலருக்கு நிறுவி கொடுத்திருக்கிறேன்.
இதுவும் Voip Buster இன் இன்னொரு அறிமுகமே....!

:p :p :p