PDA

View Full Version : மயிலார் போன ஃபோரம்gragavan
09-01-2006, 10:03 AM
இந்த 2006ல் இருந்து மயிலார் நம்ம கூடவே இருந்து பாத்து காப்பாத்தப் போறதால, இனிமே நம்ம வாழ்க்கைல மயிலார் இல்லாம பதிவு போட முடியுமா? நம்ம மயிலார் முருகன் அனுப்பிச்ச ரத்னக் கலாப மயிலார்தான்.

இன்னைக்கு ஜனவரி ஒன்னு. ஊரெல்லாம் கோலகலமா இருக்கே. நாமளும் forum வரைக்கும் போயிட்டு வரலாமுன்னு நெனச்சேன். அதாவது ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு. ஒடனே கெளம்பீட்டாரு மயிலாரு. சொல்லச் சொல்ல கேக்கவேயில்லை. அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் போனதில்லைன்னு தோகைய விரிச்சிக்கிட்டு ஒத்தக்கால்ல நிக்குறாரு. வேற வழியில்லாம கூட வரச் சொன்னேன்.

நான் பைக்குல போகும் போது அவரு மட்டும் ஜிவ்வுன்னு வானத்துல எம்பி சர்ருன்னு பறந்தாரு. டிராஃபிக்காவது! சிக்னலாவது! சட்டுன்னு பொறாமையா இருந்துச்சு. சரி. அதையெல்லாம் பாத்தா முடியுமா? மால்ல போய் வண்டிய நிப்பாட்டுனேன். ஒரே கூட்டம். நெரிசக்காடு.

"ஏம்ப்பா ராகவா! இங்க என்ன திருவிழா நடக்குதா? பெரிய கோயிலா இருக்கும் போல!"

"ஐயா சாமி. இது கோயில் இல்ல. கடை. பெரீஈஈஈஈஈஈஈய்ய கடை. விக்கிரமாதித்தன் கதைல வர்ர கதைக்குள்ள கதை மாதிரி கடைக்குள்ள கடை. ஒரு கடைக்குள்ள பல கடை. ஒவ்வொன்னும் ஒரு கடை." முடிஞ்ச வரைக்கும் விளக்குனேன்.

நீட்டமான கழுத்தைத் தூக்கி நாலு பக்கமும் பாத்தாரு. மேலையும் கீழயும் கழுத்து ரெண்டு வாட்டி ஏறி எறங்குச்சு. நான் நடக்கத் தொடங்குனதும் கூடவே வந்தாரு. வர்ரவங்க மேல இடிக்கக் கூடாதுன்னு தோகையை இறுக்கி நெருக்கி வெச்சுக்கிட்டே நடந்தாரு.

ஒரு எடத்துல போனதும் கமகமன்னு வாட வந்துச்சு. மயிலார் கண்ணு பெரிசா விரிஞ்சது.

"ராகவா! என்னவோ வாட வருது பாரு. ஜம்முன்னு இருக்கு."

"மயிலாரே! அது மக்காச்சோளம். நல்லதா உதுத்து வேக வெச்சி கூட உப்பும் மெளகாப் பொடியும் வெண்ணெய்யும் போட்டுத் தர்ராங்க."

"அட அப்படியா! நமக்கும் கொஞ்சம் வாங்கி எரச்சு விட்டா கொத்தித் திம்போமுல்ல."

பாவம் பறந்து வந்ததுல மயிலாருக்குப் பசிச்சிருக்கும் போல. ஒரு பெரிய கப்பு வாங்குனேன். கீழ பல பேரு நடக்குற எடங்குறதால கைல போட்டுக் காட்டுனேன். ஒவ்வொன்னாக் கொத்திக் கொத்திச் சொகமாத் தின்னாரு. தலையக் குனிஞ்சு ஒன்னக் கொத்துறதும்....அதையே வானத்தப் பாத்துக்கிட்டு முழுங்குறதும்....அது தொண்டைல ஜில்ல்லுன்னு போறதும்...அடடா! என்ன அழகு தெரியுமா!

"ராகவா! இந்த மக்காச்சோளம் எவ்வளவு?"

"முப்பது ரூவா ஒரு கப்பு."

