PDA

View Full Version : நான் இராவணன்.



இராவணன்
10-01-2006, 01:30 PM
நண்பர்களே நான் இராவணன்.
கனடாவில் இருந்து வருகின்றேன். உங்களுடன் இணைந்து கொள்ளலாமா?

மதி
10-01-2006, 01:40 PM
நண்பர்களே நான் இராவணன்.
கனடாவில் இருந்து வருகின்றேன். உங்களுடன் இணைந்து கொள்ளலாமா?
வாருங்கள் இராவணன்..!
தங்கள் வரவு நல்வரவாகுக..!

ஆமாம்..அதென்ன பேர் இராவணன்?

ஏதேனும் காரணம்..?:confused: :confused:

இராவணன்
10-01-2006, 01:42 PM
உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்

பென்ஸ்
10-01-2006, 01:51 PM
வாங்க இராவணன்.... தங்கள் வரவு நல்வரவு ஆகுக....

இராவணன்
10-01-2006, 01:56 PM
வாங்க இராவணன்.... தங்கள் வரவு நல்வரவு ஆகுக....
நன்றி பென்ஜமின்:)

பரஞ்சோதி
10-01-2006, 05:07 PM
வாங்க இராகவன் மன்னிக்கவும் இராவணன்.

உங்களை தமிழ்மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன்.

அறிஞர்
10-01-2006, 07:34 PM
வாருங்கள் அன்பரே... கனடாவில் எங்கு... டொரண்டோவா.......

மன்றத்தில் படித்து இன்புறுங்கள்... நல்ல கருத்துக்களை தாருங்கள்

இளசு
11-01-2006, 12:05 AM
நல்வரவு நண்பர் இராவணன் அவர்களே..

பல பகுதிகளிலும் படித்து -பங்களித்து மன்றத்தில் இனிய உலா வர வாழ்த்துகள்..

Narathar
11-01-2006, 01:31 AM
உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்

வாங்க வாங்க...........................
வந்தவுடனேயே கலகத்தை :D :D ஆரம்பித்துவிட்டீர்களா?
நாராயணா!!!!!!
உங்கள் வரவு நல் வரவாகட்டும்!

இராவணன்
11-01-2006, 02:34 AM
வாங்க வாங்க...........................
வந்தவுடனேயே கலகத்தை :D :D ஆரம்பித்துவிட்டீர்களா?
நாராயணா!!!!!!
உங்கள் வரவு நல் வரவாகட்டும்!

உங்கள் வேலையை நான் எடுத்ததற்கு கோபம் இல்லைத் தானே! இருந்தாலும் வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள்:)

இராவணன்
11-01-2006, 02:36 AM
வாருங்கள் அன்பரே... கனடாவில் எங்கு... டொரண்டோவா.......

மன்றத்தில் படித்து இன்புறுங்கள்... நல்ல கருத்துக்களை தாருங்கள்

இல்லை. நான் மொன்றியல்.
ஆக்கங்கள் தருவதற்கு நேரம் போதுமாக இல்லை. ஆனாலும் கருத்துக் கூற அனுமதிப்பீர்கள் தானே:)

pradeepkt
11-01-2006, 03:51 AM
வணக்கம் இராவணன்.
உங்களுக்கு எங்கள் அன்பான நல்வரவு.
எனக்கும் ராமனை விட இராவணனைத்தான் பிடிக்கும். எனவே உங்களைப் பிடிக்கும்.
கேள்வி எதற்கு? மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளைத் தயங்காது பதியுங்கள். அதே சமயம் உங்கள் படைப்புகளையும் நேரம் கிடைக்கையில் தாருங்கள்.

உங்களுக்குத் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

gragavan
11-01-2006, 05:50 AM
ஆகா! வாருங்கள் வாருங்கள்! இராவணேஸ்வரா! வந்து மன்றத்தை உமது காம்போதி ராகத்தால் மகிழ்வியுங்கள்.

அறிஞர்
11-01-2006, 04:10 PM
இல்லை. நான் மொன்றியல்.
ஆக்கங்கள் தருவதற்கு நேரம் போதுமாக இல்லை. ஆனாலும் கருத்துக் கூற அனுமதிப்பீர்கள் தானே:)அவசியம்.. கருத்துக்கூறலாம்..
மற்றவர்கள் மனதை பாதிக்காமல் இருப்பது நல்லது.. அவ்வுளவுதான்......

