PDA

View Full Version : கண்ணாடியல்ல, பனித்துளி

kavitha
09-01-2006, 10:19 AM
ஒளிவாங்கும் ஓர் ஒளியைக் கண்டேன்
என் உளியதுவோ என்றே
முன் நின்றேன்
பார்த்தால் பார்த்து
சிரித்தால் சிரித்து
அழுதால் அழுதது
ரசக் கண்ணாடி!
முன்னாடி நின்று
பிம்பத்தை உள்வாங்கி
பின்
அனல்மூச்சாய் வெளிவிட்டுத்
தேடினேன்... தேடினேன்
காணவில்லை...
கைத்தளம் பற்றும்முன்னே
கரைந்தது
அது
கண்ணாடியல்ல, பனித்துளி.

இளசு
09-01-2006, 11:41 PM
என்னில் உன்னைக்கண்டதாலோ என்னவோ
உன்னை அந்த அளவு....

என்னை நானே காணவைத்ததாலோ என்னவோ
உன்னிடம் என்னை.....

எதிர்பார்ப்புகள் , நம்பிக்கைகள் அதிகம் ஆக ஆக
ஏற்படுமே ஒரு பரவசம்...

ஜாக்கிரதையாய் இருக்கும் நிலைகளில்
'தான்' அழியும் அந்த நிர்மலம் இல்லை..

எதிர்பார்ப்பு மறையும்போது ஏற்படுமே
ஒரு ஏமாற்றம்.. ஏக்கம்..
அதற்கு ஈடாகவும் ஏதுமில்லை...

அதனால் என்ன?
இந்த பனித்துளியிடம் இந்தப்பாடம் கற்றாலும்..

வாழ்வில்.. என்னில் உள்ள காதல், நம்பிக்கை, எதிர்பார்ப்பு
வற்றிவிடாது...

இரவின் விடியலில்..ஒளிக்கீற்றில்
இன்னமும் தேடுவேன்..

இன்னுயிர் உள்ளவரை தேடுவேன்..

----------------------------------------

அன்புக்கவீ..

சில்லென நெஞ்சில் இறங்கிய சிலீர் வரிகளைப் படித்த
சூட்டோடு சூடாக இறங்கிய பதில்..

பதில் பதிப்பை விட தனியே பாராட்டு என ஒன்று உள்ளதா என்ன?

பென்ஸ்
10-01-2006, 04:43 AM
புல்லின் வியர்வை
நிலவின் கண்ணிர்
கடைக்கண் பார்வை

பனி துளியை இப்படி மட்டும்தான் நினைத்திருந்தேன், இன்று புதிதாய் பார்க்கிறேன்...
கவிதா, இளசு... சூப்பர்

....:)

இளசு... ஆயிரம் பாராட்டை வீட ஒரு பதில் கவிதை மேல்... அப்படிதானே???

அறிஞர்
10-01-2006, 07:43 PM
கவியின் பனி, இளசின் காதல் பதில், பென்ஸின் பனித்துளிகள் அருமை......
-----
கவி எங்க ஊருக்கு வாங்க.... பனிக்கரையாமல் பல நாட்கள் அப்படியே இருக்கும்.
-----

kavitha
17-01-2006, 10:03 AM

பதில் பதிப்பு இரட்டிப்பு ஷொட்டு அண்ணா. நன்றி.

சில் லென்ற வரி
சூடான பதில்
முரண் பா?

சென்ற வாரமே இதற்கு பதில் அளித்திருந்தேன்; ஆனால் ஒன்றும் காணோமே! கணினிக்கோளாறாய் இருக்குமோ?

kavitha
17-01-2006, 10:04 AM
புல்லின் வியர்வை
நிலவின் கண்ணிர்
கடைக்கண் பார்வை

பனி துளியை இப்படி மட்டும்தான் நினைத்திருந்தேன், இன்று புதிதாய் பார்க்கிறேன்...
கவிதா, இளசு... சூப்பர்

....:)

இளசு... ஆயிரம் பாராட்டை வீட ஒரு பதில் கவிதை மேல்... அப்படிதானே???

நன்றி பெஞ்சமின்

kavitha
17-01-2006, 10:08 AM
கவியின் பனி, இளசின் காதல் பதில், பென்ஸின் பனித்துளிகள் அருமை......
-----
கவி எங்க ஊருக்கு வாங்க.... பனிக்கரையாமல் பல நாட்கள் அப்படியே இருக்கும்.
-----
பனி வேண்டாம்; பனித்துளிதான் வேண்டும். கிடைத்தால் அனுப்பிவையுங்கள் அறிஞர். நன்றி

aren
17-01-2006, 10:31 AM
அருமை கவிதா. தொடருங்கள். கூடவே இளசு அவர்களின் பதிவு.

