PDA

View Full Version : பின்னூட்டம் இட முடியவில்லை.

பாரதி
11-01-2006, 03:08 PM
அன்பு மன்ற நிர்வாகிகளுக்கு,

நான் இரண்டு தினங்களுக்கு முன்பாக சில பதிவுகளில் பின்னூட்டம் இட "Post Quick Reply" முறையில் பலமுறை முயன்றும் பின்னூட்டங்கள் பதிவாகவில்லை. இன்றைக்கும் முயற்சி செய்தேன். பலன் கிட்டவில்லை. பின்னர் "Advanced" முறையின் மூலம் முயற்சி செய்யும் போது பதிவானதைக் காண முடிந்தது. எனக்கு இந்த பிரச்சினை முன்பு வந்ததே இல்லை. இப்போது ஏன் வருகிறது என்று விளங்கவில்லை. நான் தற்போது விண்டோஸ் எக்ஸ்-பி ( ஹோம் எடிசன் ) உபயோகித்து வருகிறேன். எதனால் இந்தப்பிரச்சினை என்று விளக்கம் தர இயலுமா..? நன்றி.

அறிஞர்
11-01-2006, 03:13 PM
ஆஹா இந்த இரண்டு நாள் எல்லாருக்கும் பிரச்சனை இருக்கிறது..... எனக்கும் தான்.....

கொஞ்சம் கவனியுங்கள்

pradeepkt
12-01-2006, 03:45 AM
அட எனக்கு மட்டும்தான் பிரச்சினை இருக்குதுன்னு தப்பா நெனைச்சுட்டனே...
அத்தோட எடிட் பெட்டியிலயும் கோ அட்வான்ஸ்ட் இல்லாமப் பதிய முடியலை
ஐ இ தொங்குறான் :D :D

gragavan
12-01-2006, 05:00 AM
எனக்கும் இந்தப் பிரச்சனை இருக்கு. இப்பப் பாத்தா எல்லாருக்கும் இருக்கு.......அடடா! இப்பத்தான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருக்கு. ஹா ஹா ஹா

pradeepkt
12-01-2006, 05:41 AM
அன்பு மன்ற நிர்வாகிகளுக்கு,

நான் இரண்டு தினங்களுக்கு முன்பாக சில பதிவுகளில் பின்னூட்டம் இட "Post Quick Reply" முறையில் பலமுறை முயன்றும் பின்னூட்டங்கள் பதிவாகவில்லை. இன்றைக்கும் முயற்சி செய்தேன். பலன் கிட்டவில்லை. பின்னர் "Advanced" முறையின் மூலம் முயற்சி செய்யும் போது பதிவானதைக் காண முடிந்தது. எனக்கு இந்த பிரச்சினை முன்பு வந்ததே இல்லை. இப்போது ஏன் வருகிறது என்று விளங்கவில்லை. நான் தற்போது விண்டோஸ் எக்ஸ்-பி ( ஹோம் எடிசன் ) உபயோகித்து வருகிறேன். எதனால் இந்தப்பிரச்சினை என்று விளக்கம் தர இயலுமா..? நன்றி.
நான் விண்டோஸ் எக்ஸ்-பி புரொபஷனல், விண்டோஸ் 2003, விண்டோஸ் விஸ்டா வரைக்கும் போட்டுப் பாத்துட்டேன்... வரலை!
உடனே வழக்கம் போல விண்டோஸ்ல பிரச்சினைன்னு சொல்லீராதீங்க...
பி.கு.: எங்கப்பன் குதிருக்குள் இல்லை :D :D :D

gragavan
12-01-2006, 06:11 AM
நான் விண்டோஸ் எக்ஸ்-பி புரொபஷனல், விண்டோஸ் 2003, விண்டோஸ் விஸ்டா வரைக்கும் போட்டுப் பாத்துட்டேன்... வரலை!
உடனே வழக்கம் போல விண்டோஸ்ல பிரச்சினைன்னு சொல்லீராதீங்க...
பி.கு.: எங்கப்பன் குதிருக்குள் இல்லை :D :D :Dஇன்னொரு விஷயமும் சொல்றேன். இது புதுத்திரிகள்ள மட்டுந்தான் நடக்குது. பழைய திரிகள்ள என்னால உடனடிப் பதிவு செய்ய முடியுது.

