PDA

View Full Version : மணல் வீடு!!!



தாமரை
05-01-2006, 10:21 AM
சின்னச் சின்ன கையிரண்டில்
மெல்ல மெல்ல மணலெடுத்து
நீயும் நானும் கட்டியிருந்தோம் ஒரு வீடு
நம் காதல் போல கலைந்து போன மணல் வீடு..

------------------------------------சின்னச் சின்ன கையிரண்டில்

கையோடு கைசேர்த்து
காதல் கொண்ட விழி சேர்த்து
நெஞ்சோடு எனைச் சேர்த்து
கொஞ்சி வந்த சிறு குயிலே
பஞ்சமென்ன வந்ததடி
விட்டு விட்டு பறந்து சென்றாய்
கொஞ்சம் இரு பூங்குயிலே
என்னுயிரும் பறந்து வரும்

ஆடியிலே ஒடிவரும் காத்தோட போச்சு
தேடித் தேடி ஓடிவந்து நீயும் சொன்ன பேச்சு..

------------------------------------சின்னச் சின்ன கையிரண்டில்

கனவுகள் நூறு சேர்த்து
கண்பூக்க எதிர் பார்த்து
காத்திருந்தேன் காத்திருந்தேன்
கண்மணியே உனக்காக..
நெஞ்சை தொட்டுத் திறந்த பின்னே
விட்டு விட்டு பறந்த பெண்ணே
கொஞ்சம் இரு பூங்குயிலே
என்னுயிரும் பறந்து வரும்

ஆடியிலே ஒடிவரும் காத்தோட போச்சு
தேடித் தேடி ஓடிவந்து நீயும் சொன்ன பேச்சு..

------------------------------------சின்னச் சின்ன கையிரண்டில்

aren
05-01-2006, 02:24 PM
அழகான காதல் கவிதை.

நன்றாக வரிகள் அழகாக கோர்வையாக வருகிறது உங்களுக்கு. நிறைய எழுதுங்கள்.

பாராட்டுக்கள்

நன்றி வணக்கம்
ஆரென்

வட்டா
16-01-2006, 06:01 AM
மிக அருமை உங்களது பாடல்