மயிலாருக்கு சடக்குன்னு ஒரு சோளம் குறுக்க விழுந்திருச்சு. "என்னது? முப்பது ரூவாயா? கைப்பிடிதான இருந்துச்சு. அதுக்கே முப்பது ரூவாயா?"

"மயிலாரே, இது மக்காச்சோளமாயிருந்தா நாலஞ்சு ரூவாய்க்கு விக்கலாம். அத வெளிய தெருவுல விக்குறாங்களே. நீளமா நெருப்புல வாட்டி. இது கார்ன். பேரே வெளிநாட்டுப் பேரு. பெறகு வெல இருக்காதா?" நான் சொன்ன வெளக்கம் மயிலாருக்குத் திருப்தியாயில்லைன்னு அவரு நடையிலேயே தெரிஞ்சது.

அப்புறம் அப்படியே தானா மேல ஏறும் படீல ஏறி லேண்டு மார்க்குங்குற புத்தகக் கடைக்குப் போனோம். வரிசையா இருந்த புத்தகங்கள ஒரு நோட்டம் விட்டுட்டு மாடிக்குப் போயி தமிழ் சினிமா வீசீடி ஒரிஜினல் வாங்கலாமுன்னு போனோம். ஒவ்வொன்னா எடுத்துப் பாத்தேன். பழசு புதுசுன்னா எல்லாம் இருந்துச்சு. மயிலாரும் பார்வைய ஓட்டிக்கிட்டு இருந்தாரு. திடீருன்னு தலையக் குனிஞ்சி குனிஞ்சி என்னவோ பண்ணுனாரு. உக்காந்து உக்காந்து எந்திரிச்ச மாதிரி இருந்தது. படக்குன்னு தோகைய வேற விரிச்சிட்டாரு. எனக்கு மானமே போன மாதிரி ஆயிருச்சி.

"என்னாச்சு...ஏன் இப்பிடி பண்றீங்க? எல்லாரும் பாக்குறாங்க...கொஞ்சம் நிப்பாட்டுங்க." கட்டக் குரல்ல அழுத்திச் சொன்னேன்.

படக்குன்னு என்னய கோவமா ஒரு பார்வ பாத்தாரு. ஏதாவது தப்பாச் சொல்லீட்டமோன்னு கம்முன்னு நின்னேன். அங்கயிருந்த வீசீடிய சைக காட்டுனாரு. அது கந்தன் கருணை படத்தோட சீடி. அடக் கடவுளே!

"ஐயா! இது சினிமா. அதப் பாத்து இந்தப் போடு போடுறீங்க. படிக்காதவங்கதான் சினிமா பாத்து சாமியாடி கன்னத்துல போட்டுக் கிட்டா நீங்களுமாய்யா? ஒரு படத்தப் பாத்து...சரி. சரி....வாங்க எல்லாரும் பாக்குறதுக்குள்ள போயிருவோம்." கிடுகிடுன்னு நடந்து வெளிய வந்துட்டோம். மயிலார் செஞ்ச கூத்துல நா கையில எடுத்த வீசீடியக் கூட கீழ வெச்சுட்டு வந்துட்டேன். ச்ச!

எனக்கு இன்னும் மனசு கேக்கலை. இப்பிடிச் சின்னப்புள்ளத் தனமா பண்ணீட்டாரே. பாக்குறவங்கள்ளாம் இனிமே மயிலாரப் பாத்துச் சிரிப்பாங்களேன்னு நெனப்பு ஓடுது. மயிலாரும் தோகையத் தொங்கப் போட்டுக்கிட்டு அமைதியா தலையக் குனிஞ்சிக்கிட்டு பின்னாடியே வந்தாரு.

"எக்ஸ்கியூஸ் மீ" ஒரு நல்ல அழகான பொண்ணு. நல்ல பிரமாதமா இருக்கு. நானும் பதிலுக்கு இங்கிலீஸ்ல "யெஸ்"ன்னு சொன்னேன்.

ஆனா பாருங்க. "நாட் யூ"ன்னு சொல்லீட்டு அந்தப் பொண்ணு மயிலார் கிட்டப் போயிருச்சு.