காலம் கனியும்போது தாங்களும் ஆக்கங்கள் தாருங்கள்

தாமரை
12-01-2006, 05:04 AM
விமர்சனங்கள்.. படைப்பாளிகளின் சத்துணவு...
(அப்பப்போ முட்டை:cool::D கூட போடுவீங்க தானே)
படைப்பாளிகளுக்கு படையிலிட
வருக... வருக..:D :D :D

சுபன்
27-01-2006, 11:02 PM
நண்பர்களே நான் இராவணன்.
கனடாவில் இருந்து வருகின்றேன். உங்களுடன் இணைந்து கொள்ளலாமா?

வணக்கம் இராவணன் உங்கள் வரவு நல்வரவாகுக

aren
28-01-2006, 03:29 PM
இல்லை. நான் மொன்றியல்.
ஆக்கங்கள் தருவதற்கு நேரம் போதுமாக இல்லை. ஆனாலும் கருத்துக் கூற அனுமதிப்பீர்கள் தானே:)

வாவ்!! மாண்டிரியால். அருமையான அழகான நகரம். மாண்டிரியாலில் எங்கே தங்கியிருக்கிறீர்கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
28-01-2006, 05:41 PM
வாருங்கள் இராவணன். உங்கள் பங்களிப்பை பார்க்க ஆவலாய் உள்ளேன்

சுபன்
19-02-2006, 03:20 PM
இல்லை. நான் மொன்றியல்.



குபெக் மாகாணம் தானே

ஓவியா
04-04-2007, 03:21 PM
நல்வரவுகள் நண்பரே

அரசன்
04-04-2007, 03:47 PM
உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்

தங்கள் கருத்து என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. வாருங்கள்! வந்து எங்களுடன் கலந்துவிடுங்கள்.

அன்புரசிகன்
04-04-2007, 03:51 PM
நண்பர்களே நான் இராவணன்.
கனடாவில் இருந்து வருகின்றேன். உங்களுடன் இணைந்து கொள்ளலாமா?

இது என்ன கேள்வி. நீங்கள் இணைந்து கொள்ளாது வேறுயாரிணைவது.... அதிலும் எனக்குப்பிடித்த ஒரு மாவீரனின் பெயரில் உள்ளீர்கள்.
வருக வருக.

விகடன்
04-04-2007, 04:43 PM
நண்பர்களே நான் இராவணன்.
கனடாவில் இருந்து வருகின்றேன். உங்களுடன் இணைந்து கொள்ளலாமா?

இதென்ன கேள்வி.
கண்டிப்பாக.
உங்களின் வரவு நல்வரவாகுக.

ஓவியன்
05-04-2007, 08:22 AM
ராவணா!

உங்களை வரவேற்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது!

மன்னிக்கவும்.

பரஞ்சோதி
05-04-2007, 08:51 AM
இராவணன் அவர்களை நீண்ட நாட்களாக காணவில்லையே!

வலைப்பூ உலகத்திற்கு சென்று விட்டாரா?

மனோஜ்
05-04-2007, 08:54 AM
இராவணன் வந்தது 2006 இல் அவர் பதிந்தது 9 பதிவுகள் மட்டும்
இவர் புதியவர் அல்லவே

பிச்சி
05-04-2007, 09:57 AM
வாருங்கள் உங்களுக்கு வரவேற்புக்கள்

பிச்சி

விகடன்
05-04-2007, 12:37 PM
அது சரி இராவணா,
அநுமானை அவிழ்த்துவிட்டீர்கள். அது இங்கிருக்கும் எங்களையெல்லாம் கடிச்சு குதறிக்கொண்டிருக்கிறது. அது ஒரு புறமிருக்க ...சீதை எங்கே?

உதயசூரியன்
05-04-2007, 01:05 PM
உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்


நெத்தியடி... உண்மையில் என் கருத்தும் அதுவே..
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..

எனக்கும் இராம காவியத்தை விட.. இராவண காவியம் தான் பிடிக்கும்..

வருக இராவணரே..வருக..
இராமாயனத்து தமிழ் நாயகனே வருக..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

திராவிடன்
05-04-2007, 11:21 PM
இராவன காவியத்தின் கதாநாயகனே உன்னை அன்புடன் வரவேற்கிறேன்.

subsekar
22-11-2011, 09:21 AM
நெத்தியடி... உண்மையில் என் கருத்தும் அதுவே..
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..

எனக்கும் இராம காவியத்தை விட.. இராவண காவியம் தான் பிடிக்கும்..

