PDA

View Full Version : காந்த 'சக்தி' ( அ.மை.- 17)



இளசு
05-01-2006, 09:56 PM
காந்த 'சக்தி'


அறிவியல் மைல்கற்கள் - 17

வில்லியம் கில்பர்ட் (1544 - 1603)

16ம் மைல்கல் - உயிர்ப்படிமங்கள் இங்கே

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6046


ஆதிகாலம் தொட்டே ஆதியன் கண்டு அதிசயித்த விஷயங்களில் ஒன்று
காந்த விசை. சின்ன சின்ன காந்தத் துண்டுகள் சிதறி வீசப்பட்டாலும்
பூமியின் தளத்துக்கேற்ப ஒரு ஒழுங்காய் ஒரே திசையில் அணிவகுப்பதைக்
கண்டு அவன் ஆச்சரியமானான்.

13ம் நூற்றாண்டு வாக்கில் கடல் மேல் பயணிக்கும் மாலுமிகளும்
தண்ணீரில் காந்த ஊசிகளை வீசி
வடக்கு - தெற்கு திசை அறிய ஒரு 'திசைமானி'யாய்
இதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்- ஏன் இப்படி என புரியுமுன்பே.

விளங்காத எதுவும் பல யூகங்களுக்கு ஆளாகும்.
அதே போல் இந்த காந்த விசைக்கும் பல ஆண்டுகளாய் பல
காரணங்கள் கற்பிக்கப்பட்டன.
அதில் மிக அதிகமாய் சிலாகிக்கப்பட்ட காரணம்:
பூமிக்கு மேல் உள்ள 'சொர்க்கத்தின் ' நல்ல/கெட்ட சக்திகள்
எப்போதும் பூமியின் மேல் பாய்ந்தபடி இருக்கின்றன.
அவையே நம் நன்மை/தீமையை நிர்ணயிக்கின்றன.
அப்படி 'மேலே உள்ள சக்தி' ஒன்றின் ஈர்ப்புதான்
இப்படி இந்த காந்தங்கள் கவரப்படுவதன் காரணம்!
.
அந்த கவர்ச்சியான காரணம் தவறு. காந்த சக்தி பூமிக்கு வெளியில் இருந்து
வருவதில்லை. பூமியிலேயே அது இருக்கிறது -
என நிரூபணம் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர்
இந்த பதினேழாம் மைல்கல் நட்ட நாயகர் -
வில்லியம் கில்பர்ட்.

கில்பர்ட் ஆங்கிலேய மருத்துவர். கேட்ட/ நம்பப்பட்ட 'கதைகளை'
அப்படியே நம்பாமல் 'எதையும் சோதனைக்கு ஆட்படுத்தி
நிரூபிக்க முயலவேண்டும் ' என்ற மனநோக்கு உள்ளவர்.

அவர் ஒரு பெரிய காந்த உருண்டையைச் செய்தார்.
அதன் மேல் வீசப்பட்ட சிறு சிறு காந்தக் குச்சிகள் பூமியில் வீசப்பட்ட
காந்தங்கள் போலவே தென் -வடக்காக அணிவகுப்பதை
சோதனை செய்து காட்டினார்.

குறிப்பாய் அவர் செய்த காந்த உருண்டையின் இரு முனைகளையும்
நெருங்கும்போது இந்த காந்தக்குச்சிகள் கீழ்நோக்கி அழுந்துவதை
சுட்டிக்காட்டினார்.
இது மாலுமிகள் நிலநடுக் கோட்டை விட்டு துருவங்கள் நோக்கி நகரும்போது
கடலில் வீசிய காந்தங்களில் இயற்கையாய் நிகழும் ஒரு செயல்.

கில்பர்ட் சொன்னார்:
'ஆம் , காந்தம் ஒரு ஈர்ப்பு சக்தி. ஆனால் அது மேலே 'சொர்க்கத்தில்' இருந்து
பூமியின் மேல் பாயவில்லை. இங்கே நம் காலடியில் இருக்கும் இந்த பூமிதான்
பெரிய காந்தம். அந்த காந்த தேசத்தின் சிம்மாசனம் துருவம். அந்த சக்திக்கு
தலைவணக்கம்தான் இந்த சிறுகாந்தங்களின் தள(லை)த் தாழ்தல்!'

பூஞ்சை பிடித்த நம்பிக்கையை சோதனை மூலம் வில(ள)க்கி
எதையும் ஆராயச் சொல்லி பிற்காலத்தின் பிரான்சிஸ் பேக்கன் போன்ற
ஆராய்ச்சி அறிவியலாருக்குக் கட்டியம் சொன்ன கில்பர்ட்
இந்த மைல்கல்லுக்கு நாயகராக மெத்தப் பொருத்தமானவர்தானே நண்பர்களே?

aren
05-01-2006, 10:31 PM
இது மாலுமிகள் நிலநடுக் கோட்டை விட்டு துருவங்கள் நோக்கி நகரும்போது கடலில் வீசிய காந்தங்களில் இயற்கையாய் நிகழும் ஒரு செயல்.

இது கொஞ்சம் புரியவில்லை. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

நீங்கள் துருவம் என்று சொல்வது, வட துருவம், தென் துருவம் என்று நினைக்கிறேன். அப்படியிருக்கும்பொழுது, இப்பொழுது படகு தென் துருவத்தில் இருந்தால், அப்பொழுது கடலில் காந்த ஊசியைப் போட்டால் அது எந்த பக்கம் நோக்கி இருக்கும். தென் பக்கமா அல்லது வட பக்கமா?

kavitha
10-01-2006, 08:01 AM
அப்பொழுது கடலில் காந்த ஊசியைப் போட்டால் அது எந்த பக்கம் நோக்கி இருக்கும். தென் பக்கமா அல்லது வட பக்கமா?
காந்தத்திலும் வட, தென் துருவங்கள் உண்டு. வட புலம் தென் துருவம் நோக்கியும், தென்புலம் வடதுருவம் நோக்கியும் இருக்கும். எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்றை ஈர்க்கும்.

சரியா அண்ணா? அது ஏன் என்பதெல்லாம் வில்லியம் கில்பர்ட் நூலில் தான் பார்க்க வேண்டும்.

கீழ்நோக்கி அழுந்துவது (தலைவணக்கம்) புவியீர்ப்பு விசை என்ற பூமியின் காந்த சக்தியினாலா அண்ணா?

aren
17-01-2006, 11:11 AM
நன்றி கவிதா அவர்களே.

பென்ஸ்
17-01-2006, 07:04 PM
புவியீர்ப்பு விசை காந்த சக்தியினால் அல்ல, புவியீர்ப்பு என்பது
எடையுள்ல எந்த இரு பொருளுக்கும் இடையிலான ஒரு force.

இதுதான் பூமி சூரியனையும், சந்திரன் பூமியையும், electrons nucleus ஐயும் சுற்றி வரவும், அலைகள் முதல் அனேக இயர்க்கையின் காரியங்களுக்கு காரணமாயிருக்கிறது....


அதிக தகவலுக்கு:
http://www.geocities.com/newastronomy/a_new_look_at_gravity.htm
http://en.wikipedia.org/wiki/Gravity

பாரதி
18-01-2006, 12:10 AM
, ξ Ţ Ȣ.

இதுதான் பாரதி அவர்கள் எழுதியது:

நல்ல தகவல்கள் தந்த அண்ணனுக்கும், கூடுதல் விளக்கத்திற்கான சுட்டி கொடுத்த பெஞ்சமினுக்கும் மிக்க நன்றி