"கேன் ஐ ஹேவ் அ ஃபோட்டோ வித் யூ?"ன்னு கூட்டீட்டுப் போயி போட்டோவும் எடுத்துச்சு அந்தப் பொண்ணு. மயிலார் நல்லா தொகைய பப்பரப்பாங்குன்னு விரிச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு கொண்டைய சிலுப்பிக்கிட்டு நின்னாரு. ஃபோட்டோ எடுத்து அத அப்பிடியே வெள்ளைச் சட்டைல போட்டுக் குடுத்தாங்க. அந்தப் பொண்ணு சட்டய வாங்கிக் கிட்டு "தேங்க்ஸ்" சொல்லி மயிலார் கழுத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போயிருச்சு.

நான் ஃபியூஸ் போயி "வீட்டுக்குப் போகலாம். இல்லைன்னா லேட் ஆயிரும்"ன்னு சொன்னேன். இல்லைன்னா எத்தன பேரு இந்த மாதிரி ஃபோட்டோவுக்கு வருவாங்களோ!

சரீன்னு சொல்லீட்டு மயிலாரு கம்பீரமா தோகைய அசைச்சுக்கிட்டு விறுவிறுன்னு துள்ளலோட முன்னாடி போனாரு. நான் பின்னாடியே வேகமா ஓடுனேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

மதி
09-01-2006, 10:29 AM
ச்சே.. !
நானும் அங்கே தான் சுத்திட்டிருந்தேன்....!:D
மயிலார் கூட போட்டோ மிஸ்ஸாயிடுச்சே......!:eek: :eek:

gragavan
09-01-2006, 10:32 AM
ச்சே.. !
நானும் அங்கே தான் சுத்திட்டிருந்தேன்....!:D
மயிலார் கூட போட்டோ மிஸ்ஸாயிடுச்சே......!:eek: :eek:அதுக்குதான் அங்க அதுக்கு மேல நிக்காம மயிலாரைக் கூட்டீட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

பென்ஸ்
09-01-2006, 10:46 AM
ச்சே.. !
நானும் அங்கே தான் சுத்திட்டிருந்தேன்....!:D
மயிலார் கூட போட்டோ மிஸ்ஸாயிடுச்சே......!:eek: :eek:

என்ன மதி.... FORUM முழுவதும் மயில்கள்தானே... எதாவது தனியா வாற மயிலை பிடிச்சுக்க வேண்டியத்துதானே....:D :D :D

பாத்து .. வான்கோழிகளிடம் மாட்டிகொள்ளாதேயும்...:rolleyes: :rolleyes:

மதி
09-01-2006, 10:54 AM
என்ன மதி.... FORUM முழுவதும் மயில்கள்தானே... எதாவது தனியா வாற மயிலை பிடிச்சுக்க வேண்டியத்துதானே....:D :D :D

பாத்து .. வான்கோழிகளிடம் மாட்டிகொள்ளாதேயும்...:rolleyes: :rolleyes:
சரியா தான் சொல்றீங்க..!
எங்கங்க மயிலெல்லாம் தனியா வருது..எல்லாம் சோடி பறவயால வருது....:confused: :confused:
ஹ்ம்ம்ம்...ஹ்ம்ம்...
நமக்கு அம்புட்டுதேன்..வாச்சது...:mad: :mad:

pradeepkt
09-01-2006, 12:35 PM
என்னய்யா ஆளாளுக்கு உங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க?
அவங்கவங்க அவங்கவங்க மயில்களோட போக வேண்டியதுதானே...
ராகவனைப் பாத்துக் கத்துக்கங்க, அம்புட்டுத்தேன் சொல்லுவேன்

gragavan
09-01-2006, 01:27 PM
சரியா தான் சொல்றீங்க..!
எங்கங்க மயிலெல்லாம் தனியா வருது..எல்லாம் சோடி பறவயால வருது....:confused: :confused:
ஹ்ம்ம்ம்...ஹ்ம்ம்...
நமக்கு அம்புட்டுதேன்..வாச்சது...:mad: :mad:வாச்சிருச்சா.............சூப்பரு.

gragavan
09-01-2006, 01:28 PM
என்னய்யா ஆளாளுக்கு உங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க?
அவங்கவங்க அவங்கவங்க மயில்களோட போக வேண்டியதுதானே...
ராகவனைப் பாத்துக் கத்துக்கங்க, அம்புட்டுத்தேன் சொல்லுவேன்இருக்குற தீ பத்தாதுன்னு நீங்க வேற.....ஒங்க ஊரு என்ன நெய்க்காரப்பட்டியா? அள்ளி அள்ளி ஊத்துறீங்க!

