PDA

View Full Version : சில சின்னக் கவிதைகள்.தாமரை
06-01-2006, 10:08 AM
க+விதை
கருத்து+விதை
கருத்துள்ள விதை

கவி+தை
அழகு+தை
அழகுகளை தைமொத்தத்தில்
வளைத்துப் போடப்பட்ட
வார்த்தைகளில்
நிமிர்ந்து நிற்கும்
கருத்து

கவிதை.......

pradeepkt
06-01-2006, 11:14 AM
வளைத்துப் போடப்பட்ட
வார்த்தைகள்

-- சபாஷ்

நிமிர்ந்து நிற்கும் கருத்து
-- சபாஷோ சபாஷ்!

aren
06-01-2006, 01:25 PM
செல்வன் - கலக்குகிறீர்கள். அருமையாக உள்ளது.

இளசு
07-01-2006, 11:18 PM
மன்றம் வந்த நல்ல கவிஞர் நீங்கள் செல்வன்.

வளைத்துப்போட்டது
வார்த்தைகளை மட்டுமல்ல
வாசகர்கள் இதயங்களையும்..

வாழ்த்துகள் செல்வன்!

தாமரை
09-01-2006, 07:01 AM
[quote=stselvan
க+விதை
கருத்து+விதை
கருத்துள்ள விதை

கவி+தை
அழகு+தை
அழகுகளை தை

.[/QUOTE]

இன்னொன்றும் உண்டு,,,

கவி+தை

குரங்கு + நடனம்

குரங்காட்டம்....

gragavan
09-01-2006, 09:05 AM
அடேங்கப்பா........கவிதைக்கு விளக்கம் சொன்ன தாமரைக்கு விளக்கம் தெரியுமோ?

தாமரை = தா+மரை :-)

pradeepkt
09-01-2006, 11:21 AM
அடேயப்பா...
தா மரை..
செல்வன் கவிதைகள் சமயத்தில் தா மரையாகத் துள்ளத்தானே செய்கின்றன.... :D :D

அறிஞர்
09-01-2006, 09:58 PM
அடேங்கப்பா........கவிதைக்கு விளக்கம் சொன்ன தாமரைக்கு விளக்கம் தெரியுமோ?

தாமரை = தா+மரை :-)அடுத்து உங்க பெயரில் கவிதை வடிக்கப்போகிறார்

தாமரை
01-02-2006, 02:44 PM
இன்னொன்றும் உண்டு,,,

கவி+தை

குரங்கு + நடனம்

குரங்காட்டம்...
குத்தாட்டப் பாடல்களும் இந்தவகையில் கவிதைகள் தானே?

பென்ஸ்
27-02-2006, 11:02 AM
வழுக்கை

நிரந்தர
இலையுதிர்காலம்....
வழுக்கை..!!!!

அறிஞர்
27-02-2006, 06:19 PM
வழுக்கை
நிரந்தர
இலையுதிர்காலம்...
வழுக்கை..!!!! இது கொஞ்சம் ஓவர்.... செயற்கை மூலம் நிரந்தரத்தை மாற்றலாமே.:rolleyes: :rolleyes:

ராசராசன்
27-02-2006, 06:49 PM
இது கொஞ்சம் ஓவர்.... செயற்கை மூலம் நிரந்தரத்தை மாற்றலாமே.:rolleyes: :rolleyes:

அட போங்க அறிஞரே!
என் சிறிய முன் வழுக்கையை மறைக்க ரூபாய் ஆறாயிரம் மருத்துவருக்கு செலவழித்ததுதான் மிச்சம். ஒண்ணும் உபயோகமில்லை. வழுக்கையை, விஞ்ஞான ரீதியில் முடியை வளர்த்து மறைக்க இயலாது. செயற்கை இழை சிகிச்சையை தவிர.

சரிதானே? :D

அறிஞர்
27-02-2006, 08:46 PM
அட போங்க அறிஞரே!
என் சிறிய முன் வழுக்கையை மறைக்க ரூபாய் ஆறாயிரம் மருத்துவருக்கு செலவழித்ததுதான் மிச்சம். ஒண்ணும் உபயோகமில்லை. வழுக்கையை, விஞ்ஞான ரீதியில் முடியை வளர்த்து மறைக்க இயலாது. செயற்கை இழை சிகிச்சையை தவிர.

சரிதானே? :D ஆஹா நம்ம ரகமா... இதுக்கெல்லாம் கவலை பட்டா எப்படி... தலைக்கு உள்ள என்ன இருக்கோ.. அதுக்குதான் மதிப்பு (இப்படி சொல்லி மனசை தேத்திக்கவேண்டியதுதான்)

பென்ஸ்
28-02-2006, 10:38 AM
அறிஞரே... இந்த கவிதை வந்த கதையை சொல்லுறேன்...
ஒரு வாரத்துக்கு முன்னாடி.... என் நண்பன் ஒருவன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவதாக இருந்தது, நான் அவனிடம் சாக்லெட் வாங்கிவரசொல்ல.. அவன் என்னிடம் "இங்கு விக் முடி சீப்பா கிடைகும்டா வாங்கி வரவா???" என்று கேட்டான்.... அவனுக்கு ஒரு பதில் அனுப்பினேன்....
அது

நேற்று...
நெற்றி தான்டி
முகம் மூடிய முடியை
கோபமாய் பின்னிழுத்தேன்

இன்று
நெற்றி தான்டி
முகமாகும் முடியை
சோகமாய் முன்னிளுக்கிறேன்...