படிக்கவே சுவையாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

பென்ஸ்
17-01-2006, 04:21 PM
பனி வேண்டாம்; பனித்துளிதான் வேண்டும். கிடைத்தால் அனுப்பிவையுங்கள் அறிஞர். நன்றி
அப்ப நான் அனுப்புனதை நீங்க பார்க்கலையா???:rolleyes: :rolleyes:
சரி இன்றும் அனுப்புகிறேன்... காலையில் சூரியன் வந்து திருடும் முன்
எடுத்துக்கொள்ளுங்கள்.... :D :D

kavitha
19-01-2006, 09:58 AM
அருமை கவிதா. தொடருங்கள். கூடவே இளசு அவர்களின் பதிவு.

படிக்கவே சுவையாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

நன்றி ஆரென் அண்ணா.
கவிதையின் பொருளை சட்டெனப்புரிந்துக்கொள்வதில் இளசு அண்ணா கில்லாடி.

kavitha
19-01-2006, 10:01 AM
அப்ப நான் அனுப்புனதை நீங்க பார்க்கலையா???:rolleyes: :rolleyes:
சரி இன்றும் அனுப்புகிறேன்... காலையில் சூரியன் வந்து திருடும் முன்
எடுத்துக்கொள்ளுங்கள்.... :D :D
:) நீங்கள் அனுப்பினீர்கள் என்பதை நான் எப்படி அறிந்துக்கொள்ளமுடியும்? சும்மா இந்த உட்டான்ஸ், உட்வாட்ஸ் லாம்
வேண்டாம் :D

ஓவியா
29-04-2007, 12:58 AM
ஒளிவாங்கும் ஓர் ஒளியைக் கண்டேன்
என் உளியதுவோ என்றே
முன் நின்றேன்

பார்த்தால் பார்த்து
சிரித்தால் சிரித்து
அழுதால் அழுதது
ரசக் கண்ணாடி!

முன்னாடி நின்று
பிம்பத்தை உள்வாங்கி
பின்
அனல்மூச்சாய் வெளிவிட்டுத்
தேடினேன்... தேடினேன்
காணவில்லை...

கைத்தளம் பற்றும்முன்னே
கரைந்தது
அது
கண்ணாடியல்ல, பனித்துளி.

நல்ல கவிதை. மிகவும் ரசித்தேன். நன்றி.

பனி கரைந்து பின் மறைந்து விடும் என்று தெரிந்தும் தேடும் இதயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒரு சுகமே!!!!!,
பனி என்று தெரிந்ததும் அதிரடியாய் விலகும் இதயங்களும் இருகின்றன், இது முனேச்சரிக்கை.

எதிர்பார்ப்பு எப்பொழுதும் ஒரு வித மாயக்கண்ணாடிதான்.

சக்தி
30-04-2007, 07:10 PM
பனித்த்ளி
அது
கண்டதை பிரதிபலிக்கும்
மாயக்கண்ணாடி

paarthiban
01-05-2007, 11:50 AM
பனித்துளி கவிதை அருமை. காதல், அன்பு, நம்பிக்கை மட்டுமல்ல
மொத்த வாழ்க்கையே கூட சிறூ பனிதுளிதான் இல்லையா கவிதா அவர்களே

அக்னி
06-09-2007, 10:53 AM
என்னைப் பிரதிபலித்த
விம்பம் கரைந்தாலும்...
காத்திருப்பேன்
நாளை வருவாய் என்று...

பாராட்டுக்கள் கவிதா... மீண்டும் வந்து கவி தா(ருங்கள்)...
பின்னூட்டங்களில் பனித்துளியின் அழகு...
ஆனால்,
கரைந்துவிடாமல், காலங்காலமாக படிந்திருப்பதால், இன்று என் ரசனைக்கு,
நாளை புதிரவர்கள் வரவுக்கு...

இலக்கியன்
06-09-2007, 02:01 PM
வாழ்த்துக்கள் கவிதா இளசு அண்ணா
பனித்துளியாய் நீங்களும் மன்றத்தை விட்டு அகன்றது கவலையே
மீண்டும் கவிசமைக்க வாருங்கள்
அன்புடன்
இலக்கியன்