இளசு
10-01-2006, 12:22 AM
தோகை விரித்த ஆண்மயில்..
சில அப்பிராணி நடவடிக்கை செய்ய
அசூயைப்பட்டாரு ராகவய்யா..

ஆனா, வந்த பெண்மயில்
அதோட கூடி படம் எடுத்து, பச்சக் இச் கொடுத்து போக
குத்துது குடையுதய்யா..

ஹய்ய்யா ஹய்ஹய்யா.....(ரசித்துப்படித்தேன் இராகவன்... நன்றி..

உங்கள் கற்பனைக்களம் விசாலாமானது..ஆழமானது..அழகானது.


சிறுவர் நாவல் எழுத சரியான ஆள்தான் நீங்கள்..)

lavanya
10-01-2006, 11:28 PM
நன்றாக இருக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள்..நன்றி

gragavan
11-01-2006, 07:00 AM
தோகை விரித்த ஆண்மயில்..
சில அப்பிராணி நடவடிக்கை செய்ய
அசூயைப்பட்டாரு ராகவய்யா..

ஆனா, வந்த பெண்மயில்
அதோட கூடி படம் எடுத்து, பச்சக் இச் கொடுத்து போக
குத்துது குடையுதய்யா..

ஹய்ய்யா ஹய்ஹய்யா.....(ரசித்துப்படித்தேன் இராகவன்... நன்றி..

உங்கள் கற்பனைக்களம் விசாலாமானது..ஆழமானது..அழகானது.


சிறுவர் நாவல் எழுத சரியான ஆள்தான் நீங்கள்..)நன்றி அண்ணா. ஒரு விஷயம் தெரியுமா? பெரியவர் கதை எழுதுவதை விட சிறுவர் கதை எழுதுவது மிகக் கடினம். அதை இன்னும் முயன்று பார்க்கவில்லை. கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

மதி
11-01-2006, 07:04 AM
நன்றி அண்ணா. ஒரு விஷயம் தெரியுமா? பெரியவர் கதை எழுதுவதை விட சிறுவர் கதை எழுதுவது மிகக் கடினம். அதை இன்னும் முயன்று பார்க்கவில்லை. கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
கண்டிப்பாய் எழுதுங்கள் ராகவன்..
இந்த சிறுவனின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு..:D

gragavan
11-01-2006, 07:07 AM
நன்றாக இருக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள்..நன்றிகண்டிப்பாக லாவண்யா. இனி என்னுடைய அனுபவங்கள் எழுதப்படும் பொழுதெல்லாம் மயிலார் வருவார்.

பாரதி
11-01-2006, 04:17 PM
ஹம்.. எனக்குத்தான் சரியாக விளங்கிக்கொள்ள இயலவில்லை இராகவன்..!

லாவண்யா... பின்னூட்டம் இட்டிருக்கிறார்..! நிஜமாகவே அவர்தானா...?

gragavan
12-01-2006, 05:51 AM
கண்டிப்பாய் எழுதுங்கள் ராகவன்..
இந்த சிறுவனின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு..:Dநன்றி மதி. உங்கள் ஊக்கங்கள் நிச்சயம் பலன் கொடுக்கும். :)

gragavan
12-01-2006, 05:52 AM
ஹம்.. எனக்குத்தான் சரியாக விளங்கிக்கொள்ள இயலவில்லை இராகவன்..!

லாவண்யா... பின்னூட்டம் இட்டிருக்கிறார்..! நிஜமாகவே அவர்தானா...?அப்படித்தான் தெரிகிறது அண்ணா. சீனியர் மெம்பர் என்று சொல்லி 2000க்கு மேல் பதிப்புகள் இட்டவரெனச் சொல்கின்றது.

பாரதி
14-01-2006, 06:00 PM
அன்பு இராகவன்,
லாவண்யா பிரபல சினிமா விமர்சகர், கணினித்துறையிலும் வல்லவர். பழைய திஸ்கி மன்றத்தில் தோண்டினால் அவரது பல ஜொலிக்கும் பதிவுகளை உங்களால் காண முடியும்.