நேற்றிய வசந்தம்
இன்றைய இலையுதிர்காலம்...
மாற்றம் இயற்கையின் நியதி...

புலவர். பெஞ்சமின்

அதை அப்ப்டியே போட மனசு வரலை.. அதுனாலதான் இப்படி போட்டேன்... :D :D :D

இவங்களுக்கு இது ஓவரா தெரியலை... வெறும் மயிரை வைத்துகிட்டு வாற வரத்து.... குக்கும்:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
28-02-2006, 06:59 PM
அருமை புலவரே....

இயற்கையின் நிதியை என்னச்செய்ய இயலும்.

கல்யாணம் ஆனபின் முடி எப்படியிருந்தாலும் கவலையில்லை...

தாமரை
01-03-2006, 03:38 AM
அருமை புலவரே.....

இயற்கையின் நிதியை என்னச்செய்ய இயலும்.

கல்யாணம் ஆனபின் முடி எப்படியிருந்தாலும் கவலையில்லை...
இல்லாவிட்டாலும் கவலை இல்லை.. அப்படின்னு சொல்லுங்க அறிஞரே:D :D

"முடியில்லை என்பது ஒரு பிரச்சனையே இல்லை. முடியலை என்றால் தான் பிரச்சனை"

தாமரை பொன்மொழி : த.ம. 1

sarcharan
06-03-2006, 09:13 AM
அதாவது முடியில்லை, முடியலை, முடிவேஇல்லை அப்படிங்கறீங்களா....

இல்லாவிட்டாலும் கவலை இல்லை.. அப்படின்னு சொல்லுங்க அறிஞரே:D :D
"முடியில்லை என்பது ஒரு பிரச்சனையே இல்லை. முடியலை என்றால் தான் பிரச்சனை"
தாமரை பொன்மொழி : த.ம. 1

sarcharan
06-03-2006, 09:16 AM
அது என்ன த.ம 1?

தாமரை பொன்மொழி : த.ம. 1

தாமரை
06-03-2006, 09:20 AM
அது என்ன த.ம 1?
தமிழ் மன்றம்...:D :D :D

ஓவியன்
08-05-2007, 07:29 AM
அண்ணா

கவிதையில் இத்தனை கதை இருக்கா?
அறிந்தேன் உங்கள் தைக்கும் வரிகளால்.

poo
09-05-2007, 07:10 AM
பிரித்துப்போட்டு அசத்திவிட்டீர்கள்...

சின்னச்சின்ன கவிதைகள்.. சிங்காரக் விதைகள்..

அக்னி
11-07-2007, 07:16 PM
அழகுக் கவிதைகள்...
மன்றத்தின் கருவூலத்திற்குள், புதைந்து போயிருக்கும், ஒளிர் முத்துக்கள்,
என்றும் சுடரவேண்டும்...
ஓவியனுக்கு நன்றி... திரியை மீண்டும் மேலெழுப்பிவிட்டதற்கு...

செல்வருக்கு பாராட்டுக்கள்...
கவிதையைக் கவிதையாக பிரித்துத் தந்ததற்கு...

இனியவள்
11-07-2007, 07:19 PM
தாமரை அண்ணா வாழ்த்துக்கள்
கவிதைக்குள் இத்தனை
கவிதைகளா வியக்க
வைக்கின்றது

ஒவியரே நன்றியப்பா நன்றி

ஓவியன்
11-07-2007, 07:23 PM
நன்றி நண்பர்களே!

இது எனக்குப் பிடித்த ஒரு திரி, இன்று மாதவரின் கவிதையைக் கண்டது இந்த திரியின் ஞாபகமே வந்தது அது தான் இதன் சுட்டியைத் தந்தேன்.

மாதவர்
11-07-2007, 07:25 PM
கவிஞர்களை உசுப்பிவிட்டேனா?

பிச்சி
12-07-2007, 06:28 AM
பின்னூட்டங்களைப் பார்த்து சிரித்தேன்.. பாவம் பென்ஸ் அண்ண்ணா நீங்கள். கவிதைக்கு விமர்சனம் சூப்பராக இருக்கிறது தாமரை அண்ணா.

அமரன்
12-07-2007, 09:25 AM
செல்வன் அண்ணாவின் நன்முத்துகளில் ஒன்று இது. அவரது கவிதைகள் என்று சொல்வதை விட பதிப்புகள் ஒவ்வொன்றிலும் சொல்லாடல் அழகாக இருக்கும். அனைத்துப் பதிவுகளையும் படித்தாலே நாமும் கற்றுவிடலாம். அவருடன் இணைந்திருப்பது எனக்குப் பெருமை மட்டுமல்ல பெரும்பேறும் கூட.