வருக இராவணரே..வருக..
இராமாயணத்து தமிழ் நாயகனே வருக..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

மேற்சொன்ன கருத்துகளில் எந்த ராமாயணத்தைப் பற்றி நாம் பேசுகிறோம் என்று தெரிந்தால் மேலே கருத்துச் சொல்ல முடியும்.

ராமாயணம் எழுதப் பட்டது முதலில் வால்மீகியால். ஆதி கவி என்று அழைக்கப் படும் இவர் ராமன் வாழ்ந்த காலத்திலேயே இருந்தவர். ராமாயணக் கதையிலும் அவர் நடுநடுவில் வருவார். அவர் எழுதிய ஒரிஜினல் ராமாயணக் கதையை கொஞ்சம் தட்டிக் கொட்டி உல்டா பண்ணி மற்ற பலர் எழுதியிருக்கின்றனர், நம் கம்பர் உள்பட.

என்னைப் பொறுத்த வரை ராமாயணம் நடந்த வரலாறு வெறும் கற்பனைக் கதை அல்ல. (அதை இதிஹாசம் என்று குறிப்பிடுவதை நாம் பார்த்திருப்போம், இதிஹாசம் என்றால் ”இவ்வாறு நடந்தது” என்று அர்த்தமாம்).

ஆக வால்மீகி ராமாயணம் அசல் ராமாயணம் உண்மைக்கதை. மற்றவை அதைப் பின்பற்றி கற்பனைகள் பல கலந்து எழுதப் பட்டவை.
இதில் ராவணன் இலங்கையில் இருந்தவன். இவன் ஒரு அரக்கன் என்றே குறிப்பிடப் பட்டிருக்கிறது. இவன் தமிழன் அல்ல. 10 தலை, நினைத்த உருவம் எடுக்கும் தன்மை இதெல்லாம் படைத்தவன். தன் அண்ணன் குபேரனை தோற்கடித்து அவன் புஷ்பக விமானத்தையும் கைப்பற்றி இலங்கையை ஆண்டவன்.

பெரும் சிவபக்தன் இவன் என்று வால்மீகியும் கூறுகிறார். ஹனுமான் ராவணனை முதலில் பார்க்கும் போது ராவணனைப் பெரிதும் சிலாகித்துத் தான் கூறுகிறார். இதே போல ராமனும் முதல் முறை ராவணனைப் பார்க்கும் போது அவனுடைய நல்ல குணங்களைச் சற்று பட்டியலிடுகிறார்.

இவன் சிவபக்தியில் பெரியவனாக இருந்தும் கூட ஆணவத்தால் கைலாயத்தை அசைத்து விடலாம் என்று முயற்சி செய்தபோது சிவன் மலையை அழுத்தி விடவே கை கீழே மாட்டிக் கொண்டு வேதனையில் சிவனைப் பூஜித்து அழுததால் அவனுக்கு ராவணன் என்ற பெயரே ஏற்பட்டது. ராவணன் என்றால் அழுதவன் என்பது போல அர்த்தமாம். அதற்கு முன்பு வரை அவன் பெயர் “தசக்ரீவன்” 10 கழுத்துகளை உடையவன் என்பதேயாகும்.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லை என்ற கவிஞர் வாக்கியப் படி, இவனுடைய மனைவி மண்டோதரி கற்புக்கரசிகளில் ஒன்றாகக் கொண்டாடப் பட்ட போதும், பெண் பித்தனாகவே வாழ்ந்து வந்தான். விருப்பமில்லாத மாற்றான் மனைவியை ஏமாற்றித் தூக்கிக் கொண்டு வந்த குற்றத்துக்காகவே அவனுக்குத் தக்க தண்டனையை ராமன் வழங்குகிறான் யுத்த பூமியில்.

இவன் சீதையைக் கட்டாயப் படுத்ததாதற்கு இந்த ராமாயணத்திலேயே ராவணன் பெற்ற ஒரு சாபத்தைப் பற்றிய கதை வருகிறது. வேறொரு பெண்ணைக் கட்டாயப் படுத்தினால் நீ அழிவாய் என்ற அந்தச் சாபம் பெற்ற அவன் சீதையைக் கட்டாயப் படுத்தாதற்குக் காரணம்இது தானே ஒழிய அவனுடைய ”கண்ணியம்” கிடையாது. பெண்கள் விஷயத்தில் அவனுக்குக் கண்ணியம் எல்லாம் கிடையாது!