வருக வி.வி. மகிழ்ச்சி மீண்டும் கண்டதில்.

aren
14-01-2006, 10:59 PM
ராகவன்,

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். மயிலோடு ஒரு ஷாப்பிங் அனுபவம், நன்றாக உள்ளது. ஆனால் தோகை விரிக்கும் மயிலுடன் உங்களுக்கு வேலை இருக்காதே. நான் ஏதோ 16 வயதினிலே மயில் மாதிரி யாருடனோ போனீங்களோ என்று நினைத்தேன்.

ஒரிஜினில் விசிடி வாங்கப்போனீங்களா - இது டுபாங்ஸ்தானே? சரி விடுங்கள்.

நன்றாக சுவாரசியமாக இருக்கிறது படிப்பதற்கு. பாராட்டுக்கள். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

pradeepkt
16-01-2006, 02:48 AM
ஆரென் அண்ணா,
ராகவனைப் பத்தி இப்படி அபாண்டம் சொன்னதற்காக என் கண்டனத்தை வாங்கிக் கொள்ளுங்கள்...
ராகவனும் அவ்வப்போது ஒரிஜினல் விசிடி வாங்குவார் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.. :D :D :D

sarcharan
16-01-2006, 04:49 AM
ஒரிஜினல் விசிடி.... அவ்வப்போது ,,,,,,

ஹைய்யோ ஹைய்யோ... சிப்பு வந்திச்சி சிப்பு....:D :D :D :D


ஆரென் அண்ணா,
ராகவனைப் பத்தி இப்படி அபாண்டம் சொன்னதற்காக என் கண்டனத்தை வாங்கிக் கொள்ளுங்கள்...
ராகவனும் அவ்வப்போது ஒரிஜினல் விசிடி வாங்குவார் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.. :D :D :D

gragavan
16-01-2006, 04:54 AM
ஆரென் அண்ணா,
ராகவனைப் பத்தி இப்படி அபாண்டம் சொன்னதற்காக என் கண்டனத்தை வாங்கிக் கொள்ளுங்கள்...
ராகவனும் அவ்வப்போது ஒரிஜினல் விசிடி வாங்குவார் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.. :D :D :Dதமிழ் படங்கள்னா நான் ஒரிஜினல்தான் வாங்குவேன். இங்கீலூசுப் படம்னாத்தான் டீவீடீ வாங்குவேன்.

pradeepkt
16-01-2006, 08:00 AM
தமிழ் படங்கள்னா நான் ஒரிஜினல்தான் வாங்குவேன். இங்கீலூசுப் படம்னாத்தான் டீவீடீ வாங்குவேன்.
ஏய்யா இதெல்லாம் தேவைதானா... :D :D :D

gragavan
16-01-2006, 08:56 AM
ஏய்யா இதெல்லாம் தேவைதானா... :D :D :Dஅட லீ லூவாப் போச்சு...இதெல்லாம் ஏய்யா பெருசு படுத்துறீங்க.

aren
17-01-2006, 01:44 AM
ஆரென் அண்ணா,
ராகவனைப் பத்தி இப்படி அபாண்டம் சொன்னதற்காக என் கண்டனத்தை வாங்கிக் கொள்ளுங்கள்...
ராகவனும் அவ்வப்போது ஒரிஜினல் விசிடி வாங்குவார் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.. :D :D :D

நான் தான், சரி விடுங்கள் என்று எழுதியிருக்கிறேனே. கவனிக்கவில்லை. அதற்கு பிறகு ஏன் கண்டனம்.

எதுக்காகவாவது கொடி பிடிக்கனும் என்று நிறையபேர் கிளம்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது.

புலம்பலுடன்
ஆரென்

aren
17-01-2006, 01:45 AM
தமிழ் படங்கள்னா நான் ஒரிஜினல்தான் வாங்குவேன். இங்கீலூசுப் படம்னாத்தான் டீவீடீ வாங்குவேன்.

ஒரிஜினல் என்ற வார்த்தையே உதைக்குதே. அதற்கப்புறம் அது விசிடியாகவாக இருந்தால் என்ன, டிவிடியாக இருந்தால் என்ன. எல்லாமே ஒன்றுதானே?