lavanya
12-01-2006, 11:44 PM
எனக்கும் இந்த பிரச்னை இருக்கிறது..போஸ்ட் ரிப்ளை மூலம்தான்
பின்னூட்டம் இடுகிறேன்

aren
13-01-2006, 12:52 AM
எனக்கும் அந்த பிரச்சனை இருக்கிறது. நான் என்னுடைய கணிணியில்தான் இந்த பிரச்சனை என்று நினைத்து இரண்டு மூன்று முறை கணிணியை திரும்பவும் தொடங்கினேன். இருந்தும் இது சரியாகவில்லை என்ன பிரச்சனை என்று தெரியாமல் இருந்தேன். உங்களுக்கும் இந்த பிரச்சனை இருப்பது கண்டு என் கணிணியில் பிரச்சனையில்லை என்று தெரிந்தது.

aren
13-01-2006, 12:54 AM
இப்படி பிரச்சனைகள் இருந்தும் நம் மக்களின் பதிவுகளின் என்னைக்கை குறையவில்லை. பாராட்டுக்கள்.

பரஞ்சோதி
14-01-2006, 03:35 AM
எல்லோருக்கும் பிரச்சனை இருக்குது, சரி யார் தான் சரி செய்வது, எப்போது சரியாகும்.

என்னால் இப்பிரச்சனையால் அதிக பின்னோட்டம் இட முடிவதில்லை :)

பென்ஸ்
14-01-2006, 04:05 AM
எல்லோருக்கும் பிரச்சனை இருக்குது, சரி யார் தான் சரி செய்வது, எப்போது சரியாகும்.

என்னால் இப்பிரச்சனையால் அதிக பின்னோட்டம் இட முடிவதில்லை :)

பொய் சொல்லகூடாது... நானும் கொஞ்ச நாளாக பாத்து கொண்டுதான் இருக்கிறேன், உங்க பதிவு ரென்பவும் குறைவாக உள்ளன, என்ன காரணம் என்று சொல்லியே ஆகனும்...

பணிபழுவாக இருந்தால் மட்டுமே மன்னிப்பு...

அன்பான உரிமையுடன் மிரட்டும்.....:) :)

இராசகுமாரன்
14-01-2006, 06:29 AM
மன்றம் இருக்கும் சர்வரில் அவ்வப்போது பாதுகாப்பு கருதி மென்பொருள்களை மேம்படுத்துவார்கள். அதனால், அடுத்த சில நாட்களுக்கு இவ்வாறு நிகழலாம். பிறகு இந்த பிரச்சனைகள் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் சரியாகிவிடும்.

விடுமுறைகள் காரணமாக தாமதமாகியுள்ளது. விரைவில் சரி செய்யப் படும்.

aren
14-01-2006, 06:37 AM
நன்றி தலைவரே. சீக்கிரம் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

aren
14-01-2006, 06:37 AM
இப்பொழுது சரியாகிவிட்டது போலிருக்கிறதே.

பென்ஸ்
14-01-2006, 09:13 AM
மைக் டெட்ஸ்டிங் 1. 2 .. 3...

இல்லையப்பா ... ஒர்க் ஆகலை...

இராசகுமாரன்
14-01-2006, 11:22 AM
இப்போது, உங்கள் மைக்கை தட்டிப் பாருங்கள்?

aren
14-01-2006, 12:41 PM
எனக்கு இப்பொழுது வேலை செய்கிறதே.

பென்ஸ், மறுபடியும் முயன்று பாருங்கள்.

பென்ஸ்
14-01-2006, 02:30 PM
மைக் டெஸ்டிங் 1..2.....3..

ஆகா எல்லாம் வேலை செய்யுது.....

பாரதி
14-01-2006, 04:55 PM
குறையை களைந்தமைக்கு மிக்க நன்றி.

அழகன்
15-01-2006, 06:01 AM
எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது இப்ப சரிபார்த்துவிடலாம். சரியாகிவிட்டது நன்றி

pradeepkt
16-01-2006, 01:50 AM
அருமை... நன்றி.

gragavan
16-01-2006, 04:15 AM
அடடே! எல்லாம் சரியாப் போச்சா....ரொம்ப நல்லது. தை பிறந்தால் வழி பிறக்குமுன்னு சொல்லாமலா சொன்னாங்க..........

அறிஞர்
17-01-2006, 03:06 PM
இப்பொழுது சரியாகிவிட்டது. நன்றி அன்பரே